குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான முதல் பத்திரிகையை குலதெய்வத்தின் காலடியில் வைப்போம். குழந்தைகளுக்கு முதல் மொட்டை குலதெய்வத்திற்குத்தான்.
குலதெய்வ வழிபாடு இல்லாதவர்களுக்கு சந்ததிக்கே தோஷம் வருமா ?
முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை தவறுபவர்களுக்கு இப்பிரச்சினைகள் உருவாகின்றன.
குலதெய்வமே தெரியவில்லை என்றால், முன்னோர்களை வைத்து வழிபாடு செய்வது அதற்கு சமம். சிவனையோ, விஷ்ணுவையோ கும்பிட வேண்டியதில்லை. ஏனெனில் 5-வது இடம் நம்முடைய முன்னோர்கள். நாம் அந்த பரம்பரையில் இருந்துதான் வந்திருக்கிறோம். எனவே அவர்களை வழிபாடு செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் என்று அகஸ்திய முனிவரே சொல்லியிருக்கிறார். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' - இதில் தாய்தான் முதல் கடவுள். முன்னோர்களை வணங்குவதாலும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதாலும் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
குலதெய்வ சாபம் எப்போது வரும் ?
ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டுப்போனால் அல்லது முன்னோர்களுடைய சாபங்கள் இருந்தால், முதலில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் அல்லது பிறக்காமலே போகும். இது முதல் அறிகுறி. இரண்டாவது அறிகுறி, அந்த தலைமுறையினரால் பூர்வீக மண்ணில் வாழ முடியாது. பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்க முடியாது. பூர்வீகத்திற்கு சென்றாலே பிரச்சினைகள் வரும். பங்காளிகளுக்குள் பிரச்சினைகள் உருவாகும். சகிப்புத்தன்மை இருக்காது, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் வராது. மேலும், குடும்பமே விருத்தி இல்லாத நிலை ஏற்படும். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், நான்கு பேரும் நான்கு கோணலில் இருப்பார்கள். ஒற்றுமை இருக்காது. பணம் இருக்கும், ஆனால் நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது. வீடு லட்சுமி கடாட்சத்தை, தெய்விக தன்மையை இழந்திருக்கும். குலதெய்வ அருள் இல்லாதவர்களின் குடும்பத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு உடல்நிலை, மனநிலை பாதிக்கப்படலாம். சரியான வளர்ச்சி இருக்காது. இதெல்லாம் பலருக்கு நாடி படித்த அனுபவத்தில் சொல்கிறேன்.
நீங்கள் சொன்ன அறிகுறிகள் எல்லாம் ஒரு வீட்டிலே இருந்தால், என்ன செய்ய வேண்டும்?
இதில் என்னுடைய கருத்தை சொல்ல முடியாது. அவர்களுடைய கர்மாவிற்கு ஏற்ப வழிபாட்டு முறைகள். உங்களுக்கு குலதெய்வம் கூட நிற்கவில்லை என்றால், அதற்கு இணையாக யாரை வணங்க வேண்டும், எந்த தெய்வம் உங்களுக்கு கூட நிற்கப் போகிறது என்பதை மகரிஷி தெளிவாக எடுத்து கொடுப்பார்
குலதெய்வம் கனவில் வருவது, ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருவது போலவோ அல்லது வேண்டுதல்களை சரியாகச் செய்ய சொல்வது போல தோன்றும். இத்தகைய கனவுகள் வந்தால், குலதெய்வம் மிகுந்த கோபமாக இருக்கிறது அல்லது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாமா?
தெய்வம் இதுவரை யாரையும் தண்டித்ததில்லை. அவர்கள் எப்போதும் காப்பாற்றக்கூடிய இடத்தில் தான் இருக்கிறார்கள். அவர்களின் பலன் குறையுமே தவிர, அவர்கள் கெடுதல் செய்ய மாட்டார்கள். ஒரு மனிதனுடைய கர்மவினை நல்லபடியாக இருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானமும், ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானமும், பிறந்த லக்னம் பலம் பெற்றிருந்தால், கட்டாயம் முன்னோர்களின் ஆசீர்வாதம் உண்டு. நீங்கள் செய்வது தவறாக இருந்தால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் எடுத்து சொல்வார்கள். அதை மீறி செய்யும்போது பாதிப்பு ஏற்படும். முன்கூட்டியே ஒரு விஷயத்தை அறிந்துகொள்ளக்கூடிய ஆற்றலையும், ஞானத்தையும் முன்னோர்கள் ஒரு அறிகுறியாகவோ, தெய்வத்தின் மூலமாக அல்லது கனவுகளாக கொடுக்கலாம். சில சமயம் கனவில் ஒரு குழந்தையின் மூலமாக சொல்லலாம். இதற்கு அவர்கள் செய்த புண்ணியமே காரணம்.
குலதெய்வ் கோவிலுக்குப் போக முடியவில்லை என்று பலர் சொல்லக் கேட்கிறோம். தடங்கல்கள் ஏன் வருகின்றன? அதனை எப்படி நிவர்த்தி செய்வது?
கர்மவினை மிகவும் பலமாக இருக்கும்பட்சத்தில், நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை அனுபவிக்கவிடாமல் தடுக்கும். அதற்கு முக்கிய காரணம் குலதெய்வத்தின் கோபம். ஆனால் தண்டிக்காது. உதாரணமாக, உங்கள் பாட்டி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு குழந்தை பிறக்கிறது, அது அவருக்குப் பேரன் அல்லது பேத்தி. அந்த குழந்தையின் பிறப்பை அவர் சந்தோஷமாக எதிர்பார்ப்பார். அப்படி இருக்கும்போது, அவருடைய மனதை காயப்படுத்தக்கூடிய செயல்களை செய்யும்போது அவர் நம்மை வாழவிடக்கூடாது என்று நினைப்பாரா? இல்லை. அவர் நம் மீது கோபப்படுவார். நாம் கெட்டு போக வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். 'என்னை வந்து நீ பார்க்கவில்லை' என்ற கோபம் இருக்குமே தவிர வேறில்லை. அவரிடமிருந்து கிடைக்க வேண்டிய அனுக்கிரகங்கள் கிடைக்காமல் போகலாம். நமக்கு கிடைக்க வேண்டிய பெரிய யோகங்கள் தட்டிப் பறிக்கப்படலாம். நல்ல விஷயங்கள் நடக்காமல் தடைப்படலாம்.
இந்த தடையை எப்படி நிவர்த்தி செய்வது?
அதற்கு அவர்களுடைய நாடியை எடுத்து பார்க்க வேண்டும். ஜாதகத்தில் இதற்கான சரியான தீர்வு இருக்காது. 5-க்குடைய கிரகம் 6-ம் இடத்தில் இருந்தால், பூர்வீகம் வழக்காக அல்லது பகையாக மாறியிருக்கும். 'உன் குலதெய்வம் 6-ல் மறைந்திருக்கிறது' என்று நாம் ஆலோசனைகள் கூறலாமே தவிர, அதற்கான சரியான தீர்வு என்பது மகரிஷிகள் கொடுப்பதுதான்.

ॐ