Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

குடும்பத்தில் அனைவரும் கஷ்டப்படுவதற்கான காரணம்

04 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர், மனித ரூபத்தில் இருக்கிறார். அதாவது கஜசம்ஹார மூர்த்தியாக, யானை முகத்தோடு வருவதற்கு முன்னால் மனிதனாக இருந்த விநாயகர். இந்த புராணக் கோவிலில் ஸ்ரீராமர் வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

இராமேஸ்வரம், காசிக்கு செல்ல முடியாதவர்கள், அமாவாசையன்று திதி கொடுக்க முடியாதவர்கள் செல்ல வேண்டிய நிகரான தலம். இங்கே ராமர் ஒன்பது பிண்டங்கள் பிடித்து வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. பித்ரு சாபங்கள் நீங்க கூடிய இடம். இன்று பல குடும்பங்கள் முன்னோர்களின் சாபத்தினால் தான் விருத்தி அடையாமல் கஷ்டப்படுகின்றன. ஜோதிட ரீதியாக பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடம் கெட்டுப்போனால், 5-ம் அதிபதி தவறான கிரக சேர்க்கை பெறும்போது முன்னோர்களின் ஆசி கிடைப்பதில்லை.

ஒருமுறை மதியம் 12 மணி அளவில், இந்த கோவிலுக்கு கிளம்பினோம். நடை சாத்தியிருப்பார்கள் என்று பயந்தேன். ஆனால் அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அங்கு சிவாச்சாரியார் அசதி காரணமாக அங்கேயே தூங்கிவிட்டார். நாங்கள் 2:30 மணிக்கு செல்லும்போது கோவில் திறந்து கிடக்கிறது. நாங்கள் 'ஐயா' என்று அழைத்ததும் அவர் திடுக்கிட்டு எழுந்து, 'அய்யோ சாமி நடை சாத்தவில்லையே, தூங்கிவிட்டேனே' என்று பதறினார். 'உங்களை தூங்க வைத்ததே ஆதி விநாயகர் தான்; எங்களுக்கு காட்சி கொடுக்க காத்திருக்கிறார்' என்று சொன்னோம்.

எனக்கு எல்லா கோவில்களும் பிடிக்கும். பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் அங்கே வீற்றிருக்கிறார். அங்குள்ள பைரவரைப் போல வேறெங்கும் பார்க்க முடியாது. ஐந்தரை அடி உயரத்தில் லட்சணமான முகத்தோடு இருப்பார். அதே கோவிலில் சண்முகர் மயில் மீது அமர்ந்து ஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்தவர். முத்துப்பந்தல் கொடுத்து சிறு குழந்தையை உள்ளே அணைத்து, அழைத்த தலம்.

சீர்காழி சட்டநாதர் கோவில். ஞானசம்பந்தர் பிறந்த ஊர். அங்கே வெள்ளிக்கிழமை அர்த்தஜாம பூஜையில் அஷ்ட பைரவர்களுக்கு நடக்கும் வழிபாடு மிகவும் விசேஷமானது. சீர்காழியில் வைத்தீஸ்வரன் கோவில் இருக்கிறது. அங்கே ஓசை நாயகி அம்பாள்(தாலபுரீஸ்வரர்) இருக்கிறார். பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரவும், நல்ல அறிவு, படிப்பு வரவும் வேண்டிக்கொள்ளும் தலம். கும்பகோணம் பக்கம் எழுத்தறிவு நாதர் கோவில் இருக்கிறது. கேரளாவில் அரிசியில் எழுதுவது போல, இக்கோவிலில் நாக்கில் 'ஓம்' என்று எழுதுவார்கள்.

உங்களுக்கு மெய் சிலிர்த்த கோவில் எது?
சில கோயில்களுக்குள் நுழையும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பித்துவிடும். நம்மை மெய்மறந்து உட்கார வைத்துவிடும். சில பழமையான கோயில்களில் அது போல் உணர முடியவில்லை. அவர்களுடைய பக்தி, பூஜை, புரஸ்காரங்களில் ஏதாவது தவறுகள் நடக்கிறதா என்பதும் தெரியவில்லை.

என் குருநாதர் இருக்கும் இடங்களோடு எளிதாக இணைந்துவிடுவேன். திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் என்னை முழுமையாக அர்ப்பணித்து உள்ளே நுழைகிறேன். எவ்வளவு கூட்டம் இருந்தாலும், யாராவது ஒருவர் மூலமாக எனக்கு தரிசனம் கிடைத்துவிடும்.

சுவாமிமலை செல்லும்போது, ஹிருதய சக்கரம், சகஸ்ரநாம அர்ச்சனை அல்லது திரிசதி அர்ச்சனை நடக்கும். அகத்தியர் வழிபட்ட தலம். அருகில் திருவலஞ்சுழி கோவில் இருக்கிறது. ராஜராஜ சோழன் வழிபட்ட துர்க்கை கேள்விப்பட்டிருக்கோம். அங்கே காளி தெய்வமும் உண்டு. என் குருநாதர் எழுதிய ஓலைச்சுவடி மூலம் அந்த கோவிலின் சிறப்புகளை முன்பே அறிந்திருந்தேன். அங்கே உள்ளே நுழையும்போது அதிசயமாக யாராவது நம்மை நேராக சாமியிடம் கொண்டு போய் அமர வைத்துவிடுவார்கள்.

நான் சாமியிடம் இதுவரை எதையும் கேட்டதே இல்லை. ஒரே ஒருமுறை பிரச்சனையில் இருந்தபோது மட்டும் துர்க்கை அம்மனிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன். அன்று மாலையே எனக்கு பலன் கிடைத்தது. 'கேட்டால்தான் கொடுப்பார்களோ' என்ற சந்தேகம் இருந்தாலும், இப்போதும் நான் எதையும் கேட்பதில்லை. 'உன் அனுக்கிரகம் எனக்கு வரும்' என்ற சரணாகதி அடைகிறேன். ஒருவேளை நான் செய்த புண்ணியமோ அல்லது என்னுடைய தந்தையாருடைய ஆசீர்வாதம்.

ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும், இப்பொழுதும், அப்பா என்றால் சிவபெருமானை தான் காட்டுவேன். "என்னை ஏன் இப்படி படைத்தாய்?" என்பதற்கான விடைகளை (இறைவன்) கொடுத்து கொண்டிருக்கிறார். "உன்னுடைய பிறவி நோக்கம் வேறு, உன் பிறவியில் நீ செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன" என்பதை உணர்ந்து செயல்படுகிறேன். அதனால்தான், யாராவது ஒருத்தர் பிரச்சினைகளோடு என்னிடம் வரும் பொழுது, அவர்கள் கோபப்பட்டாலும், "அவர்கள் பேசவில்லை. அவர்களுடைய வலிதான் பேச வைக்கிறது" என்று புரிந்துகொண்டு, அந்த வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.