மருத்துவத்துறையில் கூட தேவையற்ற பரிசோதனைகளால் மக்கள் பணம் இழக்கிறார்கள். அதுபோல நாடி ஜோதிடத்திலும் பலர் ஏமாறுகிறார்கள். அப்படியிருக்க, நீங்கள் கூறிய ஆந்திரப் பெண் ஜோதிடர் ஏன் உடனே பரிகாரம் செய்யாமல் யோசித்தார் ?
அவர்கள் பணத்திற்காக யோசனை செய்யவில்லை. நாமே பூஜையை நம் ஊரிலே செய்து கொள்ளலாமே என்ற அலட்சியம். எல்லா இடங்களும் ஒன்றாகிவிடாது. சிவாலயங்கள் என்பது உலகத்தில் ஆயிரம் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு கோயிலும் தனித்துவமானது.
ஏன் எல்லாரும் சனிப் பெயர்ச்சி வரும்போது திருநள்ளாறு செல்கிறீர்கள்? சிவன் கோயில்களில் சனி பகவான் இருக்கிறாரே, அங்கெல்லாம் போக வேண்டியதுதானே? அதேபோல குரு பெயர்ச்சிக்கு, ஏன் ஆலங்குடிக்கு செல்கிறீர்கள் ? நம்ம ஊர்க் கோவில்களில் இல்லாத குருவா ?
உண்மையான நாடி ஜோதிடரை எப்படி கண்டுபிடிப்பது?
உதாரணமாக, எந்த மருத்துவமனை உண்மையாக இருக்கிறது?. அதையும் மக்கள் நம்புகிறார்கள்.
ஆரம்பத்தில் எனக்கு நாடி ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், என் கைரேகையை வைத்து என் வாழ்க்கையைத் துல்லியமாக சொன்னதால், உங்கள் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
உண்மையான, பாரம்பரியமான நாடி ஜோதிடக் குடும்பப் பின்னணி என்பது 'வள்ளுவர் குலம்' தான்.
"வள்ளுவன் சொல் மாணிக்கக் கல்" என்பது பழமொழி.
கோவிலில் பூஜையை யார் வேண்டுமானாலும் முறைப்படி படித்து செய்யலாம். ஆனால், பாரம்பரியமாக அந்தந்தக் குலத்தில் பிறந்தவர்கள், தங்களின் கடமைகளில் ஆத்மார்த்த பக்தி இருக்கிறது. அதேபோல யார் என்னென்ன தொழில் என்பதை நிர்ணயித்துவிட்டார்கள்:
• பிராமண குலம்: ஆலயப் பூஜை புனஸ்காரங்கள்.
• வள்ளுவ குலம்: சாஸ்திர அறிவு, நாடி ஜோதிடம், மூலிகை வைத்தியம், பூஜை.
• ஆச்சாரி குலம்: நகை வேலைப்பாடுகள்.
இதை மாற்றி செய்தால், சரியாக வராது. நாடி ஜோதிடத்தை பொறுத்தவரை வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்கள். வைத்தீஸ்வரன் கோவிலில், தெருவுக்கு தெரு, நாடி ஜோதிட நிலையங்கள் வைத்திருக்கிறார்கள். அங்கே எது உண்மை, எது பொய் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
முதலில் நாங்கள் உங்களுடைய பெருவிரல் ரேகைக்கு பொருத்தமான ஓலைச்சுவடி கட்டை எடுக்கிறோம். ஒவ்வொரு ஓலையாக வாசித்துக் காட்டும்பொழுது, நீங்களாக தனிப்பட்ட விஷயங்களை எதையுமே முன்கூட்டியே சொல்லக்கூடாது. உங்களுக்கான விபரங்கள் சரியாக இருந்தால் மட்டும் "ஆம்", மற்றபடி ஜோதிடருக்கு எந்த ஒரு துப்பும் (Clue) கொடுக்கக் கூடாது.
உங்களுக்கான ஓலையை எடுத்து பலன் கூறும்பொழுது, அதில் நான்கு வரிகளை நான் படித்துக் காட்டும்போதே உங்களுக்கு புரிந்துவிடும். ஒரு உண்மையான நாடி ஜோதிட ஏட்டில், ஆரம்பத்தில் 'கடவுள் வணக்கம்' வரும். அந்தப் பாடல்கள் எதுகை-மோனை நயத்தோடு 'வெண்பா' இலக்கண வகையாக இருக்கும்.
