சனி பகவான் என்ற கர்மாவினுடைய நீதிபதி பற்றிச் சொல்லுங்கள்
அவரை 'தர்ம கர்மாதிபதி' என்கிறோம். மேஷ ராசிக்கு 12-வது இடத்தில் சனி அமர்கிறார். 12-ஆம் இடத்திலிருந்து தனது 3-வது பார்வையால், 2-வது இடத்தை பார்ப்பார். 2-வது இடம் என்பது பணம் (தனம்), வாக்கு, குடும்பம், கல்வி. சனி பகவான் 2-ஆம் இடத்தை பார்க்கும் பொழுது, அதிகாரமான, ஆணவ பேச்சை உருவாக்கும். படிப்பில் மந்தம், அலட்சியம், சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கல் பணப் பரிமாற்றங்களில் பெரிய சிக்கல்கள் வரும். நம் பணம் எங்கேயாவது முடங்கிவிடும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், பெரிய பகையாகும்.
இந்த நிலையை தவிர்க்க, புதிய முதலீடுகளை கண்டிப்பாக குறைக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது. நாம் பேசக்கூடிய வார்த்தைகளில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அமைதியாக போவது நல்லது. ஆனால், நாம் அதை செய்ய மாட்டோம். கோபப்பட்டு பேசிப் பிரச்சினையை சந்திப்போம். ஒரு கிரகம் நமக்கு குற்றம் செய்கிறது என்று நினைக்கிறோமே தவிர, எதனால் அந்த பாதிப்பு வருகிறது என்பதை நாம் உணர மாட்டோம். நம்மளுடைய தவற்றை திருத்திக் கொண்டால், சனி பகவான் நமக்கு ஒரு சிறந்த அனுகிரக மூர்த்தியாக இருப்பார்.
மீனத்தில் இருந்து 7-வது பார்வையால் கன்னி ராசியை பார்ப்பார். சந்திரன் என்பது 'மதி' (புத்தி), உடம்பு, தாயார். கன்னியில் சந்திரன் இருந்தால், நம்முடைய புத்தியை பாதிக்கும். தேவையில்லாத மனக்குழப்பங்களை உருவாக்கிப்போம். எதிர்மறையாக யோசிக்க வைப்பார். கன்னி ராசிக்காரர்களுக்கும் கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். ஏனென்றால், 7-ம் இடம் என்பது கணவன்/மனைவி ஸ்தானம். அந்த இடத்தில் இருக்கும் சந்திரனை சனி பார்க்கிறார். புத்தி கோளாறு, மனக்கோளாறுகள் (Depression) ஏற்படும். அடுத்தவர்களின் புறணி பேச்சுகளை கேட்போம். குடும்பத்தில் யாராவது ஏதேனும் ஒன்றை சொல்லிவிடுவார்கள், அதை சரியா தவறா என்று யோசிக்க மாட்டோம். உடனே சண்டையிடுவோம். (சொல்றவங்க சொல்லிட்டுப் போயிடுவாங்க), குடும்பத்தில் நிம்மதி கெடும். நிதானமாக, பொறுமையாக, போனோல் பிரச்சினையை தவிர்க்கலாம்.
சிம்ம ராசிக்கு அஷ்டம சனி
"ஓடினவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி" என்பார்கள். சிம்ம ராசிக்கு 8-வது இடத்திற்கு சனி வரும் போது, தனது 3-வது பார்வையால் சிம்ம ராசிக்கு 10 என்ற தொழில் மற்றும் வேலை குறிக்கக்கூடிய இடத்தை (ஜீவன ஸ்தானம்) பார்ப்பார். அஷ்டம சனியின் பார்வை விழும் பொழுது, தேவையற்ற ஆணவம் வரும். "என்னால் முடியாது என்று எதுவுமே இல்லை, என் திறமைக்கு நான் எங்கே போனாலும் நல்லா இருப்பேன். இந்த நிறுவனத்தில் இல்லையென்றால் எனக்கு வெளியில் 1000 நிறுவனங்கள் இருக்கின்றன" என்று அவசரப்பட்டு வேலையைத் திடீரென்று ராஜினாமா செய்வார்கள். அடுத்த 6 மாதங்கள் அல்லது 1 வருடம் வரை புதிய வேலை கிடைக்காது. தேவையற்ற கோபம். 6 மாதங்கள் கழித்து வருத்தப்படுவார்கள். அவசரப்பட்டு விட்டோம், பொறுமையாக இருந்திருக்கலாமே" என்று.
