இந்த நவீன காலத்தில் தாமதமாகத் திருமணம், திருமணத்திற்குப் பிறகும் பணி நிமித்தமாகத் தொலைதூரத்தில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் தாமதம் ஏற்படுகிறது. பலவிதமான மருத்துவம் செய்தும் குழந்தை பிறப்பதில்லை. இதற்கான தீர்வு நாடி ஜோதிடத்தில் இருக்கிறதா ?
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கேள்வி. நாடி ஜோதிடத்தில் மனித வாழ்க்கையின் 12 காண்டங்களில், ஐந்தாவது காண்டம் என்பது புத்திர காண்டம். அதில் ஒருவருடைய குழந்தை பிறப்பைப் பற்றிய விவரங்களைக் கூறும். இது ஒருவருடைய பூர்வ ஜென்ம புண்ணியம், மூதாதையர்கள், குலதெய்வ வழிபாடு ஆகிய 4 முதன்மையான விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி வரக்கூடியதாகும்.
திருமணமாகி 15 - 20 ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் வாழ்ந்து, நவீன மருத்துவ முறைகள் பின்பற்றியும் அதில் தோல்வியடைந்து, "இனி நமக்குக் குழந்தை பாக்கியமே இல்லை" என்று வருத்தத்தோடு வாழக்கூடிய சூழலில், நண்பர்கள் அல்லது உறவினர்களின் வழிகாட்டுதலால், "நாடி ஜோதிடம் சென்று பார்க்கலாம், அங்காவது தீர்வு கிடைக்காதா?" என்று வருபவர்கள் ஏராளம். அவர்களுக்கு, ஐந்தாவது பாவகத்தின் கர்மா என்ன ? என்பதை அறிந்து, சென்ற பிறவியில் செய்த எந்த மாதிரியான கர்ம வினையால் இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்ற காரணம் கூறப்பட்டிருக்கும். அதற்கேற்ப தீர்வுகளும் அதில் சொல்லப்பட்டிருக்கும்.
"குறிப்பிட்ட தெய்வங்களை, இந்த வழிமுறைகளில் சென்று நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும்" என்று வரும். சில எந்திர வழிபாடுகளையும், முறைப்படி கடைப்பிடிக்கும்போது, "இந்த வயதில், இந்த மாதத்தில் கர்ப்பம் தரிக்கக்கூடிய காலகட்டம் அமையும்" என்ற விவரங்கள் கூறப்படும். இதன் மூலம் பலனடைந்தவர்கள், இன்றும் நம்முடன் நல்லதொரு தொடர்பிலும், உறவிலும் உள்ளனர்.
என்ன மாதிரியான குழந்தை பிறக்கும், எந்தக் காலகட்டத்தில் பிறக்கும், அக்குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், குழந்தை பிறந்த பிறகு அந்தத் தம்பதியினரின் வளர்ச்சி எப்படி இருக்கும் போன்றவை சொல்லப்பட்டிருக்கும்.
குழந்தையின் ஜாதகத்தின் பெற்றோரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுமா?
கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். ஒரு குழந்தை பிறப்பதன் மூலம் தாய், தந்தையரின் வளர்ச்சி, ஏதேனும் வீழ்ச்சிகளோ, கஷ்டங்களோ உண்டாகுமா, அதற்கான காரணங்கள் என்ன ?, அதிலிருந்து நிவர்த்தி பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
பல மருத்துவ முறைகளை நாடுகிறார்கள். எத்தனை பேருக்கு மருத்துவம் பயன் தருகிறது ? பலருக்கு மருத்துவர்களே எவ்வித நம்பிக்கையும் தருவதில்லை. நம்பிக்கை பெற்று ஏமாந்தவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நாடி ஜோதிடத்தில் தங்களின் 'பொதுக் காண்டத்தை' பார்த்துவிட்டு, அதன்பிறகு ஐந்தாவது காண்டமான 'புத்திர காண்டத்தை' பார்க்க வேண்டும். அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி தெய்வ வழிபாடுகளையும் செய்துகொண்டால், எந்தக் காலகட்டத்தில் மருத்து எடுத்துக் கொண்டால்பலனைத் தரும் என்ற குறிப்பிடப்பட்டிருக்கும்.
கடந்த 25 ஆண்டுகால நாடி ஜோதிட அனுபவத்தில், "என்ன பரிகாரம் செய்தாலும் குழந்தை பிறக்காது" என்று பார்த்திருக்கிறீர்களா ?
இல்லை. அதுபோன்று சொல்லப்படவில்லை. ஜாதகத்தில் கடுமையான புத்திர தோஷங்கள் இருந்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் கூட, மகரிஷிகள் அதற்குரிய ஆகம முறையிலான பரிகார முறைகளைக் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பரிகாரங்களின்படி, சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு முறைப்படி சென்று வழிபாடு செய்து பிறகு, குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.
தீமைகளிலும் ஒரு நன்மை விளையும் என்பதுபோல நல்லவைகள் செய்து, புண்ணியங்களைப் பெற்றவர்கள் மட்டும்தான் நாடி ஜோதிடத்தை பார்த்து பலன் அடைய முடியும் என்ற 'பிராப்தம்' இருக்கிறது. எல்லாராலும் நாடி ஜோதிடத்தைப் பார்த்துவிட முடியாது. நாடி ஜோதிடம் தெரிந்து கொள்வதற்கும் விதி இருக்க வேண்டும் என்பதையும் மகரிஷிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ॐ