Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

நாடி ஜோதிடம் என்றால் என்ன ? - 2

03 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
நாடி ஜோதிடம் இந்த காலகட்டத்திலும் பிரபலமாக இருக்கிறது ஏன் ?
இன்றும் மகரிஷிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றைக்கு அகஸ்தியருடைய திருநாமத்தை ஏதோ ஒரு காரணத்தினால் நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அகஸ்தியர் நாடி என்பதை சொல்கிறோம். அகஸ்தியரை ஆத்மார்த்தமான, மானசீகமான குருவாக பெற்று வணங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஜோதிடம் பல வகையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம் சார்ந்து ஜோதிடம் இருக்கிறது, எல்லா மக்களுக்குமே தெரிவது, சரியான நாடி ஜோதிடரிடம் பார்த்தால் மிக துல்லியமாக கணித்து கொடுப்பார்கள் என்ற ஆழமான நம்பிக்கை உள்ளது. சில காணொளிகளில் "இது நம்பகத்தன்மை இல்லை" என பேசகிறார்கள். பலர் எதிர்மறையான கருத்துகளை (comment) கொடுத்தாலும், இதனுடைய புகழ் குறையவில்லை. குருநாதர் அகஸ்தியரையோ, சிவவாக்கியரையோ, பிருகு மகரிஷியையோ,"அவர்கள் என் வாழ்க்கையில் என்ன எழுதியிருக்கிறார்கள்?" என்ற நம்பிக்கையோடு, ஆர்வத்தோடும் உண்மையோடும் தங்களுடைய ஓலையை எடுத்து பார்க்கும் பொழுது, 100% சரியான பலன் உண்டு.

எதிர்மறையான கருத்துகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் ? அது நாடி ஜோதிடத்தை பாதிக்குமா?
"போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்". உண்மையான தேடல் இருக்கக்கூடியவர்கள் பலர் இருக்கும்பொழுது, என்னுடைய கவனம் அவர்களை நோக்கித்தான் போகிறது. வாதங்களுக்கு மருந்து கிடையாது. நம்பிக்கையோடு குருநாதருடைய பாதங்களை சரணடையும் பொழுது, கண்டிப்பாக அவருடைய அனுக்கிரகம் உண்டு என்பது அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறோம். அதனால் எதிர்மறையான கருத்துகளை பொருட்படுத்துவதே இல்லை.

சுயநலத்திற்கு கட்டுப்பட்ட உலகம். கலியுகத்தில் அதர்மங்கள் கூடிக்கொண்டே போகிறது. "உங்களுக்குக் கொடுத்தால் நான் நல்லவன். இல்லையென்றால் நான் கெட்டவன் ஆகிவிடுகிறேன்." அவர் ஏன் கொடுக்கவில்லை என்பதை நாம் யோசிப்பது இல்லை. கெட்டவன் என முடிவு பண்ண முடியாது. இறைவன், இறைவிக்கு உண்மையாக செயல்படுகிறோமா என்பது தெரியும்.

நாடி ஜோதிடத்தில் என்ன மாதிரியான விஷயங்களை கணிக்க முடியும் ?
இதில் கணிக்க முடியாது என்ன இருக்கிறது ? என்று கேளுங்கள். நாடி ஜோதிடத்தில் எல்லாமே சொல்லலாம். ஏன்னா, நாம் சொல்லவில்லை. என்னுடைய அறிவை கொண்டு தடுமாற, பயப்பட வேண்டும். மகரிஷிகள் கொடுத்தை நாம் பயன்படுத்துகிறோம். உங்களுக்கானது ஏற்கனவே எழுதியாச்சு.

ஆனால், உங்களுக்கான ஓலை கிடைக்க வேண்டும். பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் சொல்லலாம். எந்த வருடம், எந்த மாதம், எந்த திதி, எந்த நட்சத்திரத்தில், எந்த வேளையில், என்ன மாதிரியான மரணம் ஏற்படும் என்பது வரைக்கும் மகரிஷிகள் எழுதியிருக்கிறார்கள். அதெல்லாம் ரொம்ப வியப்பான விஷயம். எங்களுக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும்.

உங்களுக்கே ஆச்சரியமான விஷயங்கள் இருக்குமா?
இதில் நிறைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள நினைத்தாலும், அது மற்றவருடைய தனிப்பட்ட விஷயம். அதனால் வெளியில் பேசுவதற்கு அச்சமாகவும், தயக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் மனதிற்குள்ளும் சின்ன வருத்தத்தை கொடுக்கலாம். உங்களை பற்றிய ரகசியங்களை மகரிஷிகள் எழுதியிருப்பார்கள். உங்களுக்கே ஆச்சரியத்தை கொடுக்கும்.

