Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

இரண்டு லக்னங்களுக்கு திருமண வாய்ப்பு குறைவா ?

03 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
தினப் பொருத்தம் என்பது மிக முக்கியமானது. தினப் பொருத்தம் அமைந்த கணவன் மனைவியரை வெளியில் பார்க்கும்போது நல்ல நண்பர்களை போல தெரிவார்கள். மிகவும் மகிழ்ச்சியாக, கைகளை கோர்த்துக் கொண்டு போவார்கள்.

திருமண பொருத்தத்திற்கு வருபவர்களுக்கு, "உங்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கப் போகிறது" என்று சொல்லிவிடுவோம். இதை தாண்டி கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்பொழுது கோச்சார கிரகங்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, தசா புத்திகள் நிலை இருக்கிறது. அதோடு நம்முடைய கர்ம வினையும் சேர்ந்தே இருக்கிறது.

ஆனாலும், அவை பாதிக்காதவாறு "தலைக்கு வருவது தலைப்பாகையோடு போனது" என்று இருக்கும். காலையே எடுக்க வேண்டிய இடத்தில், ஒரு விரல் மட்டும் உடைந்து போவதோடு அல்லது ஒரு சின்ன எலும்பு முறிவோடு தப்பித்து கொள்வது போன்றது. ஆனால், அவையனைத்தும் கட்டுப்படுத்தக் கூடியவை, பேசி சமாதானம் செய்து கொள்ளக் கூடியவை. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்னத்திற்கு 7-வது இடம் என்பது 'கும்ப ராசி'. அது சனியின் வீடு.6-க்குடைய வீடு மகரம். அதுவும் சனியுடைய வீடு. (கடக லக்னத்திற்கு 7-ம் இடமாக வருவது 'மகர ராசி'). அதுவும் சனியின் வீடுதான்

கும்ப, கடக லக்னக்காரர்களுக்கும் எளிதாக திருமணம் நடக்காது. நடந்தால் மிக குறைந்த வயதிலே நடந்துவிடும், இல்லையென்றால் வயது கடந்துதான் நடக்கும். ஏனென்றால், 2 பேருக்குமே 7-ம் அதிபதியாகிய 'சப்தமாதிபதி' சனி ஆகிவிடுகிறார். சிம்ம லக்னத்திற்கு, 7-க்கு, 6-க்குடைய கிரகமும் ஒரே வீடாக (சனி வீடாக) அமைகிறது. 6-ம் இடம் என்பது வம்பு, வழக்கு, நீதிமன்றம், வியாதி, விரயம் ஆகியவற்றை குறிப்பதாகும். அதுவே சப்தமாதிபதி எனப்படும் 'களத்திர ஸ்தானாதிபதி' ஆகிவிடுவதால், வரக்கூடிய மனைவியே, கணவனே அவர்களுக்கு எதிரியாக மாற வேண்டும். இது சிம்ம, கும்ப லக்னங்களுக்கு உள்ள பொதுவான அமைப்பு.

சப்தமாதிபதி எனப்படும் 7-ம் அதிபதி, 6-ம் இடத்தில் அமர்ந்தால், அவர்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கணவனால் அல்லது மனைவியினால் நிறைய விரயத்தை, வழக்குகளை, பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். வளர்ச்சி இருக்காது. கல்யாணத்திற்கு பின் தான் நாம் கஷ்டப்படுகிறோம் என வருத்தப்படுவீர்கள்" என்று சொல்லிவிடுவோம்.

ஆனால் குழந்தை பிறந்துவிட்டால் பிரிய முடியாது. மீறிப் பிரிந்தால் குழந்தை அனாதையாகிறது, இந்த ஜென்மத்தில் உங்களுக்கு பெரும் பாவமாக வந்து சேரும். அதை சரி செய்வதற்கு வழி கொடுத்திருக்கிறோம். சிலருடைய ஜாதகத்தில், கர்ம வினைப்படி அவர்களுக்கு 'இரண்டாவது வாழ்க்கை' என்று எழுதப்பட்டிருந்தால், கண்டிப்பாக இரண்டாவது வாழ்க்கை தான் பொருத்தமாக இருக்கும். அந்த வாழ்க்கை அமைந்த பிறகுதான் நன்றாக இருக்கும் என்பதையும் மகரிஷி சொல்லியிருக்கிறார். இதில் ஒளிவுமறைவு கிடையாது.

தாலி கட்டினால் மட்டும்தான் கணவன் மனைவி என்று கிடையாது. சிலர், கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்து இருப்பார்கள். ஆனால், இன்னொரு வாழ்க்கையை மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது என்னிடம் மறைக்க முடியாது. சமூகத்திற்கு கணவன் மனைவியாக இருந்தாலும், அவர்கள் ரகசியமாக இன்னொரு வாழ்க்கை, இரண்டாவது வாழ்க்கையின் சுகத்தை அனுபவிக்கிறார்கள். பலர் அப்படி இருக்கிறார்கள். எத்தனை பேருக்கு அதை நாம் நிரூபித்துக் காட்ட முடியும்?

