கல்யாணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்'. ஆனால், இந்தத் தலைமுறையில் கல்யாணம் சரியில்லை என்றால் விவாகரத்து, வேறொரு கல்யாணமும் சரியில்லை என்றால் மீண்டும் விவாகரத்து. ஏன் இப்படி நடக்கிறது ?
15 வருடங்களுக்கு முன் இருந்த தலைமுறையில், எத்தனை பேருடைய வாழ்க்கையில் விவாகரத்து நடந்திருக்கிறது?. அப்போது அவர்களிடம் புரிதல், குடும்ப பற்று இருந்தது. கணவன் குடித்துவிட்டு அடிப்பான், விடியவிடியச் சண்டை நடக்கும். ஆனால், மறுநாள் காலையில் 'மாமா', 'அத்தான்' என்று ஒண்ணுமே தெரியாதது போல் அன்பாக இருப்பார்கள். அதனால்தான், "கணவன் மனைவி வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடக்கூடாது, எப்படியும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்" என்று சொல்வார்கள்.
இன்றைக்கு, "உங்கள் அம்மா ஒரு வார்த்தை சொல்கிறார்கள், நீ ஏன் அமைதியாக இருந்தாய்? எனக்கு நீ வேண்டாம்". அதற்குப்பிறகு 1000 'மன்னிப்பு' கேட்டாலும், "உனக்கும் எனக்கும் ஒத்து வராது" என்று விவாகரத்தில் நிற்கிறது. ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்திற்கு விவாகரத்து ஆகிறது. இதற்குப் பின்னால் 'கர்மா' என்பது முக்கியமானது. கர்மாதான் ஜாதகத்தை இயக்குகிறது. கிரகங்களின் சேர்க்கை. இவள் இன்னாரோடுதான் சேர்ந்தால், வாழ்க்கை நல்லபடியாக போகும் என்ற விதிப்பலன் இருக்கிறது. அதை பார்க்காமல் பலர் கல்யாணம் பண்ணுகிறார்கள்.
திருமணப் பொருத்தம் சரியாக பார்த்து சொல்கிறீர்களா? கல்யாணத்திற்கு முன்னால் நாடி ஜோசியம் பார்ப்பது முக்கியமா ?
ஏழாவது காண்டத்தில் (திருமண காண்டம்) வரக்கூடிய வாழ்க்கைத்துணை யார் என்பதை தெரிந்துகொண்டு, அதன்படி வாழ்க்கை அமைத்துக்கொண்டால் தடையின்றி செல்லும்.
கல்யாணமே ஏன் நடக்கவில்லை? எப்பொழுது கல்யாணம் நடக்கப்போகிறது? அதற்கும் விடை உண்டு. வரக்கூடிய கணவன் யார், எந்த திசையிலிருந்து வருவார், என்ன படித்திருக்கிறார், அவருடைய அங்க அடையாளங்கள் என்ன ?, எந்த இடத்தில் மச்சம், தழும்பு இருக்கிறது என்பது வரை துல்லியமாக சொல்லப்படும்.
பெண்ணுக்கு எங்கு மச்சம் இருக்கிறது என்று சொல்வீர்களா?
கண்டிப்பாக வரும். சிலர், "வீட்டு நம்பரையும் சொல்லிட்டால் நாங்க எளிதாக போய் முடிச்சிடுவோம்" என்று கேட்குமளவிற்கு துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். வரக்கூடிய மனைவியின் திசை, கணவனின் திசை, எந்த நகரத்தை சார்ந்து இருக்கும், எவ்வளவு தூரத்தில் இருக்கும், அவர்களின் பெயரமைப்பு, குணாதிசயங்கள், என்ன மாதிரியான கிரக அமைப்புகள் பொருந்தும் என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்லிவிடுவோம்.
என் தோழிக்கு நாடி ஜோதிடத்தின் மேல் அதிக நம்பிக்கை. எல்லாமே பார்த்துத்தான் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், ஒரு குழந்தை பிறந்த பின்பு பிரிவினை வந்துவிட்டது. அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. நாடி ஜோதிடம் பார்த்தும் ஏன் இப்படி நடக்கிறது?
