வருங்கால பிரச்சனைக்கு பரிகாரமும் சொல்வீர்களா ? ஒருவருடைய தலையெழுத்தை நாடி ஜோதிடம் மூலமாக மாற்ற முடியுமா ?
கட்டாயமாக சொல்லிவிடலாம். இதை மற்ற ஜோதிடரிடம் கேட்டால், "முடியாது" என்று சொல்வார். நான் திரும்ப் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனுடைய கர்மவினைதான் இந்த பிறவிக்கு காரணம், கர்மவினைதான் வழி நடத்துகிறது என்பதை மகரிஷி தெள்ளத் தெளிவாக நமக்காக உணர்த்திவிட்டார்கள்.
மகரிஷி சொல்வது, "இவ்வளவு காலங்கள் நீங்கள் இப்படி வாழப் போகிறீர்கள், இவ்வளவு இன்பங்களை அனுபவிக்கப் போகிறாய், நடுவில் வரும் சில துன்பங்களிலிருந்து காப்பாற்றி கொள்வதற்கான வழிமுறையும் இருக்கிறது" என்று பரிகாரத்தை கொடுத்து விடுகிறார்.
ஆனால், சிலருடைய கர்மவினை தீவிரமாக இருப்பதனால், பரிகாரமே இல்லாமல் போகிறது. "உன்னுடைய கர்ம பலன், உன்னுடைய பாவங்கள், இந்த ஜென்மத்தில் அனுபவித்த பிறகுதான், இந்த பிறப்புக்கான காரணங்களை முழுமையாக உணர முடியும்" என்பதை மகரிஷி எழுதியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் பரிகாரம் இல்லை. சில விஷயத்தை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும் என்று மகரிஷி குறிப்பிடுகிறார். சிலர் செய்த புண்ணியம், துன்பங்கள் தங்களை வராத அளவுக்கு முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்கான வழியையும் மகரிஷி கொடுத்திருக்கிறார்.
சிலருக்கு தொழில் தொடங்க எண்ணங்கள் இருக்கும். ஆனால், நஷ்டம் வருமா என்ற சந்தேகம் இருந்தால் ஆலோசனை தருவீர்களா ?
கண்டிப்பாக. சிலர், தொழில் தொடங்கும் பொழுதே தடைகள் இருக்கலாம் அல்லது எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாமல், குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி வந்தவர்களுக்கு, "தொழில் தொடங்குவதற்கு சரியான நேரம் இது இல்லை. இந்த தொழிலை உங்களுடைய பெயரில் தொடங்கக் கூடாது" என்பதை மகரிஷிகள் ஓலையின் மூலம் எடுத்து கொடுத்திருக்கிறார்கள். மேற்கொண்டு, இந்த தொழிலை தொடங்கினால் பாதிப்புகள் வரும். ஆகையினால், இந்த நேரத்தில் வேலைக்கு போங்கள், வேலை பார்க்கக்கூடிய மனநிலை இல்லாத பட்சத்தில், தொழிலை உங்களுடைய குடும்பத்தில் யாருக்கு சாதகமான கிரக நிலை இருக்கிறதோ, அவர்களுடைய பெயர்களில் செய்து கொள்ளலாம்" என்று மகரிஷி ஒரு மாற்று வழியை அமைத்துக் கொடுக்கிறார்கள். அதில் நீங்கள் வேலை பார்ப்பது மாதிரி உங்களுக்கான உழைப்பை நீங்கள் செலுத்திக் கொள்ளுங்கள் (தொழிலாளியாக இருந்து கொள்ளுங்கள்) என்று அறிவுறுத்தப்பட்டு, நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதைமீறி, தன் விருப்பப்படி செயல்பட்டு பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து, இழந்தவர்களும் இருக்கிறார்கள்.
எப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ஓலைச்சுவடியில் உள்ள விஷயங்கள், இந்த தலைமுறைக்கு பொருந்துகிறது ?
ஒரு மனிதப் பிறவிக்கு 7 ஜென்மங்கள் வரைக்கும் மீண்டும் மனிதனாக பிறக்கலாம் என்பதை மகரிஷி எழுதிருக்கிறார்கள். அதில், நாம் வாழ்வது எத்தனையாவது பிறவி, ஜென்மம் என்பதை பார்க்க வேண்டும். அவர்களுக்கு, ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள தேடல் இருந்தால் தான் சரியாக போய்ச் சேரும்.
