Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

நாடி ஜோதிடம் என்றால் என்ன ? - 3

03 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
ஏன் ஆண்களுக்கு வலது கை ரேகையும், பெண்களுக்கு இடது கை ரேகையும் பயன்படுத்தப்படுகிறது ?
பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சித்தர்கள் அடிப்படையினுடைய மரபுதான் இந்த ரேகை. இது அறிவியலோடு பொருத்தலாமா, பொருத்தக் கூடாதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், சித்தர்களுடைய அனுபவம், மரபதான் என்பதை மகரிஷிகள் குறிப்பிடுகிறார்கள்.

ஆணின் வலது கை என்பது 'சூரிய நாடி'. பெண்களுக்கு இடது கை என்பது சந்திரனுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதாக மகரிஷிகள் ஞானத்தினால் உணர்ந்திருக்கிறார்கள் என்பது சூட்சுமம்.

ஒருவரின் ரேகைக்கு 2 – 3 ஓலைகள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா ?
பொதுவாக ஒரு மனிதனுடைய பாகங்கள் 19-ஆகப் பிரிக்கப்படுகிறது. எல்லாருமே 12 பாகங்கள் என்பது அடிப்படை. அதை 12 காண்டங்களாக பிரிக்கிறோம். 12 காண்டங்களுக்காக தனித்தனி ஓலைகள் இருக்கிறது. அதை தாண்டி என்ன இருக்கிறது ? முந்தைய ஜென்மத்தை, தற்போதைய பிரச்சினையை பற்றி பேசுகிறோம். தசாபுத்திகள் பற்றி நிறைய மகரிஷிதான் பேசுகிறார்கள். ஜோதிடம் வந்து கர்மவினைக்கு கட்டுப்பட்டது, ஔடதங்களை (மருத்துவ முறைகளை) பற்றி பேசியிருக்கிறார்கள். இதையும் ஒரு பாகமாக, தனி காண்டங்களில், சிறப்பு நூல்களாக பிரிக்கிறோம்.

அக, ஒரு மனிதனுக்கு ஒரு ஓலை என்று கிடையாது. அகஸ்திய மகரிஷி எழுதியிருக்கின்ற ஓலை என்னிடம் இருக்கிறது. வேறொருவர் சிவவாக்கிய மகரிஷி எழுதின ஓலைகளை வைத்து படித்துக் கொண்டிருப்பார், அவரிடம் போனால் அவர்களுக்கான ஓலைகள் இருக்கலாம். அகஸ்திய முனி மகரிஷியே, ஒரு மனிதனை மூன்று விதமாக எழுதியிருக்கிறார். ஜாதகமே இல்லாதவர்களுக்கும், "எனக்கு ஜாதகம் இருந்தால் போதும்" என்றும் வருகிறார்கள். சிலர், "என்னை பற்றி ஆழமாக, ரொம்ப நுணுக்கமாக சொல்ல முடியும்?" என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். மகரிஷிகள் எழுதியதையும் பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.

உங்களிடம் இருப்பது அகத்தியர் எழுதின நாடி ஜோதிடம். இன்னொருத்தரிடம் வேறொருவர் எழுதினதும் இருக்கும் என்று சொல்கிறீர்கள். உங்களிடம் பார்க்கக்கூடிய பலனும், வேறொருவரிடம் பார்க்கக்கூடிய பலனும் வேறாக இருக்குமா ?
திருக்குறளுக்கு 3 – 4 பேர் உரை (விளக்கம்) எழுதியிருக்கிறார்கள். எழுதிய விதம், சொல்லக்கூடிய சொல் மாறுபட்டு இருக்கும், ஆனால் பொருள் ஒன்றாகத்தான் இருக்கும். அகஸ்திய மகரிஷி

"மகனிவனும் நிலைதோன்றும் அந்த மட்டம்"
என்று சொன்னால், அதையே சிவவாக்கியர்

"மகன் தனக்கு நிலைதோன்றும் மாறா அந்தம்"
என்று சொல்லுவார். 'அந்தம்' என்றால் கடைசி காலங்கள் வரைக்கும். சிவவாக்கிய மகரிஷி 'மாறா அந்தம்' என்கிறார். இது இரண்டும் ஒன்றுதான். சொல்லக்கூடிய பாடல்கள் மாறுபடலாமே தவிர, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்களோ, அதையே தான் இவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உண்மையான ஓலையில் அப்படித்தான் இருக்கும். நான் புதிதாக, வித்தியாசமாக சொல்ல நினைத்தால், அங்கே தவறுகள் நடக்கிறது என்பது உண்மை.

