கிரிவலம் ஈசானிய லிங்கம் வந்ததும் மலையை நோக்கி வணங்குவோம். அப்போது, ஒருமுறை அதிசயமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு நொடி திடீரென்று ஒரு ஒளி எரிந்து அணைந்தது.
கடவுள் எனக்கு எல்லாமே கொடுத்திருக்கார். அம்மையப்பனுடைய காட்சியை கண்டிருக்கிறேன். குருநாதருடைய அனுகிரகம், நான் செய்வது தப்பா, சரியா என்று எனக்கு அப்பொழுதே முடிவைக் கொடுத்துவிடுவார். சம்பந்தமே இல்லாத அவரிடமிருந்து உத்தரவு வரும். ஏனெனில், நான் அவரிடம் உண்மையாக இருக்கிறேன்.
ஒரு வேலையை நான் ஏற்றுக் கொள்கிறேன். எந்த நம்பிக்கையில் நான் அதை எடுக்கிறேன்? உங்களிடமிருந்து நான் கைநீட்டிப் பணம் வாங்கி, நான் அந்த வேலையை செய்து தருகிறேன் என்கிறேன். எனக்கு அச்சம் இருக்கும். அப்பொழுது அவரிடமிருந்து எனக்கு உத்தரவு வரும். அதைத்தான் நம்ப வேண்டும். நாம் எல்லாரையும் நம்ப சொல்லவில்லை. உண்மையிலேயே பிரச்சனை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரிவு உள்ளவர்கள், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், வழக்கு உள்ளவர்கள், சரியான முறையில் சரியான வழியை தேர்ந்தெடுக்கும் பொழுது, எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு.
'சத்ரு சம்ஹாரம்' நான் செய்து முடிப்பதற்குள் வழக்குத் திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்று சொல்லும்பொழுது, எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும் ? இந்த காணொளியை அவர்கள் பார்த்தாலும், அது உண்மையா, பொய்யா என்பது அவர்களுக்கு தெரியும்.
குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட காலத்தை நாமே, "எனக்கு இந்த நேரத்தில் வேண்டும்" என்று நிர்ணயிக்கிறோம். அது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? குழந்தை வேண்டும் என்று தீர்மானிக்க நீங்கள் யார்? அது கடவுள் உங்களுக்கு கொடுக்க வேண்டிய நேரம். "இல்லை, நான் வாழ்க்கையில் நிலைபெற்றுவிட்டு (settle) குழந்தை பெற்றுக் கொள்கிறேன்" என்றால், அதன்பின் குழந்தைக்காக கோவில்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அலைய நேரிடும்.
இந்த வயதில் கல்யாணம் நடக்கும் என்று உங்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது. "இல்லை, நான் வாழ்க்கையில் நிலைபெற்றுவிட்டு, அதன்பின் கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்பதால், 50 வயது வரை திருமணம் செய்து கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய காலத்தை கடவுள் ஏற்கனவே கணித்துவிட்டார். அன்றாட வாழ்க்கையில் இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு.
கோயிலை விட்டு வெளியில் வந்தவுடன் தொலைபேசி அழைப்பு வந்து, பெண்-மாப்பிள்ளை வரன் உறுதியான சம்பவம் நடந்திருக்கிறது.
சில கோயில்களுக்கு சென்று தொட்டில் பூஜை செய்து, அங்கே கொடுக்கக்கூடிய மருந்து பிரசாதத்தை எடுத்துக் கொள்ளும்பொழுது, நம்பிக்கையோடு அவர்கள் 48 நாட்கள் பதிகம் பாடி வழிபாடுகளை செய்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்தவர்களுக்கும் குழந்தை பிறந்திருக்கிறது. அவர்களால் இங்கு வர இயலவில்லை என்றாலும், மருமகளுக்காக மாமியார் வந்து பூஜையை செய்து, குழந்தை பேறு பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நம்பிக்கை, பக்தி, பயம் இருந்தது. நம்பிக்கையோடு 48 நாட்கள் செய்தார்கள், பலன் பெற்றார்கள்.
பரிகாரத்தால் விதியை மாற்ற முடியாது என்பதில்லை. விதியை மதியால் வெல்வதற்கும் விதி வேண்டும். அந்த விதி வரும்பொழுது, நம்மை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கும். அப்படி மாறியவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
"நீங்கள் காசை மட்டுமே குறிக்கோளாக பார்க்காதீர்கள்" என்றால், எனக்கும் பணத் தேவை இருக்கிறது. நானும் குடும்பத்தோடு வாழ்கிறேன், குழந்தையின் படிப்பு செலவு இருக்கிறது. அதனால் ஒரு ரூபாய் செலவு செய்வதை குறித்தும் நானும் யோசிக்கிறேன். நீங்கள் எல்லாரும் காசை கொட்ட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. பார்த்து செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். ஆனால் நம்பிக்கையோடு செய்யுங்கள், தீர்வு உண்டு.
ஒரு தம்பதியருக்கு "குழந்தை பாக்கியம் இருக்காது" என்று நாடி ஜோதிடத்தில், 2-3 இடங்களிலும் அதேதான் சொல்லியிருக்கிறார்கள். "குழந்தை தங்குவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு" என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், திடீரென்று அவருடைய மனைவி கர்ப்பமடைந்துவிட்டார்.
அதாவது, மகரிஷிகள் "இது சாத்தியமில்லை" என்று எதையும் மறுப்பதில்லை. அதாவது, "சாதாரணமாக கருத்தரிக்கக் கூடிய யோகம் குறைவாக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட கோயில் வழிபாடுகளை செய்துவிட்டு, சில மருத்துவ முறைகளையும் முயற்சி செய்யுங்கள். அப்பொழுது தாம்பத்திய வாழ்க்கை ரீதியாகவும் இணைந்திருப்பீர்கள், மருந்துகளையும் உட்கொள்வீர்கள். உங்களுக்கு மருந்து உதவி செய்து, கருத்தரிப்பதற்கான நிலை உண்டாகும்" என்று கூறப்பட்டு, கருத்தரித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்கள் எங்கு தவறு செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். நான் படித்த விஷயமாக இருந்தால் உடனே விடை கூற முடியும். மேலும், இல்லை என்று ஜோதிடத்தில் சொல்லியிருந்தாலும், அவர்கள் நம்பிக்கையை பல கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள். அதற்கான பலனை இறைவன் கொடுக்கிறார். தெய்வம் அனுகிரகம், நல்லது செய்திருக்கிறது. அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கோவிலுக்கு செலவு செய்வதை விட, அனாதை ஆசிரமத்திற்கோ, அன்னதானத்திற்கோ, கல்விக்கோ அல்லது மருத்துவ உதவிக்கோ செலவிடலாம் என்ற மனநிலை எனக்குள் இருந்தது.
அதைத்தான் மகரிஷிகளும் சொல்லியிருக்கிறார்கள். உண்மையிலே ஒருவேளை உணவிற்கு வழி இல்லாமல் இருக்கக்கூடிய, ஆதரவற்று வாழ்பவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். அவர்களுடைய ஒரு விநாடி சந்தோஷம், உங்களுடைய கர்ம வினையை பல விழுக்காடு குறைக்கிறது என்று மகரிஷிகள் கூறியிருக்கிறார்கள்.
குருநாதர் அகஸ்திய முனிவர் சொல்வது: "தர்மம் செய், கர்மம் விலகும்"

ॐ