தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்துகள் நிறைய நடக்கிறதே ?
உதாரணத்திற்கு நீங்களே 2 ஜாதகங்களை கொண்டு வந்து, "ஐயா, இதில் எந்த ஜாதகம் எனக்கு பொருத்தமான ஜாதகம்?" என்று கேட்கிறீர்கள். இந்த இடத்தில் நான் தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஜோதிடரை அல்லது குருமார்களை விமர்சிக்க விரும்பவில்லை. என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மைகளை சொல்கிறேன். பொருத்தம் பார்ப்பதற்கு 2 - 3 விதமான ஜோதிட முறைகள் இருக்கின்றன. பெரும்பாலானோர் நட்சத்திரம் பொருந்தும் மட்டுமே பார்க்கிறார்கள்.
ஆணின் ராசி மிதுன ராசியாக, பெண்ணின் ராசி துலாம் ராசியாக இருந்தால், மிதுனத்தில் இருந்து துலாம் 5-வது ராசியாக வரும். துலாத்தில் இருந்து மிதுனம் 9-வது ராசியாக வரும். இது 'திரிகோண ராசிச் சேர்க்கை' எனப்படும். இதற்கு எந்தவொரு ஜோதிடரும் அவசியமே இல்லை. "அமோகமாக இருக்கிறது, 8 – 9 பொருத்தங்கள் கூடி வருகின்றன, தாராளமாக திருமணம் செய்யலாம்" என்று சொல்லிவிடுவார்கள். கிரக பொருத்தம், லக்ன பொருத்தத்தையும் பார்க்க வேண்டும்.
விருச்சிக, மேஷ லக்னத்திற்கும் பொருந்தாது. ராசிகள் ஒன்றாக பொருந்தினாலும், லக்னங்கள் பொருந்தாது. ஏன் பொருந்தாது ? மேஷ லக்னத்தில் இருந்து விருச்சிக லக்னம் 8-வது லக்னமாக வரும் (அஷ்டமம்). விருச்சிக லக்னத்தில் இருந்து எண்ணும்பொழுது மேஷ லக்னம் 6-வது லக்னமாக வரும். இதையே சஷ்டாஷ்டக தோஷம் என்று அழைக்கிறோம். இது முக்கியமானது.
ஒரு ஜாதகத்தில் 7-ம் இடம் மட்டும் திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது தவறு. 2-ம் இடமும் மிக முக்கியமாக கருதப்பட வேண்டும். லக்னத்தில் ராகு இருக்கும்போது, நேர் எதிரே 7-ம் இடத்தில் கேது இருக்கும். லக்னத்தில் கேது இருந்தால் 7-ம் இடத்தில் ராகு இருக்கும். இருவரும் நேர் எதிர் இருப்பார்கள். லக்னத்திற்கு 2-ம் இடம் எனப்படும் குடும்ப ஸ்தானத்தில் ராகு இருந்தால் 8-ம் இடத்தில் கேது அமரும். 2-ம் இடத்தில் கேது இருந்தால் 8-ம் இடத்தில் ராகு அமரும். இதையும் திருமண பொருத்தத்தில் கவனிக்க வேண்டும்.
10 பொருத்தம் இருந்தாலும், கிரக சேர்க்கையானது நாள், நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்தாலும், இருவரையும் இணைக்கக்கூடிய முதல் இரவானது நடக்காது. முதல் இரவில் இருந்தே கடுமையான சண்டைகள் உருவாகும். அதன் பிறகு படுக்கையறையில் சண்டை சச்சரவுகளாக கழியும். பிரிவினையை உண்டாகும். பொருத்தம் பார்ப்பதில் கிரக பொருத்தம், நட்சத்திர பொருத்தம், லக்ன பொருத்தம் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. எளிதாக 2 ஜாதகங்களை இணைக்க முடியாது.
காதலித்து திருமணம் செய்தவர்கள், "நாங்கள் ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை, நன்றாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்பார்கள். ஆனால், இருவரின் ஜாதகங்களில் கிரகங்கள் கச்சிதமாக அமர்ந்திருக்கும். தினப் பொருத்தம், கணப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், யோனி பொருத்தமும் இருக்கும். சண்டை போட்டாலும், அடுத்த நொடியே ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
ஜாதகம் பார்க்கவில்லை என்றாலும், தானாக ஒத்துப் போகும்படி அமைந்து விடுகின்றனவா ?
