Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

தாம்பத்தியம் மட்டும் சுகம் இல்லை

03 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
"திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்கிறோம். ஆனால் நிறைய ஆண்களின் புலம்பல், "எங்களை நரகத்தில் தள்ளிவிட்டீர்கள் " என்பதுதானே?
தம்பதியருக்குள் புரிதல், பொறுமை வேண்டும். கடவுள் கொடுத்த மனித பிறவியே ஆகச்சிறந்த பிறவி. ஏனென்றால், 5 அறிவுகளை பெற்ற விலங்குகளுக்கு சிந்திப்பதற்கான நிலை இல்லை. ஆனால், நாம் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம், வாழலாம். ஐந்தறிவு ஜீவனை அறிவில்லாத ஜீவன் என்று சொல்ல முடியாது, அதுக்கும் அறிவு இருக்கிறது. ஆனால், நல்லது கெட்டதை யோசிக்கக்கூடிய இடத்தில் மனிதனுக்கு ஆறாவது அறிவை கொடுத்திருக்கிறார். எத்தனை பேர் அதை சரியாகப் பயன்படுத்துகிறீர்கள்?

என்னுடைய துறையில் நல்லவர்களும், கெட்டவர்களும் வருகிறார்கள். எத்தனையோ பெண்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் மனைவியை தவிர எனக்கு யாரிடமும் சபலங்கள் வந்ததில்லை.

நல்ல மனைவி அமைந்திருந்தால், எதற்காக சபலத்தைத் தேடி வெளியில் போக போகிறார்கள்?
ஆயகலைகள் 64. சுகம் என்பது பலவிதமாக பிரிக்கப்படுகிறது. இப்போது நீங்களும், நானும் ஈடுபாட்டோடு ஒரு விஷயத்தை பேசுகிறோம். இந்த மகிழ்ச்சி இல்லையென்றால் நம்மால் வேலையை செய்ய முடியாது. இதுவும் ஒரு சுகம். பிடித்ததை சாப்பிடுகிறீர்கள். ஒரு மனநிறைவு. ஒரு சுகம். திருமணமானவர்கள் தாம்பத்தியம் மட்டும் சுகம் கிடையாது, அது ஒரு பகுதி. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.

எனக்கும் கணவருக்கும் மனஸ்தாபம் வந்துவிட்டது, ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள், என்று தேடி வருபவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
கண்டிப்பாக சமாதானம் செய்து சேர்த்து வைக்கத்தான் பார்த்திருக்கிறேன். இதுவரைக்கும் எந்த குடும்பத்தையும் நான் பிரித்ததே இல்லை. இறைவன் இதுவரைக்கும் அவ்வாறே சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் அம்மா, அப்பா, சகோதரர்களோடு வளர்ந்திருக்கிறீர்கள். உங்கள் அம்மாவுக்கும், உங்களுக்கும் வராத சண்டையா? கேட்காத வார்த்தையா? தாயிடம் சகித்து கொள்ளவில்லையா? ஏன் கணவனிடம் அதே சகிப்புத்தன்மை வரவில்லை? உங்கள் தாய், உங்கள் கணவன் பேசுவதை விட மோசமாக உங்களை நடத்தியிருக்கிறார், அடித்திருக்கிறார், அசிங்கமாக 4 பேருக்கு முன் பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த நேரம் கோபமும் வெறுப்பும் இருந்தாலும், அடுத்த 1 மாதத்திலோ அல்லது ஒரே நாளிலோ ஒன்று ஆகிவிடுகிறீர்கள். அந்த சகிப்புத்தன்மை ஏன் கணவனிடம் வரவில்லை?

அது இரத்த பந்தம் ஐயா!
"தாய்க்குப் பின் தாரம்". என்னுடைய தாயிடம் அனுபவிக்காத சுகத்தை, அன்பை நான் என்னுடைய மனைவியிடம் அனுபவித்தேன். அவர் எனக்கு இன்னொரு தாய். என்னை நம்பி வந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நம்பி வந்திருக்கிறீர்கள். இதுதான் உண்மையான பிணைப்பு (Real bonding). உங்களை அவர் விட்டுக்கொடுக்கிறாரா, அவரை நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்களா?

உடனே எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது. அவகாசம் கொடுக்க வேண்டும். வேறொரு விதமாக கையாள வேண்டும். தீர்வை யோசிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, "நீ உடனே வெளியில் வா" என்றால் என்ன நியாயம் ?

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.