கைரேகை வைத்து எடுப்பது தான் நாடி ஜோதிட முறை. சித்தர்கள் பலாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாடி சாஸ்திரம் எழுதியிருக்கிறார்கள். நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் தேவை.
முதல் காண்டம் / பொது காண்டம் - பொது காண்டம் என்பது மற்ற 11 காண்டங்களுக்கு அறிமுகம்.
இரண்டாவது காண்டம் - குடும்ப வாழ்க்கை, கல்வி, பொருளாதார நிலை, பெண்களுக்கு பிறந்த இடத்திலிருந்து வரக்கூடிய செல்வங்கள், ஆதரவுகள், படிப்பு, குடும்ப வாழ்க்கை.
மூன்றாவது காண்டம் - மன தைரியம், வீரியம், இளைய சகோதரன் அல்லது சகோதரி. இல்லற தாம்பத்தியம் வருவதற்கு மூல காரணமாக இருக்கின்ற உணர்ச்சி, ஆசைகளை தூண்டக்கூடிய கிரக அமைப்பு, இந்த ஸ்தானம் நன்றாக இருந்தால் மட்டும்தான் வீரிய நிலை செயல்படும். ஆண்மை சார்ந்த விஷயம்.
நாலாவது காண்டம் - சுக வாழ்க்கை. மூன்றாவது காண்டம் என்பது வீரியத்தன்மை நன்றாக இருந்தால், நாலாவது காண்டம் அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டிய அமைப்பு இருக்கும். தாயாருடைய நிலை, அவங்களுடைய ஆரோக்கியம். அம்மா, குழந்தைகளுக்கான பந்தத்தை தீர்மானிக்கும். வீடு, மனை, மேற்கொண்டு வாங்கக்கூடிய சொத்து. பழக்க வழக்கங்கள். சிலர் சொல்வது, 'எனக்கு நண்பர்களே இருக்க மாட்டேங்கிறாங்க' என்பதக்கும் நாலாம் இடம் காரணம்.
ஐந்தாவது காண்டம் - பூர்வீகம். எத்தனை பேர் பூர்வீக மனையில் வாழ்கிறார்கள் ?. பூர்வீக சொத்து கிடைக்கப் பெற்றாலும், அனுபவிக்க முடியாமல் இருக்கிறார்கள். பூர்வீகச் சொத்து நல்லதை கொடுக்குமா, பாதகத்தை கொடுக்குமா என்பதை தீர்மானிப்பதும், பிறக்கக்கூடிய குழந்தையால் நன்மை தீமைகள். சிலருக்கு குழந்தை யோகமாகி, நல்ல வளர்ச்சியை கொடுக்கும். சிலருக்கு விரயங்கள் ஏற்படும். குழந்தைக்கான மருத்துவச் செலவுகள் கொடுத்து கொண்டிருக்கும். குழந்தை எப்போது பிறக்கும்? ஏன் குழந்தை பாக்கியம் இல்லை?
மகரிஷி சொல்லக்கூடியது நம்முடைய முன்னோர்களே குலதெய்வம். ஐந்தாவது காண்டத்தில் நிறைய பிரிவுகள் உள்ளன. ஒரு மனிதனுடைய வளர்ச்சியாக்குவது 1, 5, 9 என்ற திரிகோண ஸ்தானம். ஐந்தாம் இடம் என்ற முதல் படி நன்றாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குரிய யோகத்தை அனுபவிக்க வேண்டிய முடியும்.
ஆறாவது காண்டம் - வியாதி. சிலருக்கு என்ன மருந்து சாப்பிடுவது என்பது தெரியாமல் இருக்கும். என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும். வியாதியை பற்றிப் பேசுவது ஆறாவது காண்டம். சிலர் வேலைக்கு போயிட்டு சம்பாதிக்க ஆரம்பித்தலிருந்து வாழ்க்கை கடமகள் (commited) இருக்கும். அதாவது கடன் வாங்குவது, கடன் அடைப்பது என்று வாழ்க்கை முறை போகுமே தவிர, வரக்கூடிய வருமானத்தை முழுதாக தக்க வச்சுக்க முடியாது. சத்ருக்கள், உறவாடிக்கிட்டே இருந்து நிறைய பாதிப்புகள் வரும். எதிர்மறையான சிந்தனைகள், அவர்களுடைய எதிர்மறை ஆற்றல் இவர்களைப் பாதிக்கும். ஆனால் இவர்களுக்கு தெரியாது. அது மாதிரியான சூட்சுமங்களை சொல்லக்கூடியது.
