₹500 ரூபாய்க்கு ஜோதிடம் பார்க்கிறார்கள், நீங்கள் ₹2000 ரூபாய் கேட்கிறீர்களா? என்று கேள்வி எழுப்புவர்களிடம் நான் ஒன்றுமே சொல்ல முடியாது. நல்ல விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன் 4 இடங்களில் பணத்தை இழந்தால், அதுவும் கர்மா தான்.
உண்மையான நாடி ஜோதிடம், இன்னார் மூலமாக வாக்கை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதி, கர்மாவின்படி குருநாதர் எழுதியிருப்பார். என் காணொலியை பார்ப்பவர்கள், 10 பேருக்குத்தான் உள்ளுணர்வு, "என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று சொல்வார்கள்.
என் ஏமாற்றம், ரகசியங்கள் நீங்கள் சொல்லும்போது வியப்பாக இருந்தது. இறுதியாக "இனிமேல் ராஜயோகத்தோடு நன்றாக வாழ்ந்து காட்டுவீர்கள்" என்பது தெய்வீகமாக தெரிந்தது. சிவபெருமான் எனக்கு உயிர். அடிக்கடி திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறேன். நாடி வாசித்த பிறகு, இன்னுமே சில ஆழமான விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாயிவிட்டது. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
நடிகர் பொன்னம்பலம் ஐயா, உங்களை போன்ற நாடி ஜோதிடர் பலன் கணித்திருந்தால், பாதிப்பு வந்திருக்காது என்று தோன்றுகிறது.
என் அனுபவத்திலும், என் குருநாதர் மீது உள்ள நம்பிக்கை அடிப்படையில் கண்டிப்பாக காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
இந்த ஜென்மத்தில் கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே ?
ஒரு மனிதன் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் நேர காலம் வர வேண்டும். அதற்கு கர்மா அனுமதிக்க வேண்டும். ஒரு இடத்தில் ஏமாறுவதற்கும், நன்மையடைவதற்கும் கர்ம வினைதான் காரணம். விதி நமக்கு வழி கொடுக்க வேண்டும்.
"இப்படி இருந்திருந்தால்" என்ற ஒரு கேள்வியை வைக்கிறோம். "நீ அனுபவித்து விட்டுத்தான் வர வேண்டும்" என்று எழுதியிருந்தால், பலன்களை தெரியக்கூடிய நேரத்தில் மனது ஏற்றுக்கொள்ளாது, "நீ அனுபவிக்க வேண்டும்" என்பது 'பிராப்தம்'. அனுபவித்த பின் உங்களை உணரக்கூடிய நிலை வரும்.
ஒருவேளை பொன்னம்பலம் ஐயா சரியான பலன் தெரிந்திருந்தால், ‘இந்தப் பிரச்சனை உறவினர்கள் அல்லது பழகுபவர்களால் பிரச்சனை உருவாகலாம். கவனமாக இருங்கள். அதை தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை பின்பற்றுங்கள் என்று சொல்லியிருப்போம். அதுதான் நாடி ஜோதிடம். இதை நான் சொல்லவில்லை. மகரிஷிகள் எழுதியதைத்தான் சொல்கிறோம். ‘அவன் இன்றி அணுவும் அசையாது’ என்பது உண்மை. நாம் பேசிக் கொண்டிருப்பதை கூட, குருநாதர் அகஸ்தியர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஒரு மனிதன் 100 தவறுகள் செய்த இடத்தில், ஏதோ 10 நல்ல விஷயமாவது செய்திருப்பான். அந்தப் புண்ணிய காரியங்களுக்கு நற்பலன் கிடைக்கும்.
கெட்டதற்கு மட்டுமே கர்மா என்பது இல்லை. நல்லது செய்த புண்ணியத்திற்கும் நல்ல கர்மா இருக்கிறது. அதற்கான பலனை நாம் அனுபவித்தாக வேண்டும். நாம் ஒரு பெரிய சங்கடத்தை சந்திக்கவிருக்கிறோம் என்றால், முன்கூட்டியே ஏதேனும் ஒரு தூண்டுகோல் மூலம் அதை தெரிந்துகொண்டு, நாம் எச்சரிக்கையாவதற்கான (Alert) ஒரு சந்தர்ப்பத்தை கடவுள் கொடுக்கிறார். அப்பொழுதுதான் நாம், (Just miss) 'நான் நூலிழையில் தப்பித்து கொண்டேன். ஏதோ நான் செய்த புண்ணியம்' என்று கூறுவோம்.
ஒருவேளை இதை நாம் தெரியாமல் இருந்திருந்தால், பிரச்சினையில் மாட்டிருப்போம். 'கடவுள் ஏதோ ஒரு வழியில் நமக்கு உதவி செய்திருக்கிறார்' என்று கூறுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஐயாவுக்கு அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஏற்கனவே எழுதப்பட்டது. அவருக்கு யாராவது ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய மனது அதில் போகாமல் இருந்திருக்கலாம். அதற்கும் கர்மா நல்லதை செய்யவிடாமல் தடுப்பதுதான். ஒரு கெட்ட விஷயத்தை அனுபவிக்க வேண்டிய நேரம் வரும்பொழுது, அதற்கான நிவர்த்தியை தேடக்கூடிய புத்தியை நமக்கு வரவிடாது. யாராவது அந்த நேரத்தில், 'இதை செய்தால் நன்றாக இருக்கும், வாருங்கள் போய் வரலாம்' என்று அழைத்தால், 'அதெல்லாம் சும்மா, எனக்கு நம்பிக்கை இல்லை, எல்லாமே பொய்' என்று பேசுவது யார்? அவர்கள் அல்ல. கெட்ட கர்மாதான் அவர்களை பேச வைக்கிறது.
இந்த இடத்தில் கெட்ட கர்மா ஆதிக்கம் (Dominate) செலுத்தாமல் இருக்க, இறை வழிபாடு மிக முக்கியம். அப்போதுதான் கடவுள் உள்ளே வருவார். கடவுளை முழுமையாக நம்பி ஒரு விஷயத்தை செயல்படும்போது, நிச்சயமாக நாம் காப்பாற்றப்படுவோம். இதெல்லாம் என்னுடைய அனுபவம். இதைப்பற்றி பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

ॐ