நீங்கள் என்னுடைய ஓலையை பார்த்து விபரங்களை கூறினீர்கள். அதில், 1998 ஆம் ஆண்டில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பை பற்றியும், கஷ்டத்தை பற்றியும் துல்லியமாக குறிப்பிட்டீர்கள். என்னையறியாமல் நான் கலங்கி அழுதுவிட்டேன். இன்னும் சில கேள்விகளை கேட்டு் தெளிவுபடுத்தி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
நாடி ஜோதிடத்தில் 'பொதுக் காண்டம்' முதல் 12 காண்டங்கள் வரை இருப்பதாக சொல்கிறார்கள். இதையும தாண்டி வேறு ஏதேனும் காண்டங்கள் இருக்கின்றனவா ?
மேற்கொண்டு ஐந்து காண்டங்கள் தனியாக இருக்கின்றன.
1. சாந்தி காண்டம்
முதலாவதாக 'சாந்தி காண்டம்' நாம் போன ஜென்மத்தில் யார் ?, எங்கு என்னவாக பிறந்தோம் ?, அந்தப் பிறவியில் நாம் செய்த நன்மைகள், தீமைகள் என்ன ?, அந்த தீமைகளால் ஏற்பட்ட சாபங்கள் என்ன ?, அந்த சாபங்களுக்கும் இந்த பிறவிக்கும் உள்ள தொடர்புகள் என்ன ? என்பதைப் பற்றி விளக்கும். சாபங்களிலிருந்து நாம் நிவர்த்தி பெற்று, நல்ல பலன்களை அடைவதற்கான பரிகாரங்களை சொல்வது தான் சாந்தி காண்டம்.
2. தீட்சை காண்டம்
தீட்சை காண்டம் என்பது, தற்போதைய காலகட்டத்திலிருந்து ஆயுள் முடியும் காலம் வரை வரக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கும், தடுத்து, பாதுகாத்து கொள்வதற்கும் எந்தக் கடவுளுடைய மகா மந்திரம் பாதுகாப்பானது என்பதை கூறும். இதனை மந்திர உபதேசம் என்போம். சிலருக்கு மந்திர உபதேசமாக வரும். சிலருக்கு நாடி நூல் ஆசானே அந்த மந்திரங்களை எந்திரங்களில் பாராயணம் செய்து, அந்த எந்திரத்திற்கு உருவேற்றி தாயத்தாக கொடுக்க வேண்டும் அல்லது எந்திர வழிபாடாக கொடுக்க வேண்டும் என்ற விபரங்கள் வரும்.
எல்லாராலும் சமஸ்கிருத மந்திர வார்த்தைகளை துல்லியமாக உச்சரிக்க முடியாது. அதை எளிய தமிழ் முறைப்படுத்தி தருவீர்களா?
எல்லாராலும் பூஜையை செய்ய முடியாத பட்சத்தில்தான், மகரிஷி "நாடிநூல் ஆசானே இந்த பூஜையை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் அதை விரும்பி செய்ய ஆரம்பித்துவிட்டால், அவர்களாலும் வீட்டில் செய்ய எளிய பூஜை முறைகளை நாங்கள் உபதேசம் செய்வோம். இங்கு எந்திரத்திற்கான உருவேற்றுதல் நடக்கும் பொழுது, அவர்கள் வீட்டில் செய்யக்கூடிய பிரார்த்தனையும் இன்னும் அதிகமான ஆற்றலை கொடுக்கும்.
தீட்சை காண்டப் பூஜைகளை, பரிகாரக் கட்டணங்களை செலுத்த முடியாமல் போனால், அதை அவர்களின் கர்மா என்று சொல்வதா ? வேறு ஏதேனும் வழி இருக்கிறதா ?
மகரிஷி கூறக்கூடியது, பரிகாரம் என்பது மிகவும் எளிமையானது. ஒருவரின் தகுதிக்கு மீறி எதுவுமே போகாது. நம்முடைய சக்தி என்ன என்பது மகரிஷிக்கு நன்றாகவே தெரியும். அதை நம்மால் சமாளிக்க முடியுமா, செய்ய முடியுமா என்பதை பொறுத்துத்தான் அவர்களுக்கான பரிகாரமே அமையும்.
அடுத்ததாக, எல்லாரும் பரிகாரம் செய்வது கிடையாது. பரிகாரத்தைச் செய்வதற்கான கர்ம வினை அவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். வசதி இருந்தும் சிலரால் செய்ய முடிவதில்லை. செய்வதற்கான மனம் வருவதில்லை. அப்பொழுது அவர்களின் கர்மா அதனை செய்யவிடாமல் தடுக்கும். அவர்கள் விருப்பமில்லாமல் செய்யவில்லை என்று நாம் நினைப்போம். ஆனால் உண்மையான காரணம் அவர்களின் கர்மா அதனை தடுக்கிறது.
