Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

பிரபல ஜோதிடரை எச்சரித்த நாடி

05 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
சிலர் கலைத்துறையில் திடீர் உச்சத்துக்கு வந்துவிடுவார்கள். ஆனால், காணாமலோ அல்லது அற்ப ஆயுளில் காலமாகி விடுவார்கள். இதை முற்பிறவி கர்மா தான் நிர்ணயிக்குதா ?
இளையராஜா ஐயா, ஒரு காலத்தில் கடுமையான வறுமையில் கஷ்டப்பட்டாலும், அதற்குப் பிறகு அசுர வளர்ச்சி தொடங்கி இன்றைக்கு புகழ் குறையவில்லை.

மகரிஷி சொல்வது, 'பதவி வரும் பொழுது நிதானம் தேவை, பணிவு தேவை.' சிலர் ஒரு படம் வெற்றி பெற்றவுடன், திடீரென்று குணம் மாறுகிறது. ஒரு மனிதன் வளரும் பொழுது, தன் பணிவை தக்க வைப்பது முக்கியமானது.

சனீஸ்வரன் யாரையும் நேருக்கு நேராகப் பார்க்க மாட்டார். குனிந்துதான் பார்ப்பார். அவர் பார்வைக்கு பலம் இருக்கு. அதனால்தான் சனி தலையை கீழே சாய்ந்தது மாதிரி நின்றிருப்பார். தன் பார்வை நேரடியாக மனிதர்கள் மேல் பட்டால் நன்றாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம்.

நாத்திகனாக இருந்த நான், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பின், இறை நம்பிக்கையால் என் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. துரோகிகளும் தீயவர்களும் என்னை விட்டு விலகியுள்ளனர். தற்போது எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நல்லதொரு வேலையுடன் மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.
நாடிச் சுவடியின்படி உங்களுக்கு உன்னதமான நேரம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் இன்னும் ரொம்ப நன்றாக இருக்கப் போகிறீர்கள்.

இந்த வார்த்தையை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை! என் தம்பி இறந்த துயர சம்பவத்தை, என்னோட விவாகரத்து, குழந்தைகளை பற்றி துல்லியமாக சொல்லியிருந்தீர்கள். என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று நீங்க கணித்துச் சொல்லணும்.
ஒரு மனிதனுடைய ஜாதகக் கிரக அமைப்புகள், அவனுடைய முற்பிறவி கர்மாவுக்கு கட்டுப்பட்டு இயக்குகிறது. "இதுதான் நடக்கும்" என்று எந்த ஒரு ஜோதிடரும் கூறி விட முடியாது. 'இப்படி நடக்கலாம்' என்று சொல்லலாமே தவிர, அதனை நடத்தி வைக்க வேண்டியது இறைவன்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருக்கும் பிரபல பெண் ஜோதிடர், என்னுடைய பழைய வாடிக்கையாளர் மூலமாக வந்திருந்தார். பிரபல பெண் ஜோதிடருக்கே நான் நாடி வாசித்த அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அவர்களுக்கு நகல் (Copy) அனுப்பியது, பின்னர் தெலுங்கு மொழியில் இரண்டு முக்கால் மணி நேரம் விளக்கம் கொடுத்திருக்கிறேன்.

அவருடைய கணவருக்கு ஆபத்தான நேரம். மூளை சம்பந்தப்பட்ட கோளாறுகள், மூளைக் கட்டி (Brain tumor) அல்லது பக்கவாதம் வரலாம் என்றும், மாபெரும் உயிர் கண்டம் என்றும் எச்சரித்துவிட்டோம். அந்த அம்மா தெலுங்கில் என்னிடம், 'என்ன இப்படி சொல்கிறீர்கள்?' என்றார். 'இதில் விளையாட்டு கிடையாது', என்று சொல்லிவிட்டோம்.

சில ஆகம முறைகளும் வந்தன. ஒரு வருடம் எட்டு மாதம் என்ற குறிப்பிட்ட காலத்தை கொடுத்திருந்தார்கள். சில பரிகாரங்களை மகரிஷி சொல்லியிருந்தார். அவர்கள் அதனை 'செய்கிறேன்' என்று சொல்லி விட்டுவிட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு பரிகார செலவு ஒத்துவரவில்லை. இங்கிருந்து கொல்லிமலைக்கு சென்று பரிகாரப் பூஜை செய்வது எளிதான விஷயம் கிடையாது. ஹோம திரவியங்கள், கலசங்கள், பூஜைக்குரிய பொருள்கள் ஆகியவற்றை மலைக்கு கீழிருந்துதான் கொண்டு செல்ல வேண்டும்.

எனக்கு ஒரு பூஜையை அரைகுறையாக செய்ய தெரியாது. உங்களிடம் நான் பரிகாரத்திற்கு 50,000 ரூபாய் வாங்குகிறேன் என்றால், 40,000 ரூபாயை செலவு செய்வேன். என்னுடைய குணம் இறைவனுக்கும் தெரியும். எனக்கு பூஜை செய்ய வரக்கூடிய ஒவ்வொரு சிவாச்சாரியாருமே வியந்து போவார்கள். நான் வாங்கும் பொருள்கள், இன்னும் ஊக்கப்படுத்தும், விசேஷமாக்கும்.