உதாரணமாக, ஏட்டில் ஆனைமுகனைப் பற்றி வரும்போது:
"ஆனை முகன் அறுமுகனின் அடிகள் போற்றி.. அறிவிப்பேன் அழகுபட.."
என்று வரும். இது உங்களுக்கு புரியாது. என்னிடம் ஏற்கனவே எழுதிய குறிப்பேடு வந்தால், அது சரியான இடத்தில்தான் எழுதப்பட்டதா, என்று அடுத்த நொடியே என்னால் கண்டுபிடிக்க முடியும். இதை பாரம்பரியமான நாடி ஜோதிடர்தான் எழுதியிருக்கிறாரா என்பதை உடனே சொல்லிவிடுவோம்.
வெண்பாவில் நான்கு வரிகள் வந்தால், ஒவ்வொரு வரியினுடைய முடிவும், அடுத்த வரியினுடைய தொடக்கமாக வரும். சீர் அமைப்பு என்பது,
"தக்கதொரு மகன் தோற்றம் தலைபிறப்பு..."
என்று வரும்போது, குறில், நெடில், அதனுள் இருக்கக்கூடிய சூட்சுமங்கள், எந்த இடத்தில் எந்த வார்த்தை வர வேண்டும் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
உண்மையான நாடி ஜோதிடரிடம், "ஐயா, என் ஓலையில் உள்ள விபரங்களை எனக்கு எழுதிக் கொடுங்கள்" என்று கேளுங்கள். எங்கேயும் நகராமல் உங்கள் கண் முன்னே எழுதி கொடுத்தால், உண்மையான நாடி ஜோதிடர்.
இன்றைக்கு ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு பொறுமை கிடையாது. உடனே பார்க்க வேண்டும், உடனே பலன் தெரிய வேண்டும் என்கிறார்கள். இங்கே ஒவ்வொரு காண்டம் பார்ப்பதற்கும் ₹2500, ₹5500, ₹12000 வரைக்கும் பெறுகிறோம். 12,000 ரூபாய் என்பது, இன்று முதல் ஒவ்வொரு வயதிலும் என்னென்ன நடைபெறும் என்பதை விரிவாக பலன்களை எழுதுகிறோம்.
கடந்த காலத்தை எடுத்துரைத்தால், பலருக்கும் பிடிக்காது. ஏனென்றால், அவர்களின் வருத்தமான விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்தும். ஆனால் நிகழ்காலத்தை பற்றி பேசினால், ஜோதிடத்திடம் முழுமையாக சரணடைந்து விடுவீர்கள்.இன்று உங்கள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை எடுத்து சொன்னால், நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.
நாடி ஜோதிடம் என்பது பிரதானமாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றி துல்லியமாக சொல்வது. எதிர்காலத்தை பற்றி ஒவ்வொரு பகுதியாக பிரித்து சொல்ல முடியும்:
கல்வி: குழந்தைகள் என்ன படிக்க போகிறார்கள்? எந்த துறையை தேர்ந்தெடுத்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும்.
உத்தியோகம்: எப்போது, என்ன மாதிரியான வேலை கிடைக்கும்? உள்ளூரிலே அல்லது வெளிநாடு, வெளிமாநிலத்தில் வேலை செய்வாரா?
காதல் & திருமணம்: எந்த வயதில் காதல் வரும்? காதல் கைகூடுமா அல்லது அவமானப்டுவாரா? காதலித்து திருமணம் செய்து கொள்வாரா அல்லது முறைப்படி திருமணம் செய்து கொள்வாரா?
சொத்துக்கள்: எப்போது வீடு, வாசல் அமையும்? எந்த திசையில் அமையும்? எந்த திசையை பார்த்து வீடு கட்டுவாரோ அல்லது வாங்குவாரோ ?
இவை அனைத்தையும் சொல்லலாம். ஆனால் பொறுமை வேண்டும். நான் ஊடகங்களுக்கு (Media) வர நினைத்திருந்தால், என்றைக்கோ வந்திருக்கலாம். நான் 1997-லே நாடி ஜோதிடத்திற்குள் வந்துவிட்டேன். 2009-லே நான் Skype மூலமாக இணையவழி வாசிப்பு (Online Reading) ஆரம்பித்துவிட்டேன். சொந்தமாக வலைத்தளம் ஆரம்பித்தேன்.