ஏழையாக இருந்தாலும் அவனுடைய கர்மாவை கழிப்பதற்கான வழியை மகரிஷியே ஏற்படுத்தி கொடுப்பாரா ?
ஆமாம், மகரிஷியே அதற்கான வாய்ப்புகளையும், வழிகளையும் வகுத்து கொடுத்துவிடுவார். அதாவது, அந்த பாக்கியம் உள்ளவர்கள் மட்டும்தான் நாடி ஜோதிடத்தை பார்க்க முடியும். அதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று கடுமையான நோய்கள் இருக்கும் பொழுது, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் அதைத் குணப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகள் ஏதோ ஒரு வழியில் கிடைக்கின்றன. யாராவது நிதியுதவி செய்யலாம் அல்லது அதற்கேற்ற மருத்துவமனைகள் அமையலாம்.
அதுபோலத்தான் நாடி ஜோதிடத்திலும் எளிமையான பரிகாரமே அவர்களுக்கு பலத்த மாற்றத்தை கொடுக்கும். மகரிஷிக்கு முன் வசதி படைத்தவன், ஏழை என்ற பாகுபாடு கிடையாது. வசதி இல்லாத ஒருவர் பார்க்க வரும் பொழுது, அவருக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று இருந்தால், அவருடைய கர்மாவே அதற்கான வழியை கட்டாயம் பெற்றுத் தரும்.
3. அவுஷத காண்டம் (மருத்துவ காண்டம்)
எந்தவொரு மருத்துவரானாலும் தீர்க்க முடியாத வியாதி அல்லது எந்த மருந்தை சாப்பிட்டாலும் குணமாகாமல் இருந்தால், அதற்கு இக்காண்டத்தில் எது மருந்து ?, எங்கு மருந்து கிடைக்கும் இடம் ?, எவ்வாறு தயாரிக்க வேண்டும் போன்ற விபரங்களை கூறியுள்ளார். சித்த மருத்துவம் என்பது இயற்கையானது. ஒரு மூலிகை எத்தனை நாட்கள் பதப்படுத்த வேண்டும், வெயிலில் காய்ந்தால் அதன் தன்மை எவ்வாறு மாறும், நிழலில் காய்ந்தால் அதன் தன்மை எப்படி இருக்கும் என்ற முறைகளையெல்லாம் மகரிஷி சொல்லியிருக்கிறார். இதன் மூலம் பயன் பெற்றவர்கள் பலர் உள்ளனர். அந்த மருந்து எங்கு கிடைக்கும், எந்த பெயரைக் கொண்ட மருத்துவர் நமக்கு அந்த மருத்துவ முறையை வழங்குவார் என்பதையும் மகரிஷி இதில் குறிப்பிட்டிருப்பார்.
(இப்பொழுது அகத்தியர் சிலையிலிருந்து பூ விழுகிறது)
நீங்கள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது இங்கிருந்து பூ விழுகிறது. மகரிஷி ஜோதிடத்தை மட்டும் கொடுக்கவில்லை. மருத்துவத்தையும் கொடுத்துள்ளார் என்பதற்கு இதுவே சான்று.
4. தசாபுத்தி காண்டம்
ஒரு ஜாதகத்தில் தற்போது என்ன தசை, என்ன புத்தி, என்ன அந்தரம் நடக்கிறது என்ற விபரங்கள் அனைத்தும் வந்துவிடும். சுக்கிர தசை, குரு புத்தி நடக்கிறது என்றால், அந்தப் புத்தியில் அந்தர காலம் எவ்வளவு நடக்கிறது. உதாரணமாக, குருவின் காலம் 2 வருடங்கள் 8 மாதங்கள் வருகிறது என்றால், அதற்குப் பிறகு வரக்கூடிய சனியின் அந்தர கால பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தசாபுத்தி காண்டம் விளக்கும்.
5. ஞான காண்டம்
எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது 'ஞான காண்டம்' ஆகும். ஞானம் என்பது பிறவிப் பயன் எனப்படும். எதற்காக பிறவி எடுத்திருக்கிறோம் ?, என்ன காரணத்திற்காக வாழ்கிறோம் ?, என்ன செய்துகொண்டிருக்கிறோம் ? என்பது பலருக்கு தெரியாமலே இருக்கிறது. இந்த ஞான காண்டத்தை எடுத்து பார்ப்பதற்கும் ஒரு காலகட்டம் வர வேண்டும். எல்லா நேரத்திலும் இதனை தெரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், இதில் உள்ள பொருள்கள் மிகவும் நுட்பமாகவும், சூட்சுமமாகவும் இருக்கும். அந்த வார்த்தைகளை நாம் உள்ளுணர்வதற்கு நமக்கு ஞானம் தேவை. இதை கிடைக்கும் பொழுதுதான் பார்க்க முடியும்.
