Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

அதிக கடனால் தவிக்கிறீர்களா?

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
"எதை எடுத்தாலும் கர்மா என்று சொல்கிறீர்களே" என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு வழியே கிடையாதா என்று வருத்தப்படுக்கிறார்கள். கர்மா 2 விதமாக இருக்கிறது.

பிராப்தம் என்பது முன்ஜென்ம முன்வினை சுமைகள். போன ஜென்மங்களில் நாம் சேர்த்துக்கொண்ட அழுக்கு மூட்டையின் காரணங்களால் இப்பிறவியை எடுக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.

சஞ்சிதம் என்பது இப்பிறப்பில் நாம் சேர்த்துக்கொள்ளக்கூடிய கர்மா.

இந்த இரண்டு விஷயங்கள் தான் மனிதனுடைய பிறப்புக்கும், வாழ்வதற்கும் காரணமாகிறது. பிரம்மா நம்முடைய பெரிய கர்மாவை கொண்டுதான் மனிதனாக படைக்கிறார். அப்படியென்றால், எதற்காக பிறந்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். நாம் போகின்ற பாதை சரியானதா ? நாம் வாழ்கின்ற முறைகள் சரியானதா? மேலும் கர்மங்கள் சேர்த்துக்கொண்டு போகிறோமா அல்லது குறைப்பதற்கான வழியை தேடிக்கொண்டு போகிறோமா என்பதையெல்லாம் நாம் பார்க்க வேண்டும். அதன்படி நாம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.

கர்மா பற்றி, நடராஜர் பத்து பாடலில், “வஞ்சியரை ஏசினவனோ...” என்று, இந்த உடல், இந்த பிறப்பு என்பது ஒரு கும்பி என்று கூறுகிறார். ஒருவருடைய மனம் சங்கடப்படக்கூடிய வகையில் நடந்துகொள்வதும், திட்டுவதும் பாவம் தான். ஒரு மரம், செடிகளை வெட்டுவது கூட கர்மா, பாவம் என்று சொல்கிறார்கள். அதேபோல, ஓர் உயிர் ஜீவனாக, இருயிர் ஜீவனாக, ஆறறிவு ஜீவனாக இருந்தாலும், உயிர்தான். அவர்களை துன்புறுத்துவது நமக்கு சாபம்தான், பாவம்தான்.

கடன் பிரச்சினை இருக்கிறது, திருமணமோ, குழந்தையோ தள்ளிப்போகிறது என்றாலும் கர்மாதான் காரணம் என்றால், எப்படி சரி செய்துகொள்ள முடியுமா?
கண்டிப்பாக சரி செய்துகொள்ள முடியும். நோய் வந்தால் மருந்து இருக்கிறது, ஒரு அசுர சக்தி இருக்கும்போது தெய்வ சக்தியும் இருக்கத்தான் செய்கிறது. கர்மா என்பது நமக்கு அசுர சக்தியாக செயல்படுகிறது.

வாழ்க்கையில் மிகவும் நல்ல விஷயம் நடந்தால், அதை நாம் “முன்ஜென்மத்தில் செய்த புண்ணியம்” என்று சொல்கிறோம். அதுவும் கர்மாதான். அப்படியென்றால் அதை ஒரு எதிர்மறையான விஷயமாக பார்க்கலாமா?
வாழ்க்கையில் நிறைய நல்லது நடக்கிறது, சந்தோஷமாக இருக்கிறோம். நினைத்த மாதிரி வாழ்கிறோம், அனுபவிக்கிறோம் என்றால் சேர்த்து வைத்த புண்ணிய கர்மா குறைகிறது.

அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது, நிறைய தர்மங்கள், கோவில்கள், குளங்கள் செல்ல வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போது புண்ணியம் கூடிக்கொண்டே போகும்.

வங்கியில் சேமித்த பணம், செலவு செய்து குறைய ஆரம்பிக்கிறதோ, திரும்பவும் சேமிக்க செய்ய வேண்டும். இது ஒரு உதாரணம். அதேபோல, எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கும் போது தெய்வத்தை நினைக்கிறார்கள்? எத்தனை பேர் நல்லது செய்ய நினைக்கிறார்கள்? நல்ல விஷயங்கள் குறையும் போது நாம் தொடர்ந்து நன்மைகளைச் செய்துகொண்டே இருந்தால், நமக்கு இப்பிறவிக்குப் புண்ணியம் கிடைக்கும்.

நிறைய பேர் கஷ்டப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். ஒரு மனிதன் எந்த அளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய முந்தைய கர்மவினைகள் குறைகின்றன.பலர் வேதனையில் “ஏன் இப்படிப் பிறந்தோம்?”, “ஏன் இப்படியெல்லாம் வாழ வேண்டும்?” என்று நினைப்பார்கள். அவர்களுக்கெல்லாம் முந்தைய ஜென்ம கர்மவினை உங்களை விட்டு குறைகிறது என்று அர்த்தம் .

வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா விஷயங்களுக்கும் கர்மாதான் காரணம் என்றால் கடவுள் என்பவர் யார்? அவருக்கும் நம் வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்?
கர்மா என்ற போது, கடவுள் கூடவே நிற்க மாட்டார். கடவுள் என்பது உங்களுக்கு நீங்களே கடவுள். எனக்கு நானே கடவுள். இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நம்முடைய நிலையை நாம் உணர வேண்டும். அதற்கு நிறைய தியானம் செய்ய வேண்டும்.

நாம் தியான நிலையிலே ஆழமாக சென்றால், நம்மைப் பற்றிய உண்மை நிலையை உணரக்கூடிய நேரம் வரும். “கடவுள்” என்று சொன்னால் உடனே யாருக்கும் புரியாது. அதனால்தான் “அஹம் பிரம்மாஸ்மி”, “நானே கடவுள்” என்று சொல்கிறார்கள்.

கடவுளை வெளியே தேடக்கூடாது. நமக்குள் தேட வேண்டும் என்று சொல்கிறீர்களா ?
உங்களுடைய நிலையை நீங்கள் உணருங்கள் என மகரிஷி சொல்லியிருக்கிறார்கள்.

திருமூலர் சித்தர், “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்று கூறுகிறார். நம்முடைய உள்ளமே கோவில். நம் உடம்பே ஆலயம் என்கிறார்.

“வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
அனைத்து சித்தர்களும், மகரிஷிகளும் சொல்வது, நம்மை நாம் உணரக்கூடிய காலம் வர வேண்டும். அப்போது இந்தப் பிறப்புக்கான அர்த்தம் புரியும். அதன் பிறகு பிறப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற நிலை தோன்றும். அதன் பிறகு மனிதர்கள் “ஞானம், முக்தி பெற்றால் போதும்” என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள்.

கடவுளும் நிறைய தர்மம், புண்ணியங்கள் செய்ய சொல்கிறார். கஷ்டங்கள் வருவதற்கான உள்ளார்ந்த காரணம், நம்மை நாம் உணர வைப்பதற்கும், நாம் யார் என்பதை நமக்கு தெரிய வைப்பதற்கு தான். ஆகவே, கஷ்டப்படும் போதுதான் கர்மா நம்மை விட்டு குறைகிறது என்பதை மகரிஷிகள் சூட்சுமமாக சொல்கிறார்கள்.

“என்னால் முடியவில்லை”,
“நான் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்”,
“எவ்வளவோ துயரங்களை அனுபவித்துவிட்டேன்”,
“எனக்கு வாழவே பிடிக்கவில்லை”
என்று சொல்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.