Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

திருமண பொருத்தம் - 2

03 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
ஜாதகம் பார்க்காமல் திருமணம் நடந்து, அதன்பின் பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவதற்காக தீர்வுகள் இருக்கின்றனவா?
பரிகாரங்கள் இருக்கக்கூடிய ஜாதகத்திற்கு பரிகாரம் சொல்லிவிடுவோம். சிலர் அனுபவித்து வர வேண்டும் என்று விதி இருக்கிறது. முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில், நாங்கள் மகரிஷியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவோம். ஏனென்றால், வழியில் போகிறவர்கள் கூட ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லிடலாம். ஆனால் அது சரியான பரிகாரமாகாது. ஏன் இப்படி ஒரு சேர்க்கை வந்தது என்பதை முதலில் ஆராய்வோம். மகரிஷி எழுதப்பட்ட ஓலையில் தான் பார்ப்போம். என்ன பாவம் செய்திருந்தால் இந்த கிரக அமைப்பு வந்து, நம்முடைய புத்தியை மறைத்து, சேர்க்கையை உருவாக்கியிருக்கிறது என்பதை பார்ப்போம். மகரிஷி, இந்த வாழ்க்கை சேருமா, சேராதா என்பதை தெளிவாக கொண்டு வந்துவிடுவார். சரி பண்ணக்கூடிய நிலையாக இருந்தால், அதற்கான பரிகாரம் என்ன? எந்த கோவில் போக வேண்டும்? என்ன மாதிரி முறைகளில் தெய்வத்தை வணங்க வேண்டும்? எல்லாருமே கோவில் பரபரப்பாக போயிட்டு வருகிறோம். ஆனால் கோவிலில் பரிகாரம் செய்வதற்கும் சில முறைகள் இருக்கின்றன.

"தோஷம் இருந்து நிறைய கோவிலுக்கு போய்விட்டேன், எனக்கு எதுவுமே மாறவில்லை" என்று பலர் சொல்பவர்கள். "பரிகாரம் எல்லாம் சும்மா, தெய்வங்கள் இல்லை" என்பார்கள். சிலர் கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதை அனுபவித்துவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. சிலர் செய்த புண்ணியம் முன்னாடியே ஏதாவது ஒரு தீர்வை குருநாதர் அமைத்து கொடுத்துவிடுவார்.

கோவில்கள் சென்று பரிகாரம் செய்து கொண்டால் கண்டிப்பாக அந்த கிரகத்தினுடைய வீரியம் குறையும்.

இப்போது நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கிறீர்கள். என்னை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்று வரும்பொழுது, நீங்கள் வருவதற்கு முன்னால் நானே வந்து நேரடியாக மன்னிப்பு கேட்பது, சரணாகதி அடைந்தால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள்? என்னை தண்டிக்க வேண்டும் என்று தோன்றுமா? "இனிமேல் இப்படி எல்லாம் இருக்காதே, போ" என்று சொல்லி மன்னிப்பீர்களா? ஒருவர் தவறை புரிந்து கொள்ளும்பொழுது, நாம் மன்னிப்பது தான் சரியானது. அதற்குத்தான், "சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுந்துவிடுவதே மேல்" என்பார்கள். தெய்வத்திடம் போய் சரணாகதி அடையும்போது அதனுடைய வீரியம் குறையும், அதிலிருந்து நாம் காக்கப்படுவோம். இல்லையென்றால் இன்றைக்கு நிறைய பேருடைய வாழ்க்கை நின்றிருக்காது.

காதல் திருமணம் நடக்கப் போகிறது என்றால், ஜாதகம் பார்ப்பது கட்டாயமா ?
காதல் திருமணம், இரண்டு வீட்டார்களுடைய சம்மதங்கள் வந்தாலும், ஜாதகம் பார்க்க வேண்டும். கிரகத்தை யாராலும் ஜெயிக்க முடியாது. திருமண வாழ்க்கை என்பது ஆயிரம் காலத்து பயிர். நமக்கு பிறக்கக்கூடிய சந்ததிகளுடைய எதிர்காலம், திருமணம், அவர்களுக்கு பிறக்கக்கூடிய சந்ததிகள். இதுதான் ஆயிரம் காலத்துப் பயிர்.

