தோஷங்களைப் பற்றி விளக்குங்கள். எந்த மாதிரியான பாதிப்புகள் இருக்கும்?
நான் பார்த்த அனுபவத்தில் ராகு கேது தோஷம் என்பது ரொம்பவும் கொடுமையான தோஷம். லக்னத்தை வைத்துத்தான் ஒவ்வொரு ஸ்தான பலனும் நிர்ணயம் பண்ணப்படுகிறது. லக்னத்தில் அல்லது லக்னத்துக்கு 2-ம் இடத்தில் ராகு கேது இருந்தால் பாதிக்கப்படுவார்கள். அவர்களை திருப்திப்படுத்தவே முடியாது. அவர்களுக்கு வாழ்க்கைத்துணை அதே போன்று அமைவார்கள். அந்த பலனை நிறைவேற்றக்கூடிய வகையில்தான் வரக்கூடியவர்களும் அமைவதுண்டு.
ராகு, கேது என்பது பாம்பு. பாம்பு என்றாலே விஷம். நவகிரகங்களில் ராகு கேது ரொம்பவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். பாம்பை நடுவீட்டில் வைத்து வளர்த்தாலும் கூட, அது விஷத்தைத்தான் கக்கும். அமிர்தத்தை கக்காது. ராகுவின் குணம் என்பது ஏதாவது ஒரு வழியில் நம்முடைய மனதிற்கு ஏமாற்றம் தரக்கூடிய வகையில் செயல்படும். அவர்கள் ஒரு இடத்தில், ஒரு மனநிலையில் இருக்க மாட்டார்கள். சுத்திக்கொண்டே (Travel) இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவர்களுக்கு கணவனால் அல்லது மனைவியால் முழுமையான சந்தோஷம் கிடைக்காது. அவர்களும் உண்மையாக வாழ மாட்டார்கள்.
அதே நேரத்தில், லக்னத்துக்கு 2-வது இடம் குடும்ப ஸ்தானத்தில், பாம்பு ராகு கேது இருந்தால் அல்லது 7-8-ல் சனி, ராகு, கேது, செவ்வாய் இருந்தால், ஜாதகருக்குக் கணவனோ மனைவியோ தங்க மாட்டார்கள் என்று ஒரு பலன் சொல்வார்கள்.
2-ம் இடம் என்பது குடும்பம், வாக்கு. 2-ம் இடத்தில் உட்கார்ந்திருக்கக்கூடிய ராகு அல்லது கேது, நேரடியாக 4-வது இடத்தை, 3-ம் பார்வையாக பார்க்கும். அவர்களுடைய சுகங்கள், குடும்பம் கெட்டுப்போகும். கல்யாணத்துக்கு முன் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கும், வாழ்க்கை ஏமாற்றமாக இருக்கும். இவர்தான் கணவன் அல்லது மனைவி என்ற தீர்மானத்துக்குப் பிறகு கூட, வாழ்க்கை ஏமாற்றமாகிவிடும் அல்லது அவர்களுக்கு இருதார வாழ்க்கையாக இருக்கும். அதைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது.
நடிகை சமந்தாவுக்கு கூட, ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தது என்று சொல்வார்களே ?
அவர்களுடைய ஜாதகத்தை நான் பார்த்தது இல்லை. ஜாதகத்தில் லக்னத்திலோ 2, 7, 8-ல் ராகு கேது இருப்பதை என்னால் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அவர்கள் கேட்கும் கேள்வியிலேயே எனக்கு விஷயம் என்னவென்று தெரிந்துவிடும். 'இப்படித்தான் உங்களுடைய கேள்வி இருக்கும்' என்பது எனக்கு தெரியும். அதைப் பற்றி நாம் ரொம்ப ஆய்வு செய்ய வேண்டாம். தனிப்பட்ட முறையில், தங்களுடைய நாடியை எடுத்து பார்த்து, எப்படி வாழ வேண்டும் என்ற தீர்வை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆணுக்கு, பெண்ணுக்கு எந்தக் கை ரேகை பார்ப்பீர்கள் ?
ஆண்களுக்கு வலது கை ரேகை பார்க்க வேண்டும். வலது கை என்பது சூரிய நாடி. பெண்களுக்கு இடது கை ரேகை பார்க்க வேண்டும். இடது கை என்பது சந்திர நாடி. அதனால் தான் பரமேஸ்வரன், பார்வதி தேவிக்குத் தன் உடலின் இடது புறம் இடம் கொடுத்திருக்கிறார். இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாடியே மகரிஷிகள் பின்பற்றிய முறை.
உங்களிடம் ரேகை கொடுத்துவிட்டுப் போனால், அப்பொழுதே அதற்கான பலனை சொல்வீர்களா? குறிப்பிட்ட சில நாட்கள் கழித்து வரச் சொல்லுவீர்களா?
இன்றைக்கு வேலை பளு அதிகமாயிவிட்டது, நேரம் போதவில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு நேரம் கொடுக்கிறோம். ஒரு சாதாரண மனிதன் 8 மணி நேரம் வேலை பார்த்தால், நாங்கள் 16 மணி நேரம் வேலை பார்க்கிறோம். ஒருத்தருடைய மனதை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்து நாங்கள் வேலை பார்க்கின்ற அதே அளவுக்கு எங்களால் அவர்களை உடனே திருப்திப்படுத்த முடியாமல் போகிறது.
