மக்கள் தங்கள் கர்ம வினைகளை குறைப்பதற்காக பரிகாரங்களை செய்கிறார்கள். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஏதேனும் பெரும் வினைகள் அல்லது துன்பங்கள் ஏற்பட்டு, அதற்காக நீங்களே நாடி ஓலையை பார்த்து பரிகாரம் செய்து அனுபவம் ஏதேனும் உண்டா ஐயா?
நான் இந்த நாடி ஜோதிடத் துறைக்கு வந்ததற்கு காரணம் என்று எதுவும் இல்லை. காலச் சூழ்நிலைதான் என்னை இதில் சேர்த்தது. நான் வள்ளுவர் சமூகத்தில் பிறந்ததால், ஜோதிடம் எனது குலத்தொழில் ஆகும்.
கடந்த 1997-ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமாக நான் இந்த துறையில் நுழைந்தேன். இதனை முறையாக கற்றுக் கொள்வதற்கு நான் பல ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். நான் பயின்ற ஆசிரமத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. தொடக்கத்தில் எங்களை ஓலை படிக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆசிரமத்தின் வீட்டு வேலைகளை செய்ய வைத்து, நம்முடைய மனப் பக்குவத்தையும், குருவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் தகுதியையும் சோதித்த பிறகே தொழிலை கற்று கொடுத்தார்கள். இறைவனது புண்ணியத்தால் தொழில் சிறப்பாக தொடங்கியது.
கடந்த 2016, 2017-ஆம் ஆண்டுகளில் என் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை என் குடும்ப உறுப்பினர்களாலே உருவானது. என் சக்திக்கு மீறிய கடன் பெற்று ஊரில் ஒரு நிலம் வாங்கினேன். இன்றைக்கு கடன் வாங்காத மனிதர்களே இல்லை. மாத சம்பளம் ஒரு லட்சம் வாங்குபவர் கூட, 70000 ரூபாய் தவணை கட்ட முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்குகிறான். அதைப்போலத்தான் நானும் வாங்கினேன். ஆனால், அந்த நிலத்தை வாங்கிய பிறகு என் கூட இருந்தவர்களே பகையாயினர். நான் அவர்களை முழுமையாக சார்ந்து வாழ்ந்ததால், அவர்கள் என்னை எவ்வாறெல்லாம் தாக்கினார்களோ அதையெல்லாம் என்னால் திருப்பி அடிக்க முடியாமல் பொறுத்து கொண்டேன்.
நான் ஒரு வயது மூன்று மாத குழந்தையாக இருந்த போதே, என் தந்தையார் என் நாடியை எடுத்து படித்திருந்தார். அதில், "கிரக நிலைகளின்படி, தந்தைக்கு இவனே கர்ம காரியங்களை செய்ய வேண்டியது வரும்" என்று எழுதப்பட்டிருந்தது. அதனால் என் தந்தை என்னை கோவில்களுக்கு அழைத்து சென்று, எனக்கு செய்ய நினைத்த நன்மைகளை செய்து முடித்தார்.
என் தந்தையின் மறைவுக்கு பிறகு, என் தாயார் என்னை 3 மாதங்கள் வரை வளர்க்க முயன்றார். அவரால் வளர்க்க முடியவில்லை. என்னை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு என் பெரியப்பா மற்றும் அவருடைய பிள்ளைகளின் ஆதரவில் வளர்ந்தேன். ஒரு காலகட்டத்தில் என் வளர்ச்சியால் பொறாமை உருவானது. என் மீது சூனியக் கோளாறு, தேவையில்லாத பொய் வழக்கு வருகிறது. நான் தனிமையில் இறைவனை நோக்கி அழுதிருக்கிறேன். "எனக்கு ஏன் இந்த வாழ்க்கையைக் கொடுத்தாய் ?" என்று கலங்கிய தருணங்கள் பல உண்டு.