அவர்களுடைய விதிப் பலனும், கர்ம வினையும் சரியாக இணைத்து விடுகிறது. காதல் திருமணம் செய்த பல தம்பதியரின் ஜாதகங்களை பார்த்தால், கிரக பொருத்தம் கச்சிதமாக அமைந்திருக்கும். இறைவனே அவர்களை இணைத்திருப்பார்.
எல்லா பொருத்தங்களும் பார்த்து தவறுகள் நடந்தால், தவறான கிரக சேர்க்கையை காரணம். ஒரு ஜாதகத்தில் தின, கணப் பொருத்தம், நட்சத்திர பொருத்தம் விட, கிரகப் பொருத்தம் என்பது மிக அவசியம். 4 ஜோதிடர்களிடம் காட்டி ஆலோசிப்பதில் தப்பில்லை.
என்னிடம் நாடி ஜோதிடம் பார்க்கக்கூடிய குடும்பங்கள், ஒருமுறை வந்துவிட்டால் அதன் பிறகு வேறு எங்கேயும் போக மாட்டார்கள். "உண்மையாக இருக்கும்" என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னிடம் 100 ஜாதகங்களை கொண்டு வந்தாலும், "பொறுத்திருங்கள்" என்றுதான் சொல்வேனே தவிர, ஏதோ ஒன்றை பொருத்தி திருமணத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தது இல்லை, செய்யப் போவதும் இல்லை.
லக்னமும், லக்னத்திற்கு 2-ம் இடமும் மிக அவசியமானது. 2-ம் இடம் கெட்டால், 8-ம் இடமும் கெட்டுவிடும். பெண்களுக்கு 8-ம் இடம் என்பது மாங்கல்ய ஸ்தானம். அதேபோல 7-ம் இடமும் கெட்டுப் போகும். 7-ம் இடம் என்பது கணவன், மனைவியை குறிக்கக்கூடிய களத்திர ஸ்தானம். ஆனால், என்னைப் பொறுத்தவரை லக்னமும், 7-ம் இடத்தைவிட, 2-ம் மற்றும் 8-ம் இடங்கள் மிக அவசியமானவை.
2-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் மட்டும் பிரச்சனை இல்லை. 2-ம் அதிபதி, ராகு அல்லது கேது கிரகங்களோடு வேறு ஏதேனும் ஒரு பாவகத்தில் இணைந்தாலும் பிரச்சனை. குடும்ப ஸ்தானாதிபதி 4, 5, 9-ம் இடத்தில் ராகு-கேது சேர்ந்திருந்தால், வாழ்க்கை பிரச்சனையாக இருக்கும் அல்லது திருப்தி இல்லாத வாழ்க்கையாக நகரும். குடும்பத்திற்காக சரியான நேரத்தில் எந்தவொரு கடமையையும் செய்ய முடியாது.
உதாரணத்திற்கு, "அம்மா, நீ தயாராக இரு, நான் வந்துவிடுகிறேன்" என்றால், அவரால் சொன்ன நேரத்திற்கு வர முடியாது. அவர் வரக்கூடாது என்று நினைக்க மாட்டார். ஆனால் அவர் கிளம்பும் சூழ்நிலையில் அலுவலகத்தில் ஏதேனும் ஒரு கோப்பை முடித்துவிட்டு போகும்படி சொல்லிவிடுவார்கள். வீட்டில் இருக்கும் மனைவி என்ன நினைப்பார் ? "என்னைத் தயாராக இருக்க சொல்லிவிட்டு நீங்கள் வரவில்லை, உங்களுக்கு வேலைதான் முக்கியம், குடும்பம் முக்கியமில்லை" என்பார். புரிதல் வராது. குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல், பிரச்சனைகள் உருவாகும்.
10 பொருத்தங்களில் எத்தனை இருந்தால் பொருத்தங்கள் திருமணத்தை நடத்தலாம் ?
5 பொருத்தங்கள் இருந்தாலே திருமணம் செய்யலாம். 10 பொருத்தங்கள் இருந்தும், விவாகரத்து நடக்கின்றன. கிரகப் பொருத்தம் சரியில்லாமல் சேர்க்கக்கூடாது. சிலர் , 27 - 30 வயது ஆகிவிட்டது, எனவே இந்த வயதிற்கு மேல் ஜாதகமெல்லாம் வேலை செய்யாது என்பது தவறான ஆலோசனை. இன்றைக்கு 60 வயதில், குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில், விவாகரத்துக்காக நிற்கிறார்கள். அதனால்தான் இருவரின் 'கிரக சேர்க்கை' என்பது மிக அவசியமானது.

ॐ