Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

கடவுள் இல்லை என்பவரே கடவுளைப் பற்றி அதிகம் சிந்திப்பார்.

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
நவீன தலைமுறைக்கு நாடி ஜோதிடம் பொருந்துமா?
மகரிஷிகள் நவீன மனிதர்களுக்கு நாடி ஜோதிடம் கிடையாது என்று பிரிக்கவில்லை. 2026-ஆம் ஆண்டு, கலியுகத்தில் மனிதர்கள் இப்படித்தான் இருக்க போகிறார்கள் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

சில கோயில்களில் இருக்கக்கூடிய சிற்பக் கலைகளை பார்த்தால், இன்றைக்கு என்ன நடக்கும் என்பது அன்றைக்கே செதுக்கப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரத்தில் நிறைய சிற்பங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றையும், இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமான பல உதாரணங்கள். அதனால் இந்த நவீன தலைமுறைக்கும் நாடி ஜோதிடம் துல்லியமாக பொருந்தும்.

இன்றைய இளம் தலைமுறையினர் தான் நாடி ஜோதிடத்தின் மீதும் அதிகப்படியான ஆர்வத்தை காட்டுகிறார்கள். ஏனென்றால், உலகம் நவீனமானாலும், தங்களுடைய வாழ்க்கையின் சுய முடிவுகளை எடுக்கின்ற பொழுது, சரியான தெளிவை அவர்களால் பெற முடியாத சூழ்நிலைகள் உருவாகின்றன. இன்றைக்கு எப்போது யாருக்கு வேலை போகும் என்று தெரியவில்லை. தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதும் தெரியவில்லை. விரும்பி திருமணம் செய்தவர்கள், வாழ்க்கையை நல்லபடியாக கொண்டு போவார்களா என்பதும் தெரியவில்லை. எனவே, அவர்களுக்கு நாடி ஜோதிடம் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது. சரியான நேரத்தில் பார்த்து தங்களது வாழ்க்கையை சீரமைத்தால், கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

நாடி ஜோதிடம் வழிகாட்டுகிறதா அல்லது பயம் காட்டுகிறதா?
வாழ்க்கையில் பின்னாடி நடப்பதை சொல்லும் பொழுது, சிலருக்கு அச்சத்தை கொடுக்கும். "நாடி பார்த்தால் ஏதேனும் எதிர்மறையாக சொல்லிவிடுவார்களோ", "நம்முடைய ரகசியங்கள் வெளியில் தெரிந்துவிடுமோ" என்று சிலருக்கு பயம் வருகிறது. சிலர் தங்கள் வாழ்க்கையில் பின்னாடி ஏதேனும் பிரச்சினைகள் வந்துவிடுமோ, கண்டங்களை பற்றி சொல்லிவிடுவார்களோ என்ற பயத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையை பொறுத்தது. என்னுடைய அனுபவம் என்பது நாடி ஜோதிடம் ஒரு நல்வழிகாட்டுதல் மட்டும்தான்.

எந்த விதத்தில் அவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது ?
நம்முடைய பிறப்பிலிருந்து இறப்பு வரை இருக்கக்கூடிய விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. மனிதனாகப் பிறந்து, நோய்நொடி இல்லாமல், நல்ல புத்தி, அறிவு, ஞானத்தோடு வளர வேண்டும். நல்ல வேலை கிடைத்து நிறைவான வருமானம் கிடைக்கப் பெற்று, பொன், பொருள், பூமி, கட்டிடங்கள் ஆகியவற்றை சேர்க்கக்கூடிய காலகட்டத்தில், திருமணம் நடக்கிறது. திருமணம் முறைப்படி நடக்கலாம் அல்லது விருப்பப்பட்ட காதல் திருமணமாக இருக்கலாம். திருமண வாழ்க்கை நல்லபடியாக வெற்றியை தர வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல அன்யோனியத்தை கொடுத்து, அவர்களுக்கு அடுத்த வம்சாவளி என்ற நிலை வர வேண்டும். அவர்கள் பெற்ற பிள்ளையை வளர்க்க வேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் அடங்கிய பெரிய பயணம்.

வாழ்க்கை பயணத்தில் எந்த இடத்தில் தவறு செய்ய போகிறோம், இன்னல்கள் வரப்போகின்றன என்பதை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாது. இதையெல்லாம் துல்லியமாக கணித்தவர்கள் மகரிஷிகள். ஓலையை பார்த்து, அதன்படி வாழ்ந்தால், நாடி ஜோதிடம் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது.

