சனிப் பெயர்ச்சிக்கு எந்த கோவில்களுக்கு போகலாம், என்ன பரிகாரங்கள் பண்ணலாம் ?
"சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்" நம் மேல் ஒருவருக்கு ரொம்ப கோபமாக இருந்தால், அவரிடம் நேரடியாக சரணாகதி அடையும் போது அவர் மனது கரைந்து விடும். "சரி போ, இனிமேல் தவறை செய்யாதே" என்று விட்டுவிடுவார். ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலனை தரும். ஆஞ்சநேயர் சனி பகவானிடம், "என்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய பாதிப்புகளை கொடுக்கக் கூடாது" என்று வரம் வாங்கியவர்.
சனீஸ்வர பகவானே ஈசனுடைய சொரூபமாக இருக்கிறார். 'ஈஸ்வரன்' பட்டம் வேற எந்த கிரகத்துக்கும் கிடையாது, அதனால் சிவபெருமான் வழிபாடு சிறந்த நன்மையை தரும்.
எல்லா சிவாலயங்களிலும் சனி பகவான் ஏன் தலை சாய்ந்து இருக்கிறார் ? சனிக் கிரகம் நேராக பார்த்தால் பிரச்சினை ஆகிவிடும். அதனால் "நாம் பார்ப்பதனால் தானே பிரச்சினை, நம்மளே தலை சாய்ந்து (வணங்கி) நின்றால் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது" என்பது சனீஸ்வரனுடைய எண்ணம்.
சனிப் பெயர்ச்சி அல்லது ஏழரைச் சனி என்றாலே காரைக்காலில் உள்ள திருநள்ளாறு ஆகும். நேராக சனீஸ்வர பகவானை பார்த்து தரிசிப்பது, தவறான வழிபாடாகும். அதைப் பற்றிய ஒரு புராண கதையை சுருக்கமாக சொல்கிறேன். நள மகாராஜா என்ற நேர்மையான அரசர், தர்ம நெறிப்படி வாழ்ந்ததால் சனி பகவானால் தொட முடியவில்லை. அதனால் எப்படியாவது அவரை பிடிக்க வேண்டும் என்று பார்த்து கொண்டிருந்தார். ஒரு நாள் நள மகாராஜா முறைப்படி காலை கழுவாமல் (குதிகால் நனையாமல்) வீட்டிற்குள் வந்துவிடுகிறார். அந்த குதிகால் வழியாக சனி பகவான் நுழைந்துவிட்டார் என்ற புராணங்கள் உண்டு. முதன்முதலில் திருநள்ளாறு திருத்தலத்திற்கு போறவர்கள் என்ன செய்ய வேண்டும்:
1. முதலில் தலையில் சுத்தமான நல்லெண்ணெயை வைத்துக்கொள்ள வேண்டும்.
2. ஒரு சிறு துணியில் கருப்பு எள் முடிச்சாகக் கட்டி கையில் வைத்துக்கொண்டு, அதனை 3 முறை தலையை சுற்றிய பின், அங்கே உள்ள புனித நள தீர்த்தத்தில் போட வேண்டும்.
3. அதன் பிறகு 3 முறை ஆழமாக உச்சி மண்டை முழுவதும் நனையும் வரைக்கும் தலை முழுகிக் குளிக்க வேண்டும்.
4. அங்குள்ள 'கோள்வினை தீர்த்த விநாயகரை' வணங்க வேண்டும். விநாயகப் பெருமானுக்கு முன் ஒரு தேங்காயை வைத்து, அதை எடுத்து தலையைச் சுற்றி, தேங்காயை உடைக்க வேண்டும்.
5. அதன் பிறகு மாற்று உடை அணிந்து கொள்ள வேண்டும்..