கர்மாவை ஆசை, பாசம், காமம் என 5 விதமாகப் பிரிக்கிறார்கள். இந்த ஐந்தையும் எப்படி கட்டுப்படுத்தினால் இறைவனிடம் சேர முடியும் என்பதை விளக்கும். தர்மம் என்றால் 4 பேருக்கு அன்னதானம் செய்வதோ அல்லது ஆசிரமத்தில் சேவை செய்வதோ மட்டும் கிடையாது. முதலில் நாம் எப்படி வாழ வேண்டும், நம் ஆன்மாவை எவ்வாறு கட்டுப்படுத்தினால் இறைவனை உள்ளுணர முடியும் என்று பிறவி மோட்சத்திற்கும், முக்திக்கும் வழி சொல்லும்.
பொதுவாக நாடி ஜோதிடம் பார்க்க வருபவர்கள் அனைவரும் தொழில், திருமணம், கடன், குழந்தைகள் பற்றியே அதிகமாக கேட்கிறார்கள். நீங்கள் கூடுதலாக சொல்லும் ஐந்து காண்டங்களை ஏதேனும் குறிப்பிட்ட நோக்கம் உடையவர்கள் மட்டும்தான் வந்து பார்ப்பார்களா? அல்லது தவம் செய்து பிரம்மச்சாரியாக போக வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் ஞான காண்டத்தை பார்ப்பார்களா?
ஞானம் என்றால் அறிவு (Knowledge) ஆகும். அறிவு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நம்முடைய புண்ணிய காலங்கள் எப்பொழுது வருகின்றன ?, இப்பிறவி எப்பொழுது முடிகிறது ? என்பதை அறிய வேண்டும். "எனக்கு இந்த வாழ்க்கை போதும், அடுத்த ஜென்மம் வேண்டாம்" என்று நினைப்பவர்களுக்கு தான் ஞான காண்டம். மீண்டும் மனிதனாக பிறக்க ஆசைப்படாமல், "இப்பிறவியே போதும்" என்று நினைப்பவர்களுக்காக சொல்லக்கூடியது ஞான காண்டம். அதற்கான காலகட்டம் வரும் பொழுது, மக்கள் நம்மிடம் வந்து ஞான ஓலையை பார்க்கிறார்கள்.
பிரசன்னம்
நம் அறிவிற்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒரு விஷயத்தில், நம்மால் ஒரு முடிவை எடுக்க முடியாத சூழ்நிலை வரும் பொழுது, "இதைச் செய்யலாமா வேண்டாமா?" என்ற கேள்வி எழும். அந்த தருணத்தில், கேள்வி கேட்கும் நேரத்தை எழுதி குருநாதரின் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்து விடை கேட்டால், அதற்கான தெளிவான பதில் கிடைக்கும். இது 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்கான பலனை கூறக்கூடியதாகும்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் நோய் குணமாகுமா, மருந்து கிடைக்குமா என்ற விபரங்களை அறியலாமா ?
ஆங்கில மருத்துவம் (Allopathy) உடலில் ஒரு பிரச்சனை வந்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த பகுதியை நீக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அவ்வாறு நீக்குவது நல்லதல்ல. ஒரு உறுப்பு நம்மை விட்டுச் செல்வது உடலுக்கு பலவீனம் தான். அறுவை சிகிச்சை தவிர்ப்பதற்கு மருத்துவ காண்டம் உதவியாக இருக்கும்.
நாடி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் அதிகமான கட்டணம் வசூலிப்பார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. கட்டணங்கள் சாதாரணமாக தான் இருக்குமா ?
நாங்கள் பரிகாரத்தை கட்டாயப்படுத்த மாட்டோம். விருப்பம் இருந்தால் அந்தந்த கோயில்களுக்கு சென்று வரலாம். மகரிஷியே, "நீ இந்த முறையை பின்பற்றுவாய் அல்லது பின்பற்ற மாட்டாய்" என்று ஓலையிலே வந்துவிடும். பணம் இருந்தும் அதைச் செய்வதற்கான மனம் வராமல் போவது 100% கர்ம வினையாகும்.
அதேபோல, வறுமையில் இருப்பவர்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்று வரும் பொழுது, அவர்களுக்கு நான் நிறைய உதவிகளை செய்துள்ளேன். சிலருக்கு நானே நேரடியாக அந்த இடங்களுக்குச் சென்று, அவர்களுடன் இருந்து பூஜை முறைகளை செய்து கொடுத்துள்ளேன். அதன் மூலம் பலன் அடைந்தவர்கள் பலர் இன்றும் நம்முடன் ஆத்மார்த்தமான நல்ல உறவில் இருக்கிறார்கள்.

ॐ