Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

குலதெய்வ அனுமதி

04 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
இடம் பெயர்தல் காரணமாக பலர் குலதெய்வத்தை மறந்து விட்டார்களே ?
நமக்கு குலம், வம்சம் என்று இருக்கிறது. அந்தந்த குலத்திற்கு என்று ஒரு தனி தெய்வம் இருக்கிறது. ஆயிரம் கோயில்களுக்கு ஏறி இறங்கி, அலகு குத்தி, அபிஷேகம் செய்தாலும் குலதெய்வம் அனுமதி கொடுக்கவில்லை என்றால் அனைத்தும் பலனற்றது. குலதெய்வம் இல்லாத குடும்பம் குட்டிச்சுவர் என்று சொல்லலாம். இது கடுமையான வார்த்தை என்றாலும், எதை செய்ய நினைத்தாலும் குலதெய்வ வழிபாடுதான் முழுமையான பலனை தரும்.

குலதெய்வம் நம் சந்ததிகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. வளர்ச்சியை, வம்ச விருத்தியை உண்டாக்கும். சிலர் குலதெய்வம் தெரிந்தும் வழிபாடு செய்யாமல் இருப்பது தவறான செயல். நம்முடைய வீடுகளில் விருப்பமான தெய்வங்களை வைத்து பூஜை செய்கிறோம். அதுவும் ஏற்றுக்கொள்ள கூடியது, அதற்கான பலனும் உண்டு. ஆனால் குலதெய்வம் இல்லாமல் மற்ற தெய்வம் உதவ முடியாது.

நம்முடைய குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டு வர வேண்டும் என்ற மரபை சொல்லிக் கொடுத்து, அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ஆனால் இதை பலர் பின்பற்றுவதில்லை. தெய்வம் மீது நம்பிக்கையே இல்லாதபட்சத்தில், எதிர்மறை சிந்தனைகள் உருவாகும் பொழுது நல்ல பலன் கிடைக்காது.

குலதெய்வம் தெரியவில்லை என்றால், இஷ்ட தெய்வத்தையே குலதெய்வமாக வணங்கலாமா ?
அது தவறான கருத்து. குலதெய்வத்தை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு, ஐந்தாவது காண்டத்தின் மூலம் அவர்களின் பூர்வீகத்திலிருந்து முன்னோர்கள் எந்தத் திசையை நோக்கி எந்த தெய்வத்தை வணங்கினார்கள் என்பதை எடுத்து சொல்லியிருக்கிறோம். குலதெய்வமே தெரியாது, பூர்வீகமே தெரியாது என்பவர்களுக்கு பரமசிவன்தான் குலதெய்வம். நாடி ஜோதிடத்தில் சொல்லப்பட்ட கருத்துப்படி எல்லாவற்றுக்கும் மூலம் சிவன்தான். 'அஹம் பிரம்மாஸ்மி', 'பஞ்சாட்சரம்' என்று சொல்கிறார்கள். மந்திர சொரூபமாக இருக்கக்கூடிய கடவுள் சிவபெருமான். எல்லா மந்திரங்களுக்கும் மூலமே அவர்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் 'சத்துரு சம்காரம்'. சத்துரு சம்கார திரிசதி என்பது ஆறு அட்சரங்களைக் குறிக்கிறது. 'சரவணபவ' என்கிற ஆறு அட்சரங்களை குறிக்கும். இதில், ஒவ்வொரு அட்சரத்திற்கும் 50 நாமாவளிகள் வீதம் மொத்தம் 300 நாமாவளிகள் உள்ளன. சத்துரு சம்காரத்தில் முதல் ஐந்து எழுத்துகள் பரமேஸ்வரனை குறிக்கின்றன. ஆறாவது அட்சரம் அனைத்து தெய்வங்களிடமும் இருக்கக்கூடிய அஸ்திரங்களை பற்றிப் பேசுகிறது. மகாவிஷ்ணு கையில் இருக்கும் சங்கு, சக்கரம், சுதர்சன சக்கரம், பிரம்மாஸ்திரம், வஜ்ராயுதம், திரிசூலம் என எல்லா ஆயுதங்களும் சேர்ந்திருப்பதுதான் அந்த ஆறாவது அட்சரம்.

'சரவணபவ' மந்திரத்திற்குள்ளும் 'நமசிவாய' என்கிற ஐந்து எழுத்துகள் அடங்கியுள்ளன. 'ந' என்பது பிரம்ம பீஜம், 'ம' என்பது விஷ்ணு பீஜம், 'சி' என்பது ருத்ரம், 'வ' என்பது மகேஸ்வரம், 'ய' என்பது சதாசிவம். இது ஒரு சூட்சுமமான விதி. இதில் ஆகாயம், நிலம், காற்று, நெருப்பு, நீர் என ஐம்பூதங்களை பற்றிய சூட்சுமங்கள் உள்ளன. பிரபஞ்சமே 'நமசிவாய' என்ற 5 எழுத்துக்குள் கட்டுப்பட்டிருக்கிறது.

குலதெய்வம் தெரியாதவர்கள் சிவபெருமானை குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளலாமா ?
விஷ்ணு கோத்திரம், சிவ கோத்திரம் என்ற பிரிவுகள் கிடையாது. நாம் எந்த ரிஷிகளின் வழியில் வந்திருக்கிறோம் என்பதே முக்கியம். நான் அகஸ்திய மகரிஷி கோத்திரம். சில பேர் ஜம்பு மகரிஷி கோத்திரம், காசிப மகரிஷி கோத்திரம் என பல பிரிவுகளில் வருவார்கள். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு 'நமசிவாய' என்ற மூல மந்திரமே துணை. அவரே ஆதி, அவரே அந்தம். குலதெய்வம் தெரியாத போது சாஷ்டாங்கமாக பரம்பொருளாகிய பரமேஸ்வரனை சரணடையும் பொழுது நல்லது நடக்கும்.
நாடி ஜோதிடத்தின் மூலம் குலதெய்வத்தை தெரிந்துகொள்ள வந்தவர்களுக்குத் துல்லியமாக எடுத்து சொல்லியிருக்கிறோம். இதுவரை யாருக்கும் 'தெரியவில்லை' என்ற கருத்தே வந்ததில்லை.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.