நேராக மூலவரான சிவபெருமானைத்தான் பார்க்க வேண்டும். சுவாமியினுடைய திருநாமம் 'தர்பாரண்யேஸ்வரர்' என்பதாகும். பிரம்ம தேவரே பூஜை பண்ணியதாக ஐதீகம். அந்தத் தர்பை புல் என்பது வேறு எங்குமே இருக்காது. இங்கிருக்கக்கூடிய தர்பை காசியில் இருக்கக்கூடிய தர்பைக்கு இணையானது என்பார்கள். சிவபெருமானை வணங்கி, அவருக்கு மாலை சாத்தி, தீபங்கள் ஏற்றி அர்ச்சனை பண்ண வேண்டும். நம்முடைய பெயர், நட்சத்திரம், கோத்திரங்கள் சொல்லி, "என்னுடைய பாவங்கள் எல்லாம் விலக வேண்டும்" என்று சங்கல்பம் செய்து வழிபட வேண்டும்.
அதன்பிறகு பிரகாரத்தில் இருக்கக்கூடிய மற்ற தெய்வங்களை வணங்கி வரும்பொழுது, சுவாமி இருக்கின்ற இடத்திலிருந்து பார்த்தால், இடது பக்கம் சுவரில் சனிப் பகவானுடைய சிலை இருக்கும். அங்கே நின்று பார்த்தால் ராஜ கோபுரத்தினுடைய கலசம் தெரியும். அங்கிருந்து கோபுர தரிசனம் பண்ண வேண்டும்.
சனீஸ்வரனை பிரார்த்தனை பண்ணிட்டு, அங்கிருக்கக்கூடிய பைரவரையும் வணங்க வேண்டும். அதன்பின் தாயார் பார்வதி தேவி அம்மனை வணங்கிட்டு, அதன் பின் சனீஸ்வர பகவானுடைய தனிச் சன்னதிக்கு வந்து அவரை வணங்க வேண்டும். சனீஸ்வரனுக்கு பூஜைகள் செய்த பின், கோவிலை 3 முறை பிரகாரமாக சுற்றி வணங்க வேண்டும்.
எந்தக் கோவிலுக்கு போனாலும் சுவாமியை நேருக்கு நேராக நின்று கும்பிடக் கூடாது. வலது புறமாக சற்று பக்கவாட்டில் நின்று கும்பிட வேண்டும் என்பது ஐதீகம். சனீஸ்வரனுக்கு பூஜைகள் செய்த பின், கோவிலை 3 முறை பிரகாரமாக சுற்றி வணங்க வேண்டும். பெரியவர்களுக்கும், உடல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி செய்யலாம். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், உணவு மற்றும் உடைகள் வாங்கிக் கொடுத்து, அவர்களின் ஆசீர்வாதத்தை பெறலாம்.
திருநள்ளாறு கோவிலில் எல்லாரும் நேராக சனீஸ்வரன் சன்னதியில் தான் காலில் விழுகிறார்கள். ஆனால் மூலவர் சிவபெருமானை முழுமையாக வணங்கும் போதே, சனி நம்மை விட்டு விலகிவிடுகிறார் என்பது தலபுராணம். சனீஸ்வரனைக் கூட பார்க்க வேண்டியதில்லை. அதை உணர்த்து தான் சுவரில் சனீஸ்வரன் சிலை வைக்கப்பட்டுருக்கிறது.
சனி பகவானே வருத்தப்பட்டு, "உலகில் எல்லாரும் என்னை கண்டாலே பயப்படுகிறார்களே" என்று இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அவருக்கு அனுகிரகம் செய்த தலம் தான் திருக்கொள்ளிக்காடு. அங்கே அவருக்கு 'பொங்கு சனீஸ்வரர்' என்று பெயர். அங்கே சனீஸ்வரன் அனுகிரக மூர்த்தியாக இருக்கிறார். அங்கேயும் நான் சொன்ன வழிபாட்டு முறைகளை செய்ய வேண்டும்.
இறுதியாக திருவாரூர் தியாகராஜேஸ்வரர் கோவிலுக்கு போக வேண்டும். அங்கே சுவாமி 'ராஜ தர்பாரில்' அமர்ந்திருப்பார். அவரை வணங்கும் பொழுது, இழந்தவற்றை மீட்டுக் கொடுப்பார் என்பது ஐதீகம்.
