Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

எது சரியான நாடி வாசிப்பு ?

03 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
மக்கள் எது சரியான நாடி வாசிப்பு என்று கண்டுபிடிக்க முடியும்?
சரியான நாடி ஜோதிடரிடம் சென்றால், முதலில் கைரேகையைத் தான் வாங்குவோம். பெயரைக் கூடக் கேட்க மாட்டோம். நிறைய பேர் பிறந்த தேதியை வாங்குவார்கள். நாங்கள் அப்படி செய்ய மாட்டோம். ஆண்களுக்கு வலது கை ரேகை, பெண்களுக்கு இடது கை ரேகை. ஒரு ரேகைக்கு 3 முதல் 5 சுவடி கட்டுகள் வரை இருக்கலாம். சில ரேகைகளுக்குச் சுவடி கட்டுகள் இல்லாமலும் போகலாம். சுவடிக் கட்டுகளை எடுத்துப் படிக்கும்போது, நீங்கள் எதைப் பற்றியும் முன்னமே சொல்லக்கூடாது. 'ஆம்' அல்லது 'இல்லை' என்ற பதில் போதுமானது.

உதாரணமாக, இந்த ஓலையில் மகரிஷி சொல்லியிருப்பது,
'கூறிடும் நாளதனில் ஈன்றோர் தீர்க்கம்'.
அதாவது, இந்த ஓலைச் சுவடியைப் பார்க்க வந்த நேரத்தில், உங்களுடைய தாய், தந்தை ஆகிய இருவரும் 'தீர்க்கமாக' (உயிரோடு) இருப்பதாக சொல்கிறார். அப்போது நீங்கள், 'ஆமாம்' என்று பதில் தர வேண்டும். அடுத்து,
'குறைவற மனம் கண்டு வாழ்பவனாம்'
என்கிறார்கள். அதாவது, திருமணமாகி நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார். அந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் 'இல்லை' என்று சொல்ல வேண்டும். நல்லபடியாக போகிறது என்றால் 'ஆம்' என்று சொல்ல வேண்டும். அதை தவிர்த்து, 'என் மனைவி என்னுடன் இல்லை, பிரச்சனை நடக்கிறது' என்பது போன்ற விளக்கங்களை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் அதை சொல்லக் கூடாது. 'ஆம்' அல்லது 'இல்லை', அவ்வளவுதான்.

அடுத்து 'பெற்றிட்டான் ஈர் சேய்கள்' என்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அறிவை ஓராய் - அதில் ஒன்று பெண் குழந்தை என்கிறார்கள். அது சரியாக இருந்தால் 'சரி' எனலாம். இல்லையென்றால், 'இரண்டுமே ஆண் குழந்தைகள்' அல்லது 'இரண்டுமே பெண் குழந்தைகள்' என்று மறுக்கலாம். இப்படி படிக்கும்போது உங்களை சார்ந்த விஷயங்கள் சரியாக இருந்தால் 'சரி' எனலாம், இல்லையென்றால் 'இல்லை' எனலாம். என்ன வருடம், மாதம், தேதி, நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதும் இருக்கும். அந்த ஓலை மட்டுமே உங்களுடையது. இதுதான் ஓலையை தேடும் முறை.

உங்களுடைய ஓலை இதுதான் என்று உறுதியான பிறகு, அதில் இருக்கும் செய்யுளை அப்படியே ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும். ஒருவருடைய ஓலையை 'அதி சூட்சும' நாடியாக எடுத்தால், அது 16 முதல் 20 பக்கங்கள் வரை வரும். ஒரு பக்கத்திற்கு நான்கு பத்திகள் (Paragraphs) வீதம் 40 முதல் 60 பாடல்கள் வரும். அந்தப் பாடல்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பொருள் உண்டு. அதை நான் படித்து உங்களுக்கு சொல்ல அது பதிவாகி கொண்டிருக்கும்.

ஓலை உறுதியான பிறகு, அதை துல்லியமாக எழுதுவதற்கு எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். 'நாளை வரை காத்திருக்க முடியாது, இன்றே வேண்டும்' என்று அவசரப்படும்போது தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. உங்கள் வாழ்க்கையை பற்றித் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள், அதற்கு பொறுமை அவசியம். ஏற்கனவே பலருடைய வேலைகள் நிலுவையில் இருக்கும்போது, உங்களுடைய தகவல்களை சரியான முறையில் எழுதி தர எங்களுக்கு நேரம் தேவை. நாங்கள் மெனக்கெட்டு நோட்டுப் புத்தகத்தில் எழுதி உங்களிடம் கொடுத்துவிடுவோம். ஒருவேளை 6 மாதம் கழித்து வருகிறீர்கள், உங்களிடம் உள்ள ஒலிப்பதிவு தொலைந்துவிட்டது அல்லது எங்களிடமும் நினைவகம் (Memory) பற்றாக்குறையால் கோப்புகள் நீக்கப்பட்டுவிட்டன என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் இந்த நோட்டுப் புத்தகம் தான் உங்களுக்கு பயன்படும். அதில் உள்ள வரிகளை எடுத்து பார்த்தால் உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

இன்றைக்கு பல இடங்களில் முறையாக எழுதித் தருவதில்லை. பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் இது நம் வாழ்க்கையின் வரலாறு, ஒரு பொக்கிஷம். எனவே, நம் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள வரும்போது, அதற்கான நேரத்தை ஒதுக்கிப் பொறுமையாக இருப்பதுதான் சிறந்தது

சினிமா திரையரங்கிற்குச் சென்று 3 மணி நேரம் உட்காருகிறீர்கள். எதற்கும் பயனில்லாத விஷயத்தை சந்தோஷம் என்றும், பொழுதுபோக்கு ஒரு வாரம் வெளியூர் (Outing) சென்று மகிழ்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள வரும்போது, நம்மிடம் பொறுமையாக கையாண்டால் நிச்சயமாக தெளிவான பலன்களை எடுத்து சொல்ல முடியும்.

