சனி பகவான், நாம் யார் என்பதை நமக்கு தெரிய வைக்கிறாரா ?
உண்மைதான். நம்மை பக்குவப்படுத்தக் கூடியது சனி கிரகம். நல்ல கிரகம். சனீஸ்வரனால் பாதிப்படையாத ஒரே கடவுள் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வணங்குபவர்கள் மேல் சனி தாக்கம் இருக்கக்கூடாது என்ற வரத்தை பெற்றிருக்கிறார்.
கோயிலில் ஒரு மணி நேரம் அமைதியாக அமருங்கள். அங்கு விற்கின்ற விளக்கை வாங்கி ஏற்றாதீர்கள். நல்லெண்ணெய் அல்லது சுத்தமான நெய், மண் அகல், பஞ்சுத் திரி ஆகியவற்றைக் கொண்டு விளக்கேற்றி, 10 நிமிடங்கள் கண்ணை மூடி எதையும் யோசிக்காமல் அமைதியாக அமருங்கள். 5 அல்லது 9 முறை பிரகாரத்தை சுற்றி வாருங்கள். அதன் பிறகு மாற்றம் கிடைக்கும். 'அனுமன் சாலிசா' பாராயணம் செய்யும்போது, சனியினுடைய தாக்கம் குறையும்.
சனிப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
ஏற்கெனவே சொன்னது போல 1, 4, 7, 8, 10, 12 ஆகிய இடங்கள் முக்கியம். மேஷத்துக்கு ஏழரைச் சனி ஆரம்பம். மிதுன ராசிக்கு 10-ஆம் இடத்து கர்மச் சனி. சிம்ம ராசிக்கு அஷ்டமச் சனி. கன்னி ராசிக்கு கண்டகச் சனி. தனுசு ராசிக்கு 4-ஆம் இடத்து அர்த்தாஷ்டமச் சனி. ஆனால் சனி 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் இருந்தால் கெட்ட பலன் இல்லை. மற்ற இடங்களில் இருந்தால், நம்மை பக்குவப்படுத்தக்கூடியது.
தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்கள் மாறுமா ?
இப்போது பேசப்படுவது எல்லாமே கோட்சார பலன். ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால், கோட்சாரத்தின் பாதிப்பு பெரிதாக வெளிப்படாது. இரண்டுமே சரி இல்லை என்றால் பிரச்சினைகள் தோன்றும். சனியின் காலகட்டத்தில் அவர் புதிதாக எதையும் செய்வதில்லை. நாம் கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான பலன்களை கொடுக்கிறார்.
சனிப் பெயர்ச்சி காலத்தில் ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பது உண்மையா?
100% உண்மை. நாம் சொல்வது, "கோவில்களுக்கு செல்லுங்கள், தெய்வத்தை வணங்குங்கள்" என்பதுதான். அவர் அதைத்தான் விரும்புகிறார். ஒரு மனிதனை நேர்மை, தர்ம வழியில் கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாம் அந்த நிலைக்கு வர ஆரம்பித்துவிட்டல், அவர் நமக்கு 'அனுக்கிரக மூர்த்தி' ஆகிவிடுவார், பாதிப்பை தர மாட்டார். அவரே நமக்கு ஒரு பாதுகாப்பான கடவுள் ஆகிவிடுவார்.
நம்முடைய கர்மாவால் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் கெடுதல்கள் ஏற்பட்டால், அவை குடும்பத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா ?
மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாக இருக்கிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு 2-வது இடமான குடும்ப ஸ்தானத்தைச் சனி 12-ஆம் இடத்திலிருந்து பார்ப்பார். சிம்ம ராசிக்காரர்களுக்கு 8-வது இடத்திலிருந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவர் 10-வது பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பார். அவர்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி இப்போது போய்க்கொண்டிருக்கிறது, அடுத்தது 5-ம் இடத்து சனியாக மாறும்.
குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கும்போது கண்டிப்பாக வாய் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். விருச்சிக ராசி, கும்ப ராசி, மேஷ ராசி, சிம்ம ராசி ஆகிய ராசிக்காரர்கள் வார்த்தைகளை ரொம்ப நிதானம் வேண்டும். "நான் இருக்கிறேன், என்னால் முடியும்" என்று வாக்கு கொடுப்பதும் தப்பு. அதை வைத்து நம்மை கட்டிப்போடுவார்கள் (Lock).
குடும்ப ஸ்தானம் என்பதால் கணவன்-மனைவி உறவுகளில் விரிசல், விரக்தி நிலை வரும். வெளியில் போய்விட்டு வீட்டிற்கு வந்தால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வீட்டிற்கு வரும்போது நாம் ஏதோ ஒரு வகையில் கோபத்தை வெளிப்படுத்துவோம். அதை வீட்டில் உள்ளவர்களும் புரிந்து கொண்டு, அமைதியானால் பிரச்சினையை தவிர்க்கலாம்.
அன்பு ரொம்ப முக்கியம். கணவனும் மனைவியும் தங்களது குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் அன்பை குறைக்க கூடாது. அன்பால் தான் ஜெயிக்க முடியும் என்ற விதி இருக்கிறது. ஆணவமாக கொண்டு போனால் குடும்பம் இரண்டாகிவிடும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. பொறுமை இல்லாமல் 'என்னால் முடியும்' என்ற ஆணவத்தை உள்ளே கொண்டு வந்தால், கட்டாயமாக சனி பகவான் 'இவ்வளவு உனக்கு அதிகாரமும் ஆணவமும் வந்துவிட்டதா?' என்று ஒரு பாடத்தை கொடுத்து விடுவார். அதனால் அவரிடம் நாம் அமைதியாக அடங்கி, வணங்கிப் போவது தவறே இல்லை. அதன் மூலம் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ளலாம்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம் ?
இந்த நான்கு ராசிகளுக்கு குடும்ப ஸ்தானத்தை பாதிக்கும். கன்னி ராசிக்கு 7-ம் இடத்தில் சனி இருந்து, நேராக 7-வது இடத்தை (லக்னத்தை) பார்ப்பதனால் 'கண்டகச் சனி' என்பார்கள். கண்டகச் சனி நடக்கும்போது மனரீதியான போராட்டத்தை கொடுக்கும். தேவையில்லாத சிந்தனைகள், எண்ணங்கள் தோன்றும். அதுபோன்ற விஷயத்திற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. இந்த நேரத்தில் பழக்கவழக்கங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். நட்பு என்று வரக்கூடியவர்களுடைய பழக்கம் வேறு மாதிரியாக முடிய வாய்ப்புண்டு. அதனால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தின் மேல் இருக்கக்கூடிய கவனத்தை சிதற விடுவார்கள். இது மீன ராசி பலன்.
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுடைய குழந்தைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், குழந்தைகளால் அவர்கள் மனது சங்கடப்படக்கூடிய காலகட்டம். அதே நேரத்தில், சனியின் பார்வை 2-ம் இடத்தை பார்ப்பதால், படிக்கக்கூடிய குழந்தைகளாக இருந்தால் அவர்களின் கல்வியில் கவனத்தை செலுத்த வையுங்கள். குழந்தைகளிடம் பெற்றோர் மிகவும் நட்பாக பழக வேண்டும். 'நான் ரொம்ப கண்டிப்பானவன்' என்றால், அவர்கள் தங்களது பாசத்தை வேறு இடத்தில் தேடி போய்விடக் கூடாது.
"வீட்டிற்குப் போனால் ரொம்ப கண்டிப்பாக இருக்காங்க, எனக்கு சுதந்திரம் இல்லை, அமைதி இல்லை, மன அழுத்தமாக இருக்கு' என்று மாற்று வழியை தேடுவார்கள். அதற்கு பெற்றவர்கள் காரணமாகி விடக்கூடாது. குழந்தைகளுக்கு வண்டி, வாகனங்கள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், வாகன ரீதியான விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இரவு நேரங்களில் எங்கும் தனியாக அனுப்ப வேண்டாம். அவர்கள் மேல் நாம் சந்தேகப்படுவது போலவும் நடந்துகொள்ளக் கூடாது. அதே நேரத்தில், நாம் அவர்களை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

ॐ