Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

கேள்வி பதில்கள் - 2

03 Nov 2026 6 நிமிட வாசிப்பு வீடியோ
நம்மளுடைய கைரேகைக்கும், ஓலைச்சுவடிக்கும் என்ன தொடர்பு ?
ரேகை என்பது நம்மளுடைய மரபியல் குறியீடு. அதாவது மரபியல் குறியீடு (Genetic code, Gene) என்கிறோம். நாம் எங்கிருந்து வந்தோம், எத்தனை தலைமுறையாக ஆன்மாவின் தொடர்பு, முன்ஜென்ம மரபுகளை இணைக்கக்கூடியதாக எடுத்துக் கொள்ளலாம். நம்மளுடைய ரேகை தான் நாம் யார் என்பதற்கான அடையாளமாக மகரிஷி சொல்கிறார்.

ரேகை என்பது பல கோணங்களில், அடையாளங்களில் சொல்லப்படுகிறது. ரேகையினுடைய அடையாளங்களை கொண்டு மகரிஷி நம்மளுடைய வாழ்க்கை, பிறப்பை பற்றிய ரகசியங்களை சொல்லி இருக்கிறார்கள்.

ஒருவருடைய ரேகையை வைத்து பூர்வ ஜென்ம புண்ணியங்கள் சொல்ல முடியுமா ?
கண்டிப்பாக சொல்லலாம். கடந்த காலம், நிகழ்காலம், வரக்கூடிய காலங்கள் குறிப்பிடப்படுகிறது..

மனித பிறவி என்பதே கர்ம வினைகளை கழிக்க உருவானது என்று கூறப்படுகிறது. நாடி ஓலைகளில் ஒரு மனிதனுக்குரிய கர்ம வினைகள் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் ?
7 ஜென்மம் வரை மனித பிறப்புகள் உண்டு. சிலர் போன ஜென்மத்தினுடைய கர்மா இந்த ஜென்மத்தை தாக்குகிறது என்பார்கள். சிலரின் வாழ்க்கை முறையை பார்ந்தால் 3 ஜென்மத்தினுடைய கர்மா இந்த பிறவியை தொடர்கிறது என்பார்கள். எனவே நாம் எதற்காக பிறந்தோம் என்பதை உணரக்கூடிய காலகட்டம் வரும்பொழுது தான் தீர்வு. அதுவரைக்கும் தீர்வே கிடையாது. பிறப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

அதேபோல நாம் பரிகாரம் பண்ணிவிட்டால் நம்முடைய பாவம் தொலைந்துவிட்டது என்கிறோம். அது ஒரு பிறவிக்கான உள்ள பாவமாக, பரிகாரங்களாக இருக்கலாம். இதற்கு முன் எத்தனை ஜென்மங்கள் நாம் கடந்து இருக்கிறோம் என்று தெரியவில்லை. அதையும் சரியான முறையில் ஆராய்ச்சி பண்ணி, அதன்படி வழிபாடுகள் செய்யும்போது பலன்களை முழுமையாக பெற முடியும்.

மனிதர்களின் முக்தி நிலையை பற்றி நாடி ஜோதிடத்தின் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வது ?
பிரம்மா நம்மை படைக்கும்போது நாம் செய்த பாவத்தினுடைய, கர்மத்தினுடைய ஒரு பிடியை வைத்துத்தான் மனித பிறவி படைக்கிறார். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சுதந்திரத்தையும் கொடுக்கிறார், நல்லபடியாக கர்மவினை எல்லாம் கழித்துவிட்டு திரும்பி இறைவனிடமே வா என்ற நோக்கத்தில் படைக்கிறார். எத்தனை பேர் நல்ல முறையில் வாழ்கிறார்கள் ? சுதந்திரத்தை நல்லபடியாக பயன்படுத்துகிறார்கள்? யாரும் இல்லை.

