வேத ஜோதிடத்தை இணையம் மூலமாக எங்கிருந்தும் பார்க்க முடியும். நாடி ஜோதிடத்தை தூரத்தில் இருப்பவர்கள் எவ்வாறு பார்க்க முடியும் ?
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசித்து வந்தவர்கள், தங்களுடைய கைரேகையை காகிதத்தில் பதிவு செய்து, அதை Scan செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள். அப்போது ஆலோசனை வழங்கப் பயன்படுத்தப்பட்ட முறை Skype. இப்போது, WhatsApp மூலம் ரேகையை அனுப்பினால், அந்த ரேகைக்கான ஓலைச்சுவடியில் உள்ள பலன்களை Zoom அல்லது Google Meet வாயிலாக பார்க்க முடியும்.
ஜாதகம் பார்க்கும்போது, "அதிர்ஷ்டக்காரன், எல்லா கிரகமும் கச்சிதமாக உட்கார்ந்து இருக்கு" என்று நிலை அமையும். அதேபோல் ஓலைச்சுவடிகளில் பார்க்கும்போது, அதிர்ஷ்டங்கள், யோகங்கள் இருக்கின்ற விஷயங்கள் வருமா?
கட்டாயம் உண்டு. ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஒருவேளை சாப்பாட்டிற்குத் கஷ்டப்பட்டவர்களுக்கு நல்லபடியாகப் படித்துக் கொடுத்திருக்கிறோம். இன்றைக்கு நல்ல வசதியாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அதில் உண்மையான ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.
என்னுடைய தந்தையார் ஒரு புதிய தம்பதியுடைய குழந்தைக்கு நாடி ஜோதிட பலன் சொல்லும்பொழுது, தகப்பனாருக்கு நம்பிக்கை வரவில்லை. "அடப்போய்யா ஜோசியர்! நான் இன்றைக்கு ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்படுகிறேன். இந்தப் பொண்ணு வளர்ந்து, சொந்த car-ல் தான் சீதனமாகப் போகும் என்று சொல்கிறாயே ?, இது எங்கேயாவது பொருந்துமா ? , "பொய் சொல்லாதே" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய தந்தையார், "இது நடக்கவில்லை என்றால், நான் இந்தத் தொழிலை விட்டுவிடுகிறேன்" என்று சவால் விட்டுருக்கிறார்.
நான் நாடித் தொழிலுக்கு வந்த புதில், 1997-இல், எங்களூரில் கொஞ்சம் விவசாய நிலங்கள் இருக்கின்றன. என்னுடைய அண்ணன், "நீ சென்று என் பேரைச் சொல், நெல் வியாபாரி பணம் கொடுப்பார், வாங்கிட்டு வந்துவிடு" என்றார். நான் அங்கு போகிறேன். "யாரடா நீ?" என்றார். உடனே பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மிராசுதார், "அவன்தான் உன்னுடைய குருவினுடைய பையன்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே, அவர் என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார். "நாடி ஜோதிடத்தில் உங்க அப்பனைத் தட்டிக்கொள்ள யாரும் கிடையாது. அன்றைக்கு அவர் பார்த்த சாஸ்திரத்தை இன்றைக்கு நான் யாரிடமுமே காட்டவில்லை" என்று சொல்கிறார். அவர் நெல் வியாபாரம் பண்ணி, பெரிய அளவில் வளர்ந்து, சொந்தமாகக் car வாங்கி, அதில் தன் பெண்னுடைய பெயரை எழுதி, சீதனமாக கணவன் வீட்டிற்குப் போகிறது. இது ஓர் அதிர்ஷ்டம். இது மாதிரி நிறைய இருக்கிறது.
சிலர் குலதெய்வம் தெரியாமல், இஷ்ட தெய்வத்தையே குலதெய்வமாக வணங்குகிறார்கள். நாடி ஜோதிடத்தில் குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?
நாடி ஜோதிடத்தில் எதற்குமே விடை இல்லை என்று கிடையாது. இதில் விடை இல்லை என்றால் நீங்கள் எதிலுமே கண்டுபிடிக்க முடியாது, நம்மளுடைய முன்னோர்களும், நமக்கு பிறக்கக்கூடிய குழந்தையும், நம்மளுடைய குலதெய்வத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இந்த விஷயம் நம்மளுடைய பூர்வ ஜென்மத்தினுடைய கர்மாவைத் தொன்றுதொட்டு வரக்கூடிய விஷயங்கள். குலதெய்வத்தை தாராளமாக கண்டுபிடிக்கலாம்.
ஒருத்தருடைய குடும்பத்திற்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும், லாபம் வரும் என்பதை ரேகையை வைத்துச் சொல்ல முடியுமா?
