நிறைய குடும்பங்களில் வம்சாவளி பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருப்பார்கள். உதாரணமாகப் பெண் சாபம். சில குடும்பங்களில் பெண்களுக்குத் திருமணமே ஆகாமல் இருக்கும். ஆண்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இறந்துவிடுவார்கள். நாடி ஜோதிடத்தில் இதற்கான காரணம் சொல்ல முடியுமா?
ஒருவருக்கு ஜோதிடம் பார்த்த இடத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்தை அவர் தாண்டமாட்டார், உயிருக்குக் கண்டம் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தில் நீங்கள் சொல்வது போல் நிறைய இறப்புகள் நிகழ்ந்துள்ளன; யாருமே கணவனுடன் நீண்ட காலம் வாழவில்லை. இது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இந்த விஷயங்களை எல்லாம் அவர்கள் என்னிடம் முன்பே பகிர்ந்து கொள்ளவில்லை. அவர்களுக்கான ஓலையை எடுத்து பலன் கூறும் போது, “79 வயது வரை தீர்க்க சுமங்கலியாக, உங்கள் கணவர், குழந்தைகள், பேரக்குழந்தைகள் மூலம் அனைத்து சந்தோஷங்களையும் பெற்று வாழ அமைப்பு உள்ளது” என்று மகரிஷி கூறியுள்ளதாக தெரிவித்தேன். இதை சொல்லும் போது, அவர்களின் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. “என்னங்க, நல்லதாகத்தானே மகரிஷி சொல்லியிருக்கிறார், இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டேன். அதன்பின் நடந்த விஷயங்களை கூறினர்.
பலருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள், மகரிஷி எவ்வாறு கடந்து செல்ல வேண்டும், ஏன் அந்தக் குடும்பத்தில் கண்டங்கள் ஏற்படுகின்றன, அதற்கான சாபம் என்ன ?, அந்த சாபம் எங்கிருந்து வந்தது என்பதை முழுமையாக சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடியை எடுத்து ஆராய்ந்து, “இப்படித்தான் நீங்கள் வாழ வேண்டும். இதற்குரிய ஆகம முறைகள் மற்றும் பரிகாரங்கள் இவ்வாறு இருக்கிறது. இவற்றை செய்து இறைவனின் திருவருளை பெறுங்கள். இந்த காலத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் நல்லபடியாக கடந்து செல்லலாம்” என்று மகரிஷி கொடுத்துள்ளனர்.
எல்லா பிரச்சனைக்கும் பரிகாரம் இருக்கிறதா ?
“எப்போதும் ‘கர்மா’ என்பதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஜாதகத்தில் நல்ல கிரக அமைப்பு இருந்தும் அது செயல்படாமல் போவதற்கும், மிகவும் மோசமான கிரக நிலைகள் இருந்தும் அவர்கள் நல்லபடியாக வாழ்வதற்கும் ‘கர்மா’ தான் காரணம். நீங்கள் எந்த மகானிடம், தெய்வத்திடம், பெரிய வழிகாட்டிகள், ஜோதிடக் குருமார்களிடம் சென்றாலும், உங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பது உங்கள் கர்மாவே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நல்லதும் கெட்டதும் நடப்பதை தீர்மானிப்பது உங்கள் கர்மாதான்.
எனவே, சரியான நபரை, உண்மையான இடத்தை தேர்ந்தெடுத்து சென்றால் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும். என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்த சம்பவங்கள் நிறைய இருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் இருப்பவர்கள் பயப்பட வேண்டாம்.
விதியை மாற்றலாமா?
விதியை மதியால் வெல்வதற்கும் விதி வேண்டும். அந்த விதி இருந்தால் கண்டிப்பாக மாற்றலாம்.
நீங்கள் இந்த திசையிலிருந்து தான் துணை வருவார் என்று சொல்வீர்களா?