ஒரு மாலை பொழுதில், நான் பட்டீஸ்வரம் திருத்தலத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது காவல் நிலையத்திலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. என் மீது ஒரு புகார் வந்துள்ளதாகவும், காவல் நிலையம் வருமாறும் கூறினர். நான் கும்போகோணத்தில் பட்டீஸ்வரம் சண்டி ஹோம வழிபாட்டில் கலந்து கொள்ள செல்வதால், 2 நாட்கள் நடைபெறும் வேள்வியை முடித்துவிட்டு மறுநாள் மதியம் நேரில் வருகிறேன் என்று கூறினேன். எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு என் மேல் புகார் கொடுத்தவர்கள் நின்றுகொண்டு பேசினார்கள், நான் உட்கார்ந்துகொண்டு பேசினேன்.
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் என்பது, மாமன்னன் ராஜராஜ சோழனின் அரண்மனை மாளிகையில் வைத்து வழிபடப்பட்ட துர்க்கையாகும். சோழர் காலத்திற்கு பிறகு ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வழிபாட்டிற்காக தேனபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த அம்பாள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அந்த சன்னதியில் சென்று அமர்ந்துவிட்டால், அங்கிருக்கும் சிவாச்சாரியார்கள் கூட என்னை தடுக்க மாட்டார்கள். நான் அம்பாளிடம் மனமுருகப் பேசுவேன். நான் சன்னதிக்குச் சென்றாலே, அம்பாளின் திருக்கழுத்தில் சாத்தப்பட்டிருக்கும் பூமாலை தானாக கழன்று கீழே இறங்கும். இதனை பார்த்து சிவாச்சாரியார்கள் வியந்து, "நீங்கள் வந்தால் மட்டும் எப்படி இப்படி நடக்கிறது?" என்று என்னிடம் கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.
நான் என்றைக்கும் கடவுளிடம் எதுவும் கேட்டது கிடையாது. நான் வந்திருக்கிறேன் என்பதை தெரிவிக்கும் விதமாக ஒரு வணக்கம் வைப்பேன், அவ்வளவுதான்.
எனக்கு உதவி செய்வதாக கூறி, ஒரு நபர் என்னிடம் காசோலைகளை பெற்று அதனை தவறாக பயன்படுத்தி என் மீது நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஒரு பொய் வழக்கை தொடர்ந்தார். ஒருமுறை காலை 10 மணிக்கு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். நான் விடியற்காலை 4 மணிக்கே சென்னையிலிருந்து புறப்பட்டு நேராகப் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் சன்னதிக்கு சென்றேன். அங்கிருந்த சிவாச்சாரியாரிடம் என் கஷ்டத்தைக் கூறினேன். அவர், "நீ துர்க்கையிடம் கேள், அவள் தீர்த்து வைப்பாள்" என்றார். நான் அழுது வேண்டினேன்.
அங்கிருந்து 80 km தொலைவிலுள்ள நீதிமன்றத்திற்கு வேகமாக சென்றேன். எனக்கு எதிராகப் புகார் கொடுத்தவன் என் வண்டிக்கு முன்னாலே சென்றான். அன்று என் வழக்கறிஞர் வரவில்லை. ஆனால், நீதிபதி நேரடியாக பேசி, "வழக்கை இப்போதே முடித்துவிடலாமா?" என்று கேட்டு, அன்றைய தினமே பொய் வழக்கு முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது. இது அந்த துர்க்கையம்மன் எனக்கு நடத்திய பேரற்புதம்.
அம்பாளின் இந்த அளப்பரிய கருணையால் ஈர்க்கப்பட்டு, நான் ரசித்து 2 மாதங்கள் உழைத்து, அதே பட்டீஸ்வரம் துர்க்கையின் வடிவத்தை ஐம்பொன்னால் சிலையாகச் செய்து, அதனைப் பட்டீஸ்வரம் கருவறையில் கொண்டு போய் வைத்து, சிறப்புப் பூஜைகள் செய்து, அதே அலங்காரத்தோடு எடுத்து வந்து நித்தமும் வழிபட்டு வருகிறேன். முதலில் நம்பிக்கை ரொம்ப முக்கியம். எதுவுமே ஆராய்ச்சியோடு போகக்கூடாது.