நாடி சொல்வது, பிரம்மா என்ன நோக்கத்திற்காக நம்மை படைத்தாரோ, அந்த கடனை முழுமையாக அடைத்துவிட்டு, ஞானம் என்ற முக்திக்கு திரும்பிப் போ என்பதுதான். இதை புரியாத பல ஜீவராசிகளுக்கு புரிய வைப்பதற்குத்தான் மகரிஷி இந்த ஓலைச்சுவடியைக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நாம் கர்மத்தை நிவர்த்தி பண்ணிவிட்டு இன்னும் சொகுசாக வாழ்வதற்கான வழிமுறையைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம்

எல்லாருமே கல்யாணம், தொழில், கடன், பணம் மாதிரியான விஷயத்திற்காக தான் அதிகமாக ஜோதிடத்தைத் தேடிப் போகிறார்கள். இதற்கு மட்டும்தான் ஜோதிடம் அவசியமா?
ஞானம், முக்தி என்ற நிலை உணராமல் இருக்கிறவர்கள் தான் இந்த நிலையில் இருக்கிறார்கள். என்ன நோக்கத்திற்காக நாம் பிறந்து இருக்கிறோம் என்ற நிலை உணராமல் இருக்கக் கூடியவர்கள், சிற்றின்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் தான் இந்த நிலையில் இருக்கிறவர்கள். ஆனால் இவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பணம், தொழில் என்பது அத்தியாவசியம். எந்த தொழிலால் அதிக லாபத்தை கொடுக்கும், நீ இப்படித்தான் வாழ வேண்டும். இந்த அளவுக்கு நீ ஆடம்பரமாக வாழ வேண்டும். இந்த சுகத்தை நீ அனுபவிக்க வேண்டும் என்பதையும் மகரிஷி கொடுத்து இருக்கிறார்கள். அவன் எந்த வழியில் போனால் அந்த நிலைகளை முழுமையாக அடைய முடியும் என்பதற்கும் தீர்வுகளும், வழிமுறைகளையும் அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். இந்த தொழில்தான் இந்த பிறவிக்கு சரியானது. இதிலிருந்து நல்ல ஒரு வளர்ச்சி அடைவாய், அதற்கேற்ப பொருளாதாரம் ஜீவாதாரம் இருக்கும். நல்ல ஒரு வாழ்க்கைத்துணை அமையும் என கொடுத்து இருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்திற்கு சரியான முறையில் கிடைப்பதற்கான பரிகாரங்களையும் கொடுத்து இருக்கிறார்கள்.

பரிகாரம், கோவில் தரிசனத்தில் இருக்கக்கூடிய அறிவியல் பூர்வமான காரணம் என்ன ?
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஆலயங்கள் வெவ்வேறு இடத்தில் முன்னோர்கள், அகஸ்தியர் வழிபட்ட இடத்தில், வசிஷ்டர் மகரிஷி பிரதிஷ்டை பண்ணி இடத்தில் கொடுத்து இருக்கிறார்கள். எதுவுமே காரணம் இல்லாத அமையவில்லை. தமிழ்நாட்டில், வேறு மாநிலங்கள், வேறு தேசங்களில் ஒரு காரணத்தோடு தான் இருக்கிறது. சில கோயில்களில் அபிஷேகம் செய்து வரக்கூடிய தீர்த்தத்தை ஒரு துளி நாம் சாப்பிட கொடுக்கின்ற தீர்த்தம் என்பது ஒரு விதமான மருந்து. அகஸ்தியர் பிரதிஷ்டை பண்ணியது என்று சொல்லி, மக்களுக்கு பயத்தையும், பக்தியையும் உண்டாக்குகிறது.

அகஸ்தியர் பிரதிஷ்டை பண்ணிய, வணங்கிய இடத்தில் நாம் இந்த பிறவியில் வணங்குவதற்கும் புண்ணியம் பண்ணி இருப்போம். சிலருக்கு நோய்க்கு மருந்து கிடைக்காமல் இருக்கும். சுவாமியினுடைய திருமேனியில் பட்டு வரக்கூடிய புனித நீர் தன்னுடைய உடலுக்கு போகும்பொழுது மருந்தாக மாறுகிறது. இயற்கையோடு அறிவியலும் அந்த இடத்தில் அடங்குகிறது. குறிப்பிட்ட கிரகத்தை வழிபாடு பண்ணும்போது அந்த கிரகத்தினுடைய கதிர்வீச்சு அந்த இடத்தில் இருக்கும். அந்த கதிர்வீச்சு நம் மேலேயும் விழுகிறது. அது சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது. அதனால் அறிவியலும், ஆலயங்களும் தொடர்பு இருக்கிறது..