ஏழாம் காண்டம் - களத்திர ஸ்தானம். கணவன் மனைவியை நிர்ணயம் பண்ணக்கூடிய இடம். எத்தனை கல்யாணம்? கல்யாணமானவர்கள் எப்படி இருப்பார்கள்? துணையை பற்றி முழு விவரம். ஏற்கனவே காதல் தோல்வி ஆயிருக்குமா? என்பது சூட்சுமமாக நிறையவே கிடைக்கும். ஏன் கல்யாணம் நடைபெறவில்லை? எப்பொழுது சரியான கல்யாண வாழ்க்கை? கல்யாணம் கூடி வருவதற்கு வழிமுறைகள்.
எட்டாவது காண்டம் - ஆயுள். இடைப்பட்ட காலத்திலே நம் பயணங்கள், உயிர் கண்டம் வருமா? எதனால் வரும் ? பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறை, தீர்வுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதனால், நம்ம காப்பாத்திக்கலாம். எந்த வயதில், எந்த மாதத்தில், எந்த திதியில, எந்த நட்சத்திரத்தில், எந்த வேளையில் எப்படிப்பட்ட மரணம் ? என்பதை வெளிப்படுத்தும்.
ஒன்பதாவது காண்டம் - அதிர்ஷ்டத்தை குறிக்கக்கூடியது ஐந்து, அதை அடையக்கூடிய பாக்கியம் என்பது ஒன்பதாவது இடம். அதற்கு நம்முடைய முன்னோர்களுடைய ஆசி வேண்டும். ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியம், முன்னோர்கள். ஒன்பதாம் இடம் என்பது நமக்கு அவர்கள் தெய்வமாக காக்கிறார்களா? நமக்கு ஆன்மீகம், குருமார்கள் எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை ஒன்பதாம் இடம் நிர்ணயம் பண்ணுகிறது. பலர் சொல்வது "எனக்கு எல்லாம் வந்தது, அந்த ஒரு நொடியில் போய்விட்டது", அதற்கான காரணம் என்ன? அதிர்ஷ்டத்தை பாக்கியமாக அனுபவிப்பதற்கான வழிமுறை என்ன? இறைஞானம், ஆன்மீகம் தாண்டி பாக்கியம், ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டு போகிறது.
பத்தாவது காண்டம் - எப்படிப்பட்ட தொழில்? படிப்புக்கும் வேலைக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கும். நாம் செல்லும் பாதை சரியானதா? வேலையாக அல்லது தொழிலாக இருந்தாலும், விதிப்படி என்ன தொழில் ? அந்த தொழிலில்தான் ஈடுபட்டிருக்கிறோமா என்பதை சரியான முறையில் தீர்மானிக்கக்கூடியது. பலர் தொழில் தொடங்க வேண்டிய சரியான வயதை விட்டுட்டு, கெட்ட காலத்தில் தொழிலை ஆரம்பித்து, தோல்வியை சந்திக்கிறார்கள். மீண்டும் நல்ல நேரம் வந்தாலும், தொழிலை தொடங்குவதற்கான தைரியம் வராது.
பதினோராவது காண்டம் - எந்தத் துறையின் மூலம் லாபத்தை சம்பாதிக்க போகிறோம். இச்சா (ஆசை) ஸ்தானம். ஒரு மனிதனுக்கு ஆசைகளை உருவாக்குவது 11-வது இடம். இரண்டாவது விவாகம். சிலர் தாலி கட்டாமல் வாழ்கிறார்கள். அவர்களும் மனைவிக்கு, கணவனுக்கு சமம்தான். அத்தகைய உறவுகளை உருவாக்குவது 11-வது இடம். அவர்கள் யார் ? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்? அவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பனிரெண்டாவது காண்டம் - எதனால் விரயங்கள் ஏற்பட போகின்றன? கட்டில் சுகம், கணவன், மனைவியினுடைய படுக்கையறை பற்றி பேசுவது. ஆசைக்காக சுகத்தை அனுபவிக்கிறார்களா? உணர்வுப்பூர்வமாக அனுபவிக்காதவர்களா? வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டிலே நிரந்தரமாக குடியேறப் போகிறார்களா ? வெளிநாட்டில் எவ்வளவு காலம் இருக்க போகிறார்கள் என்பதை தீர்மானிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பிறவியோடு போதும். அடுத்த ஜென்மம் வேண்டாம். எனக்கு மோட்சம் அல்லது முக்தி கிடைக்குமா? என்பதை தீர்மானிக்கும் இடம்.

ॐ