Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

இரண்டு திருமணம் என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மாற்ற முடியுமா?

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ

பிரச்சனை வரும்போது ஆண்கள் சற்றே இறங்கி வரவில்லை என்றால் ?
இன்றைக்கு கணவன்-மனைவி உறவுக்குள் சண்டை வந்த பிறகு, எத்தனையோ ஆண்கள் தங்கள் மனைவியிடம் கெஞ்சுவதை நான் பார்த்திருக்கிறேன். அதே நேரத்தில், சில குடும்பப் பெண்களும், 'நம்முடைய வாழ்க்கையை இழக்க கூடாது, குழந்தையாகிவிட்டது, சமூகத்தில் தனியாக வாழ முடியாது' என்று சமரசம் செய்து கொள்கிறார்கள். இன்றைக்கு பலர் என்னிடம் வந்து 'வாழ்க்கை வேண்டும்' என்று நிற்கிறார்கள்.

நாடி ஜோதிடத்தில் 'அவர்களுடைய கர்மா, இறங்கி வரமாட்டார்கள்' என்று இருக்குமா ?
நாடி ஜோதிடத்தின் மூலம், 'இந்த வாழ்க்கை, இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், வீடு, வாகனம் வாங்குவீர்கள், வெளிநாடு செல்வீர்கள், ஆபரணங்கள் சேரும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைப்பீர்கள்' என்று நல்ல விஷயங்களை அகஸ்திய மகரிஷி கூறுகிறார்.

உதாரணமாக 30 வயதில் உள்ளவருக்கு நாம் நாடி பார்க்கிறோம் என்றால், '35 வயது வரை வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால், 37 வயதில் சில உறவுகளால் பிரச்சினை வரும். அப்போது உங்களுடைய பழக்க வழக்கங்கள் தவறான வழியில் திசை திருப்பும், தேவையற்ற சேர்க்கைகள் உருவாகும், புத்தி தடுமாறும்' என்றும் மகரிஷி சொல்கிறார். என்னிடம் இதற்கான ஆதார நோட்டுகள் பல உள்ளன. எத்தனை வேண்டுமானாலும் எடுத்துப் படித்துக் காட்டுவேன்.

அந்தத் தவறான சேர்க்கையினால் உங்களுக்கு அவமானம் ஏற்படும். குடும்பம் பிரியும். உங்களுடைய குழந்தைகள் தகப்பனாருடைய அன்பை இழந்து, ஆதரவற்ற நிலை வரும். இதற்கு காரணம் உங்களுடைய கர்மாதான். இந்தத் குறிப்பிட்ட காலகட்டத்தில் கிரகங்கள் மூலமாக உங்களை இப்படி செயல்படத் தூண்டும். அப்போது நல்லது சொன்னாலும் கேட்க மாட்டீர்கள். நல்லது சொல்ல வருபவர்களையும் பகைத்து கொள்வீர்கள் என்று தெளிவாக ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்."

இந்த மாதிரியான பிரச்சினைகள் வரக்கூடாது, தீர்வு முன்கூட்டியே அறிந்து பரிகாரம் செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பரிகாரங்கள் மூலமாக பிரச்சினைகளை மாற்ற முடியுமா?
பரிகாரம் என்பது, உங்கள் புத்தியை திசை திருப்பும். உதாரணமாக, ஒருவருக்குத் தவறான ஆண் அல்லது பெண் சேர்க்கை ஏற்படும் சூழ்நிலை வரும்போது, 'ஏற்கனவே மகரிஷி நாடியில் இந்த எச்சரிக்கையை சொல்லியிருக்கிறாரே, இந்த தவறான உறவு தேவையில்லை' என்று அவர்களின் புத்தியை யோசிக்க வைத்து, அந்த தவறிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடும். அதே நேரத்தில், தெய்வ வழிபாடு என்பது தவறான எண்ணத்தை தராமல், அப்படிப்பட்ட மனிதர்களின் தொடர்பே ஏற்படாதவாறு தடுத்துக் காக்கும்."