நாடி ஜோதிடம் பார்க்கும்போது சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் உள்ளே உட்கார வைப்போம். நண்பர்கள் என்று சொல்லுவார்கள், பிற்காலத்தில் வினையாக மாறும். "நன்றாக யோசித்து முடிவெடுங்கள்" என்று சொல்லிவிடுவோம்.

சிலருக்கு ஓலைச்சுவடி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ?
ஓலைச்சுவடி கிடைப்பதற்கு இறைவனுடைய அநுக்கிரகம் வேண்டும். கர்மவினையை இந்த பிறவியில் இவன் அனுபவித்தாக வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். எல்லாவற்றையும் அனுபவித்து, இழந்தபின், ஓலையை பார்க்கின்ற மாதிரியும் இருக்கிறது.

ஓலைகள் எப்படி பதப்படுத்தப்படுகிறது ? எப்படி நாடி ஜோதிடம் பார்க்கிறவர்களிடம் இருக்கிறது ?
நாங்கள் 'வள்ளுவர்' என்ற பரம்பரை. ஜோதிடத்திற்காகவே உள்ள குடும்பம். காலம் காலமாக சாஸ்திரங்கள் பார்க்கக்கூடியவர்கள், பூஜைகள் செய்யக்கூடியவர்கள், நிறைய கோவில் ஆகம பூஜைகள் செய்வார்கள். மருத்துவ முறைகள், சித்த வைத்திய முறைகள், கணித ஜோதிட முறைகள், வள்ளுவர் சமுதாயத்தில் பிறந்தவர்கள் செய்வது.

ஆறு தலைமுறைக்கு முன் வாழ்ந்த எங்கள் பெரியவர்களுடைய பொக்கிஷம் தான் இப்போது நாங்கள் பின்பற்றி வரக்கூடியது. பரம்பரையாக நாங்கள் பாதுகாத்து வருகிறோம். என்னிடம் இருக்கின்ற ஓலை, எங்கள் சமூகத்தில் இருக்கக்கூடியவர்களிடம் மற்ற இடத்திற்கு நாங்கள் அனுப்புவோம். அவங்களிடம் இருக்கக்கூடிய ஓலை எங்களிடம் வரும். ஓலைச்சுவடி ஒரே இடத்தில் இருக்காது. உங்களுக்கான ஓலை எங்கே இருக்கிறது என்பது எங்கள் சமுதாயத்திற்குள் ஒரு தொடர்பு இருக்கிறது. அதற்கு என்று ஓர் ஆசிரமம் வைத்திருக்கிறோம். அங்கே ஓலைகள் எல்லாமே பாதுகாக்கப்படுகிறது. ஓலைகளை நாங்கள் வரவழைத்து படித்து கொடுப்போம். பூச்சிகள் கெடுக்காமல் இருப்பதற்கு, சந்தனம் எண்ணெய் மாதிரி, பயன்படுத்தி பாதுகாத்து கொண்டிருக்கிறோம். அதை நாம் வெளியில் சொல்ல விரும்பவில்லை.

'நாடி' என்பது நம்மளுடைய மணிக்கட்டில் இருக்கக்கூடியது. ஆனால், விரல் ரேகையை வைத்து பார்க்கிறோம் என்பது ?
நாடி எடுப்பதற்கு மூலம் என்பது ரேகைதான். ஆண் ரேகை என்பது 'சூரிய நாடி', பெண் ரேகை என்பது 'சந்திர நாடி'. நமக்கு மாறாதது ரேகை மட்டும்தான். இரட்டைக் குழந்தை பிறப்பிற்கு 5 நிமிட காலம்தான் வித்தியாசம் வரும். கிரக நிலை மாறாது. ஒரே லக்னம், ஒரே ராசி, ஒரே நட்சத்திரம், ஒரே கிரக அமைப்பு, ஒரே தசா புக்தி பலன்களும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஆனால், அவங்களுடைய குணங்களை மாற்ற முடியவில்லை. ஒருத்தர் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் வெளிநாட்டுக்கு போவார். மற்றொருவர் படிப்பே இல்லாமல், வேலை வாய்ப்பு இல்லாமல் ஊரிலேயே சுற்றிக் கொண்டு இருப்பார்கள். ஒருத்தருக்கு நல்ல கல்யாணம் ஆகியிருக்கும். மற்றொருவர் காதலித்து கொண்டு இருப்பார், கல்யாணம் ஆகாமல் கூட இருக்கலாம்.

ஜாதகத்தைத் தாண்டி, அவர்களை வழிநடத்தக்கூடியது 'கர்மா'. இரட்டைக் குழந்தையாக பிறந்தாலும் ரேகைகள் மாறுபடும். இவர்களுடைய பலன் வேறு என்பதை கொடுத்துள்ளார்கள்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.