Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

குழந்தைகளை கெட்ட வார்த்தைகளால் திட்டாதீர்கள்

04 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
பெற்றோர்கள் குழந்தைகளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டக்கூடாது. ஏனெனில், ஒரு குழந்தை பிறந்தது புதிய விஷயமாக இருக்கலாம், ஆனால் அந்தக் குழந்தையின் ஆத்மா என்பது உங்கள் குடும்பத்தில் வாழ்ந்த ஒரு முன்னோரின் ஆத்மாவாக இருக்க வாய்ப்புண்டு. உங்கள் பாட்டனோ, முப்பாட்டனோ அல்லது மகளோ, மகனோ மீண்டும் உங்களுக்குக் குழந்தையாக பிறக்கிறார்கள். அதனால் தான், அந்தக் குழந்தையினுடைய குணாதிசயங்களும், சிரிப்பும், செயல்பாடுகளும் உங்கள் தாத்தாவை போலவே இருப்பதை கவனித்திருப்பீர்கள். சில நேரங்களில் அந்தக் குழந்தை முன்னமே தெரிந்து வைத்தது போல நமக்கு அறிவுரை சொல்லும். முன்னோர்களின் சாராம்சம் சுமார் 80% குழந்தையிடம் வெளிப்படும். அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடியவர்களுடைய ராசி, நட்சத்திரமே, லக்னமே அந்த குழந்தைக்கு வரும்.

ஒரு குழந்தையினால் பெற்றவர்களுக்குப் புகழ் கிடைப்பதும் அல்லது தலைகுனிந்து நிற்பதும் பெற்றோர்களின் கர்மாவோடு, குழந்தையின் கர்மாவோடு தொடர்புடையது. இவர்களின் பாவ புண்ணியங்கள் ஒத்துப்போவதால் தான் இத்தகைய நிகழ்வுகள் குடும்பத்தில் உருவாகின்றன.

நாடி ஓலைகளை தேடும் போது சிலருக்கு ஓலைகள் கிடைப்பதில்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. சிலர் தங்களது விவரங்களைத் தவறாக சொல்லக்கூடும். உதாரணமாக, ஒருவர் 1977-ல் பிறந்ததாக சொன்னால், நாடி ஓலையில் இருக்கும் குறிப்புகள் அதற்கு பொருந்தாது. அந்த ஓலை 1976 அல்லது 1979-க்குரியதாக இருக்கலாம். நீங்கள் விவரங்களை தெரியாமல், தவறாக சொன்னாலும், நாடி வாசிப்பவர்கள் அதனை சரியாகக் கண்டுபிடித்து விடுவார்கள். உங்கள் ஊரில் உள்ள உறவினர்களிடம் விசாரித்துப் பார்த்தால், நாடியில் வந்த தகவலே சரியாக இருக்கும்.

எனது நீண்ட கால அனுபவத்தில் சுமார் 15,000 முதல் 20,000 நாடிகளைப் படித்திருக்கிறேன். இந்தத் துறையில் பலதரப்பட்ட மக்களை—ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, உங்களுக்கு ஆச்சரியமாக தெரியும் பல விஷயங்கள் எனக்கு பழகிப்போன ஒன்றாகவே இருக்கின்றன.

70 வயது வரை தவறான ஜாதகத்தை பின்பற்றி, நாடி பார்த்த பிறகு அதனை மாற்றிக்கொண்டவர்கள் பலர் உண்டு. பல காலமாக தவறான நட்சத்திர பெயரில் அர்ச்சனைகளும் வழிபாடுகளும் செய்திருப்பார்கள், அதனால் தான் நமக்கு எதுவும் பலிக்கவில்லை என்று வருந்துவார்கள். அத்தகைய நேரங்களில் எனக்கு பெருமை ஏற்படுவதை விட, ஒருவருக்குத் தவறான வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறதே என்ற வருத்தமே மிஞ்சும்.

5 வயதில் தொலைந்து போன குழந்தையை 30 வயதில் நாடி ஜோதிடம் மூலம் கண்டுபிடித்துக் குடும்பத்தோடு சேர்த்த நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியானது. தாய்மொழியான தமிழை மறந்து, ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த மகன் தன் குடும்பத்தோடு மீண்டும் இணைந்தபோது பெரும் ஆச்சரியமாக இருந்தது.

அதேபோல், வீட்டை விட்டு வெளியேறிய தந்தை இறந்துவிட்டதாக கருதி, மறந்து போன குடும்பத்திற்கு, அவர் உயிருடன் இருப்பதை நாடி மூலம் உறுதி செய்து, அவர்களை மீண்டும் ஒன்று சேர்த்திருக்கிறோம்.

திருமண மேடை வரை சென்ற காதல் திருமணம் குறித்து நாடி சொன்ன பலன் அப்படியே பலித்திருக்கிறது. விடிந்தால் திருமணம் நடக்க வேண்டிய சூழலில், நாடி சொன்னபடி காதலன் மீட்டெடுத்து மீண்டும் காதல் திருமணம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

நாடியில் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது நடக்குமா, நடக்காதா ? என்ற சந்தேகத்திற்கோ அல்லது இருமன நிலைக்கோ இடமே இல்லை. அகத்திய மகரிஷி சொல்லியிருப்பது நடக்கும். இதுதான் உங்களது வாழ்க்கை என்று மிகுந்த ஆழமாக பேசுவோம்.

அகத்தியப் பெருமானை சோதிக்க நினைத்தவர்கள் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி சரணாகதி அடைபவர்களுக்கு அவருடைய வாக்கு என்றும் பொய்யாவதில்லை.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.