வீடு சுத்தம், மன சுத்தம், உடல் சுத்தம்.
பழைய கந்தல் துணி, தேவையில்லாத கிழிந்த துணியை வெளியே போடுவதற்கு மனசு வராது. அதே மாதிரி பழைய இரும்பு பொருள்களை விற்றாலே 50 ரூபாய்க்கு மேல் கிடைக்காது. ஆனால் எல்லாத்தையும் சேர்த்து வைத்திருப்போம். டப்பாக்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டிருப்போம். அதை வைத்துத்தான் நம் குடும்பம் வாழப் போகின்ற மாதிரி!. வீட்டில் பழைய துணி, இரும்புப் பொருள், plastic box,, உடைந்த பொருட்களை உடனடியாக வெளியேற்றி விட வேண்டும். பழமையானவற்றை எதையுமே வீட்டில் தேக்கக் கூடாது..
வீடுகளில் எந்த செடிகள் வளர்க்க கூடாது ?
முள் செடி, விஷச் செடி, money plant வளர்க்கக் கூடாது. Money plant வளர்க்கிற வீடுகளில், எத்தனை பேர் வீட்டில் பணம் புழங்குகிறது? அது எதிர்மறையான அதிர்வை உருவாக்குகிறது. இதை சொன்னால் எல்லாருக்கும் வருத்தமாக இருக்கும். வீடுகளில் செல்லப்பிராணிகள், நாய்கள், பூனைகள் வளர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.
நாய் என்பது பைரவர், வளர்ந்தால் நல்லது என்கிறார்களே ?
அதைப்பற்றி பேசினால் வேறு மாதிரி போய்விடும். அது நம்மை மற்ற எதையுமே சிந்திக்க விடாமல், நம் மனதை முழுமையாக அதனுள்ளே கொண்டு போய்விடுகிறது. மற்ற வேலைகளைச் செய்ய விடாததற்கு காரணமாக இருக்கிறது.
மனைவியைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளாத ஆண்மகன் கைலாயமே சென்றாலும், பரமேஸ்வரன் துரத்தி விடுவார். கைலாயமே சென்றாலும் அவனுக்கு ஞானமோ, மோட்சமோ கிடைக்காது. மனைவியும் கணவனை புரிந்துகொண்டு சந்தோஷமாக வைத்துக்கொள்ள வழி செய்ய வேண்டும். பெண்களுக்கும் அந்த கடமை இருக்கிறது. வீடு அமைதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், வீட்டில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் தான் விளக்கேற்ற வேண்டும். மனைவி தூக்கத்தை, சுகத்தை இழக்கிறார்கள். 'என்னால் முடியவில்லை' என்று அரை மணி நேரம் உங்களால் கூடுதலாக தூங்க முடியாது. காலையில் எழுந்து சமையல் செய்து, குழந்தைகளுக்கும் தயார் செய்து அனுப்பிவிட்டு, அவருக்கும் எடுத்துக்கொண்டு அலுவலக வேலைக்கு போகிறார்கள். பெண்களுக்கு அதிகப்படியான பங்களிப்பு இருக்கிறது. ஆண்களும், பெண்களும் சம்பாதிக்கிறார்கள். மனைவியை சந்தோஷப்படுத்தாதவர்கள் பல கோயில் குளம் ஏறி இறங்கினாலும் பயனற்றது.
ஆண்கள் வீட்டிற்கு வரும்போது ஆயிரம் மன அழுத்தம் இருக்கும். அவர்களை அன்பாக அரவணைக்க வேண்டும். அலுவலக பிரச்சினை இருக்கும், வேலை அதிகமாக இருந்திருக்கும், மேலதிகாரி யாராவது மனசங்கடப்படுத்தி இருக்கலாம். வரும் வழியில் யாராவது கஷ்டப்படுத்தி இருக்கலாம். வீட்டில் உள்ளவர்களும் சங்கடப்படுத்தினால் சண்டைதான்.
பெண்கள் குறிப்பாக வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் விளக்கேற்றும் நேரத்தில் அழுவது அறவே கூடாது. ஒரு வீட்டில் பரமேஸ்வரன், பார்வதி தேவி. இருவருக்கும் சம பங்கு இருக்கிறது. தொடர் நாடகங்களை போட்டு ஒப்பாரி வைக்க விடுகிறீர்கள். ஏதாவது ஒரு நாடகம் பொழுதுபோக்காக இருக்கிறதா? நான் நாடக நடிகைகள், இயக்குநர்களை காயப்படுத்துவதற்காக பேசவில்லை. தொடர் நாடகங்களில் நடப்பது தங்கள் வீட்டில் நடப்பது போல எதிர்வினை ஆற்ற ஆரம்பித்து விடுகிறார்கள். எதுவுமே தெரியாமல் இருப்பவர்களுக்கு கூட, தொடர் நாடகங்களை பார்த்து 'எப்படி ஒருவனை பழிவாங்குவது' என்ற எண்ணம் வந்துவிடுகிறது. நல்ல வீடுகளில் தொடர் நாடகங்கள் ஓடாது. மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் தொடர் நாடகங்களை தவிர்ப்பார்கள். நீங்கள் அழுவது மட்டுமல்ல, மற்றவர்கள் அழுவதை பார்ப்பதும் தோஷம்தான்.
முன்பெல்லாம் ஜாதகத்தில் "வர்த்தினி குல சம்பதா" என்ற வாசகத்தை எழுதுவோம், இப்பொழுது யாரும் இதை எழுதுவதில்லை. எல்லாமே கணினி மயமாகிவிட்டது. ஒரு குழந்தை ஜனனத்திலிருந்து அதனுடைய இறப்பு வரைக்கும் பாடல் இருக்கிறது. இன்றைய பல ஜோதிடர்களுக்கு அது தெரியாது.

ॐ