Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

பிரிந்த கணவன்–மனைவி மீண்டும் இணைய எளிய வழி

03 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கணவனுக்கு சொல்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டும் 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்', எப்படி இருந்தாலும் அவனுடன் அனுசரித்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார்களே?
பல கணவன்மார்கள், மனைவியினுடைய வார்த்தையை மீறாமல் இருக்கிறார்கள். ஒரு பெண் பொறுமை, புரிதல் இல்லாமல் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார். தெய்வங்கள் எல்லாமே மனைவிமாரோடு சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள். கைலாயத்தில் பரமேஸ்வரன் - பார்வதி அமர்ந்திருக்கிறார்கள். திருத்தணி முருகருக்கு இருப் பக்கம் இரு மனைவி இருக்கிறார்கள்.

தலைக்கனம் (Ego) என்பது வேண்டாம். சண்டை போட்டு மனைவியைப் பிரிந்திருப்பவர்கள், மீண்டும் உங்கள் மனைவிக்கே தாலி கட்டி இரண்டாவது மனைவியாக (மறுபடியும்) வைத்துக்கொள்ளுங்கள். லட்சுமியுடைய அருள் இருந்தால் வீடு ரொம்ப வளர்ச்சி அடையும். மேற்கொண்டு சொத்து வாங்குவீர்கள். நிறைய காசு, பணம், ஆபரணங்கள் சேரும். எல்லாவற்றுக்கும் மேலாக கணவன் - மனைவிக்கு இடையே ஆழமான காதல், அன்யோன்யங்கள் அதிகமாக இருக்கும்.

அழகு என்று வீட்டுக்கு முன் அரளி செடி வளர்க்கக் கூடாது. முருகருக்கு செண்பகப்பூ தான் சிறப்பு. அரளிப்பூ கிடையாது. முருகன் மயிலேறிய வம்சம். முருகனுக்கு அதிதேவதை, கிரக சாரம் பெற்றது செவ்வாய். அதனால் மேஷ, விருச்சிக ராசிக்கும் முருகனை வணங்கச் சொல்வது. செவ்வாயுடைய மலர் செண்பகம்.

அரளி என்பது விஷம். நம் கிராமப்புறங்களில் வீட்டில் சண்டை வந்தால் மஞ்ச அரளி அரைத்துக் குடித்துவிடுவார்கள், அதன்பின் காப்பாற்றவே முடியாது. மருதாணி வைத்தால் லட்சுமி கடாட்சம். மருதாணி பூ, மருதாணி செடி எதிர்மறை ஆற்றலை (Negative Energy) வெளியே அனுப்பும். கெட்ட சக்திகளை அண்ட விடாது. திருஷ்டிக்கு சாம்பிராணி போடுவோம். அதில் சேரும் எட்டுப் பொருட்களில், மருதாணி விதை ஒன்று. அதாவது படிகாரம், கருஞ்சீரகம், வில்வ இலைப்பொடி, அருகம்புல் பொடி, வெண்கடுகு, மருதாணி விதை போன்ற பொருட்கள். வீடுகளில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி போடும் பொழுது 'ஹோம' நறுமணம் வரும். வீட்டில் லட்சுமி கடாட்சம் தங்கும், திருஷ்டிகள் விலகும்.

துளசி செடி வீடுகளில் கண்டிப்பாக இருக்க வேண்டும். முன்னோர்கள் அறிவியலோடு ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்திருக்கிறார்கள். குழந்தைக்கு சளி பிடிக்கும் போது கஷாயம் வைக்க துளசி இலை பறித்துக்கொள்வோம். துளசி இருக்கிற இடத்தில் பெருமாள், லட்சுமி இருப்பார்கள். பெண்கள் மருதாணி போட வேண்டும். மெஹந்தி (Mehandi) என்பது முழுமையான வேதிப்பொருள் (Chemical). மருதாணி வைக்கும் இடத்தில் லட்சுமி வந்துவிடுவார்கள். அது உடம்பு உஷ்ணத்தை குறைக்கும். மருதாணி விதை வீட்டில் இருக்கக்கூடிய துர்சக்தியை வெளியே கொண்டு போகும்.

கோவில் வாசலிலேயே அரளிப்பூ கட்டி விற்கிறார்களே?
நான் கோவிலுக்கு அரளிப்பூ வாங்க மாட்டேன். அர்ச்சனைக்கு உதிரிப்பூவாக அரளிப்பூ வாங்குறோமே தவிர, நான் அரளிச் செடியை வளர்க்கவில்லை. பூஜை செய்ய வாசனை பூக்களாக மல்லி, செண்பகப்பூ, பாரிஜாதம், மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து போன்றவை இருக்க வேண்டும். முருகாலயம் செல்பவர்கள் அரளிக்கு பதில் மரிக்கொழுந்து ஒரு கட்டு, மருதாணி வாங்கினாலே போதுமானது.

வீடுகளில் சுவாமி கும்பிடும்போது மருதாணி பூ வைத்து வணங்குவது விசேஷம். ஒரு கொத்து மருதாணி பூவை வைத்து வீட்டைப் பூட்டிப் பாருங்கள். எவ்வளவு மணம் வீசும் என்று தெரியும். அமைதியை உணரக்கூடிய நறுமணத்தை கொடுக்கக்கூடியது. பெண்கள் கையில் மருதாணி போட்டால் அழகு வரும். அதை ரசிப்பதில் ஒரு பரிகார பலன் இருக்கிறது. பெண்கள் மங்களகரமாக லட்சுமி கடாட்சத்தோடு இருங்கள். கண்டிப்பாக உங்களைத் தேடி உங்கள் கணவனும் வந்துகொண்டே இருப்பார். உங்கள் தெய்வமும் உங்களை விட்டு வெளியே போகாது

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.