ஒவ்வொரு ஜோதிடமும் வெவ்வேறு பரிகாரங்கள் சொல்கிறது. அதை செய்து பலர் பெரிய பயன் இல்லை என்று சொல்கிறார்கள். இவர்களுடைய தோஷத்தை கழிப்பதற்கு நாடி ஜோதிடத்தில் என்ன மாதிரியான விஷயங்கள், சூட்சுமங்கள் இருக்கின்றன?
ஒரு மருந்தகத்திற்கு (Medical shop) பல மருந்துகள் இருக்கின்றன. நோய்க்கு ஏற்ற மருந்து கொடுப்பார்கள். நிறைய பேருக்கு புரியாத விஷயம் என்பது நான் இந்தச் கோயிலுக்கு போகிறேன், இந்தத் தெய்வத்தை வணங்குகிறேன், இந்த கிழமையில் வணங்குகிறேன் என்று சொல்கிறார்கள். உங்கள் வியாதிக்கான மருந்தை சாப்பிடுங்கள். அது தான் வேலை செய்கிறது. அதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கர்மா இருக்கிறது. அந்த கர்மா என்னவென்பதை முழுமையாக தெரிந்து அதற்குரிய வழிபாடு செய்யும்போதுั่ง சத்தியமாக பலன் உண்டு. இது என்னுடைய சொந்த அனுபவம்.

பொதுவாக வழிபாடு செய்வதையும், (யாரையும் நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை). ஜோதிடர்கள் இந்த கிரகங்கள், சாரங்கள், தசாபுத்தி பொறுத்து தெய்வத்தை வணங்க சொல்கிறார்கள்.

ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை. துர்க்கை வழிபாடு ராகு தோஷத்தை நிவர்த்தி பண்ணும் என்பது ஜோதிட மரபு. ஆனால் மகரிஷி சொல்வது, ஏன் ராகுவினுடைய வீரியம் தனக்கு வந்தது ? அந்த மாதிரியான கிரக நிலையில் நீ ஏன் பிறந்தாய் ? அதற்கு நீ என்ன பாவம் பண்ணி இருக்கிறாய் ? இதற்கு பரிகாரம் மாறுபடும். அதனுடைய பலன் நமக்கு முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். சீக்கிரம் குணமாகும்.

ஜாதகம், பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம் தெரியவில்லை என்றால் நாடியில் பார்க்க முடியுமா?
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கக்கூடிய நேரத்தை சிலர் லக்னமாக எடுத்துக் கொள்வார்கள். சிலர், சிரசு வந்த நேரத்தை லக்னமாக எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் குழந்தை முழுமையாக பிறந்துவிட்ட நேரத்தை லக்னமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் குழந்தை முழுமையாகப் பிறந்திருந்தாலும், தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள பந்தம் என்ற தொப்புள் கொடியை துண்டிக்கும் போதுதான் குழந்தை சுயமாக பிரபஞ்சத்தில் சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அதுதான் சரியான லக்னம். இதெல்லாம் தெரியாதவங்களுக்கு ரேகைதான் ஜாதகம். ஜாதகத்தை வைத்துச் சொல்லக்கூடியது நாடி ஜோதிடம் கிடையாது. இந்த ரேகையை வைத்து சொல்லக்கூடியது நாடி ஜோதிடம்.

ரேகையை பார்க்கும்பொழுது, நீங்கள் யார்? எந்த நட்சத்திரம், ராசி, லக்னத்தில், கிரக அமைப்புகளில் பிறந்திருக்கிறீர்கள் என்ற விவரங்களை நாடி ஜோதிடம் எடுத்துக் கொடுக்கும். ஜாதகம் இல்லாதவங்களுக்கு ரேகைதான் ஜாதகம்.

ஒரே ரேகைக்கு ஒவ்வொரு நாடி ஜோதிடரின் பார்க்கும் பலன்கள் வேறுபடுமா அல்லது ஒரே மாதிரி இருக்குமா ?
இதைப் பற்றி நான் பேசினால் பகை உருவாகலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு தெரியாத ஊருக்கு சென்று அங்கு நன்றாக சாப்பிட வேண்டுமென்றால், நாம் யாரிடமாவது விசாரிப்போம். அதுபோல நாடி ஜோதிடம் பார்க்க வருபவர்களும், இந்தத் தொழிலுக்கு யார் தகுதியான நபர்கள்? அதாவது நாங்கள் கர்வமாகப் பேச வேண்டும் என்றால், இது வள்ளுவர்களுக்கான தொழில். அவர்களிடம் போகும்போது சரியான ஓலை இருக்கும். பலன் சரியாகப் பொருந்தும். அதைத் தவிர்த்து வேறு இடங்கள் போகும்போது தவறுகள் நடக்கலாம்.

