Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

கேள்வி பதில்கள் - 4

03 Nov 2026 5 நிமிட வாசிப்பு வீடியோ
தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு ஜோதிடத்தின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ள காலகட்டத்திலும், பலருடைய வாழ்க்கையில் நாடி ஜோதிடம் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாடி ஜோதிடத்திற்கும் கோவில்களில் செய்யப்படும் பரிகாரங்களுக்கும் என்ன தொடர்பு?
இந்த ஜோதிடர்கள் என்பது பிரம்மாண்டம் கிடையாது. இன்றைய காலப்போக்கில், ஏதாவது புதிதாக சொல்லி பிரம்மாண்டத்தை உருவாக்குவது கிடையாது. அது யதார்த்தம்.

கோவில் பரிகாரம் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். "கொஞ்சம் கஷ்டமாக, பிரச்சினையில் இருக்கிறேன், என்ன பண்ணுவது என்று தெரியவில்லை" என்றால், நீங்கள் "இந்தக் கோவிலுக்குப் போயிட்டு வருவோம். சரியாகும்" என்பீர்கள். ஆனால், அது பரிகாரம் கிடையாது. நம்மளுடைய பிறப்பிற்கும், கோவில்களுக்கும், முந்தைய ஜென்மம், (பூர்வ புண்ணிய ஸ்தானம்), நம்மளுடைய முன்னோர்கள் என்ற குலதெய்வம் சம்பந்தம் இருக்கிறது என்பதை மகரிஷி சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு, பசுமாட்டின் உடம்பில் ஓடக்கூடிய இரத்தம், அதன் மடிக்கு வந்த பிறகு பாலாக மாறுகிறது. அதுபோல நம்மளுடைய பிறப்பிற்கும், கர்மாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது. அது சூட்சமம். நம்மளுடைய பிறப்பிற்கும். இந்த ஜென்மத்திற்கும் தொடர்பு இருக்கக்கூடிய தான் பரிகாரம்.

இந்தக் கோவிலுக்கு போனால் தலையெழுத்து மாறும் என்பதை நாடி ஜோதிடம் எடுத்துக் கொடுத்து விடுகிறதா?
நம்மளுடைய வியாதிற்கான மருந்தை எடுத்துக்கொண்டால்தான் உதவி செய்யும். அதுபோல, நம்மளுடைய கர்மா என்ன? இந்த ஆன்மா, மனிதனாகப் பிறந்துவிட்டது. என்ன காரணத்திற்காகப் பிறந்திருக்கிறது? அதன்படிதான் வாழ்கிறோமா? அந்த வாழ்க்கையை முழுமையாக நம்ம அனுபவிக்க இல்லை. நாம் முன் ஜென்மத்தில் யார்? இந்த ஆன்மா யாராகப் பிறந்தது? மனிதனாகப் பிறந்ததா? ஆணாகப் அல்லது பெண்ணாகப் பிறந்ததா? அந்தச் சமயத்தில் அது செய்த கர்மவினை என்ன? அது ஏன் இந்த ஜென்மத்தில் தொடருகிறது? இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள் என்ன? அனுபவித்துக்கொண்டிருக்கக்கூடிய கஷ்டங்கள் என்ன? அது தீர்வதற்குக் குறிப்பிட்ட ஆலயங்களைக் கட்டாயம் மகரிஷி சொல்கிறார்கள். அதன்படி ஆலய வழிபாடுகள் செய்யும்போது நிச்சயம் பிரச்சினைக்குத் தீர்வு உண்டு. தீர்வுகள் இருக்கக்கூடிய மனிதர்கள் மட்டும்தான் பரிகாரம் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது ஒரு விதி இருக்கிறது. எல்லாராலும் தெரிந்துகொள்ள முடியாது. சில பேருடைய விதி, பலனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்றால், அவர்களுக்கு தீர்வே கொடுக்க மாட்டார் மகரிஷி. பரிகாரத்தைத் தெரிந்துகொள்வதற்கும், ஆலயங்கள் போவதற்கும் நம் கர்மா, நாம் செய்த புண்ணியம் ஒத்துழைக்க வேண்டும்.

பரிகாரங்கள் செய்யும்போது நேரம், காலம், இடம் மூன்றுமே தீர்மானித்தால் மட்டுமே 100% வேலை செய்யும் என்பது நிர்ணயிக்கப்பட்டதா ?
உலகம் ரொம்ப வேகமாகச் செயல்படுகிறது. சூரியன் உதயத்திலிருந்து சூரியன் அஸ்தமிப்பதற்குள் செய்யக்கூடியது தான் வேலை என்று சொல்கிறோம். ஆனால், நானே இரவு 3 மணிக்கு உட்கார்ந்து நாடி படித்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நவீன காலம், நேரம் பத்தவில்லை என்ற ஒரு கட்டத்திற்கு வந்துவிட்டோம். காலத்திற்குத் தகுந்த மாதிரி நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். காலத்திற்குத் தகுந்த மாதிரி நம்மளை மாற்றுவதும் இயற்கைதான். எல்லா நேரத்திலும் எல்லாமே தெரிந்து கொள்ளவும் முடியாது.