இந்த ஜென்மத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புகிறான். ஆனால் விரும்புகிறவர்கள் எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை. இரண்டு பேருடைய உள்மன உணர்வு ஆத்மார்த்தமாக இருக்கும்போது, அவர்கள் உணர்வுப்பூர்வமாகக் கணவன் மனைவியாகி விடுகிறார்கள். ஆனால் கால சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை பிரித்துவிடுகிறது.
எத்தனை காலங்கள் கடந்தாலும், முதல் காதல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதில்லை. ஒரு காலத்திற்கு பிறகு உடல் அழிந்துவிடுகிறது, ஆனால் ஆன்மா அழிவதில்லை. ஆன்மா மறுபிறவி எடுக்கிறது. முந்தைய ஜென்மத்தில் முழுமையடையாத ஆசை, அடுத்த ஜென்மத்தில் அவர்களை ஒரு ஈர்ப்பிற்குள் கொண்டு வரும்.
இதையெல்லாம் திரைப்படத்தில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே ஆன்மாக்களின் தொடர்பு ஏழு ஜென்மத்திற்கும் தொடருமா?
சினிமா கதை எழுதுபவர்களுக்கு அந்த அறிவு எங்கிருந்து வருகிறது? சில உண்மை சம்பவங்களை வைத்துத்தானே எழுதுகிறார்கள். "இந்த ஜென்மத்தில் நாம் ஒன்று சேரவில்லை என்றாலும் அடுத்த ஜென்மத்தில் ஒன்று சேருவோம்" என்று சொல்வது உண்மைதான்.
நீங்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களைச் சந்திக்கிறீர்கள். ஆனால் அத்தனை பேர் மீது உங்களுக்கு நல்ல ஈர்ப்பு வருகிறதா? கண்டிப்பாக சிலர் மட்டும்தான் உங்கள் மனதில் நிற்பார்கள். அங்குதான் ஆன்மத் தொடர்பு வேலை செய்கிறது.
இந்த ஜென்மத்தில் இவர் உங்களுக்கு மனைவியாக அல்லது கணவனாக வர வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையிலும் வரும் பிரச்சினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் நாடியில் கொடுத்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதை கேட்பதோடு சரி, செய்வதில்லை. தீய கர்மா நல்லதை யோசிக்க விடாமல் தவறான வழியில் இழுத்துக்கொண்டு போகும். அதை உணர்த்துவதுதான் நாடி சாஸ்திரம்.
உங்களிடம் ஒருவர். "என் மனைவி மேல் எனக்கு விருப்பமில்லை, வேறு பெண்ணோடு தான் வாழ வேண்டும், இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?" என்று கேட்டால், முதல் மனைவியும், குழந்தைகளும் பாவம் என்று நினைத்து உங்கள் சொந்தக் கருத்தை சொல்வீர்களா? அல்லது ஓலையில் உள்ளதை சொல்வீர்களா?
நாடி ஜோதிடத்தை பொறுத்தவரை, உங்கள் விருப்பத்திற்காக அல்லது நீங்கள் எதிர்பார்த்தை செய்து கொடுப்பதற்கோ இடமில்லை. உங்களுடைய கர்மவினைப்படி எழுதப்பட்டது பொது காண்டத்தில் தெரிந்துவிடும்.
உதாரணமாக, 43 வயதில் வேறொரு பெண்ணின் பழக்கம் வரும் என்று இருந்தால், இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளக்கூடிய விதிப்பலன் இருந்தால், "முந்தைய வாழ்க்கை பிரிந்துவிட்டது, தனிமையில் வாழ முடியவில்லை, ஒரு துணை வேண்டும்" என்ற நியாயமான கேள்விக்கு ஓலையில் விடை இருக்கும். இரண்டாவது கல்யாணத்திற்கான விதிப்பலனை மகரிஷி சொல்லியிருந்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும். அதற்கான அடையாளங்கள், எந்த திசையிலிருந்து வருவார், என்ன படித்திருப்பார், அவருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்குமா, பிணைப்பு (Bonding) எப்படி இருக்கும் என்பது வரை சொல்லப்பட்டிருக்கும்.
