Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

நாடி ஜோதிடம் குறித்து கருத்துகளுக்கு பதில்

03 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
நிறைய பேர் நீங்க பேசி வைத்துவிட்டுத்தான் கேள்வி கேட்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.
அப்படி கிடையாது. மக்களுக்கு எப்பொழுமே உண்மையை சொல்வதுதான் எங்களுடைய வேலை.

ஏதோ 10 ஓலைகளை வைத்துக்கொண்டு அவர்களாகத்தான் சொல்கிறார்கள். பெரிதாக அவர்களிடம் ஓலைச்சுவடிகள் இருப்பது போல் தெரியவில்லை. இதில் நல்ல விஷயங்களை அவர்கள் சொன்னதே கிடையாது. பரிகாரம் சொல்லி மக்களை பயமுறுத்துகிறார்கள். கொள்ளை கணக்கில் காசு வாங்குகிறார்கள். இதில் ஜாக்கிரதையாக இருங்க மக்களே, ஏமாறாதீர்கள்' என்று ஒருவர் சொல்லியிருக்கிறார்.
நியாயமான கேள்வி கேட்டவருக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நம்மிடம் ஓலைச்சுவடிகள் ஒரு பகுதியை காணொளியில் காட்டியிருக்கிறோம். நாலு கட்டு ஓலைச்சுவடிகளை வைத்துக்கொண்டு எதுவுமே பண்ண முடியாது. ஒரு நாளைக்கு குறைந்தது 15 முதல் 20 பேருக்கு முன்பதிவு (Appointment) கொடுக்கிறோம். அந்த 20 பேருக்கு ஓலைச்சுவடி எடுத்து படிக்கிறோம். ஒரு கைரேகைக்கு இரண்டு முதல் ஐந்து கட்டுகள் வரை பொருந்துவது உண்டு. அந்த கட்டுகளை அனைத்தும் கொண்டு வைத்துவிடுகிறோம். ஒரு கட்டுக்கும் குறைந்தது 40 முதல் 50 ஓலைகள் இருக்கின்றன. அவர்கள் எங்கோ தவறான இடத்தில் போய்விட்டு, அவர்களுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இங்கே நேரடியாக வருபவர்களிடம் நாம் சொல்லும் விஷயம், பரிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிலருக்கு கோயிலுக்கு போய் இந்த தெய்வத்தை வணங்குங்கள் என்று சொல்கிறோம். வர முடியாதவர்களுக்காக நாம் அந்த கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்கிறோம். அதையும் ஆதாரப்பூர்வமாக அவர்களுக்கு நேரலை காணொளி (Live Video Call) மூலமாக, 'இதுதான் உங்களுக்காக சொல்லப்பட்ட கோயில்' என்று காட்டுகிறோம். சிவாச்சாரியார்கள் செய்யும் பூஜையை நேரலையிலே காட்டியிருக்கிறோம். அதேபோல சிலருக்கு, 'எந்திரப் பூஜைகள் செய்து தாயத்தாக கட்டிக்கொள்ளுங்கள்' என்று மகரிஷிகள் சொல்வார்கள். அதுதான் தீட்சை காண்டத்தில் மந்திர ரட்சை, கவசம் என்றும் சொல்கிறோம். அதையும் நாங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை. செய்வது, செய்யாதது உங்கள் விருப்பம்.

நான் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்றால், எங்களுடைய வேத பண்டிதர்கள் அதற்கான மந்திரத்தை எந்திரத்திற்கான தெய்வ ஆவாகன பூஜை, விக்னேஸ்வர பூஜை செய்து, அவர்களின் கோத்திரம், குலதெய்வம், நட்சத்திரம், கோரிக்கைகளை சங்கல்பம் அனைத்தையும் முன்னிறுத்தி, அதன்பிறகு எந்திரத்திற்கு மூலமந்திரம் ஜெபம் செய்து பிரசாதம் கொடுத்து அனுப்புகிறோம். நாங்கள் இதை எல்லா இடத்திலும் காணொளியாக எடுக்க முடியாது. அதை ஒலியாக (Audio) குறைந்தது 45 நிமிட பதிவாக அனுப்பி வைக்கிறோம். நாங்கள் நேர்மையாக செய்கிறோம். தவறான முறையில் காசை பறிப்பது கர்மா என்பதை நான் உணர்ந்து செயல்படுகிறன். அவர்கள் எங்கே போய் ஏமாந்த பொதுவான கருத்து.

உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நீங்கள் நாடி பார்த்திருக்கிறீர்களா?
என்னுடைய ஜாதகத்தை நாடி மூலமாகத்தான் எடுத்திருக்கிறேன். என்னுடைய குரு, என்னுடைய நிறுவனத்தில் பணி செய்கிறார்கள். என் மனைவி என்னை பற்றிய விஷயங்களை பேசும்போது என்னுடைய நாடியை எடுத்து பார்க்கிறார். அதேபோல் என் மனைவி மட்டும் அதில் சம்பந்தப்படவில்லை. என்னுடைய வாடிக்கையாளராக இருந்தவர், நண்பராக இருக்கிறார். அவரும் 'ஐயாவினுடைய நேரம் இப்போது எப்படி இருக்கிறது?' என்று கேட்க, என் அண்ணார் எனக்கு நாடி எடுத்து படிக்கிறார். அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு அப்படியே நடந்தன. 2015-ல் எனக்கு ஏற்பட்ட சில பிரச்சனையான காலங்களை சொன்னார்.
தீர்வுகளை நான் ஆத்மார்த்தமாக செய்து, ஒவ்வொரு தெய்வத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'தெய்வம்தான் துணை, உறவு எதுவுமே கிடையாது' என்று சரணாகதி அடைந்து, அதிலிருந்து மீட்கப்பட்டவன். மீண்டும் இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.

நிறைய இயற்கை சீற்றங்களாலும் பல போர்களாலும், அடுத்தடுத்து மன்னர்களின் படையெடுப்புகளாலும் நிறைய ஓலைச்சுவடிகள் நம் நாட்டில் அழிந்துவிட்டன. இப்பொழுதும் சித்தர்கள், முனிவர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் எல்லாருக்கும் கிடைக்குமா ? .
இன்று காலையில் நான்கு பேருக்கு ஓலை இல்லை என்று திருப்பி அனுப்பியிருக்கிறோம். கொடுத்ததே 10 முன்பதிவுகள் தான். சிலருடைய ஓலை வேறு இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு நேரமாகும் என்று சொல்லியிருக்கிறோம். சிலருக்கு ஓலை இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறோம். எல்லோருக்கும் ஓலைச்சுவடி கிடைக்காது. சோழர்களின் காலத்திலே ஓலைச்சுவடிகள் ஆங்கிலேயர்களால் பல நாடுகளுக்கு கடத்தப்பட்டன. இன்று அதன் சூட்சுமங்களை அவர்கள் நம்மிடம் விற்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை. இங்கிருந்து மருத்துவ ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்டின் ரகசியங்கள் சார்ந்த ஓலைச்சுவடிகளை எடுத்து சென்றிருக்கிறார்கள். அழியப்பட்ட ஓலைச்சுவடிகள் நிறைய உள்ளன. சிலர் இன்று நவீன முறையில் மருத்துவ சூத்திரங்களை (Formula) பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஜோதிடர்கள் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதைக் கேட்டு, அதற்கு ஏற்ப பதில் சொல்கிறார்கள். இது ஏமாற்று பேர்வழிகள் போல் தெரிகிறது .
நாங்கள் இதுவரை “என்ன பிரச்சனையில் வந்திருக்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்டதே கிடையாது. ஓலைச்சுவடி எடுத்து உறுதி செய்யப்படும் பொழுது, அவர்கள் ஆர்வக்கோளாறில் முன்கூட்டியே சொல்ல வருவார்கள். அப்போது கூட நாங்கள் 'நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், எல்லாமே ஓலையில் வரும்' என்று பலமுறை தடுத்திருக்கிறோம். 'நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும், நீங்கள் சொல்லி, நான் கேட்கும் இடத்தில் இல்லை' என்று வாதாடியதும் உண்டு.

நேற்று ஒருவருக்கு படிக்கும்போது 20 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்க்கையில் நடந்த ரகசியத்தை பேசினேன், அவர் அதிர்ச்சியாகிவிட்டார். யாருக்கும் தெரியாத ரகசியத்தை எப்படி சொல்ல முடியும்? இது போன்ற உண்மையான ஜோதிடரை பார்த்துவிட்டு அவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும். எங்கோ போய் பாதிக்கப்பட்டு எழுதுபவர்கள் மேல் எனக்கு வருத்தமே கிடையாது. காரணம், ஒரு எதிர்பார்ப்பில் போனார்கள், பலன் கிடைக்கவில்லை, அதனால் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். உங்கள் மூலமாக அவர்களுக்கு பதில் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.