நாடி ஜோதிடம் மூலமாக கடந்த காலத்தை தெரிந்துகொள்வதால் பயன் என்ன ?
பிறப்பிலிருந்து கூட நம்மளுடைய வாழ்க்கையை துல்லியமாக சொல்ல முடியும். ஆனால், அது எல்லாருக்கும் சந்தோஷத்தை தராது. சிலருக்கு பழையதை நினைவு படுத்தினாலே, "ஏங்க, அதை பேசிக்கிட்டு..." என்பது மாதிரி சொல்லிவிடுவார்கள். "நான் அதையெல்லாம் மறந்து வெளியில் வர வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது மீண்டும் அதைப்பற்றி பேச வேண்டாம், இனிமேல் வரக்கூடியதை "புதிய தொடக்கமாக (fresh) வேண்டும்" என்று நினைக்கிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு, தற்போதைய நிலை, எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

தற்போதைய வாழ்க்கையை துல்லியமாக எடுத்து கொடுத்தால், அடுத்து சொல்வது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக பதிந்துவிடும். எதிர்காலத்திற்கு முக்கியமானதை முதன்மைப்படுத்தி, விளக்கத்தை கொடுக்கிறோம்.

இன்றைய வாழ்க்கை எல்லாரும் சந்தோஷமாக வாழ்வது இல்லை. எதிர்பார்ப்புகள் நோக்கி போகும் பொழுது, முழுமை தராத நிலையில், ஏமாற்றம் ஆகிறது. அப்போது ஏமாற்றம் ஏன் என் வாழ்க்கையில் நடக்கிறது?" என்ற கேள்வி உங்களுக்குள் உருவாகிறது.

உதாரணத்திற்கு, நீங்கள் நல்ல தரவரிசையில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல தொழிலோ, வேலையோ இல்லாமல் இருக்கும். "தேர்ச்சி பெற்றால் போதும், ஒரு பட்டம் கையில் இருந்தால் போதும்" என்று நினைத்தவர்களுக்கு, யோசிக்க முடியாத அளவுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம் அல்லது தொழிலதிபர்களாக இருக்கலாம். நல்ல தரவரிசையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன தோன்றும் ?

கடின உழைப்பு போடாதவர்களுக்கு கிடைத்திருக்கிறதே !
உண்மையான உழைப்புக்கான அங்கீகாரம், திறமைக்கான பலன் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம், வலி இருக்கும். "நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை, எனக்கு சரியாக அமையவில்லை" என்று வருவீர்கள். ஆசைப்பட்டது கிடைக்காத பட்சத்தில், அது நியாயம், நியாயமற்றது என்பது இரண்டாவதாக வரும். நம்மளுடைய கர்மாவை பற்றி மனது சிந்திக்க ஆரம்பிக்கும். அந்த கர்மா என்ன என்பதை மகரிஷிகள் நமக்கு எழுதியிருக்கிறார்கள். நம்மளுடைய வாழ்க்கையை சரி செய்து, இனிமேல் உள்ள காலத்தை நன்றாக வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

கர்மாவை பற்றி அல்லது வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்வுகள், எந்த அளவிற்கு துல்லியமாக கணிக்க முடியும் ?
என்னுடைய அனுபவத்தில், மகரிஷி ஒரு மனிதனுடைய இறப்பின் வயது, மாதம், தேதி, நட்சத்திரம், திதி, எப்படிப்பட்ட மரணம் என்பது வரைக்கும் சொல்லியிருக்கிறார். "இனிமேல் எப்படி வாழப்போகிறார்கள்" என்பதை கண்டிப்பாக சொல்லியிருப்பார்.

நிறைய பேர் பலன் தெரிந்து கொண்ட பிறகு, "என்னுடைய பிறப்பினுடைய ரகசியம் இதுதானா? வாழ்க்கையின் நோக்கம் இவ்வளவு இருக்கிறதா? இனிமேல் நல்ல வாழ்க்கையாக போகட்டும். இதுவரைக்கும் செய்த தவறுகள், அற்பத்தனமான வாழ்ந்து விட்டேனே" என வருத்தப்பட்டு, திருந்தி வாழ்கிறார்கள். தவறுகளை உணர வைப்பதற்கு நாடி ஜோதிடம் ஒரு மூலப்பொருளாக இருப்பது தான் இதனுடைய சூட்சுமம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.