எந்த கட்டத்தில் ராகு-கேது இருந்தால் நல்லது அல்லது கெட்டது செய்வார்கள்?
ராகு-கேது என்பவை 'சாயா கிரகங்கள்' 'நிழல் கிரகம்'.
மேஷத்திற்கு 8-வது வீடு விருச்சிகம் ஆகும். இந்த 2 வீடுகளுக்கும் அதிபதி செவ்வாய். மேஷத்திலிருந்து 2-வது வீடு ரிஷபம், 7-வது வீடு துலாம் ஆகும். இந்த 2 வீடுகளுக்கும் அதிபதி சுக்கிரன்.
மேஷத்திலிருந்து 3-து வீடான மிதுனமும், 6-வது வீடான கன்னியும் புதனின் வீடுகள் ஆகும். மேஷத்திலிருந்து 4-வது வீடு கடகம், அது சந்திரனின் வீடு. 5-வது வீடு சிம்மம், அது சூரியனின் வீடு. சூரியனுக்கும் சந்திரனுக்கும் தலா ஒரு வீடு மட்டுமே. மற்ற கிரகங்களான இரண்டு வீடுகள் இருக்கின்றன.
மேஷத்திலிருந்து 9-வது வீடான தனுசும், 12-வது வீடான மீனமும் குருவின் வீடுகள் ஆகும். மேஷத்திலிருந்து 10-வது வீடான மகரமும், 11-வது வீடான கும்பமும் சனியின் வீடுகள் ஆகும். ராகு -கேது கிரகங்களுக்கு சொந்தமாக வீடுகள் கிடையாது.
ராகு-கேது இன்றைக்கு பலருடைய வாழ்க்கையில் பிரச்சினையாக உருவெடுத்து பேசப்பட்டு வருகிறது. 9 கிரகங்களிலே மிக பெரிய, முதன்மை கிரகம் சூரியன். மிக வேகமாக சுழலக்கூடிய கிரகமும் சூரியன். சூரியனின் வெப்பத்திற்கு அருகில் யாராலும் நெருங்க முடியாது. ஆனால், சூரியனையே ராகு மறைப்பதால் சூரிய கிரகணம். அந்த நேரத்தில் ராகு பெரியவராக தெரிகிறார். சந்திரனையும் ராகு மறைப்பதால்.சந்திர கிரகணம்.
ராகு-கேதுக்கு 3, 7, 11 ஆகிய பார்வைகள் அமையப் பெற்றுள்ளன. உதாரணமாக, விருச்சிக லக்னத்திற்கு 2-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் பிரச்சினைதான். 2-ம் இடம் என்பது 'குடும்ப ஸ்தானம்'. 3-ம் இடத்தில் இருந்தால் பெரிய அளவில் பாதிக்காது. 4-ம் இடத்தில் இருந்தால் பாதிக்கும். 4-ம் இடத்திலிருந்து தலைகீழாக எண்ணும்போது, அவருடைய 11-வது பார்வை 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தின் மேல் விழும். அகம்பாவப் பிரச்சினைகள் (Ego problems) உருவாகும். 2-ம் இடத்தில் நேரடியாக இருந்தாலும் பிரச்சினை தான்.
ராகு 12-வது இடத்தில் இருந்தாலும் பிரச்சினை தான். தன் 3-வது பார்வையால் அவர் 2-ம் இடத்தைப் பார்ப்பார். அப்போதும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும். இதனுள் சென்றால் நிறைய விஷயங்களை பேச வேண்டும்.
உண்மையிலே, ராகு மிக நல்ல கிரகம். அவர் கொடுக்க ஆரம்பித்தால், யாராலும் தடுக்க முடியாது. இதற்கெல்லாம் ஜோதிட ரீதியாக நிறையப் பாடல்கள் இருக்கின்றன. அதில் ஒரு பாடல்:
ஆமேடம் எருதுசுரா நண்டுக்கன்னி ஐந்து இடத்தில் கருணாகம் அமர்ந்து நிற்கப் பூமேடை தனித்துயிலும் ராஜயோகம்.