எல்லா சிவாலயங்களிலும் சனிக்கு தனிச் சன்னதி இருக்காது. நவகிரகங்களில் ஒருவராக இருப்பார். ஆனால், சில பழமையான கோவில்களில், அவருக்கென்று 'தனிச் சன்னதி' அமைந்திருக்கும். அங்கு போக வேண்டும்.
சென்னையிலிருந்து வெளியூர் போக முடியாதவர்கள், சென்னை பொழிச்சலூர் என்பது 'வடதிருநள்ளாறு' என அழைக்கப்படுகிறது. அங்கே சென்று தாராளமாக வணங்கலாம்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்: இங்கு நவகிரகங்கள் இருக்கும். சனிபகவானுக்கு தனிச் சன்னதி இருக்கும். இது மாதிரியான கோவில்கள் வணங்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.
என்ன ராசி, நட்சத்திரமாக இருந்தாலும் இந்த கோவில்களில் வணங்கினால் மாற்றத்தை தருமா ?
தெய்வம் யாரையுமே தண்டிக்காது. ஏழரைச் சனி இல்லாதவர்களும் சனியை வணங்கினால் கெடுதல் கிடையாது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. திங்கட்கிழமை என்றால் சிவாலயம், செவ்வாய்க்கிழமை என்றால் முருகன் ஆலயம் என்று அந்தக் கிழமைக்குரிய அதிதேவதையாக பிரித்திருக்கிறோம். ஆனால், குறிப்பிட்ட நாளில் வணங்குவது மட்டும்தான் விசேஷம் என்று புராணங்களிலும் எழுதப்படவில்லை. மற்ற நாள்களில் வணங்கினாலும் அவர் நமக்கு பலனை தாராளமாகக் கொடுக்கத்தான் போகிறார்.
இந்த தெய்வத்தை வணங்கினால் நமக்கு உடனே பிரச்சினை வந்துவிடும் அல்லது நமக்கு யோகம் வரும் என்று எதுவுமே கிடையாது. தெய்வம் என்றாலே அனுகிரகங்கள் மட்டும்தான். தெய்வம் என்பது நம்மளைப் பாதுகாக்கக் கூடிய இடத்தில் தான் இருக்கிறார்கள். எல்லா நாட்களிலும், எல்லா தெய்வங்களை வணங்கலாம் என்பதுதான் உண்மை. நாமாகவே சில கட்டுப்பாடுகளை உருவாக்கி கொண்டோம்.
வீட்டில் வழிபடும் பொழுது, என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம் ?
நகரமாக அல்லது கிராமப்புறமாக இருந்தாலும், வீடுகளில் ஒரு மணி நேரம் பூஜை செய்ய யாருக்கும் பொறுமை இல்லை. காலையிலே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, விளக்கு ஏற்றி, ஒரு டம்ளர் பால் வைத்து வணங்குவது விசேஷ பலனை தரும். பால் என்பது மகாலட்சுமியின் சொரூபம். ஒரு சிறிய வெள்ளிக் கிண்ணத்தில் பால் காய்ச்சி, அதில் சிறிது கல்கண்டு சேர்த்து சாமிக்கு நைவேத்தியம் செய்வது நல்லது. கல்கண்டு, முந்திரி, திராட்சை மாதிரியான பொருட்களை கொஞ்சமாக நைவேத்தியம் பண்ணலாம்.
காலையில் எழுந்து தலை முழுகிக் குளித்துவிட்டு, விளக்கேற்றி, அன்றாட வேலையை தொடங்கும் போது, மாபெரும் ஐஸ்வரியத்தை கொடுக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். வெள்ளி என்பது சுக்கிரன், பால் என்பது லட்சுமி. ஒரு வெள்ளி கிண்ணத்தில், பால் வைத்து சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணும் போது ஐஸ்வரியமாக மாறும் என்பது விதி. வீட்டில் அன்னலட்சுமி வந்து, சாப்பாட்டு தரித்திரம் இருக்காது. பணமும் செல்வாக்கும் என்றுமே குறையாது.