12 மணிக்குத்தான் உச்சி வெயில் வர வேண்டும் என்றால் நாம் 12 மணி வரைக்கும் காத்திருந்து ஆக வேண்டும். 9 மணிக்கே வந்து உச்சி வெயில் வர வேண்டும் என்றால் எப்படி முடியும்? அதுபோல சில விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும், அதைச் செயல்படுத்துவதற்கும் காலங்கள் நமக்கு ஒத்துழைப்பு பண்ண வேண்டும். காலத்தினுடைய நியதிப்படிதான் நடக்கிறது.

காலையில் செய்கின்ற பரிகாரத்திற்கும், இரவில் செய்கின்ற பரிகாரத்திற்கும் என்ன வித்தியாசம்? எந்த நேரத்தில் செய்வது சிறந்ததாக இருக்கும்?
பரிகாரங்கள் வேலை செய்யக்கூடிய நேரமே காலையில் 6 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் தான் உத்தமம். அதன் பின், சூரியன் உச்சி காலத்திற்குப் பிறகு, அந்தி சாய்கின்ற பொழுது சூரியனுடைய வீரியம் குறைய ஆரம்பிக்கிறது. அப்பொழுது செய்யக்கூடிய பரிகாரங்கள் உத்தமம் இல்லை என்பதைச் சூட்சமமாக மகரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நம்மளுடைய தேவைக்குத் தகுந்த மாதிரி மாற்றும் பொழுது தவறுகளும் நடக்கின்றன.

வியாதிகள் முன்கூட்டியே நாடி ஜோதிடத்தில் தெரிந்து பரிகாரங்கள் செய்தாலும், வியாதியை அனுபவிக்க வேண்டும் என்ற கர்மா இருந்தால், பரிகாரம் செய்வது பயனில்லை என்று தான் சொல்ல வேண்டுமா?
இல்லை. மருத்துவ காண்டம் என்ற 16-ஆவது காண்டம், ஒளடத காண்டம். எல்லா இடத்தில் கர்மா என்ற விஷயத்தை திணித்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் கர்மா தான் எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பெரிய ஞானியிடம் கேட்டாலும், "உன் கர்மாவை நீ அனுபவிக்கிறாய் " என்பார்கள். யாருமே வேறு எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள். அதனால் கர்மா தான் நம்மை இயக்குகிறது. நம்முடைய கர்ம பலன் நமக்கு என்ன மாதிரியான வியாதி வரும் என்பதை மகரிஷி எழுதியிருக்கிறார்கள்.

நாடி படித்தோம் என்றால், ஒரு குறிப்பிட்ட வயதில் தோல், வாதம் (முடக்குவாதம், பக்கவாதம்) சார்ந்த வியாதி வரும் என்று இருக்கும். மதுமேகம் என்றால் சர்க்கரை வியாதி, இரத்தம் சம்பந்தப்பட்டது. அதில் வார்த்தைகள் அழகாக இருக்கும். அதை நாம் இன்றைய காலகட்டத்திற்குத் தகுந்த மாதிரி மருத்துவம் சார்ந்த விஷயம் பொருளாக்கம் பண்ணும் போது பிழை வந்துவிடக்கூடாது. சிலருக்கு 'குருதி சார்ந்த சுரப்பிகள்' என்று வரும். சுரப்பி என்பது இன்சுலின் என்கிறார்கள். இரத்தத்தில் ஏற்படக்கூடிய மாசுகள் இல்லையென்றால் தைராய்டு சம்பந்தப்பட்டது, இது மாதிரி நிறைய சூட்சமங்கள் இருக்கின்றன.

கர்ம பலனால் வாழ்க்கையில் இது போன்ற ஒரு வியாதியை அனுபவிக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு. மருத்துவ காண்டத்தை பார்க்கும்பொழுது, வியாதிக்கான உள்ள காரணம் என்ன, எதனால் ஏற்படுகிறது என்பது வந்துவிடுகிறது. அதன்பின் அதற்கான தீர்வு, மருந்து எங்கே கிடைக்கிறது, நாம் எங்கே போக வேண்டும், யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்ற விளக்கங்கள் அதில் இருக்கிறது. அதை முறைப்படி நாம் எடுத்துக்கொள்ளும்பொழுது கட்டாயம் 80% குணமாகலாம்.