"நீங்கள் 3 ஜென்மத்தினுடைய கர்மாவை கழித்துவிட்டு, இப்போது 4-வது ஜென்மத்தில் இருக்கிறது" என்பதை மகரிஷி சொல்லியிருக்கிறார்கள். சிலர் 5-வது ஜென்மத்தில், சிலர் முதல் ஜென்மத்திலே தெரிந்து கொள்ள வேண்டும் என்று விதி இருக்கும்.
திருமண தடைகளுக்கு, நாடி ஜோதிட மூலமாக தீர்வை கொடுக்கிறீர்களா ?
அவர்களுடைய கடந்த கால குறிப்பிட்ட பாவம், இந்தப் பிறவியில் திருமணம் சார்ந்த பிரச்சினை உண்டாக்கும், திருமணம் முறைப்படி நடக்காது என்று சொல்லியிருப்பார்கள். பெற்றவர்கள் அறிவுரை சொல்லும்போது அதை மனது ஏற்றுக்கொள்ளாது. அதை மீறி வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுத்து, பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், இதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, நிவர்த்தி பண்ணக்கூடிய விதிப்பயன் இருக்கிறவர்கள் மட்டும்தான் நாடியை வந்து பார்க்க முடியும் என்பது முக்கியமான விஷயம். சிலருக்கு கல்யாணம் நடக்காமலே போய்விடுகிறது, வயதெல்லாம் கடந்துவிடுகிறது. 51 வயதில், "கல்யாணம் உண்டா?" என்று நாடி பார்க்க வருகிறார்கள். அவர் மனது என்னவெல்லாம் நினைத்திருக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. அப்படி உள்ளவர்களுக்கும் மகரிஷி, "இந்தப் பிறவியில் கல்யாணமாகி, மனைவி என்ற தாம்பத்தியம் சுகம் எந்தக் காலகட்டத்தில்? யார் அந்த பெண் அல்லது மாப்பிள்ளை ? எங்கே இருக்கிறார் ?" என்ற எல்லா விவரங்களையும் ஓலையில் துல்லியமாக எழுதியிருப்பார்.
திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையாது, விவாகரத்தாகும் என்று தெளிவாக சொல்லிவிடுவீர்களா ?
ஆமாம். (A to Z) தெளிவாக இருக்கும்.
ஒருத்தருடைய எதிர்மறையான விஷயங்களை பற்றி சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா ?
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கடவுள் அமைத்து கொடுக்கிறார் அல்லது நம்முடைய கர்மவினை அமைத்து கொடுக்கிறது. நமக்கு முன்கூட்டியே உணர்த்துவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பது முதல் வெற்றி. நாடி பற்றி தெரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள்! ஒரு விஷயத்தில் அடிபட்டு, துயரப்பட்டு வருகிறார்கள். ஆனால், துயரப்படுவதற்கு முன்பே அதை தெரிந்து கொள்ளக்கூடிய பாக்கியம் கிடைப்பது என்பது நாம் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறோம் என்று அர்த்தம். இந்த காணொளியை பார்க்கிறவர்கள் அதை உணரலாம். "பலர் சொல்லியும் கேட்காமல், நான் பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கிறேன்" என்று வருந்துபவர்கள் பலர் உண்டு. இனிமேல் வரக்கூடியவர்களுக்காக நான் சொல்லும் கருத்து இது.
மகரிஷி நமக்கு பிரச்சினைகள் இருந்தால், நிவர்த்தியும் சொல்கிறார். ஆனால், கர்மவினைப்படி அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால், எல்லாரும் பரிகாரம் செய்ய மாட்டார்கள். அதை நிவர்த்தியாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால், அவர்கள் செய்த கெட்ட கர்மா, சாபம் நல்லதை செய்யவிடாமல் தடுக்கும். அதைமீறி, அவர்கள் உணர்ந்து செயல்படுத்துவது தான் நாடி ஜோதிடத்தின் வெற்றி.

ॐ