கண்டிப்பாகச் சொல்லலாம். குழந்தையினால் தாய் தந்தை கஷ்டப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது அல்லது தாய் தந்தையினால் குழந்தை பாதிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது, சில குடும்பத்தில், குழந்தை வளர்ந்து, வேலைக்குப் போய் சம்பாதித்தால் தான் குடும்பத்தைக் கரை சேர்க்க முடியும் என்று விதி இருக்கிறது. அப்பொழுது அவன் கஷ்டத்துடனே, சுமையுடனே வளர்கிறான், சில குடும்பத்தில், "அவன் நம்மிடம் வந்து நிற்காமல் இருந்தால் போதும்". அந்தப் குடும்பத்தில் ஏற்கனவே அதிகமான சொத்து சுகங்கள் இருக்கும். இந்த இரண்டுமே கர்மாவைச் சம்பந்தப்படுகிறது. ஒருத்தருடைய கர்மா கிடையாது. அந்தக் குடும்பத்தில் அப்பாவினுடைய, அம்மாவினுடைய, குழந்தையின் ஆன்மாவிற்கும் தொடர்பு இருக்கிறது. ஒருத்தருடைய சாபமாக அந்தக் குடும்பத்திற்குத் கட்டாயம் வராது.
ஒருத்தர் ஒரு தடவை நாடி ஜோதிடம் பார்த்தால் போதுமா? அல்லது அடுத்தடுத்து பார்க்க வேண்டுமா ?
அதிசூட்சும நாடி பார்த்துவிட்டல் திரும்ப பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு தடவை பார்த்தாலே போதும். அதில் "இந்த வயதில் இவர் இப்படித்தான் வாழப் போகிறார். இடைப்பட்ட காலகட்டத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது" என்பதைச் சொல்லி விடுவோம். 2 – 5 வருடம் கழித்து நமக்கு நினைவில் நிற்காது. பலனை பதிவு செய்து கொடுப்போம், சில நேரத்தில் நேரடியாகக் கேட்டால் இன்னும் தெளிவு கிடைக்கும் என்று நினைப்போம். அந்த மாதிரி சமயத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட வயதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் படித்துத் தெரிந்து கொள்ளலாம், அதுவே போதுமானது.
"எனக்கு இந்த வயதில் இன்னும் கூடுதல் விவரங்கள் வேண்டும்" என்று வரும்பொழுது, "இந்த நேரத்தில் இதைச் செய்யலாமா?" என்று நம்மளால் முடிவெடுக்க முடியாதபட்சத்தில், மகரிஷி அதற்கு ஒரு தீர்வு கொடுப்பார்கள். அதை பிரசன்னம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் நம்மளுடைய கர்மா என்ன சொல்லப்படுகிறது?, தொழிலைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா?, முதலீடு பண்ண சரியான நேரமா? என்பதை சம்பந்தப்பட்ட பாடத்தை (Subject-ஐ) மட்டும் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
பலர் கிரகப் பெயர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தப் பெயர்ச்சிகளுக்கும் நாடி ஜோதிடத்தில் வருமா?
சாதாரண ஜோதிடங்களுக்கும், நாடி ஜோதிடத்திற்கும் சம்பந்தமே கிடையாது. இந்த வயதில் மகரிஷி பலன் சொல்லும்பொழுது, அப்போதைய கிரக நிலை நமக்கு எப்படி இருக்கிறது என்பதை ஓர் ஒப்பீடு மட்டும் பண்ணிக்கொள்ளலாம். கிரகப் பெயர்ச்சி என்பது பொதுவாக சொல்வது தவறு. இதனால் ஒரு ஊடகத்தில் (Media) இருந்து என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
மேஷ ராசியில் பிறக்கும்பொழுது, கிரகங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்றன, நான் இந்தத் திசையில்தான் பிறந்திருக்கிறேன் என்ற ஓர் அடிப்படை இருக்கிறது. 5-வது இடம், புத்திர ஸ்தானத்தைப் பற்றி நான் தெரிந்துகொள்ள நினைக்கிறேன். குரு பெயர்ச்சி என்ன சொல்லுவார்கள், "நான் மேஷ ராசியாக இருக்கிறேன் என்றால், இந்த குரு பெயர்ச்சி நல்ல அமைப்புகளில் இருக்கிறது என்றால் இந்த வயதில் குழந்தைப் பாக்கியம் உண்டு" என்கிறார்கள். இது பொதுவான கருத்து. 5-வது பாவகம், நல்ல அமைப்பினைப் பெற்றிருந்தால் மட்டுமே கோச்சாரப் பலன், கிரகப் பெயர்ச்சி நமக்குச் சாதகமான பலனைக் கொடுக்கும். ஒருவேளை இந்த ஸ்தானம் நமக்குக் கெட்டுப் போய் இருந்து, வரக்கூடிய கிரகப் பெயர்ச்சி பலன் தராது. இந்த இடத்தில் வரும்பொழுது நிறைய பேர் அதில் பாதிக்கப்படுகிறார்கள். ஜாதகத்த அடிப்படையாக பிறக்கும்பொழுது, கிரகங்கள் என்ன இடத்தில் உட்கார்ந்திருக்கிறதோ அதுதான் வேலை செய்யும். அதற்கு உதவியாக இருப்பதுதான் இப்பொழுது உள்ள கோச்சாரக் கிரகம், கிரகப் பெயர்ச்சி.