என் ஆத்மார்த்தமான விசுவாசிகள், என் குடும்ப நண்பர்களாக, உறுப்பினர்களாக மாறிவிட்டார்கள். அவர்கள் பலர் என்னிடம் பலமுறை, "நீங்கள் ஏன் ஐயா ஒரு youtubechannel ஆரம்பித்து பேசக்கூடாது?" என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களிடம், "அதெல்லாம் எதற்கு ? யாராவது விமர்சனம் செய்தால் என்னால் தாங்க முடியாது" என்று தவிர்த்து வந்தேன்.
ஏனென்றால், எங்கேயோ போய் ஏமாந்திருப்பார். ஆனால் கருத்து பெட்டியில் (Comment) வந்து பக்கம் பக்கமாக எழுதுவான், "ஏதோ உன் மன ஆதங்கத்தை நீ வெளிப்படுத்துகிறாய், அப்படியாவது உன் கோபமும், வேகமும் தணியட்டும்" என்று விட்டுவிடுவோம்.
நாடி ஜோதிட வழிகாட்டுதலால், வாழ்க்கையில் வளர்ச்சியடைந்த மனிதரின் வற்புறுத்தலினால் தான் youtube ஊடகத்திற்கு வந்தேன். ஆனால், வந்த பிறகு என்னுடைய மன அமைதி போய்விட்டது. நள்ளிரவு 12 மணிக்கும், 2 மணிக்கும் அழைப்புகள் (Call) வருகின்றன. நான் நிம்மதியாகத் தூங்கி மூன்று மாதங்கள் ஆகின்றன.
கடந்த முறை என்னை பார்த்ததற்கும், இப்போது என் உடம்பு இளைத்திருக்கிறது. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நன்றாக சாப்பிட முடியவில்லை. இவ்வளவு கஷ்டத்திற்கும் மத்தியிலும் எல்லோருடைய அழைப்பையும் மதித்து, முறையாக பதில் அளிக்கிறேன்.
நல்ல மனிதர்களை தேடி 4 இடங்களுக்கு போக வேண்டும். நான்கு பேரிடம் விசாரிக்க வேண்டும். அதற்கு 1000 அல்லது 2000 ரூபாயை கணக்கு பார்க்கக் கூடாது. வாழ்க்கையில் கண்டபடி பணத்தைச் செலவு செய்கிறோம். மூன்று மணி நேரம் திரையரங்கு சென்று பொழுதுபோக்குகிறோம் (Time pass). 400 ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்குகிறீர்கள். வெளியில் வெறும் 10 ரூபாய்க்கு விற்கின்ற 25 கிராம் மக்காச்சோளத்தை, (சாதாரணமாக ஒரு வானலியில் வெந்துவிடும்) 600 ரூபாய் கொடுத்து சாப்பிடுகிறீர்கள். வெளியில் 40 ரூபாய்க்கு விற்கின்ற ஒரு pepsi பாட்டிலை, திரையரங்கிற்குள் 200 ரூபாய் கொடுத்து குடிக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கைக்காக, ஏன் கணக்கு பார்க்கிறீர்கள் ?
ஓலையை தேடி எடுத்து, ஒரு குறிப்பேட்டில் (Notebook) எழுதி. நீங்கள் எப்படியெல்லாம் நன்றாக இருக்க வேண்டும், நல்வழிகாட்ட வேண்டும், உன்னதமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று முக்கியத்துவம் கொடுத்து, சந்தோஷமாக எங்களோட ஆற்றலை (Energy) உங்களுக்கு கொடுக்கும் போது, எங்களிடம் ஏன் கணக்கு பார்க்க வேண்டும் ?
யார் எப்போது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது விதிப்படி நடக்கிறது. 10 நாட்களுக்கு முன், முன்பதிவு (Appointment) செய்தவர் இன்னும் ஏடு அமையாமல், திடீரென்று நேரில் வந்து, உடனே ஓலை அமைந்து பலன் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆத்மார்த்தமாக கிரகங்களை ஆராய்ச்சி செய்ய்க்கூடிய உண்மையான ஜோதிடர்கள் இருக்கிறார்கள். நாம் தான் தேட வேண்டுமே தவிர, ஆராய்ச்சியோடு போகக்கூடாது. ஏனென்றால், இது தெய்வீக கலை(Divine).

ॐ