'ராஜயோகம்' என்ற உன்னதமான யோகத்தை ராகு கொடுக்கிறார். மேஷம் (ஆடு), ரிஷபம் (எருது), கடகம் (நண்டு), கன்னி, மகரம் (சுறா) அல்லது லக்னத்திற்கு 5-ம் இடத்தில் 'கருணாகம்' என்ற ராகு அமர்ந்தால், 'பூமேடை தனித்துயிலும் ராஜயோகம்' உண்டாகும். ஒரு அரசனுக்கு நிகரான வாழ்க்கையை அமைத்து கொடுப்பார். அப்படியென்றால், என் பார்வையில் ராகு நல்லவர் தான்.
அவர் அமர்ந்த இடத்தையும், லக்னத்தையும் பொறுத்துத்தான் பலனை தீர்மானிக்க வேண்டும். வெளித்தோற்றத்தை பார்த்து ஒருவரை தாழ்வாக எடைபோடக் கூடாது. மிகவும் ஆடம்பரமாக இருந்தால் மிக உயர்ந்தவர்கள் என்று சிந்திக்க கூடாது. அவர்கள் இருக்கும் இடம் மற்றும் பார்வை திறனைப் பொறுத்து பலனை தீர்மானிக்க வேண்டும்.
ஜோதிடம் சார்ந்த கலைச்சொற்கள் (Terms) மூலம் நிறைய விஷயங்களை சொல்லியிருந்தீர்கள். ராகு-கேது மூலம் என்ன மாதிரியான கெட்ட விஷயங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது?
லக்னத்தில் ராகு அல்லது கேது, 2-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால், 75% காதல் திருமணம் அமைந்துவிடுகிறது. ஆனால், அவர்களுடன் சேரக்கூடிய மற்ற கிரகங்களை பொறுத்து, வாழ்க்கை சுபமாக அல்லது பிரச்சினைகள் வருமா என்பதை பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
ராகு, கேதுவிற்கும் இடையே ஏதேனும் தொடர்புகள் அல்லது வித்தியாசங்கள் இருக்கின்றனவா?
ராகு என்பது 'தலை', கேது என்பது 'உடல்'. ராகு எந்த பாகையில், எந்த மாதத்தில், எந்தத் தேதியில், எந்த நட்சத்திரத்தில் மாறுகிறாரோ, அதே நேரத்தில் கேதுவும் மாறுவார். ஏனென்றால் இரண்டும் தலை மற்றும் உடல் தான்.
ராகுவை போல கொடுப்பாரும் யாருமில்லை, கெடுப்பாரும் யாருமில்லை என்று சொல்வார்கள். கேது என்பவர் 'ஞான மோட்ச காரகன்'. ஒரு தவறு நடக்கிறது என்றால், அதைப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கக்கூடிய புத்தியையும் ஆற்றலையும் கேது கொடுப்பார். ஆனால் ராகுவோ, எதையும் யோசிக்காமல் துணிந்து களத்தில் இறங்கிவிடுவார். இதுதான் இவ்விருவருக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். இதைப் பற்றி நாம் அடுத்தப் பதிவுகளில் (Videos) விரிவாகப் பேசலாம்.
ராகு அல்லது கேது மூலமாக ஏதேனும் பிரச்சினைகள் வரப்போகிறது என தெரிந்தால், என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம் ?
இது கண்டிப்பாக நல்ல கேள்வி. அது சம்பந்தப்பட்ட, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகள் வழிபாடு செய்து, பிரதிஷ்டை செய்த கோவில்களுக்கே நேரடியாக செல்லப் போகிறோம். அதன் வரலாற்றை மக்களுக்கு கொடுத்து, அதன் மூலம் அவர்கள் பயனடைய உதவியாக இருக்கப் போகிறோம். கண்டிப்பாக அந்த பதிவுகள் விரைவில் வெளிவரும்..

ॐ