இதுவரைக்கும் நான் பரிகாரத்திற்கு வாங்கிய பணத்தை வைத்து, 'நாம் ஏன் செலவழிக்க வேண்டும்' என்று யோசித்திருந்தால், நான் கோடீஸ்வரனாக இருந்திருப்பேன். நான் கடனாளியாக இருந்திருக்க மாட்டேன். உங்களை நான் ஏமாற்றலாம், என்னை நீங்கள் ஏமாற்றலாம். ஆனால், கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன்.

இரவு நேரத்தில் மலைக் கோவிலில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்வது என்பது எளிது கிடையாது. ஆகம முறையில் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். 'நிசி பூஜை' இரவு 9:00 - 9:30 மணிக்கு ஆரம்பித்தால், விடியற்காலை 4:00 மணி வரைக்கும் பூஜை தொடரும். அத்தனை பொருள்களையும் இங்கிருந்து கொண்டு போவோம். அதற்காகவே ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும். சிவாச்சாரியார்களை அழைத்துக்கொண்டு செல்வதற்கு தனி வாகனத்தை எடுக்க வேண்டும். அங்கே உள்ளூர்வாசிகளிடம் அனுமதி பெற வேண்டும், அவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என நிறைய வழிமுறைகள் இருக்கின்றன.

பூஜைக்கு வருபவர்களுக்குச் சாப்பாடு மற்றும் தங்கும் வசதியிலிருந்து எல்லாவற்றையுமே நாங்கள் செய்ய வேண்டும். இதையே பொதுவாக 4 பேரை சேர்த்து வைத்து, தலா 10,000 வீதம் வாங்கி செய்தால் பெரிய தொகையாக தெரியாது. ஆனால், ஒருவருக்கு மட்டுமே பிரத்தியேகமாக செய்யும்போது, பெரிய தொகையாக இருக்கும்.

அதன் பிறகு அந்த பெண் ஜோதிடர் இரண்டு நாள்களாக எங்களிடம் பேசிக்கொண்டே இருந்தார். நான் பூஜையை பற்றி அவரிடம், 'அம்மா, இது உயிருக்கு ஆபத்தான விஷயம் என்று சொல்கிறார்கள். திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்தால் செலவு செய்துதானே ஆக வேண்டும்? என்றேன். நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென்று அழைப்பை துண்டித்துவிட்டார். என்னவென்று விசாரித்து பார்த்தால், அவருடைய கணவருக்கு திடீரென்று பக்கவாதம் வந்துவிட்டது. ஒரே அழுகையும் கூச்சலும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.

அடுத்த 2 நாள்களில் வருகிறேன், பரிகார பூஜையை செய்து கொடுங்கள் என்றார்கள். உடனே ஏற்பாடு செய்து, பூஜையை முடித்துவிட்டோம். அதன் பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அப்பொழுதே நாடியில் மகரிஷி சொன்னது, 'இந்த நேரம் ஒரு 'உயிர்பலி' கேட்கக்கூடிய, கர்ம காரியங்கள் செய்யக்கூடிய கண்ட நேரமாக இருக்கிறது. இதற்கு பரிகாரமாக "ஒரு எருமைக் கடா (ஆண் எருமை காளை மாடு) வாங்கி ஒரு கோவிலுக்கு தானமாக கொடுங்கள்" என்று வந்திருந்தது.

அதன் பிறகு 'மகாமிருத்தஞ்சய ஹோமம்' செய்ய சொல்லியிருந்தார். திருக்கடையூர் தலம் என்பது எமனை ஈசன் சம்ஹாரம் செய்த மாபெரும் தலமாகும். எல்லாமே சிவன் கோவில்தான் என்றாலும், அந்தந்த தலத்தில் நிகழ்வு நடந்திருந்ததால், அதற்கான vibe ஈர்ப்பு சக்தி இடத்திற்குத்தான் செல்ல வேண்டும்.

ஆனால் அவர்கள், 'இல்லை, நாங்கள் எங்கள் ஊரிலேயே செய்கிறோம்' என்று சென்றுவிட்டார்கள். நேற்று முன்தினம் காலையில் பெண் ஜோதிடரை பரிந்துரை செய்தவர்கள், தொலைபேசியில் அழைத்தார்கள்: 'அவருடைய கணவர் மிகவும் அபாயக் கட்டத்தில் இருக்கிறார். ஏதாவது பிரார்த்தனை செய்ய முடியுமா?' என்று கேட்டார்கள்.

நான் மிகவும் வருத்தப்பட்டேன். 'ஏம்மா, பெரிய விபரீதம் இருக்கிறது என்று எச்சரித்தும், எவ்வளவோ விஷயங்களுக்கு செலவு செய்கிறார்களே, இதற்கு ஏன் ஒத்துக்கொள்ளாமல் போனார்கள்?' என்று கேட்டேன். அடுத்தபடியாக, அன்றைய தினமே மாலை தொலைபேசி அழைப்பில் 'அவருடைய கணவர் இறந்துவிட்டார் ' என்று.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், 'தீர்வு, பரிகாரம் உண்மையா? மகரிஷி பரிகாரத்தை முன்னாடியே சொல்வாரா?' என்று கேட்கிறார்கள். பிரச்சினையை அவர்தானே சொல்லியிருக்கிறார்?. அதிலிருந்து காப்பாற்றி கொள்வதற்கான வழிமுறையை சொல்கிறார். ஆனால், comment-ல் 'விதியை மாற்ற முடியாது' என்று எழுதுவார்கள். இது துணிந்து சந்திக்கக்கூடிய (Risk) விஷயம் கிடையாது.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.