நோய் வந்தால் மருந்து சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அதுபோல நம் கர்ம வினை நீங்க வேண்டும் என்றால் பரிகாரம் செய்துதாக வேண்டும். நான் யாரையும் பரிகாரம் செய்ய வற்புறுத்துவதில்லை. மக்கள் உணவகங்களுக்குச் சென்றால் 3,000 ரூபாயும், காலணிகள் 2,000 முதல் 8,000 ரூபாயும் சாதாரணமாக செலவு செய்கிறார்கள். ஆனால் தன் வாழ்க்கையை சீரமைக்கும் ஆன்மீகப் பரிகாரங்களுக்கு செலவிடத் தயங்குகிறார்கள். பரிகாரம் என்றாலே மக்கள் பயப்படுகிறார்கள். இறைவன் உங்களிடம் பணத்தை கேட்கவில்லை, உங்களின் ஆத்மார்த்தமான நம்பிக்கையை மட்டுமே கேட்கிறார்.
என்னிடம் வரும் இலங்கை தமிழர்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. உயிர் பிழைத்தால் போதும் என்று ஒரு பெட்டியோடு வந்து பலர் இருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்கு மிகுந்த பாசம் உண்டு. மற்றவர்களிடம் 5,000 கட்டணம் வாங்கினால், இவர்களிடம் 2,000 மட்டுமே வாங்குவேன். அவர்களுக்கு, நான் நேரில் கோயில்களுக்கு சென்று, Live Video Call மூலவர் வரை காட்டி, அவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்து காட்டும் ஒரே ஜோதிடர் நான்தான்.
எல்லாருமே 10 ரூபாய் வந்தால், அதை எப்படிச் சிக்கனம் செய்ய பார்ப்பார்கள். நான் அது போன்று இல்லை. எனக்கு அந்த காசு வேண்டாம். அதனால் தெய்வத்திற்கு நமக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. என் வாழ்க்கையே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். நீங்கள் வர முடியவில்லை, ஆனால் எனக்கு அந்த வாய்ப்பை உங்கள் மூலமாக கடவுள் கொடுத்திருக்கிறார். நான் கடவுளை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் எனக்கு உத்தரவு கொடுக்கவில்லை, என்னுடைய குருநாதர் அகஸ்தியர் கொடுக்கிறார். அவர் நான் போவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறார். நான் அதை மிகவும் சந்தோஷமாக செய்கிறேன்.
நீங்கள் இதுவரை பரிகாரம் செய்த ஸ்தலங்களிலே பிரமித்து மிரண்டு போன இடம் ஏதாவது இருக்கிறதா ?
எல்லா கோயிலும் ஒவ்வொரு சிறப்பு. எதையுமே நாம் ஏற்றத்தாழ்வாக பேசவே கூடாது. குழந்தையே இல்லை, மருத்துவர் மேலும், தெய்வத்தின் மேலும் விரக்தி, நம்மிடம் கடைசியாக வந்து பார்க்கலாம் என்று. 'எனக்காக நீங்கள் வாருங்கள்.' இதே வார்த்தைதான். ஏதோ ஒரு எதிர்பாராத செலவு வருகிறது, செய்துதானே ஆக வேண்டும் ?"
நான் அவர்களை விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராகவ பெருமாள் ஆலயத்திற்கு அழைத்து சென்றேன். அங்குள்ள ஆகம முறைப்படி, சந்தான கிருஷ்ண விக்கிரகத்தை தட்டில் வைத்து தாலாட்டு பூஜை செய்து, பிரசாதத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அப்படி செய்த பல தம்பதிகளுக்கு கிருஷ்ணரை போன்று அழகான குழந்தைகள் பிறந்துள்ளனர்.
மனிதர்களுக்குச் செய்வினை பயம் எப்போது வரும் என்றால், ஜாதகத்தில் கிரக நிலைகளும் கர்ம வினைகளும் பலவீனமாக இருக்கும் போதுதான். நம் நேரம் கெட்டதாக இருந்தால், ஒரு சாதாரணத் தகட்டில் நம் பெயரை எழுதி வீசினால் கூட அது நம்மை பாதிக்கும். இதற்காக நான் மாதத்திற்கு 2 முறை கொல்லிமலைக்கு செல்கிறேன். கொல்லிமலை என்பது சித்தர்கள் நடமாடும் புனித பூமி. அங்குள்ள கோரக்கர் சித்தர் குகைக்குள் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். ஆனால் சென்று வந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும்.
