Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள்

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
செய்வினை என்பதில் ஏவல், பில்லி, சூனியம், ஜின், குட்டிச் சாத்தான் எனப் பலவற்றை சொல்கிறார்கள். இவைகளை நாடி ஜோதிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா ?
நமது நேரம் சரியாக இல்லாத போது செய்யப்படும் இத்தகைய விஷயங்கள் நம்மை பாதிக்கும். ஒருவருக்குச் செய்வினை செய்பவரின் நேர காலத்தையும் நாம் பார்க்க வேண்டும். எந்த நேரத்தில் செய்தால் அவர்களை போய்ச் சேரும் என்ற சூட்சுமம் இருக்கிறது. செய்வினைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் 100% இருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு வீட்டில் வாழ்பவர்கள் பிரச்சினை என்று எங்களிடம் வரும்போது, அந்த வீட்டில் செய்வினை இருக்கிறது என்று கூறுகிறோம். அந்த இடத்தில் புதைக்கப்பட்ட ஒரு பொருளை நாங்கள் வெளியே எடுக்கிறோம். அந்தப் பொருள் அங்கேயேதான் இருக்கிறது என்பதும், அதன் மூலம்தான் அவர்கள் பாதிப்படைந்தார்கள் என்பதும் எங்களுக்கு எப்படித் தெரியும்? இது எங்களுக்கே ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய விஷயம். தெய்வம் என்ற ஒன்று இருக்கும்போது, அசுரன் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும். நேர்மறை இருக்கும்போது எதிர்மறை இருக்கிறதல்லவா? கடவுள் இருக்கிறார் என்ற கொள்கை இருக்கும்போது, இல்லை என்பவர்களும் இருக்கிறார்கள். அதுபோலவே செய்வினை என்பது உண்டு. இதனை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உணர்ந்தவர்களுக்கு சொன்னால் மட்டுமே புரியும்.

வாழ்க்கையில் சில எதிர்மறை சக்திகள் நம்மை வாட்டி எடுக்கின்றன என்பதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் ?
உதாரணமாக, வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிவிட்டு அந்தப் பொருளைக் சாலையில் போடுகிறார்கள். முச்சந்தி அல்லது வீட்டின் மூலைகளில் முட்டையைப் போடுகிறார்கள். மிளகாய் மற்றும் உப்பைச் சுற்றி எரிக்கிறார்கள். இதை போன்ற கழிப்புகளைக் கழிக்கும்போது, மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் செய்ய வேண்டும். ஆனால், அப்படி யாராவது நினைக்கிறார்களா? தாங்கள் நன்றாக இருந்தால் போதும் என்று சாலையில் கொண்டு வந்து போடுகிறார்கள். அந்த நேரத்தில், அந்த இடத்தைக் கடப்பவர்களை பாதிக்கும். ஒருவர் பூசணிக்காயை சுற்றி எரித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அதன் குறுக்கே வருவீர்களா? உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும், அந்த இடத்தைக் கடக்க தயங்குவீர்கள்.

அமாவாசை தினங்களில் கடைகளிலும் வீடுகளிலும் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பது என்பது ?
திருஷ்டி இருக்கக் கூடாது என்பதற்காக செய்வது. ஆனால், நான் சொல்வது 'கழிப்பு' கழிக்கும் விஷயம். திருஷ்டி வேறு, கழிப்பு வேறு. சிலருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பார்கள். எந்த மருத்துவரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது. பிரச்சினையை அடையாளம் காண்பதே போராட்டமாக இருக்கும். பல ஆண்டுகள் மருத்துவமனைக்கு ஏறி இறங்கியும் தீர்வு கிடைக்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சினையை கண்டுபிடித்து, அதற்காக ஒரு பெண் அல்லது ஆண் உருவமோ செய்து, சில சக்கரங்களை எழுதி வைத்து, கோழி போன்ற பலிகளைக் கொடுத்து் கழிப்பார்கள். அதை ஊர் எல்லையிலோ அல்லது முக்கிய சாலை சந்திக்கும் இடங்களில் வைப்பார்கள். அது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? அதனால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

