2025 மார்ச் 29 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி வருவதாக ஜோதிடர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தி வருகிறார்கள்.
வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என 2 வகைப்படும். வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஜோதிட சாஸ்திரங்கள் உருவான சோழர் காலம் மற்றும் அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே அனைவரும் பயன்படுத்திய பாரம்பரிய பஞ்சாங்கமாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப, கணினி முறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பஞ்சாங்கமாகும்.
ஒவ்வொரு ராசிக்கான பலன்களைக் கூறும்போது, ஜோதிடர்கள் தங்களின் அனுபவ அறிவின்படி பலன்களை வழங்கி வருகிறார்கள். அதில் குறிப்பாக, சிம்ம ராசி மற்றும் கடக ராசியினருக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி நல்லதொரு யோகத்தையும், முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கப்போவதாகக் கூறுகிறார்கள். அது நல்ல விஷயமே. ஏனெனில், கடக ராசிக்காரர்கள் கடந்த 5 ஆண்டுகளாகப் படாத பாடுபட்டிருக்கிறார்கள் என்பது அந்த ராசியினருக்கு நன்றாகவே தெரியும். சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது என்றும், ராகு-கேது பெயர்ச்சிகள் வரப்போகின்றன என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 மார்ச் 29 அன்று சனிப்பெயர்ச்சி என்று கூறப்பட்டாலும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் 6 அன்று சனிப்பெயர்ச்சி வருகிறது.
சனி பகவான் நீதிக்குரியவன். ஒரு மனிதனுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் தாழ்த்துவதும், புரிய வைப்பதும், பக்குவப்படுத்துவதும் சனி பகவான் ஒருவனே. "சனியைப் போல் கொடுப்பாரும் யாருமில்லை, கெடுப்பாரும் யாருமில்லை" என்று சொல்வோம். சனீஸ்வரனைத்தான் நான் மிக நல்ல கிரகம் என்று கூறுவேன். சனி அனுபவம், அறிவு, வாழ்க்கை பாடம் ஆகியவற்றை கொடுப்பவர். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்தக்கூடிய கிரகம் சனீஸ்வரன் மட்டும்தான். எனவே, சனி பகவானை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம்.
உதாரணமாக, நாம் வாகனத்தில் செல்லும்போது 80 KM வேகத்தில் சென்றால், சாலையில் ஏதேனும் பழுது இருந்தாலோ அல்லது யாராவது குறுக்கே வந்தாலோ, உடனடியாக வேகத்தை குறைத்து (Brake) வண்டியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுவே 140 - 180 KM வேகத்தில் சென்றால், எவ்வளவு பெரிய அனுபவசாலி ஓட்டுநராக இருந்தாலும் வண்டியைக் கட்டுப்படுத்த முடியாது. வண்டி அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.
சனி பகவான் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மை செய்யக்கூடிய கிரகம். அவர் நீதிக்காரகன். நம் வாழ்க்கையைப் பக்குவப்படுத்தக்கூடியவர். கவிஞர் கண்ணதாசன் கூறியது போல, "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்ற வரிகளுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும். நாம் பாதுகாப்பான முறையில், தேவையில்லாத விஷயங்களிலும், தேவையில்லாத நபர்களின் சேர்க்கையிலும் ஈடுபடாமல், தேவையில்லாத பழக்கவழக்கங்களைத் தவிர்த்து, எல்லாவற்றிலும் நிதானத்தையும், பொறுமையையும், யாருடனும் பகைமையை வளர்த்துக்கொள்ளாமல் நம் வேலையைச் செய்தாலே நமக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
அதை மீறி நடப்பது விதி. நம்முடைய ஜாதகத்தில் நிலையில், எது நமக்கு யோகமான கிரகம், பாதகமான கிரகம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். யாருடைய திசை நடக்கிறது ? தசாபுத்தி, திசையினுடைய புத்தி, புத்தியினுடைய திசை ஆகியவற்றைப் பார்ப்பது மிக ஆழமாகச் செல்லக்கூடிய விஷயம்.
ஏனென்றால், கோச்சாரம் மட்டுமே ஒரு மனிதனின் ஏற்றத்தாழ்வைத் தீர்மானிக்கப் போவதில்லை. கோச்சாரம் என்றால் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி என மாறி வரக்கூடிய கிரகங்கள் ஆகும். இது மட்டுமே ஒரு மனிதனுடைய பலன்கள், நேர காலத்தைத் தீர்மானிப்பது கிடையாது. கோச்சாரப் பலன்கள் சரியாக இல்லாத பட்சத்திலும், ஒருவருக்கு நடக்கும் தசாபுத்தி யோகாதிபதியின் திசையாக இருந்தால், இந்தக் கோச்சாரம் நமக்கு எவ்வித பாதிப்பையும் தராது.