பிரச்சனை எந்த அளவுக்கு பாதிப்பை கொடுக்கும், அதற்கு தகுந்த தீர்வை கொடுத்து விடுவோம். இந்த கிரக தன்மை இப்படித்தான் நம்மை கொண்டு போகும். அப்பொழுது நாம் அதற்கு தகுதியாக இருக்க வேண்டும். இதையெல்லாம் சரிசெய்து வாழ வேண்டும். அதற்கு மேல் உங்களுக்கு தெய்வ பலத்தை நாம் அமைத்து கொடுப்போம், தெய்வ வழிபாடுகள் இருந்தாலும் நீங்களும் உங்கள் நிலையை உணரணும். வாழ்க்கை வேண்டும் என்றால் இதில் இறங்குங்கள், இல்லை என்றால் துணிந்து முடிவெடுக்காதீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறேன். அதுபோல மாறி நல்லபடியாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள்.

"இந்த முடிவு வேண்டாம்" என்று விலகி இருக்கிறார்களா ?
ஆமாம். ரஜ்ஜு பொருத்தம் தான் முக்கியமான பொருத்தம். தச பொருத்தத்தில் ஒன்பதாவது பொருத்தம் ரஜ்ஜு பொருத்தம். ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லையென்றால் திருமணம் செய்யக்கூடாது. ரஜ்ஜுவில் ஐந்து வகைகள் உள்ளன:

சிரசு ரஜ்ஜு
கண்ட ரஜ்ஜு
நாபி (தொப்புள்) ரஜ்ஜு
ஊரு (தொடை) ரஜ்ஜு
பாத ரஜ்ஜு

இதில் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடங்கள். சிரசு என்பது தலை. தலையில் பாதிப்பு ஏற்பட்டால் உயிர் பிரியும். கண்டம் என்பது கழுத்து. கழுத்தில் பிரச்சனை வந்தாலும் உயிருக்கு ஆபத்து. நாபி என்பது தொப்புள். அங்கேயும் பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு கண்டம். ஆனால், தொடையில் அல்லது பாதத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உயிர் போகாது.

பிடித்துப்போய் இருவர் விரும்பிவிட்டார்கள், அந்த இடத்தில் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்றால்—சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு என்ற மூன்றும் பொருந்தவில்லை என்றால் கண்டிப்பாக சேர்க்கவே மாட்டோம். அதுவே தொடை, பாத ரஜ்ஜு இல்லை என்றால் பரிகாரம் பண்ணிக்கொள்ளலாம். உயிர் போகிற விஷயமாக இருக்காது என்று சொல்லிவிடுவோம். ஆனால் இப்போது எல்லாருமே ரஜ்ஜுப் பொருத்தம், இல்லை என்று உடனே மறுப்பார்கள் (Reject). ரஜ்ஜு இல்லை என்பதை இன்னும் ஆழமாகப் போவோம்.

ஜாதகம் பார்த்து, நிச்சயிக்கப்பட்ட திருமணம், ஆரம்பத்தில் விருப்பம் இல்லை என்றாலும், அதன்பின் பிடித்து, வாழ்க்கை நன்றாக இருக்குமா ?
இந்தக் கேள்வியே தவறு. தினப் பொருத்தம் இருக்கக்கூடியவர்கள் நண்பர்களாக ஆகியே தீர வேண்டும். தினப் பொருத்தம் என்பது நட்பு.

அடுத்து கணப் பொருத்தம் முக்கியம். இரு மனித கணம் ஒத்துப்போகும். மனித கணம், தேவ கணம் என்றால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஒத்துப்போகும். சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தாலும், அடுத்த நொடியே ஒன்று சேர்ந்துவிடுவோம். ஆனால், ஒருவர் ராட்சச கணமாக இருந்து, மற்றொருவர் தேவ கணமாக இருந்தால், புரிதலே வராது. எப்பொழுதும் எதிரியாகவே இருப்போம்..

தின, கண, யோனி பொருத்தமும் இருந்துவிட்டாலே, அவர்கள் காதல் பறவைகள் (Love birds) போல சுதந்திரமாக இருப்பார்கள்.