இதுவரை யாருமே ஜோதிடத்தை முழுமையாக படித்து கிடையாது. இன்றளவும் அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்ய விரும்புவார்கள். ஆனால், ஜாதகம் பொருந்தவில்லை என்று பெற்றோர் மறுக்கிறார்களே?
இங்கே எதுவுமே சுய விருப்பப்படி நடப்பதில்லை, நம்முடைய கர்ம வினைதான் நம்மை நடத்துகிறது. தர்மம் இருக்கும்போது, அதர்மம் இருக்கத்தான் செய்யும். சாத்தான் என்று ஒன்று இருந்தால், அங்கே தெய்வம் என்று ஒன்று இருக்கும். எனவே, எதிர்மறை என்பது எல்லாவற்றிலும் உண்டு. அதை நாம் புரிந்து கொண்டு வாழ்க்கையை நல்லபடியாக வாழ வேண்டும். நம்முடைய சந்ததி நல்லபடியாக தொடர வேண்டும், பாதிக்க கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்முடைய கர்ம வினைக்கு தகுந்தாற்போல, இந்தப் பிறவியில் விதியை கொடுத்திருக்கிறார். தாக்கத்தை, கர்மாவை, வலிகளை குறைத்துக் கொண்டு, அதற்கு மேல் எப்படி சந்தோஷமாக வாழலாம் என்று சிந்தியுங்கள்.

பெற்றோர்கள் நான் ஒரு முக்கியமான கருத்தை சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மகன் எல்லா அரவணைப்பையும் கொடுக்கிறான். வீட்டிற்கு வந்த மருமகளோ அல்லது மருமகனோ எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்களுக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. எல்லாவற்றிலும் தலையிட வேண்டாம்.

என்னை நம்பி மனைவி வருகிறாள் என்றால், அவளுக்கு என் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நம் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையும் பாசமும் இருக்கும். மருமகள் தன் மாமியாருக்கும் கடமைகளை சரியாகச் செய்துவிடுகிறாள். நான் என் மகனை ஆரம்பத்தில் இருந்து வளர்த்தேன், எல்லாமே செய்தேன், அதனால் அவனை முழுமையாக விட்டுக்கொடுக்க முடியாது என்று பெற்றோர்கள் நினைத்தால், அவனுக்குத் திருமணமே செய்து வைத்திருக்கக் கூடாது.

'காதல் திருமணம்' தான் நடக்கும் என்று இருந்தால், அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன். சிலர் அவர்கள் விருப்பப்படி வாழ்ந்துவிட்டு, பின்னாளில் பிரச்சனை வந்து, பிரிவின் போது, பெற்றோர்களாலும் முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்திருக்கிறார்கள். அப்பொழுது நான் பெற்றோர்களிடம் "நீங்களே பார்த்து ஒரு வாழ்க்கையை அமைத்திருந்தாலும், பிரச்சனை இருந்திருக்கும். அவர்கள் தங்களுடைய சொந்தப் பொறுப்பில் (Own risk) ஒரு விஷயத்தை அனுபவித்து விட்டார்கள். இப்போது நீங்கள் குற்றவாளியோ அல்லது பலிகடாவோ ஆகவில்லை. அதனால் நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்" என்று பலரிடம் சொல்லியிருக்கிறேன்.

இப்போதெல்லாம் எங்கே உண்மையான காதல் இருக்கிறது? வெறும் மோகம் மட்டுமே. அந்தக்காலத்தில் காதல் என்பது, எட்ட நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதிலே சுகம் இருக்கும். ஆனால் இன்றைக்கு திருமணம் செய்வதற்கு முன்னாடியே வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். அங்கே ஜாதகம் எப்படி பேசும்? அதன்பின் எதற்காக 'சாந்தி முகூர்த்தம்' என்று நல்ல நேரம், காலம் குறிக்க வேண்டும் ?

அக்னி சாட்சியாக திருமணம் செய்து, சாந்தி முகூர்த்தம் என்ற ஒரு நேரத்தை கொடுத்து, "இந்த நேரத்தில்தான் இரண்டு பேரும் புணர்தல் வேண்டும்" என்று கொடுக்கிறோம். அதற்குள் பல விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. ஆனால், இப்போது இரண்டு பேரும் பரஸ்பரம் (Mutual) பேசி, வாழ்ந்து பார்த்துவிட்டு, அதன்பின் கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்கிறார்கள். அது திருமணமே கிடையாது.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, ஒரு பெண்ணை முழுமையாக பார்ப்பதற்கான தகுதி கணவனுக்கு மட்டும்தான் உண்டு, தாய்க்குக்கூடக் கிடையாது. அப்பேர்ப்பட்ட உன்னதமான இடத்திற்கு வந்த பிறகு, வேறொருவரை திருமணம் நடந்தால், அது 'முதல் தாரம்' ஆக முடியாது. எந்தத் தாரத்தை அடிப்படையாக வைத்து பலன் சொல்ல முடியும்? இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.