பொதுவான பலன்கள் வைத்து எந்தவொரு இறுதி முடிவுக்கும் செல்லாதீர்கள். இந்த இடத்தில் நான் எந்தவொரு ஜோதிட மகான்களையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பேச விரும்பவில்லை. மக்கள் விழிப்புணர்வோடு இருங்கள்; ஒரு மனிதனுடைய ஜாதகம் அவன் பிறக்கின்ற பொழுது எந்த கிரக அமைப்புகளில் இருந்தது, எந்தத் தசாபுத்தியில் பிறந்தான், இன்று என்ன தசாபுத்தி நடக்கிறது, அந்தத் திசை அவனுக்கு யோகாதிபதியா அல்லது பாதகாதிபதியா, இதற்கு இடையில் கோச்சாரத்தை ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
'லக்னம்' என்பது உயிர் போன்றதாகும். ஒரு குழந்தை பிறந்து சுவாசிக்கும் முதல் மூச்சே லக்னம் ஆகும். லக்னத்தை வைத்தே ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வான் என்பதைக் கணிக்க முடியும். 'ராசி' என்பது உடல் மற்றும் மனதைக் குறிப்பதாகும். சந்திரன் மனோகாரகன். உயிருக்கும் உடலுக்கும் மற்ற கிரகங்கள் எப்படி அமைந்து இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பலனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது மாறக்கூடிய திருக்கணிதப் பெயர்ச்சி என்பது முழுமையான பெயர்ச்சி ஆகாது. திருநள்ளாறில் சனி பகவான் பெயர்ச்சிக்கான விசேஷ பூஜைகள் நடைபெறுகின்ற நாள் தான் சனிப்பெயர்ச்சி ஆகும். இப்போது திருக்கணிதப் பிரகாரம் சனி பெயர்ச்சியாகி, மீண்டும் வக்கிரப் பெயர்ச்சிக்கு வருவார். மீண்டும் வக்கிர நிவர்த்தியாகி மீண்டும் வக்கிர நிவர்த்தியாகும். இதில் பல சூட்சுமங்கள் உள்ளன. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.
முதலில் நமது ஜனன ஜாதகம் தான் முக்கியம். தசாபுத்தி நன்றாக இருந்தால், கோச்சாரம் பெரிய பாதிப்பைத் தராது. நமது நேர காலம் சரியில்லாத பொழுது இன்னொருவரைத் திருத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். நம் நேரம் சரியில்லை என்றால் நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நாம் Risk எடுக்கக் கூடாது. நமது நேரம் சரியில்லாத பொழுது வேலையில் பிரச்சனை வந்தால், பரவாயில்லை; நாம் விட்டுக்கொடுத்து, அனுசரித்துச் சென்றுவிட வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஒரு மனிதன் வீழ்ந்துவிட்டதாக அல்லது கௌரவம் போய்விட்டதாக அர்த்தம் கிடையாது. அந்த நேரத்தில் பொறுமை மிகவும் அவசியம்.
அதற்கும் மேலாக நமக்கு இறை வழிபாடு இருக்கிறது. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வத்தின் சாராம்சம் பெற்றது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், கிரகத்திற்கும் அதிதேவதை இருக்கிறது. அந்த நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்களுக்கு யோகாதிபதி என்கிற கிரகம் மற்றும் அதற்குரிய அதிதேவதைகள் இருக்கிறார்கள். அந்தந்த தெய்வத்தை வணங்கி, சரியான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளும்போது கட்டாயம் அதற்கான நற்பலன்கள் நமக்கு உண்டு.
நாடி ஜோதிடம் என்பது சித்தர்களால் நமக்காகக் கொடுக்கப்பட்ட நம்முடைய பொக்கிஷம் ஆகும். ஜாதகம் என்பது நேர காலத்தைச் சாதகப்படுத்திக் கொள்வது. இந்த ஜாதகம் எப்படி இயங்குகிறது, இந்தக்கிரகம் ஏன் இவருக்கு இப்படி அமைந்தது என்பதைத் தீர்மானம் செய்வதுதான் நாடி ஜோதிடம். நாடி ஜோதிடத்தின் மூலமாக உங்களுக்கு இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்கும். மேலும் விவரங்களுக்குத் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

ॐ