மச்சம், தழும்பு பற்றிய விபரங்கள் வரும். மொத்தம் உள்ள 12 பாகங்களுக்கும் தனித்தனி பலன்கள் உண்டு. அந்த பாகங்களில் பார்க்கும்போது இரண்டாவது கல்யாணத்திற்கான விதி இருந்தால் அதை எடுத்துக் கொடுப்போம். அதை விடுத்து, மனைவியோடு வாழ்ந்துகொண்டே இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது என்பது தவறானது. சாஸ்திரம் அதற்கு துணை நிற்காது.
கல்யாணமாகி வாழ்க்கை துணை இருக்கும் பொழுது, அடுத்தடுத்து பெண்களின் சவகாசம் (தொடர்பு) வரும் என்பதையும் மகரிஷி சொல்லியிருப்பார். அந்த சவகாசம் உங்களுக்கு சரியா, தவறா? அதைத் தவிர்ப்பதற்கு என்ன வழிமுறை? என்பதையும் மகரிஷி சொல்லியிருப்பார்.
உங்கள் கர்ம பலன்தான் மனைவி, கணவன் அமைவதற்கும் காரணம். நாம் பிரச்சினையை அனுபவிக்க, கர்மாதான் காரணம். எனவே, நீங்கள் என்ன கர்மா செய்தீர்கள் என்பதை நாடியை எடுத்துப் படிக்கும்போது தெளிவாக இருக்கும். அதைச் சரி செய்து வாழ்வதற்கான வழிமுறையை அமைத்து கொடுப்போம்.
'எனக்கு சுகம் இல்லை, அவரிடம் ஒரு திருப்தி இல்லை, நான் வேறொரு உணர்வை நாடிப் போகிறேன்' என்பது தவறான விஷயம். திருமணம் என்பது தாலி கட்டினால் மட்டும்தான் மனைவியா? மனரீதியாக ஒருவரை ஏற்றுக்கொண்டாலே தாரத்திற்கு சமம் தான்.
ஜாதகத்தில் ஒரு கல்யாணம் தான் நடந்திருக்கும். ஆனால் அவர்கள் இன்னொரு உறவில் (Relationship) இருப்பார்கள். அதுவும் தாரம் தான். ஒரு நிலைக்கு பிறகு ஒரு பெண்ணை முழுமையாக பார்ப்பதற்கான அருகதை தாய்க்குக்கூடக் கிடையாது, அது கணவனுக்குத்தான் உண்டு. அப்படியென்றால், அந்த நிலைக்கு வருகிறவர்கள் கணவன் தானே? அதனால், பாவம் செய்யாமல், இந்தப் பிறவியோடு கர்மாவை திருத்தி நல்வழியில் முடித்துக் கொள்வதற்கான வழியை நாடி ஜோதிடம் காட்டும்.
உங்களை சந்தோஷப்படுத்துவதற்கோ வருத்தப்படுத்துவதற்கோ இங்கு எதுவும் இல்லை. ஓலையில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதுதான் உண்மை. எல்லாமே வெளிப்படையாக இருக்கும். எங்களிடம் வரும் 90% மக்களின் குடும்ப பிரச்சினைகளை, மனஸ்தாபங்களை, அதற்கு காரணமான கிரகங்களை ஆராய்ந்து சரிசெய்து தான் அனுப்பியிருக்கிறோம்.
இந்த ஜென்மத்தில் நீங்கள் கணவனால், மனைவியால் சந்தோஷம் இல்லை என்பது, அப்படி ஒரு சேர்க்கையை அமைப்பதே உங்களுடைய கர்மாதான்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒருத்தருடைய நாடியை எடுத்துப் படிக்கிறோம், 'போன ஜென்மத்தில் நீ விருப்பப்பட்டு வாழ்க்கை அமைத்துக்கொண்டு, ஒரு சில அகந்தைகள், தகாத சேர்க்கையினால் உன் கணவனை மதிக்கவில்லை. அப்பொழுது அந்த கணவனுக்கு நீ கொடுக்க வேண்டிய சுகத்தை கொடுக்கவில்லை. அது அந்த ஜென்மத்தில் பெரும் பாவமாக இருந்திருக்கிறது' என்று வந்திருக்கிறது.
இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு கணவன் வருகிறான் என்றால், அந்த வலியை அவர்களுக்குக் கொடுக்கத்தானே செய்யும்? 'என் கணவன் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, என்னை அவர் மதிக்கவில்லை, அவரால் எனக்கு எந்தவொரு மகிழ்ச்சியும் இல்லை' என்று வருந்துவார்கள்.
நீங்கள் அந்த நேரத்திற்கான சந்தோஷத்தைத்தான் பார்க்கிறீர்களே தவிர, அதற்கான காரணம் என்னவென்பதை பார்க்க மறுக்கிறீர்கள்.
தப்பை திருத்தி நல்வழிப்படுத்துவதுதான் நாடி ஜோதிடம். 'நீ நல்லபடியாக வாழு, விருப்பப்படி வாழு, முழுமையாக வாழ்ந்து, உன் கர்மத்தை எல்லாம் நீக்கி, மேற்கொண்டு நிறைய புண்ணியங்களை சேர்த்து, உன் சந்ததிக்கும் புண்ணியத்தை வளர்த்து வைத்துவிட்டுப் போ' என்று சொல்வது தான் நாடி ஜோதிடம். அதை விட்டுவிட்டு, 'எனக்கு இதுதான் முக்கியம், இது எனக்கு கிடைக்கவில்லை, நான் இதற்கு வேறொரு ஆள் தேடிக்கொள்கிறேன், வேறொன்று செய்கிறேன்' என்றால் சாஸ்திரம் அதற்கு துணை நிற்காது.
குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்றால், ஏதாவது பரிகாரம், தீர்வு இருக்கிறதா?
கட்டாயம் உண்டு. வெறும் 35, 40, 28 மார்க் எடுத்த குழந்தைகள் இன்றைக்கு 70 – 85% மதிப்பெண் எடுத்தியிருக்கிறார்கள். என்னுடைய விமர்சனங்களை (Reviews) படித்துப் பாருங்கள், அவர்களே எழுதியிருப்பார்கள்.
ஜாதகத்தின் இரண்டாவது பாவகம் என்பது கல்வி, குடும்ப வாழ்க்கை, வாக்கு, தனம் (Wealth) ஆகியவற்றை குறிக்கும். படிப்பது ஏன் மந்தமாகிறது என்பதை ஆராய்ந்து, அதற்கான பரிகாரங்களைச் சொல்வோம். ஒரு பையனுக்கு 'ஞான சரஸ்வதி மகா எந்திரம்' முறைப்படி பூஜித்து, தாயத்தாக கட்டச் சொன்னோம். இன்று உயர்ந்த மதிப்பெண்(Merit) பெற்று தேர்ச்சி செய்திருக்கிறான்.
என் குழந்தைகளும் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறார்கள்.
சரி பண்ணலாம். நான் இதை ஒரு சவாலாக கூட எடுத்து கொள்கிறேன். 2 குழந்தைகளையும் போட்டி போட்டுப் படிக்க வைக்கலாம், அவர்களை ஜெயிக்க வைக்கிறேன்.
நாடி ஜோதிடத்தில் மட்டும்தான் தீர்வு இல்லை என்று சொல்வதற்கு எதுவுமே கிடையாது.
ஏதோ மந்திரவாதி (Magic) மாதிரி சொல்கிறீர்கள்?
மந்திரவாதமே கிடையாது. என்ன காரணம் என்று ஆராய்ந்து, அதற்கான வழியை கொடுத்து (Activate) தூண்டி விட்டால் போதும், தானாக வேலை செய்யும். நாடி ஜோதிடத்தில் தீர்வு இல்லாத விஷயமே கிடையாது. ஏனென்றால், இதை நாம் சொல்லவில்லை. எல்லாமே ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முறை என்ன என்பதை ஓலைச்சுவடி மூலம் பார்த்து, நல்வழிப்படுத்துவோம்..
நீங்கள் ஓலைச்சுவடியை, எனக்கு ஒரு தடவையாவது காண்பியுங்கள்.