வேறொரு இடத்தில் வேலை கிடைத்தாலும், கிரக நிலை சரியில்லாத போது எங்கே போனாலும் பிரச்சினை வரத்தானே செய்யும். 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பது போல, அங்கேயும் நிம்மதி இருக்காது. "முன்னாடி இருந்த இடமே இதைவிட மேலாக இருந்ததே, அங்கேயே இருந்திருக்கலாமே" என்று யோசிக்க வைக்கும். அஷ்டம சனிக்காரர்களுக்கு 10-ஆம் இடத்து தொழில் பிரச்சினையும், 2-ஆம் இடத்து குடும்ப பிரச்சினையும் வர வாய்ப்பிருக்கிறது.
தனுசு ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக அமர்கிறார். 4-ஆம் இடம் என்பது சுக ஸ்தானம், தாயாரை குறிக்கும் இடம். 4-ம் இடத்திலிருந்து தனது 7-வது பார்வையால் 10-ஆம் இடத்தையும் (வேலை), 10-வது பார்வையால் தனுசு ராசியையும், 3-வது பார்வையால் 6-ஆம் இடத்தையும் (ருண ரோக சத்ரு ஸ்தானம்) பார்ப்பார்.
அர்த்தாஷ்டம சனியால், தனுசு, மீன ராசிக்காரர்களுக்கு தாயாருடைய ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். அவர்களுடைய சொந்த உடல்நலம், சுகமும் பாதிக்கப்படும். வேலையில் கடுமையான உழைப்பு இருக்கும், ஆனால் உழைப்புக்கேற்ற சன்மானங்கள் இருக்காது..
"பன்னிரண்டு ஏழெட்டு என்பான் பத்து ஐந்து நான்கு ஈறொன்று என்றிட்டான்..."
அதாவது, ஜாதகத்தில் ராசிக்கு 12, 1, 2, 4, 5, 7, 8, 10 ஆகிய இடங்களில் சனீஸ்வரன் வந்து நின்றால், அதற்குரிய பலன்:
"தெண்டங்கள் மிகவும் நட்டதனம் உயிர்சேதம் தனிச்சிறை மானபங்கமே..."
நிறைய வீண் விரயங்கள், விபத்துகளால் உயிர்ச்சேதங்கள், உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும், தேவையில்லாத வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ள நேரிடும். அடுத்தவர்களுடைய பிரச்சினைகளில் தலையிட வைக்கும். பொன், பொருள்கள் கையை விட்டுப் போகும் (திரவிய நாசம்). இருந்த இடத்தை விட்டு, வீட்டை விட்டு, ஊரை விட்டு வேறொரு ஊருக்கு மாறக்கூடிய (மனையை விட்டு மாடி விட்டு மறுநகரம் செல்லும்) சூழ்நிலைகள் உருவாகும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 4-ல் இருக்கக்கூடிய சனி, தனது 10-வது பார்வையால் தனுசு ராசியை பார்ப்பதாலும், 3-வது பார்வையால் 6-ம் இடத்தைப் பார்ப்பதாலும் கடன் (ருணம்), வியாதிகள் (ரோகம்), மற்றும் எதிர்ப்புகள் (சத்ரு) உண்டாகும். 10-ம் இடத்தைப் பார்க்கும் போது வேலையில் அதிகமான பணிச்சுமை ஏற்படும். சந்திரனைப் பார்ப்பதனால் புத்தி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் வரும்.
சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய கும்பம், மீனம், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் அனைவரும் பின்வரும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்:
பொறுமையும் நிதானமும்: எந்த அளவுக்கு பொறுமையாக இருக்க முடியுமோ, அதை கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. 2 – 3 முறை, சில நாட்கள் கூட நன்றாக யோசித்துவிட்டு முடிவெடுங்கள்.