அகஸ்திய முனிவர் ஒரு மனிதனுடைய வாழ்க்கை முறையை 4 விதமாகப் பிரிக்கிறார்.
சிறுநூல்
பெருநூல்
மகா துல்லியம்
அதிசூட்சமம்


சிலர் ஜாதகம் இருந்தால் மட்டும் போதும். எனக்குக் கல்யாண நேரம் வந்துவிட்டது. பெண், மாப்பிள்ளை வீட்டார் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு சிறுநூல் போதுமானது.

ஓரளவு தன்னை பற்றித் தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்குத் துல்லிய நாடி ஏற்றது.

வாழ்க்கை பற்றிய முழு சூட்சமங்களும் தெரிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிசூட்சமம் ஏற்றது. அவர்கள் வேறு எந்த காண்டத்தையும் பார்க்க தேவையில்லை. பொது காண்டத்திலே அவர்களுடைய வாழ்க்கை தொடர்பான அனைத்தும் (A to Z வரை) வந்துவிடும்.

உங்களுக்கு பலன் சொன்ன இதே ஓலை மற்ற இடத்தில் இருக்கும். ஏனென்றால் சோழ மன்னர்களுடைய காலகட்டத்தில் அசல் (Original) ஓலையை திரும்பவும் புதுப்பித்தார்கள். அப்போது, மறுபதிப்பு பிரதிகளும் நிறைய எடுக்கிறார்கள். என்னிடம் இருக்கின்ற ஓலை, என்னுடைய ஆசிரமத்தில் இருக்கலாம். அங்கு போகும்போது அதே ஓலையை படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் சொல்லக்கூடிய பொருள் ஒன்று, விதம் மாறுபடும்.

திருக்குறளுக்கும் கம்பராமாயணத்திற்கும் பலர் பொருள்(உரை) எழுதியிருக்கிறார்கள். சொல்லப்படும் கருத்து ஒன்றாக இருக்கும். ஆனால் விளக்கும் விதம் மாறுபட்டிருக்கும்.

கைரேகை எத்தனை வகைகள் இருக்கிறது ?
இதை நாங்கள் 5 வருடங்களாக பயிற்சி எடுக்கிறோம். இந்த ரேகையில் எத்தனை விதமான பெயர்கள் அடையாளங்கள் இருக்கின்றன என்ற நுணுக்கங்கள் எங்களுடைய பாடசாலையில் சொல்லிக் கொடுப்பார்கள். அதற்கான ஓலைச்சுவடியை எடுத்து பலன் சொல்வதுதான் இன்னொரு ரகசியம். உலகத்தில் பிறக்கக்கூடிய அனைவருக்கும் ரேகை மாறுபடுகிறது. தனமேடு ரேகை, சுழி சங்கு ரேகை என்று வந்தால், சுழி சங்கு ரேகைக்கான எத்தனை ஓலைச்சுவடு கட்டு இருக்கிறது என்பதை எடுக்கலாம்.

10 பொருத்தம் பார்ப்பது போல, நாடி ஜோதிடத்திலும் பொருத்தம் பார்க்கும் முறை இருக்கிறதா ?
பலருடைய பிரச்சினையே பொருத்தம் தான். இன்றைக்கு ஜோதிடர்களை தாண்டி, தாங்களாகவே இணையம் மூலமாக நட்சத்திர பொருத்தம் எடுத்துவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு நல்ல ஜோதிடரை பார்த்து 500 ரூபாய் கொடுத்து பார்ப்பது தவறில்லை. பொருத்தங்களை 2 – 3 விதமாக பார்க்கலாம். கிரக பொருத்தம் பார்ப்பதில் நிறைய தவறுகள் செய்கிறார்கள். நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் மகரிஷி சொல்லும் கருத்து என்னவென்றால், இந்த ஜென்மத்தில் இவருக்கு இன்னார்தான் மனைவி என்பது ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறது. அதை யாராலும் மாற்ற முடியாது. ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போதே, அவனுக்கான பெண்ணும் பிறக்கிறார்கள். சரியான முறையில் அவர்களுடைய நாடியை எடுத்து, அந்தப் பெண் அல்லது மாப்பிள்ளை எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து, அவர்களை இணைப்பதே உண்மையான பொருத்தமாகும். அதன்படி சேர்ப்பதே சரியான பொருத்தம். அவர்கள் வாழ்க்கையில் நட்பாக இருப்பார்கள்

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.