பலர் குலதெய்வம் தெரியவில்லை என்று இருக்கிறார்கள். பிரசன்னம் மூலமாகக் குலதெய்வத்தை கண்டுபிடிக்கிறார்கள். நாடி ஜோதிடத்தில் குலதெய்வத்தைப் பற்றிய முழு விவரங்கள், குறிப்புகள் இருக்குமா?
நாம் யார் என்பது முதல் விஷயம். நீ எந்தக் கோத்திரத்தில் பிறந்தாய்? அடுத்தது குலதெய்வம் என்ன? என்ற கேள்வியை வைக்கிறோம். கோத்திரங்கள் என்பது மகரிஷிகளை குறிப்பிடுகிறது. வசிஷ்ட மகரிஷி கோத்திரம், அகத்திய மகரிஷி கோத்திரம், காசியப மகரிஷி கோத்திரம் என்கிறோம். கோத்திரங்கள் எல்லாமே மகரிஷிகளுடைய பெயராகவே இருக்கிறது. எந்த மகரிஷியினுடைய வகையறாவில் நாம் வந்திருக்கிறோம் என்பதுதான் கோத்திரம். நம்மளுடைய பாட்டனார், ஆதி அந்தம் பார்க்கும்போது நாம் ஏதோ ஒரு மகரிஷியினுடைய கோத்திரத்தில் இருந்து வந்திருக்கிறோம்.

குலதெய்வம் என்பது எல்லாரும் சொல்வது ஜாதகத்தில் 5-வது இடம், பூர்வ புண்ணிய ஸ்தானம். குலதெய்வம் தெரியாதவர்களுக்கும் எல்லாருக்குமே குலதெய்வமாக இருக்கக்கூடிய ஒரே கடவுள் பரமேஸ்வரன்தான்.

உதாரணமாக, நாட்டின் பிரதமர் எல்லா வேலையும் செய்வதில்லை, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு ஆட்களை பணி நியமனம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மேலே அறிக்கை அளிப்பது பிரதமர் தான். அதுபோல பரமேஸ்வரன் தான் முதன்மை. பரமேஸ்வரன் தான் ஆதி. அதைச் சார்ந்து தான் மற்ற எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கிறது. 'அவன் இன்றி அணுவும் அசையாது' என்று சொல்கிறோம்.

குலதெய்வம் நாடி மூலமாக எடுத்துக்கொள்வதுதான் சரியான முறை. மூலம் பரமேஸ்வரனாக இருந்தாலும், எந்தத் தெய்வத்தைச் சார்ந்து வருகிறது என்பதை துல்லியமாக சாஸ்திரத்தில் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

குலதெய்வம் கோவில் இந்த மாதிரியான பகுதிக்குள் இருக்கும், பெண் அல்லது ஆண் தெய்வமாக இருக்கும் என்ற விஷயங்களை பற்றி நாடி ஜோதிடத்தில் கொடுக்குமா?
என்னுடைய நாடியில் வந்தது, "அலங்கார பெண் தேவதை, ஊருக்கு வெளிப்புறமாக இருக்கும், அவங்களுக்கு ஒரு காவல் தெய்வம் கூட நிற்பார்கள்" என்று வந்தது. அப்படி என்றால் என்னுடைய தெய்வம் அங்காள பரமேஸ்வரி. காவல் தெய்வமாக இருப்பது அரிவாளோடு குதிரை மேல் அமர்ந்திருக்கக்கூடிய காத்தவராயன், பெரியாச்சி, பாவாடைராயன் என்று சொல்லுவோம். அதுபோல ஒவ்வொரு கோத்திரத்தில் பிறக்கிறவர்களுக்கு, எந்த மகரிஷியினுடைய வழியில் வந்திருக்கிறோமோ அவர்களுக்கு குலதெய்வம் இந்த இடத்தில் இருக்கிறது. அவர்களை வழிபடுவதனால, அவர்களுடைய அனுமதியினால் தான் மற்ற விஷயங்கள் எல்லாமே நமக்கு வாழ்க்கையில் சாத்தியமாகும். ஆயிரம் பரிகாரங்கள் பண்ணினாலும், குல தெய்வத்தினுடைய அனுமதி இருந்தால் மட்டும் தான் பரிகாரமும் வெற்றியாகும் என்பதையும் மகரிஷி குறிப்பிடுவார்கள்.

கோத்திரம் தெரியாதவர்களுக்குச் சிவகோத்திரம் அல்லது விஷ்ணு கோத்திரம் என்று எடுத்துக்கொள்கிறோம். ஆனால் கட்டாயம் நம்மளுடைய பெரியவர்கள் கோத்திரம் பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் நாம் கோத்திரம் ஓலைச்சுவடியில் எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது பரிகாரம் செய்திருக்கிறீர்களா?

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.