கழிவு எடுப்பது பற்றிய சூட்சுமங்களை வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது. அது ஒரு செயல்முறை. சம்பந்தப்பட்டவர்களை உட்கார வைத்தால் மட்டுமே பலனைப் பார்க்க முடியும். கழிப்புகளை முச்சந்தியிலோ, சாலையிலோ போடுவது தவறு. மந்திரித்த முட்டையை சாலையில் வைக்கும்போது, நாம் தெரியாமல் அதை தாண்டிச் சென்றால் பாதிப்பு ஏற்படும். இதுபோல நிறைய விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

நீங்கள் நாடி படிக்கும் போது, 'ஒரு பெரிய விஷயத்தைக் கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறேன்' என்று உங்களுக்குச் சந்தோஷம் அளித்த நிகழ்வு எது?
நிறைய பேர் இருக்கிறார்கள். சிலரை குடும்ப வாழ்க்கையில் பெரிய பிரச்சினையிலிருந்து மீட்டது. சிலர், "இந்த வாழ்க்கையில் ஒன்று சேர்ந்துவிடும்" என்று நினைப்பார்கள். ஆனால் மகரிஷி, "இந்த வாழ்க்கை இவர்களுக்குச் சரியானது இல்லை" என்பதை தெளிவாக எடுத்து் கொடுத்திருக்கிறார்கள். இது மாதிரியான பல நிகழ்வுகள் உண்டு.

திருமணத்திற்காக இருவரின் ஜாதகத்தைப் பார்த்தால், அவர்களின் வாழ்க்கையை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
திருமணத்திற்கு முன்னால் நாடி ஜோதிடத்தைப் பாருங்கள். நமக்குச் சரியானதா என்பதை முன்கூட்டியே நல்ல முறையில் தெரிந்துகொள்ள முடியும். கட்டாயம் அவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள்.
நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு நுழைவுவாயில் மட்டுமே. ஆனால் அது மட்டுமே பொருந்தினால் போதும் என பல ஜோதிடர்கள் சேர்த்து வைத்துவிடுகிறார்கள். அதனால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சின்ன விஷயங்களுக்கு விவாகரத்து பெறுகிறார்கள். சகிப்புத்தன்மை இல்லாத காலமாகிவிட்டது.

தொழில் ரீதியாக, பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் தொகை முடங்கி, கடன் அதிகமாகி, தொழிலை நடத்தவும் முடியாமல், கடனை அடைக்கவும் முடியாத சூழ்நிலையில் இருந்தவர்கள் மகரிஷி கொடுத்த சில வழிமுறைகளை கடைபிடித்து, அதன் மூலம் ஜெயித்தவர்கள் இருக்கிறார்கள். தொழிலை திரும்ப மீட்டெடுத்து, விருத்தியாகி, கடனை அடைத்தவர்கள் பலர் உண்டு.

நாடியில் "இந்த நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது" என்று சொல்ல முடியுமா?
எந்த வயதில், எந்த மாதத்தில் கரு நிற்கும் என்பது வரை சொல்லலாம். என்ன குழந்தை என்று சொல்ல முடியும். இது ஓலைச்சுவடியில் உள்ள விஷயம், கடவுள் கொடுத்தது. இதை நான் சொல்கிறேன் என்று சொல்வதை விட, ஓலையில் மகரிஷிகள் எழுதியிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். நானாக சொன்னால் பயமாக இருக்கும், ஏனென்றால் நாம் கடவுள் கிடையாது. ஓலையில் உள்ள விஷயங்கள் எங்களுக்கே ஆச்சரியமாகவும் இருக்கும்.

உதாரணமாக நான் இரண்டு அனுபவங்களை சொன்னால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த காணொளியைப் பார்த்துவிட்டு, "ஐயா நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்" என்று மனசங்கடம் அடையலாம். நாடியில் வரக்கூடிய ஒவ்வொரு விஷயமும் புதுமை தான். உங்களுக்கு என்று சில ரகசியங்கள் இருக்கும். அதை நான் சொல்லும்போது எனக்கே வியப்பாக இருக்கும். அது எல்லாமே ரகசியமாகவே இருந்து விடுகிறது. அனுபவங்களை எடுத்துச் சொல்லும்போது மற்றவர்களுக்கு வலியை தரும் என்று சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளுக்காக யோசித்து பேச வேண்டியதாக இருக்கிறது.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.