ஆனால், இதனை ஒரே ஒரு நாள் மட்டும் செய்துவிட்டு நமக்கு மாற்றம் வரவில்லை என்று comment எழுதக்கூடாது. ஆத்மார்த்தமாக, உள் உணர்வோடு தொடர்ந்து 40 நாள்கள் செய்தால் கண்டிப்பாக நல்ல மாற்றத்தை உணரலாம்.
நாம் 3 வேளை சாப்பிடுகிறோம். நமக்கு ஒரு வேளை சாப்பாடு இல்லை என்றாலும் பசிக்குமே? வீட்டில் தெய்வம் படமாக அல்லது விக்கிரகமாக ஸ்தாபனம் செய்துவிட்டால், அவர்களுக்கு நாம் சாப்பாடு கொடுக்க வேண்டும். உரிய மரியாதை கொடுக்காமல் நாம் மட்டும் சாப்பிட்டால் எப்படி சரியாக இருக்கும்?. பூஜை முறைகளை விட, சாமிக்கு ஏதாவது ஒரு எளிய நைவேத்தியமாவது பண்ண வேண்டும், அவர் நம்மளை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.
வீட்டில் அசைவ உணவுகள் சமைக்கும் போது, பூஜைகளை தொடர்ந்து செய்யலாமா ?
புலால் (மாமிசம்) சமைப்பது பற்றியும், அதனால் வீடுகளில் எவ்வளவு தவறுகள் நடக்குது என்பது எனக்கு தெரியும். அதைப்பற்றி இன்னொரு காணொளியில் விளக்குகிறேன். பலருடைய வீட்டில் சமையலறையும், பூஜை அறையும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒருபக்கம் பிரியாணி கிண்டிக்கிட்டு இருப்பாங்க, இங்கே சாமிக்கு வாசனை போய் சேரும். சிலர் திரை, கதவு போட்டு மூடியிருப்பார்கள். "வீட்டில் இடமில்லை" என்று சொல்வார்கள். அதற்கான முறையான தீர்வை தனியாக பேசலாம்.
மாமிசம் சாப்பிடுபவர்களிடம் "சாப்பிடாதீங்க" என்று சொல்ல முடியாது, அது அவர்களின் விருப்பம். காலையிலே சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி சாமியை கும்பிட்டு, நைவேத்தியம் பண்ணி முடித்துவிட்டால், தெய்வீக நாள் தொடங்கிவிட்டது. அதன்பின் உங்க விருப்பப்படி அன்றாட வாழ்க்கை வாழட்டும். அதை விடுத்து காலையிலே எழுந்த உடனே மாமிசம் சமைத்து, பிரியாணி சாப்பிட்டுவிட்டு, காலை 10 மணிக்கு சாமி கும்பிடுவது அல்லது கோவிலுக்கு போக வேண்டாம். ஆன்மீகத்தையும், மாமிசத்தையும் ஒன்றாக்க வேண்டாம்.
குடும்ப தலைவி அல்லது பெரியவர்கள் காலையிலே எழுந்து கடவுளுக்கு மரியாதையை கொடுத்துட்டு, அதன்பின், உங்களுக்கான விஷயங்கள் தொடரலாம். வீட்டில் ஐஸ்வரியம் நிலைத்திருக்கும்.
படமாக அல்லது சிலை வழிபடுகின்ற முறை வேறுபடுமா ?
கண்டிப்பாக மாறுபடும். வீடுகளில் 6 அங்குலத்திற்குள் தான் சிலை இருக்க வேண்டும். 6 அங்குலத்திற்கு மேல் உள்ள விக்கிரகம், கோவில்களில் ஆகம முறைகளில், காலையில் பூஜை, மத்தியானம் உச்சிக்கால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை, இரவில் அர்த்தசாம பூஜை என காலப் பூஜைகள் செய்வார்கள்.
6 அங்குலத்திற்கு குறைவான சிலைக்கு, காலையில் ஒரு வேளை மட்டுமே நைவேத்திய வழிபாடு செய்வது உத்தமம்.

ॐ