கொல்லிமலையில் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, மலை மீது 2 – 3 மணி நேரம் எந்தப் பிடிப்பும் இன்றி செங்குத்தாக ஏறிச் செல்ல வேண்டும். அங்கு 'மாசி பெரியண்ணன்' என்ற காவல் தெய்வம் வீற்றிருக்கிறார். செய்வினை மற்றும் சூனியக் கோளாறுகளுக்கு புகழ்பெற்ற தலம்.
சிலருக்கு மனவேதனை இருக்கிறது, 'என் வாழ்க்கையை முடித்துவிட்டார்கள், நான் இவர்களால் கஷ்டப்படுகிறேன்' என நினைத்து பலியாக பூசணிக்காய் கொடுப்பார்கள் அல்லது தங்களுடைய எதிரிகளுடைய புகைப்படம் எடுத்து, அதோடு தகட்டில் அவர்கள் பெயர், கோரிக்கைகள் எழுதி, சூலத்தில் கட்டி, அதன் மேல் ஒரு உயிருள்ள கோழியை அப்படியே சொருகிவிடுவார்கள். அப்படி சொருகும்பொழுது அந்த கோழியிடமிருந்து சின்ன சத்தம் கூட வராது. பொதுவாக கோழி கத்த வேண்டும், பறக்க வேண்டும். அமைதியாக இறந்துவிடும். அதுதான் இங்கு மர்மம்.
எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்பொழுது நான் நினைப்பேன், "என்னடா இப்படி வக்கிரமாக சில விஷயங்கள் செய்கிறார்களே, ஏன் இப்படி ஒரு கல் மனது வருகிறது". அதன்பின் நினைப்பது, "அது அவருடைய வேதனை, கஷ்டம்”.
எனக்கும் சூனியம் செய்தார்கள் என்று ஆதாரபூர்வமாக சொன்னார்கள். எனக்கு திருப்பி செய்ய மனமில்லை. ஏனென்றால், நான் சித்தரை வணங்குகிறேன். என்னுடைய குருநாதர் அகஸ்தியரை நம்பினேன். அதற்கான வழிகாட்டுதல் எனக்கு அமைத்து கொடுத்தார், நான் என்னை காப்பாற்றிக் கொண்டேன். ஆனால், வழி தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ? இப்படித்தான் ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய நினைப்பார்கள்.
சூனியம் யாரால், எதனால், எதன் மூலமாக செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
அண்மையில் உங்களை நாடி வந்து, செய்வினை பாதிப்பிலிருந்து மீண்ட ஒரு நபரைப் பற்றிக் கூறுங்கள் ?
பல ஜோதிடர்களை பார்த்து விரக்தியில் இருந்தவருக்கு நாடி ஓலை பார்த்த போது, அதில் "கண்ணெரிப்பும் துர்தேவதை வசிய ஏவல்" என்ற வார்த்தை வந்தது. இந்த வார்த்தை எல்லா ஓலைகளிலும் எளிதாக வராது. அவருடைய வீட்டு மண், உப்பு மற்றும் சில பொருட்களை கொல்லிமலைக்கு எடுத்து வரச் சொன்னோம். எங்கள் நாடி ஜோதிடக் குழுவின் முன்னிலையில், சக்கரங்கள் வரைந்து பூஜைகள் செய்தோம். அந்த பாத்திரத்தில் இருந்த பொருட்களை எங்கள் குழுவினர் யாரும் தொடவில்லை. அவரே தன் கையால் உள்ளே இருந்து எடுத்தார். உள்ளே இருந்து மாட்டு கொழுப்பு, தலைமுடி, ஒரு எலும்புத் துண்டு வெளிவந்தது. அந்த எலும்புத் துண்டிற்குள்ளே வசிய எந்திரம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களை எடுத்த பிறகு, அவர் மிரண்டு போய்விட்டார். இன்றைக்கு அவர் முகம் பொலிவடைந்து, மிகத் தெளிவாக இருக்கிறார்.
நீங்க கொல்லிமலையில் பார்த்து வியந்த விஷயங்கள் என்ன ?