பத்து பொருத்தமும் சரியாக இருக்கும் பொழுது, கிரக அமைப்புகளும் சரியாக இருக்குமா ?
கிரகப் பொருத்தம் இரண்டாவது விஷயம். இரண்டு பேருக்கும் சேர்க்கை, புரிதல் இருந்தும் கிரக பொருத்தமும், கிரக சேர்க்கையும் சரியாக இல்லையென்றாலும் பாதிப்புதான். எந்தக் கிரகம் குடும்ப ஸ்தானத்தில் பாதிக்கப்படுகிறதோ, அதனுடைய தசா காலம் வரும்பொழுது கண்டிப்பாக அதனுடைய வீரியங்கள் அதிகமாகும். அப்பொழுது பத்து பொருத்தம் இருந்தாலும் பிரச்சினை உருவாகும்.

திருமணத்துக்கு ஜாதகம் பார்த்தால் மட்டும் போதும் என்பது நாங்கள் கேள்விப்பட்ட விஷயம். ஆனால் நீங்கள் கிரக அமைப்புகளையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றன ?
10 ஜாதகங்களை கொண்டு வருகிறீர்கள் என்றால், முதலில் நாங்கள் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தம் அது ஒரு நுழைவு புள்ளி. ஜென்மம், சம்பத்து, கண்டம், க்ஷேமம், பிரத்தியக்கு, வதை, அனுகூலம் என்று இருக்கின்றன. ஜென்மம் என்பது ஜென்ம நட்சத்திரம். இது எளிதாக சொன்னால் புரியாத விஷயம். இது ஜோதிடத்தினுடைய சூட்சுமம்.

ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகமும், ஆணுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகமும் ஒன்றாக இணைகிறதா என்று பார்ப்போம். கிரகப் பொருத்தம் ஆதிக்கம் (Dominating) செய்யும்பொழுது, வாழ்க்கை பிரிவில் முடிகிறது.

பத்து பொருத்தம் பார்த்தவர்கள் நன்றாக வாழ்கிறார்களா என்பதுதான் அனைத்து (Media) ஊடகக்காரர்களும் பேசுகிறீர்கள். நட்சத்திரம் மட்டுமே பொருத்தம் இல்லை. குடும்ப ஸ்தானம், பஞ்சம ஸ்தானம் நிலை பற்றி பார்க்க வேண்டும். முழுமையான ஆண்மை உள்ள ஜாதகமா, பெண்ணுக்கு முழுமையாக சுகம் கொடுக்கக்கூடிய ஜாதகமா என்று பார்க்க வேண்டும். இதனால்தான் பலருக்கு விவாகரத்தாகும். அலித்தன்மை உள்ள ஜாதகமாக இருக்கும். இதில் நிறைய இருக்கிறது.

பஞ்சம ஸ்தானம், 5-ம் இடம், பூர்வ புண்ணியம் எப்படி இருக்கிறது? இவற்றிக்கு மேலாக பாக்கிய ஸ்தானம், 9-ம் இடம், எப்படி இருக்கிறது ? 5-ம் இடம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, 9-ம் இடம் நன்றாக இருந்தால் தான் குழந்தை பிறக்கும். 5-ம் இடத்தில் கிரகங்கள், 5-க்குரிய கிரகம் வலுவாக இருக்கிறது, நட்சத்திரப் பொருத்தம் சரியாக இருந்தது, ஏன் குழந்தை பிறக்கவில்லை? குழந்தை என்பது இருக்கிறது, ஆனால் அதை அனுபவிப்பதற்கான பாக்கியம் என்ற 9-ம் இடம் முக்கியம்.

ஒரு ஜோதிடரிடம் மட்டுமே ஆலோசிக்க வேண்டாம். ஒருவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் கூட, அடுத்த ஜோதிடரிடம் பரிசீலனை பண்ணுவது தவறில்லை.

என்னிடம் நாடி பார்க்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் விவாகரத்தாகி வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், கணவன், மனைவிக்குள் அன்யோனியம் இல்லாதவர்கள், பிரச்சினைகளால் பிரிவை பற்றி யோசித்து கொண்டிருப்பவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு நடத்துப்பவர்கள். அவர்களுக்கு மகரிஷி சரியான தீர்வையும் வழிகாட்டுதலையும் அமைத்து கொடுக்கிறார்கள்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.