ஒருவனுக்கு பாதகாதிபதி தசை நடக்கும்பொழுது, கெட்ட தசா காலங்கள் வரும்பொழுது, கோச்சாரம் நல்லதாகச் செயல்பட்டால் எப்படி அதைச் சமநிலைப்படுத்துவான். கோச்சாரம் என்றால் குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்று சொல்கிறீர்கள். அது நல்லதாக இருக்கும்பொழுது, தசாபுத்தி கெட்டதைத் தரும்பொழுது, போட்டியாளர் அங்கே என்ன ஆகும் ? நிறைய முரண்பட்ட கருத்துக்கள் வரும். ஒன்று நல்லது செய்ய நினைக்கும், மற்றொன்று கெட்டது செய்ய நினைக்கும். அப்பொழுது அந்த நேரத்தில், பிரச்சினையாக முடியும். ஜாதகத்தில் ஒரு மனிதன் பிறக்கும்பொழுது உள்ள கிரக நிலை தான் பேசும். அதற்கு கூடுதல் உதவி என்பது கோச்சாரம்.
நாடி ஜோதிடத்தில் பரிகாரங்கள் சொல்லும்போது 'கர்ம பாக்கியம்' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதற்கு என்ன பொருள் ?
எல்லாமே கர்மாதான். பாக்கியம் என்றால் அதிர்ஷ்டம். பாவ கர்மா மற்றும் புண்ணிய கர்மா இருக்கிறது. அதில் பாவ கர்மாவை நிவர்த்தி பண்ணிட்டு, புண்ணிய கர்மாவைச் செயல்படுத்துவதுதான் (Activate) பரிகாரம். அது நமக்கு பாக்கியமாக மாறுகிறது,
சூட்சும நாடி, சிறுநாடி என்பது என்ன?
சிறுநூல், சிறுநாடி என்பது அடிப்படை அளவில் (Basic) சொல்வது. ஜாதகம் தெரிந்தால் போதும் அல்லது பொதுவாக வாழ்க்கை என்ன? என்று தெரிந்தால் போதும் என்பதற்கு சிறுநூல்.
சூட்சும நாடி என்பது நம் பிறப்பு முதல் இறப்பு வரை ரொம்ப விளக்கமாக கொடுப்பது. இவர்கள் பார்க்கிற வயதில் இப்படித்தான் வாழப் போகிறார்கள் என்பது ரொம்ப விளக்கமாக வரும். அதில் எல்லாமே அடங்கிவிடும். அதன் பின் வேறு எதுவும் தேவைப்படாது. எந்த வயதில், எந்த மாதத்தில், எந்தத் திதியில், என்ன மாதிரியான தருணத்தில் அவருடைய இறப்பு வரும் என்பது வரைக்கும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதனுடைய எந்த வயதிலிருந்து எந்த வயது வரை ஓலைச்சுவடியில் இருக்கும் ?
பிறந்த குழந்தைக்கு நாடி பார்க்கலாம். ஒரு வயதில் இருந்து நாடி ஜோதிடம் பார்க்கலாம். இரண்டு வயது குழந்தை ஏதோ ஒரு இக்கட்டான நிலையில் (Critical) இருந்தால், அந்த நேரத்தில் அவர்களால் முடிவெடுக்க முடியாது. அதற்கு மகரிஷி என்ன தீர்வு கொடுக்கிறார் என்பதை நாடியில் பார்க்கலாம். ஆனால் குழந்தையுடைய ஆயுள் வரைக்கும் பலனை எதிர்பார்ப்பது தவறு. 18 வயதிற்கு பின் ரேகை மாறுபடும். ரேகைக்கு வளர்ச்சி உண்டு, அப்பொழுது 18 வயதிற்கு பின் திரும்ப அந்த குழந்தையினுடைய நாடியை எடுத்து பார்க்கிறது மாதிரி வரும். அதன் பின், வயது வரம்பே கிடையாது. 70 வயதிலும் பார்க்கலாம்.
குழந்தைகள் பிறக்கும் பொழுதே இதயத்தில் பிரச்சினையோடு பிறக்கிறது. மூன்று வயதில் திறந்த இதய அறுவை சிகிச்சை (Open heart surgery) செய்கிறார்கள். அது மாதிரியான நேரத்தில் நாடி ஜோதிடம் ரொம்ப உதவியாக இருக்கிறது. நிறைய குழந்தைகளுக்கு வயதிற்கான வளர்ச்சிகள் மாறுபடுகிறது. Pre-maturity என்று சொல்லுவர்கள். அப்படியிருக்கும் பொழுது, அந்தக் குழந்தையை எப்படி அடுத்த நிலைக்குக் கொண்டு போக வேண்டும் என்பதற்கு மகரிஷி விளக்கம் கொடுக்கிறார்கள்.

ॐ