அங்கு இருக்கக்கூடிய அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவர். கருவறைக்கே சென்று, அவர்களை தொட்டு அபிஷேகமும் அலங்காரமும் செய்யக்கூடிய அளவிற்கு எனக்கு அனுமதியை அந்த அம்மா கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய அனுக்கிரகம் இன்றைக்கும் எனக்கு இருக்கிறது.
மாதத்திற்கு 2 முறை நான் அவர்களை போய் பார்த்து விடுவேன். என்னை பூஜை செய்ய அனுமதித்திருக்கிறார்கள், அதுவே முதல் வெற்றி. எல்லாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது, பொதுவாக நம் வீட்டில் எல்லா இடங்களிலும் எல்லாரையும் விட மாட்டோம். அதுபோல மலைவாழ் மக்கள் வழிபாடும் கோயில் நுழைவது அனுமதி கொடுத்தே அதிசயம் தான். அங்கு சென்ற பலருடைய வாழ்க்கை மாறியிருக்கிறது.
ஒரே நேரத்தில் 3 குடும்பங்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். வேறொருத்தருடைய பிரச்சினைக்காக போகிறார்கள், இவர்களும் கூட வந்தார்கள். ஆனால், உடன் வந்தவர்களுக்கு அருள்வாக்கு சொல்லி, மாலை போட்டு ஒரு புடவை கொடுக்கிறார்கள். அடுத்த மூன்றாவது மாதமே அவர்கள் கர்ப்பமாகிறார்கள். அவர்களுக்கு சொந்த ஊரே அடிவாரம் தான், நாமக்கல் மாவட்டம். இந்த கோயில் இருப்பதே அவர்களுக்கே தெரியவில்லை. நான்தான் முதல் முறையாக அவர்களை அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன். 30 வருடங்களுக்கு பிறகுதான் அவர்களுக்கு இந்த கோயிலை பற்றி தெரிகிறது.
அதேபோல தொழில் ரீதியான முடக்கத்தில் இருந்தவர்கள், கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகி இழுத்து மூடக்கூடிய நிலையில் இருந்தவர்கள், சரியாகிவிட்டார்கள். இதைப்பற்றி பேசுவதற்கு எல்லையே கிடையாது.
எங்களுக்கு தெரியாத ரகசியம் நாடி ஜோதிடத்தில் என்ன இருக்குகிறது ?
பஞ்சபூத சிவாலயங்களில், சிதம்பரம் ஆகாய தலம். சிதம்பர ரகசியம் என்று சொல்கிறோம். இதுவரைக்கும் யாரும் எதுவும் பார்த்தது கிடையாது. அதுபோல நாடி நம்மளுடைய கர்மாவை மீட்டு எடுக்கக் கூடியது, நம்மளுடைய பிறப்பினுடைய காரணம் தெரியாமல் வாழ்கிம். நாடி ஜோதிடத்தின் மிகப்பெரிய ரகசியம் என்பது, "நாம் இப்பூமியில் பிறந்ததற்கான உண்மை காரணத்தை நம் கண்முன்னே கண்ணாடியாகக் காட்டி, நம் கர்ம வினைகளிலிருந்து மீட்டெடுப்பது தான் நாடியின் பேராற்றல்" ஆகும்.
நான் மீண்டும் கொல்லிமலைக்கு செல்லவிருக்கிறேன். என் குருநாதர் அகத்தியரின் உத்தரவுப்படி, உங்களையும் உங்களது 'ஆதன் ஆன்மீகம்' படப்பிடிப்பு குழுவினரையும் என்னுடன் கொல்லிமலைக்கு அழைத்துச் சென்று, அங்கு நள்ளிரவில் நடக்கும் உக்கிர பூஜைகளையும், காலையில் நடக்கும் அபிஷேகங்களையும் மக்கள் அனைவரும் காணும் வண்ணம் நேரடித் தொகுப்பாக வழங்க கடமைப்பட்டிருக்கிறேன்.
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் யாரும் பயப்பட வேண்டாம். இறைவனை ஆத்மார்த்தமாக நம்பினால் நிச்சயம் தீர்வு உண்டு!

ॐ