நாடி பார்க்க வரும்போது, 'உங்களுக்கு இரண்டாம் தாரம்தான் நிலைக்கும்' என்றால் என்ன வழி சொல்வீர்களா?
என் அனுபவத்தின் அடிப்படையில் இரண்டு பதில்கள் உள்ளன. திருமணத்திற்கு முன்பே நாடி பார்த்துப் பலன் தெரிந்து வாழ்க்கை அமைத்து கொள்வதிலும் ஒரு பலன் இருக்கிறது. சிலர், திருமணத்திற்கு பின் பிரச்சினைகளை சந்திக்கும் போது 'அடுத்த வாழ்க்கை உண்டா?' என்று நாடி தேடி வருகிறார்கள்.

போன ஜென்மத்தில் செய்த பாவத்தினால் 'இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணமே நடக்காது, அப்படியே நடந்தாலும் நிச்சயம் வரை சென்று தடைபடும்' என்று வரும். திருமணம் மேடை வரை சென்று நின்று போகும் போது, அங்கே ஒரு 'தாரம்' என்ற தோஷம் கழிந்துவிடுகிறது. இதற்காகத்தான் 'வாழை மரத்திற்குத் தாலி கட்டி, அதை வெட்டிவிடச்' சொன்னார்கள். வாழையை பெண்ணாகக் கருதி, அதற்கு தாலி கட்டி வெட்டும் போது, 'ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டியதாக' ஐதீகம் ஆகி, தோஷம் கழிந்துவிடுகிறது.

கணவன்-மனைவிக்குள் சண்டை வருகிறது. கோபத்தில் மனைவி, 'நான் உன் கூட வாழவே மாட்டேன், இந்தா நீ கட்டிய தாலி, எடுத்துக்கொண்டு போ!' என்று கழற்றி எறிகிறார். இது பல வீடுகளில் நடக்கிறது. அதன் பிறகு அவர்களுக்குள்ளே சமாதானம் ஏற்பட்டு, 'ஐயயோ! கோபத்தில் தாலியை தூக்கி எறிந்துவிட்டேனே, எனக்கு பயமாக இருக்கிறது' என்று வருந்தும் போது, அதே கணவன் அவளுக்கு இரண்டாவதாக மீண்டும் தாலி கட்டுகிறான். அங்கும் ஒரு தாரம் கழிந்து, இரண்டாவது தாரமாக அதே மனைவி அமைந்துவிடுகிறாள்.

திருமணத்திற்கு முன் வருபவர்களிடம் நாம் தெளிவாகக் கூறிவிடுவோம்: 'உங்களுடைய கிரக பலனும் கர்ம வினையும் இப்படித்தான் இருக்கிறது. எனவே, நீங்கள் சேர்க்கப்போகும் வரன் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.'

ஜாதகப் பொருத்தத்தில் 10 - 12 பொருத்தம் இருந்தால் நல்லது என்று அர்த்தமல்ல. 5 பொருத்தங்கள் இருந்தாலே நல்ல பொருத்தம் தான். அதில் மிக முக்கியமானவை:
1. தினப் பொருத்தம்
2. கணப் பொருத்தம்
3. யோனிப் பொருத்தம்

அடுத்து ராசி, ரஜ்ஜு போன்றவை. இதில் 'யோனிப் பொருத்தம்' என்பது தாம்பத்திய வாழ்க்கையை குறிப்பது. சில தம்பதிகள் வெளியில் பயங்கரமாக சண்டை போடுவார்கள், ஆனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஒன்றாக இருப்பார்கள். அவர்களுக்கு யோனிப் பொருத்தம் பலமாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எப்போது ஒன்று சேர்வார்கள் என்றே தெரியாது. அங்கு 'கணப் பொருத்தம்' நன்றாக இருக்கிறது. மனித கணமும் மனித கணமும் சேர வேண்டும். தேவ கணமும் தேவ கணமும் சேர வேண்டும். தேவ கணமும் மனித கணமும் சேர வேண்டும். ஆனால், தேவ கணத்தையும் ராட்சச கணத்தையும் சேர்த்தால் அங்கு நித்தமும் யுத்தம்தான் (சண்டை) நடக்கும்.

அடுத்ததாக வருவது தினப் பொருத்தம்...



NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.