ஒரு நாளைக்கு குறைந்தது 6 – 7 பேரைச் சந்திக்கிறேன். இதில் கல்யாண வாழ்க்கை என்பது இருவருக்குமே ஒரு கனவு போன்றது. கணவன் எப்படி இருப்பார்? கணவன் வந்த பிறகு எப்படியெல்லாம் வாழ்க்கை பயணிக்கப் போகிறோம்? எதையெல்லாம் வாழ்க்கையில் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்? அதில் தாம்பத்தியம், பொருளாதார நிலை, சொத்து, சுகம், பிறக்கக்கூடிய குழந்தை என எல்லா செல்வங்களும் நம் குடும்ப நிலைக்குள் நுழைந்த பிறகுதான் கிடைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் பலருடைய வாழ்க்கை இதில் தோல்வி ஏற்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு, கனவுகளில் ஏமாற்றம் அடைந்தவர்கள் இன்று பலர் இருக்கிறார்கள்.
நான் கடவுள் கிடையாது. நான் பலனை தீர்மானிப்பது கிடையாது. நானாக ஜாதகத்தை எழுதுகிறேன்? என்னுடைய குரு அகஸ்தியப் பெருமான் மேல் வைத்திருக்கக்கூடிய ஆழமான நம்பிக்கை. அவர் சொல்கின்ற வார்த்தையை நான் துணிச்சலாக எடுத்து சொல்கிறேன். எத்தனை பேருடைய வாழ்க்கையில் கணவன், மனைவி அன்யோன்யமாக வாழ்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? மனைவியால் கணவன் ஏமாற்றப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு அன்பான அரவணைப்பு இல்லாதது பலருடைய வாழ்க்கையில் பிரிவுகள் ஏற்படுவதற்கு காரணம். விவாகரத்து வரை போய் நிற்கிறது.
யாரை நம்பி இங்கே வந்திருக்கிறார்கள்? அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டிய இடத்தில் கணவன் தான் இருக்கிறார். அது அவருடைய கடமை. அன்பாகப் பேச வேண்டியது, கொஞ்சம் நேரம் ஒதுக்குவது, அவர்களுடைய ஆசையை பூர்த்தி பண்ண வேண்டியது, அவர்களுக்குக் கேட்பதை வாங்கிக் கொடுக்க வேண்டியது ஆணின் கடமை. தாம்பத்தியம் மட்டும் திருமணம் கிடையாது. சிலருடைய வாழ்க்கையில் தாம்பத்தியம் இல்லாமல் காதல், புரிதல் இருக்கிறது. அதையே அவர்கள் மகிழ்ச்சியாக நினைத்து வாழ்கிறார்கள்.
விவாகரத்து ஆகப்போகிறது என்று கண்டுபிடித்தால், அதை நீங்கள் சொல்லுவீங்களா?
கண்டிப்பாகச் சொல்லுவேன். எதற்கு மறைக்க வேண்டும்? நான் மறைத்தால் நீங்கள் ஏன் என்னிடம் வர வேண்டும்? பிரிந்து ஒன்று சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? சட்டரீதியாகக் கணவன் மனைவி இல்லை என்று பிரிந்தவர்கள், அதன்பின் அன்யோனியமாக இருக்கிறார்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தாலும், அவளுடைய விதி இவருடன் தான் வாழ வேண்டும் என்று எழுதப்பட்டது. அதை மாற்ற முடியாது.
எந்த அளவுக்கு நாம் கஷ்டத்தை அனுபவிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் கர்மா நம்மை விட்டுப் போகிறது என்று அர்த்தம். எந்த அளவுக்கு நாம் சந்தோஷமாக வாழ்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்குக் கர்மா கூடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். சந்தோஷமாக இருக்கும்போது நிறைய வங்கியில் சேமிப்பது மாதிரி, உங்கள் நலனுக்காக நிறைய நல்லது பண்ணிக்கொண்டே வர வேண்டும்.

ॐ