தர்ம காரியங்கள் (தானம்): உங்களால் முடிந்த அளவுக்குத் தர்ம காரியங்களை செய்யுங்கள். 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்பது போல, தகுதியான நபரா என்று ஆராய்ந்து செய்யுங்கள். ஏமாந்தபின் வருத்தப்படக் கூடாது.
வாகனப் போக்குவரத்து எச்சரிக்கை: வண்டி வாகனப் பயணங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். விபத்துகள் வராத வரைக்கும் பிரச்சினை கிடையாது. வந்துவிட்டால், தடுக்க முடியாது..
முதலீடு மற்றும் ஜாமீன் தவிர்த்தல்: பணம், தொழில், முதலீடு சார்ந்த விஷயங்களிலும் கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். அடுத்தவருடைய கடனை நீங்கள் தான் சுமக்க வேண்டி வரும்.
அசையாச் சொத்துகளில் முதலீடு: புதிய வாகனங்கள் வாங்க ஆசைப்பட வேண்டாம். அதற்குப் பதிலாக பூமியில் முதலீடு செய்யுங்கள். அதாவது நிலம், வீடு போன்ற அசையா சொத்துகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. புதிதாக கடன் வாங்கி தொழில் தொடங்குவதோ அல்லது கூட்டுத் தொழில் செய்ய கூடாது. தனிப்பட்ட ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்த பிறகே தொழில் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இரவு நேரப் பயணங்களை தவிர்த்தல்: இரவு நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும். நாம் வண்டி ஓட்டினால் தான் விபத்து வரும் என்பதில்லை. பின்னாடி உட்கார்ந்து போனாலும் விபத்து ஏற்படலாம்..
நட்பு மற்றும் பழக்க வழக்க சேர்க்கை: பழக்க வழக்கங்களில் கவனமாக இருங்கள். நாம் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டோம், ஆனால் தவறான நண்பர்களின் சேர்க்கை நம்மை வம்பு, வழக்குகளில், காவல் நிலையத்தில் உட்கார வைத்துவிடும்.
எல்லாவற்றிற்கும் மேலாகக் குடும்பம் முக்கியம். ஒரு மனிதனுடைய தரத்தை அவனுடைய வார்த்தைதான் (வாக்கு) நிர்ணயம் செய்கிறது. அதனால் கடுமையான பேச்சு வேண்டாம். யாரையும் மனம் வருத்தப்படக்கூடிய வகையில் பேச வேண்டாம். உங்கள் பக்கத்தில் நியாயங்கள் இருந்தாலும் கூட, அதனை நிரூபிப்பதற்கான காலகட்டம் இது இல்லை.
சனி நீதிக்காரகன். நல்லது கெட்டதை காட்டிக் கொடுத்து நம்மை பக்குவப்படுத்தக் கூடிய கிரகம். பொறுமையோடு, நியாயப்படி, தர்ம வழியில் நடந்தால் நமக்கு நல்லது மட்டும்தான் செய்வார். இவன் நேர்மையாக, கடவுள் பக்தியோடு, கெடுதல் நினைக்கவில்லை என்றால், தற்காலிகமாக கஷ்டத்தை கொடுத்தாலும், பெயர்ச்சி மாறும் போது நல்ல வளர்ச்சியை கொடுத்து விடுவார்.
"சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" என்று சொல்வார்கள். அவர் காசு பணத்தை கொடுக்க மாட்டார். அனுபவம் என்ற வாழ்க்கை பாடத்தை கொடுத்து நம்மை பக்குவப்படுத்தி, "இவன் எல்லா பொறுப்புகளுக்கும் தகுதியானவன்" என்று ஆக்கிய பிறகு, நல்ல பதவி உயர்வையோ அல்லது நல்ல தொழிலையோ, ஏதேனும் ஒரு நல்ல நன்மையை கொடுத்துவிட்டுத்தான் போவார்.

ॐ