ஒருவர் வந்து ரேகை கொடுத்தால், அதற்கான ஓலைச்சுவடி இருப்பதை அடுத்த 1 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தி விடுவோம். அதற்கான ஓலை கிடைத்த பிறகு, அவர்களை முன்னால் உட்கார வைத்து, அந்த ஓலையில் உள்ள அனைத்து விஷயங்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி, பின்னர் அதைப் படித்து audio பதிவு செய்வோம். அதன் பிறகு, அந்த நோட்டுப் புத்தகத்தையும், audio பதிவின் நகலையும் அவர்களிடம் வழங்கிவிடுவோம்.
ஒரு வாடிக்கையாளருக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறோம். ஏனெனில், வருபவர்கள் பெரும்பாலும் “என் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா?” என்ற எதிர்பார்ப்புடன்தான் வருகிறார்கள். 99.9% பேர் ஒவ்வொரு விதமான பிரச்சினையுடன்தான் வருகிறார்கள். அதை நாங்கள் முழுமையாக ஆராய்ச்சி செய்கிறோம். அந்தப் பிரச்சினை எங்கிருந்து உருவாகிறது? எந்தக் கர்மாவால் உருவாகிறது? ஏன் அவர்களால் மீண்டு வர முடியாமல் போகிறது? ஏன் பல கோயில்களுக்கும் சென்றும் பலன் கிடைக்காமல் போகிறது? என்பதை ஆராய்ந்த பிறகுதான் பலன்களை சொல்கிறோம்.
எங்களிடம் பார்த்த பிறகு, அவர்கள் வேறு எங்கும் சந்தேகத்துடன் செல்லக் கூடாது என்பதே எங்களுடைய கொள்கை. அதற்காகவே நான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன். “ஒரு மணி நேரத்தில் படித்துக் கொடுத்துவிட்டு, அடுத்தவர்களை பார்க்க வேண்டும். வெளியே காத்திருக்கிறார்கள்” என்ற அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுவதில்லை. ஒருமுறை உள்ளே வந்துவிட்டால், அவர்களுக்கு முழுமையான தெளிவை அளித்து, தீர்வுகளையும் கொடுத்து அனுப்புகிறோம்.
நாடி படிக்கும்போது, “இது என்னுடைய நாடி தான்” என்பதை எதிரில் இருப்பவர்கள் எப்படி நம்புவார்கள்?
உங்களுடைய நாடியை நான் எடுக்கிறேன். நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. உங்களைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் வெளிப்படையாக சொல்கிறேன். அவை சரியாக இருக்கின்றன என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், அதன்பிறகு தொடரலாம்.
உங்கள் காதல் (Love break-up) எப்போது முறிந்தது, எதனால் முறிந்தது என்பதையும் கூறுவேன். அது வெறும் காதலாக மட்டும் இருந்ததா அல்லது அதற்கும் மேல் ஏதேனும் உறவு இருந்ததா என்பதையும் சொல்வேன். அந்தரங்கம் பற்றி எல்லாமே (A to Z) வந்துவிடும். அது உண்மையாக இருந்தால் நீங்கள் ஒத்துக்கொண்டுதானே ஆக வேண்டும்.
அப்பா அம்மா பெயர்?
அப்பா, அம்மா பெயர்கள் மட்டுமே அடையாளம் கிடையாது. அவற்றை மட்டும் அடையாளமாக எடுத்துக்கொண்டால், பல இடங்களில் நாடி பார்ப்பது தவறாக போவதற்கு காரணமாகிவிடும்.
உதாரணமாக, என்னுடைய அப்பா பெயர் பழனிச்சாமி என்றால், அதே பெயருடன் பலர் இருப்பார்கள். அதுபோலவே, ஒரே பெயரைக் கொண்ட பலர் இருப்பார்கள். ஆனால், உங்கள் வாழ்க்கையின் கிரக நிலைகள், இதற்கு முன்பு நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் பேசுவதுதான் உண்மையான நாடி ஜோதிடம்.
நாடி ஜோதிடத்தில், நம் முன்பிறவியில் என்னவாக இருந்தோம், அடுத்த பிறவி இருக்கிறதா என்றெல்லாம் சொல்ல முடியுமா?
கண்டிப்பாக சொல்லலாம். கர்மாதான் எனக்கு இவ்வளவு பிரச்சினையைக் கொடுக்கிறது. நான் என்ன பாவம் செய்தேன், 'எனக்கு பரிகாரம் வேண்டும்' என்று வரக்கூடியவர்கள் இன்றைக்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் பிரச்சினை இருக்கிறது என்று தெரிகிறது, அதற்கான தீர்வு கிடைக்காமல் அலைகிறார்கள். என்னிடம் தீர்வுக்காக வரக்கூடியவர்கள் நிறையப் பேர் உண்டு. என்னிடம் இல்லை, மகரிஷியை தேடி வருகிறார்கள். அதை அவர்கள் மூலமாக நாங்கள் எடுத்துக் கொடுக்கிறோம்.

ॐ