ஒவ்வொரு ரேகைக்கும் ஒரு பெயர் இருக்கிறது. மணிமகுட ரேகை, மணிமகுட கீற்று ரேகை, தனமேறு ரேகை, பிறைவட்ட ரேகை, சுழிசங்கு ரேகை என்று பலவிதமாக பிரிக்கப்படும். அந்த ரேகையின் பெயரைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடி கட்டுதான் இது.
இதைப் படிக்கும்போது உங்கள் பெயர், உங்கள் அப்பா, அம்மா பெயர், கல்யாணம் ஆகியிருந்தால் கணவன் பெயர், நீங்கள் பிறந்த வருடம், மாதம், தேதி என அனைத்தும் துல்லியமாக இருக்கும். இது தூய தமிழ் எழுத்து, 'வட்டெழுத்து' என்று சொல்வோம்.
எனக்கு நாடி ஜோதிடத்தின் மேல் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் உங்களிடம் பேசும்போது, "ஏன் நாடி பார்க்கக்கூடாது?" என்று தோன்றுகிறது..
எனக்கு உங்களைப் போல துளிகூட நம்பிக்கை இல்லாமல் வருவார்களே, வாடிக்கையாளர்களாக வேண்டும். அவர்களே ஆச்சரியப்பட்டு போவார்கள்.
இன்னொரு விஷயம் சொல்கிறேன். ஒருவருக்கு ஒரு பெண் மேல் காதல் இருக்கிறது. இவருடைய நடவடிக்கை காரணமாக அந்த பெண் அவரை கல்யாணம் பண்ணவில்லை, இவர் மேல் ஆசையே வரவில்லை. அந்த பெண்ணுக்கு வேறொருவரோடு கல்யாணம் ஆகிவிடுகிறது, காலம் கடந்த பிறகு, திரும்பவும் அவர்கள் சந்திக்கிறார்கள். அந்த பெண் மேல் இருந்த காதல் இவருக்கு குறையவில்லை. திரும்பவும் நட்பாக பழக ஆரம்பிக்கிறார்கள். அவர் நாடி எடுத்து படிக்கும் பொழுது, 'உனக்கு இந்த வயதில் கல்யாணம் ஆகும்; இந்த மாதிரியான பெயர், அடையாளம், அவங்க வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்தவர்கள்' என்பதை அதில் சொல்லியிருக்கிறார்கள். இவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. உடனே புகைப்படம் எடுத்து காட்டுகிறார், 'ஐயா சரியாக இருக்கிறதா பாருங்கள்' என்கிறார். சொன்ன விஷயம் எல்லாமே அப்படியே இருக்கிறது.
அதன்பின் அவர்களையும் கூப்பிட்டு வந்துவிட்டார். 'இந்த மாதிரி நாடியில் எனக்கு வந்திருக்கிறது, உன் நாடியை எடுத்து பார்' என்று கொடுக்கும்போது, அவங்களுடைய வாழ்க்கையிலும், 'ஒரு ஆறு மாத காலத்திற்குப் பின்பு வாழ்க்கையில் பிரிவு வரும்' என்று வந்தது. அவர்களுக்கு அது பயங்கர ஆச்சரியம்; 'எப்படி, எதை வைத்து பிரிவு வரும் என்று சொல்கிறீர்கள்? அதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே?', 'ஆறு மாசம் கழித்து பார்க்கலாம்' என்று சொல்லியாச்சு. அடுத்த ஆறாவது மாசம் விவாகரத்து ஆகிவிட்டது' என்கிறார்கள். அதன்பின் கல்யாணம் ஆகி, நல்லபடியாக இருக்கிறார்கள்.
(அம்பாளிடம் பூ விழுகிறது. அவர் ஆசைப்பட்ட பெண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு இந்த அம்பாளிடமும் போய் வணங்கியதால், அம்பாள் உத்தரவு கொடுக்கிறார்களோ தெரியவில்லை)
இதே மாதிரி பல விஷயங்கள் பலருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது, நடக்க போவதுதான் நாடி சொல்லும். மாற்றிக் கொடுக்கக்கூடிய இடத்தில் மகரிஷி இருக்கிறார்கள்.

ॐ