Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

உங்கள் எதிர்காலத்தை தெளிவாக சொல்லும் நாடி

03 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
நாடி ஜோதிடம் என்பது காலங்காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது மக்களிடையே இதற்கான ஆர்வம் (Trend) அதிகமாக இருக்கிறதே.?
அப்படி கிடையாது. எனக்கு இப்போது 44 வயதாகிறது. என்னுடைய முன்னோர்களிடம் நாடி ஜோதிடம் பார்த்துத் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள், இன்று பேரக் குழந்தையின் திருமண எப்படி நடக்கும் என்பதை அறிந்துகொள்ள எங்களை தேடி வருகிறார்கள். நாங்கள் ஐந்து தலைமுறைகளாக பாரம்பரியமாக செய்து வருகிறோம். இன்றைக்கும் மக்கள் நம்பிக்கையுடன் தேடி வருகிறார்கள். எந்தவொரு கேள்விக்கும் சரியான விடை கிடைக்கக்கூடிய ஒரே இடம் நாடி ஜோதிடம் தான். வேறு எதிலும் சொல்ல முடியாத நுணுக்கமான விஷயங்களை நாடி ஜோதிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாடி ஜோதிடத்தில் எத்தனை வகை உண்டு? ஜீவநாடி, சூட்சும நாடி என்றால் என்ன ?
நாடி ஜோதிடம் என்பது ஒன்று தான், அதில் வகைகள் கிடையாது. மகரிஷிகள் ஓலைச்சுவடிகளில் என்ன எழுதி வைத்திருக்கிறார்களோ, அதை நாங்கள் படித்து கொடுக்கப் போகிறோம்.

சிலரிடம் ஜாதகம் இருக்காது அல்லது பிறந்த நேரக் குறிப்புகள் தெரியாது. அவர்களுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு, பொதுவான வாழ்க்கை பலன்களை தெரிந்து கொள்வதற்கும் சூட்சும நாடி உதவுகிறது.

'எனக்குப் பணம் ஒரு பொருட்டல்ல, என் வாழ்க்கையைப் பற்றி அதிக சூட்சுமமாக, விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும்' என்பவர்களுக்காக பார்ப்பது அதி சூட்சும நாடி. அதி சூட்சும நாடியில், தற்போது இருக்கும் வயதிலிருந்து இறப்பின் காலம் வரை—எந்த வயது, எந்த மாதம், எந்த தேதி, எந்த நட்சத்திரத்தில், எப்படிப்பட்ட மரணம் நிகழும் என்பது வரை, முழு விவரங்களும் வந்துவிடும்.

நாடி ஜோதிடம் என்பது மகரிஷிகளின் சொத்து. அகஸ்தியர், பிருகு, சிவவாக்கியர், வசிஷ்டர் போன்ற ஞானிகளிடமிருந்து நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

தங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரமும் சரியாக தெரியாதவர்களுக்கு நாடி ஜோதிடம் எப்படி உதவி செய்யும் ?
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு 4 பேர் வந்தார்கள். அவர்களுக்குத் தாய், தந்தை இல்லை. பிறந்த குறிப்புகளும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள், எதிலும் தீர்வு கிடைக்கவில்லை. எங்களிடம் பலன் பெற்று சென்ற யாரோ ஒருவர் அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அவர்களுடைய தந்தை, தாய் யார், உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், அவர்களுடைய வளர்ச்சி, வாழ்வாதார நிலை எப்படி இருக்கிறது, பெற்றோர் என்ன செய்தார்கள், இவர் எத்தனையாவது குழந்தை போன்ற விவரங்கள் துல்லியமாக பொருந்திய ஓலையை எடுத்துப் படித்தோம். அதில் அவருடைய பிறந்த வருடம், மாதம், தேதி என அனைத்தும் வந்தது. அவர்களுக்கு ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. உடனே அவர்கள் தங்கள் உறவினரை தொடர்புகொண்டு விசாரித்தபோது, ஓலையில் வந்த விஷயமும் அவர்கள் சொன்னதும் அப்படியே ஒத்துப்போனது. அவர்களுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியாக, ஆச்சரியமாகவும் இருந்தது. மகரிஷி அவர்களின் ரகசியங்களை சொன்ன பிறகுதான் அவர்களுக்கு முழு நம்பிக்கை வந்தது. அந்த நபர் வியந்து போய், குருநாதரிடம் ஆசி பெற்றுச் சென்றார்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய Extra-Marital Affair வைத்திருக்கிறார்களா?
எல்லாமே வந்துவிடும். கள்ளக்காதல் என்பதை நாகரிகமாக ' Extra-Marital Affair' மாதிரி சொல்லிவிடுகிறோம், கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தார்கள், இப்போது எப்படி இருக்கிறார்கள், இனி எப்படி இருக்கப் போகிறார்கள் என அனைத்தும் இதில் அடங்கும். நாடி ஜோதிடம் தான் மனிதனுடைய முழு பலாபலன்களையும் சொல்லக்கூடிய சாஸ்திரம். அகஸ்தியர் வாக்கு என்றைக்குமே பொய்யாகாது.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.