மக்கள் முக்கியமாக எத்தகையப் பிரச்சினைகளுக்காக வருகிறார்கள் ?
வாழ்க்கையில் எல்லாருமே ஒரு பிரச்சினையோடு தான் வருகிறார்களே தவிர, யாரும் நேரத்தை வீணடிப்பதற்காக (Time pass) நாடி ஜோதிடம் பார்க்க வருவதில்லை.
ஒவ்வொருவருடைய நாடியையும் எடுக்கும்போது அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, ஆழ்ந்து படித்து, சரியான தீர்வுகளை கொடுக்கிறோம். இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஒரு நாடிப் படித்து விளக்குவதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. நான் அதிகபட்சமாக 14 மணி நேரம் வரை உழைக்கிறேன். சில நேரங்களில் அதிகாலை 5 மணிக்கே பணியை தொடங்கி விடுகிறேன். இரவு எத்தனை மணிக்கு உறங்குகிறேன் என்பதே எனக்கு தெரியாது. விடியற்காலை 3 மணி வரை கூட, பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் தூங்குவதற்கு 3 மணி நேரம் கூடக் கிடைப்பதில்லை.
நான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் இருப்பதால், பழைய நண்பர்கள் மற்றும் அவர்களது பரிந்துரைகள் மூலம் வருபவர்கள் என பலரும் என்னுடன் பயணிக்கிறார்கள். மாதம் குறைந்தது 100 பேருக்காவது நாடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. உதவியாளர்களை வைத்து பணியை செய்தாலும், அவர்கள் செய்யும் சிறு பிழைகள் கூட, பலனைப் பாதிக்கும் என்பதால் நானே நேரடியாக அதில் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால் நாடி பார்க்க விரும்புபவர்களுக்கு என்னால் உடனடியாக பார்த்து தர முடிவதில்லை. சில சமயங்களில் 15 நாட்கள் வரை கூட ஆகலாம். ஏனெனில், அவ்வப்போது ஆன்மீக பயணமாக பல்வேறு கோவில்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. உதாரணமாக, இந்த மாதத்தில் மட்டும் 10 தேதிக்குள்ளே இரண்டு முறை பயணம் சென்று வந்துவிட்டேன். மீண்டும் சில நாட்களில் பயணம் செல்ல உள்ளேன். இதனால் ஏற்படும் கால தாமதத்திற்காக பொறுமையாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என் மீது வருத்தத்தில் இருப்பவர்களிடமும் இதை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். எனது சேவை அனைவருக்கும் நிச்சயமாக உண்டு.
இங்கே வருபவர்கள், 20 வயதில் படிப்பு மற்றும் வேலைக்காக வருகிறார்கள். இக்காலக் கட்டத்தில் சில குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லது தேர்வு நேரத்திற்கு முன்பாக தேர்வு குறித்த ஒருவித பயம் வரலாம். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பயப்படத் தொடங்கினார்கள். அவர்கள் எனது காணொளிகளை பார்த்துவிட்டுத் தான் நம்மிடம் வந்தார்கள். அவர்களுக்கு நாடியில் மகரிஷி சொல்லியது, "அந்தக் குழந்தை நன்றாக படித்து பெற்றோருக்கு பெருமை சேர்க்கும். உங்கள் பயம் தேவையற்றது" என்று நாடியில் வந்தது. அதற்குரிய சில கோவில்களுக்கு அவர்கள் சென்று வந்தார்கள். இப்போது அந்தக் குழந்தை 87% மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்கள். நேரடியாக வந்து குருநாதரையும், அகத்திய முனிவரையும் வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்கள். அந்தக் குழந்தைக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது, பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அற்றுப் போயிருந்தது. அந்த நிலையை நாடி ஜோதிடம் மாற்றியிருக்கிறது.
இன்று பலருடைய வாழ்க்கையில் செய்வினைப் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. ஒருவரை நேரடியாக பழிவாங்க முடியாதவர்கள், குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துச் செய்வினை செய்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களை வைத்து தொழில் அல்லது குடும்பத்தை முடக்க முனைகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பக்தி உடையவர்களாக இருந்தாலும், கோவில்களுக்கு சென்றாலும் அவர்களை இருள் சூழ்ந்த நிலையே தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது, எதைச் செய்ய நினைத்தாலும் வெற்றி கிடைக்காமல் தோல்வியே வந்து சேரும். கணவன்-மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்படும். இத்தகைய பாதிப்புக்கு உள்ளான பலரை மீட்டு, உரிய ஆலயங்களுக்கு அழைத்து சென்று பூஜைகள் செய்து குணப்படுத்தியிருக்கிறோம்.
நேரடியாக வரக்கூடியவர்களை அழைத்து சென்று பூஜைகள் செய்து, அவர்கள் கைகளாலேயே சில வழிபாடுகளை செய்யும்போது, அவர்கள் அறியாமலேயே அவர்கள் கண்களில் நீர் வரும். அன்றோடு அவர்கள் கவலைகள் முடிவுக்கு வந்துவிடும். "ஐயா, என் மனதிலிருந்த பாரம் எல்லாம் குறைந்துவிட்டது. வாழ்க்கையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்திருக்கிறீர்கள், இப்போது தான் மனது புத்துணர்ச்சியாக இருக்கிறது, பல விஷயங்களில் தெளிவு கிடைக்கிறது" என்று நெகிழ்ந்து பேசியவர்கள் பலர் உண்டு. இன்றும் அவர்கள் நல்லுறவோடு நம்மோடு இருக்கிறார்கள். நாம் யாருக்கும் செய்வினை வைப்பவர்கள் கிடையாது. அத்தகைய பாதிப்புகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்கவே உதவுகிறோம்.
செய்வினை இருப்பதை நாடி மூலம் கண்டறிய முடியுமா?
நிச்சயமாக செய்வினை பாதிப்பு இருப்பதை நாடி மூலம் கண்டறிய முடியும். அது எப்படி வந்தது, யாரால் செய்யப்பட்டது, எந்த காலத்தில் ஏற்பட்டது, எவ்வளவு காலமாக பாதிப்பு இருக்கிறது என்பவற்றை துல்லியமாக கண்டறிந்து விடலாம். ஒருமுறை வழிபாட்டிலே சரியாகுமா அல்லது கூடுதல் வழிபாடுகள் தேவையா என்பதையும் நாடி உணர்த்தும். அதேபோல், ஒரு நிலத்தை விற்க முடியாமல் முடங்கி இருப்பதற்கு கூடச் செய்வினை காரணமாக இருக்கலாம். அத்தகைய இடங்களுக்கு சென்று உரிய பூஜைகளை செய்து, அந்த இடத்தை முறைப்படி சுத்தம் செய்த பிறகு, நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
தெய்வம் என்ற ஒன்று இருந்தால் அதற்கு எதிராகத் தீய சக்திகளும் இருக்கத்தான் செய்யும். நமது 4 வேதங்களில் ‘அதர்வண வேதம்’ என்பது மாந்திரீகம் சார்ந்த விஷயங்களை கொண்டது. செய்வினை என்பது பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. ஆனால், தனக்கு செய்வினை பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய சரியான ஆட்கள் இல்லை.

ॐ