ஏனென்றால், இந்த ஓலையை நான் எழுதி, படித்து விளக்கம் கொடுக்கும்போது 2 மணி நேரம் ஆகும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்கு 2 மணி நேரமே போதாது. மகரிஷிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள், கிரகங்கள் உங்களுக்கு என்ன சொல்கின்றன, ஏன் கிரகங்கள் நமக்கு் சாதகமாக வேலை செய்யவில்லை, ஏன் அனுக்கிரகம் பண்ணவில்லை என்ற விஷயங்களையெல்லாம் பேச வேண்டும். 40 வருட கால வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல 2 மணி நேரம் மிகக் குறைவு. உங்களைப் பற்றி 4 நாட்கள் கூட அமர்ந்து பேசலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கும்போது, சரியான இடத்திற்குச் சென்றால் முறையாக எழுதி, அந்த ஓலையை படித்து விளக்கம் கொடுப்பார்கள்.

இதில் தவறுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ?
நிறைய இருக்கிறது. மற்ற இடங்களில் நீங்கள் எழுதித் தரக் கேட்டால், கொடுக்க மாட்டார்கள். இந்த வரிகள் ஒரு வெண்பாவாக இருக்கும். உதாரணமாக, 'ஆணைமுகன்' என்று ஒரு வரி தொடங்கினால், அடுத்தது 'ஆணைமுகன் ஆறுமுகன் அடிகள் போற்றி' என்று வரும். அதன்பிறகு 'அகரம்' என்ற இடத்தில் 'அறிவிப்பேன் மகன் ஒருவன்' என்று வரும். முதல் வரி ஆணைமுகன் என்று வந்தால், மூன்றாவது வரி 'ஊனமிலா' என முடிய வேண்டும். இதெல்லாம் ஒரு வெண்பாவின் இலக்கணம். அது எங்களை போன்ற ஆட்களுக்கு தெரியும். நோட்டுப் புத்தகத்தை பார்த்தவுடனேயே, சரியான இடத்தில் பார்த்திருக்கிறார்களா, அது உண்மையா, பொய்யா என்பதை கண்டு பிடித்துவிடுவோம்.

இதில் உள்ள சூட்சுமம் தெரியாமல் பலரும் 'நாடி ஜோதிடமே தப்பு, பொய்' என்று ஒட்டுமொத்தமாக சொல்கிறார்கள். எங்கோ யாரிடமோ ஏமாந்துவிட்டு, உடனே வந்து பொதுவாக கருத்துப் (Comment) போடுகிறார்கள். நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. அவர் எங்கோ ஏமாந்து பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று விட்டுவிடுவேன். இங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவில் போகிறார்கள். அங்கே தெருவுக்குத் தெரு ஆட்கள் நிற்கிறார்கள். சரியான நாடி ஜோதிடர்கள் யாரும் உங்களை கூப்பிட மாட்டார்கள்.

இப்போது எங்கள் அலுவலகத்திற்கே ஒரு நாளைக்கு 100 அழைப்புகள் வருகின்றன. எங்களால் நேரம் கொடுக்க முடியவில்லை. நாம் எடுக்காமல் விட்டுவிட்டோமா என்று நாங்களாகத் திரும்ப அழைத்து விஷயம் கேட்போம். அவர்கள் 'பிறகு சொல்கிறேன்' என்றால், நான் திரும்ப அழைத்து 'நாடி ஜோதிடம் பார்க்கிறீர்களா?' என்று கேட்க மாட்டேன். விருப்பம் இருந்தால் அவர்கள் வரட்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது நம்மைத் தேடி வரட்டும்.

வைத்தீஸ்வரன் கோவில் சென்றால் என்னாலேயே நடந்து போக முடியாது. 'நாடி பார்க்க வாங்க' என்று கூப்பிடுவார்கள். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், சரியான ஆட்களும் இருக்கிறார்கள். எங்கள் வள்ளுவர்களுடைய பரம்பரை தொழிலே இதுதான். பிராமண குலத்தில் பிறப்பவர்களுக்கு ஆச்சாரம், பூஜை மற்றும் புனஸ்காரம். வள்ளுவ குலத்தில் பிறப்பவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம். அதுதான் எங்கள் ஜீவாதாரமே. அதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. எனவே, சரியான நபர்களை அணுகி உண்மையை அறிந்து கொள்ளுங்கள். பொத்தாம் பொதுவாக 'நாடி ஜோதிடம் தப்பு' என்று comment கொடுக்காதீர்கள்.

வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.