நாடி ஜோதிடம் என்பது வாழ்க்கையை கட்டுப்படுத்துமா ?
நாடி ஜோதிடத்தை பார்த்துவிட்டால், மகரிஷிகள் அதில் சொல்லியிருப்பதை முதலில் நாம் உள்வாங்கி, நம்முடைய அறிவுக்குள் கொண்டு போக வேண்டும். "மகரிஷி இந்த நேரத்தில் இதைச் சொல்லியிருக்கிறார்" என்ற எண்ணங்கள், நாம் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும் பொழுது நமக்கு நினைவுபடுத்தி கொள்ளும் பொழுதுதான், அந்த நல்வழி கட்டுப்பாட்டுக்குள் தங்களை வைத்துக்கொண்டு வாழ முடியும்.

தாய்க்கும் தந்தைக்கும் தங்களது மகனோ அல்லது மகளோ ஏதோ ஒரு தவறு செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால், பெற்றவர்களால் நேரடியாக அவர்களிடம் அறிவுரைகள் சொல்ல முடியாமல் போகலாம். ஆனால், பிள்ளை போகின்ற பாதை சரியில்லை என்பதை உணர்ந்த பிறகு, நாடி ஜோதிடம் பார்த்து சரி பண்ணி வாழ்க்கை நல்லபடியாக மாறுகிறது. கட்டுப்படுத்துகிறது.

நாடி ஜோதிடம் ஒரு மனிதனை சுதந்திரமாக வாழவிடுமா ?
மகரிஷிகள் ஓலைச்சுவடியில் நம்மள பற்றி எழுதியதற்கான காரணமே, நாம் எடுத்த மனித பிறவியை நல்லபடியாக வாழ வேண்டும், நிறைய தர்மங்களை செய்ய வேண்டும், பாவங்களை சேர்க்கக் கூடாது. ஒரு பயனுள்ள புண்ணிய பிறவியாக அமைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை கொடுத்திருக்கிறார்கள். புண்ணியத்தையும், தர்மத்தையும் தொடர்ந்து செய்கின்ற பொழுது, நம்முடைய முந்தைய கால பாவம் அல்லது இந்த ஜென்மத்தின் பாவம், எல்லாவற்றையும் இந்த ஒரே பிறவியோடு முடித்து கொள்ளும் பொழுது இந்த மனிதப் பிறப்பு, நமக்கு புனித பிறவியாக மாறுகிறது. இதில் இருக்கக்கூடிய இன்னொரு ஆன்மீகச் சூட்சுமம்.

நாடி ஜோதிடத்தை நிறைய பேர் மறுப்பார்கள். உங்களுடைய பார்வையில் காரணம் என்னவாக இருக்கும் ?
ஒரு இடத்தில் நேர்மறை (Plus) வரும் பொழுது, அங்கே எதிர்மறை (Minus) இருக்கத்தான் செய்யும். "தெய்வம் இல்லை" என்று சொல்பவர்கள் தான் தெய்வத்தை பற்றி அதிகமாக யோசிக்கிறார்கள் என்று எடுத்து கொள்கிறேன். அவர்கள் தான் தெய்வத்தை பற்றி தினமும் சிந்திக்கிறார்கள் என்பது மரபாக இருக்கிறது. அதனால் மற்றவர்களுடைய நம்பிக்கையின்மை அல்லது வெறுப்பை பற்றி பேசுவதற்கு ஏதுமில்லை. அவர்களுக்கு மகரிஷியினுடைய வாக்கை தெரிந்துகொண்டு பலன் பெற வேண்டிய விதி இருந்தால், தானாக வரட்டும். உண்மை என்று நம்பி வருகிறவர்களுக்கு, நாம் உண்மையாக நாடி பலன்களைப் படித்துக் காட்டுவோம். அவங்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்கு நாமும் ஒரு ஊந்துகோலாக (துணையாக) இருக்கிறோம்.

மக்கள் எந்த பிரச்சினைகளுக்காக அதிகமாக உங்களை தேடி வருவதுண்டு? என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?
திருமணம் சார்ந்த பிரச்சினைகளுக்காக பலர் வருவதுண்டு. குறிப்பாக, "விரும்புகின்ற நபர் எங்களோடு சேர்ந்து வாழ்வார்களா, திருமணம் கைகூடுமா?" என்ற கேள்வியோடு வருகிறார்கள்.

அடுத்தது, வேலை சார்ந்த விஷயங்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தாங்கள் படிப்புக்கேற்ற வேலை இல்லாதவர்கள், வெளிநாட்டில் இருக்கக்கூடிய மனிதர்கள் தங்களது இருப்பிடம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வேலைகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் காரணமாக வருகிறார்கள். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சினை, கடனோட சேர்ந்து ஆரோக்கிய குறைபாடுகளுக்காக வருகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது, எல்லாமே ஒரு சம அளவிலான பிரச்சினைகள் தான். திருமண பிரச்சினைக்காக, இணையாக தொழில் பிரச்சினைக்காக, அதற்கு சமமாகக் கடன் மற்றும் நோய். அவர்கள் எல்லாருக்கும் நல்லபடியாக இந்த சேவையைச் செய்து கொடுக்கிறோம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.