வீட்டில் லட்சுமி கடாட்சமும் ஐஸ்வரியமும் தங்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டுத் தலைவியாக இருப்பவர்கள் அந்த வீட்டினுடைய கருவறை போன்றவர்கள். ஆண்கள் அனைவருமே அந்த வீட்டினுடைய தெய்வம். சிவாலயங்களில் சிவன்-அம்பாள் இருப்பதை போல ஒரு ஆணும் பெண்ணும் சொல்லப்படுகிறார்கள். முதலில் உடல் சுத்தம் மிக அவசியம், அடுத்தது வீடு சுத்தம். பொறுமை என்பது மிக அவசியம். வீட்டுத் தலைவி அதிகமாக பேசுவதை குறைக்க வேண்டும். அவர்களுடைய வார்த்தைகள் கடினமாக, குரலை உயர்த்தி பேசக் கூடாது. அதிக அதிர்வுகளை தரும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
வாக்கு என்பதில் மிகுந்த கவனம் தேவை. வாயை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களை கட்டுப்படுத்தலாம். இது ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும், பெண்கள்தான் வீட்டினுடைய குலதெய்வம். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு பெண் நினைத்தால் ஒருவனை உயர்த்தவும் முடியும், அழிக்கவும் முடியும். யாராலும் திருத்த முடியாத மனிதனைக் கூட ஒரு பெண் மாற்றிவிடலாம். யாரையும் சபித்துப் பேசக்கூடாது. தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தவே கூடாது. கோயிலுக்கு சென்றால் நல்லதையே பேசுகிறோம், நல்லதையே சிந்திக்கிறோம். நம்முடைய வீடும் ஒரு கோயில் தான். வீடுகளில் அதிகமாக தீய விஷயங்களை பேசினால் மகாலட்சுமி தங்கமாட்டாள்.
நம்முடைய முன்னோர்கள் தவறு செய்துவிட்டால் 'நாசமற்றுப் போ' என்பார்கள். அதன் உண்மையான பொருள் 'நாசம் அற்றுப் போ' என்பதுதான். அதாவது, 'உன் மனதிலிருக்கும் குரோதம், கெட்ட எண்ணம், கெட்ட சிந்தனை, வன்மம் உன்னை விட்டுப் போகட்டும்' என்றுதான் ஆசீர்வதிப்பார்கள். ஆனால், காலப்போக்கில் வார்த்தை மருவி, 'நீ நாசமாய் போ' என்று திட்டுவதாக மாறிவிட்டது.
குழந்தைகளை 'எருமை', 'நாய்', 'கழுதை' என்று விலங்குகளோடு ஒப்பிட்டு திட்டுவதை தவிர்க்க வேண்டும். நம்முடைய முன்னோர்கள் தான் மீண்டும் நமக்கு குழந்தையாக பிறந்திருப்பார்கள். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
பெண்கள் காலில் கொலுசு அணிய வேண்டும். அம்பாள் காலில் கொலுசு, மூக்குத்தி, நெற்றியில் பொட்டு, காலில் மெட்டி ஆகியவை இருக்கும். இதெல்லாம் ஐஸ்வரியத்தின் அடையாளங்கள். வீட்டினுடைய தலைவாசல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும், காலையில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வாசல் தெளித்து துடைத்துவிட்டு, கோலம் போடுவது மிக விசேஷமாக, ரம்மியமாக இருக்கும்.
பலர் வெள்ளிக்கிழமை மட்டுமே சாமி கும்பிடுகிறார்கள், மற்ற நாட்களில் கும்பிடுவதில்லை. நாம் தினமும் சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல தெய்வத்தை வீட்டில் வைத்திருக்கும் போது தினமும் ஒரு நெய்வேத்தியம் வைத்து விளக்கேற்ற வேண்டும். அதைத்தான் இறைவனும் விரும்புவார். நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். சாமிக்குப் போட்ட பூவை அடுத்த நாள் காலையிலேயே எடுத்துவிட வேண்டும். சிலர் பூவைக் குப்பை போல அங்கேயே காய வைப்பார்கள். அத்தகைய பழமை சேரவே கூடாது. தேவை இல்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். 'பழமை' என்பது பூவை மட்டும் குறிக்கவில்லை. பயன்படுத்திய தேவையற்ற பொருட்களை அடுத்த நாள் காலையிலேயே குப்பை தொட்டியில் போட்டுவிட வேண்டும். மூன்று நாள் வரை குப்பையை வீட்டில் வைத்துத் துர்நாற்றம் வர வைப்பது அறவே கூடாது.

ॐ