கோவிலுக்கு போய் எப்படி நாம் கடவுளை வழிபட வேண்டும் ?
எத்தனை பேர் இன்று ஆகம முறைப்படி தெய்வங்களை வணங்குகிறோம்? ஒரு காரியத்தை செய்வதற்கு விதிமுறை இருக்கிறது, அதுதான் ஆகமம். இப்போது கோவில்களுக்குள்ளே நுழைய முடியாத அளவுக்கு பக்தர்களுடைய வருகை அதிகமாயிருக்கிறது. இந்தக் கலியுகத்தில் இது ஒரு முன்னேற்றம், வரவேற்கத்தக்கது மற்றும் பெருமையாக இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை முருகரை, திங்கட்கிழமை சிவபெருமான் கோவிலுக்குப் வழிபட்டால் நன்றாக இருக்கும் என்று மக்கள் தங்கள் துயரங்கள், வறுமைகள், கஷ்டங்கள் தீர வேண்டும் என்கிற எண்ணங்களோடு வருகிறார்கள்.
அனைவரும் முதலில் கோவிலுடைய ராஜகோபுரத்தை நோக்கி இரு கைகளை தலைக்கு மேல் தூக்கி கோபுர நமஸ்காரம் செய்ய வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். ராஜகோபுரத்தின் வாசலில் ஒரு அறிகால், பெரிய கதவு, படி இருக்கும். இரண்டு கையால் அந்தப் படியை தொட்டு கும்பிட்டு, வலது காலை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
கொடிமரத்துக்கு பக்கத்தில் இருக்கும் பலிபீட நமஸ்காரம் அவசியம். நிறைய பேர் நேராக சாமியை கும்பிட்டுவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டு வந்துவிடுவது முழுமையான வழிபாடு கிடையாது.
உள்ளே நுழைந்த உடனே துவார கணபதி, துவார முருகன் இருப்பார்கள். இருவரிடமும் நமஸ்காரம் செய்து அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். நாம் ஒருவரது வீட்டுக்குள் நுழையும்போது அனுமதி கேட்பது போல, சுவாமியை பார்க்கும் முன் துவார கணபதி, துவார முருகனை வணங்கிய பிறகு அதிகார நந்தி பகவானை கும்பிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இதெல்லாம் பெரிய வேலையாக தெரிந்தாலும் இதுதான் முறை.
அதன்பின் உள்பிரகாரத்தை சுற்றி வரும்பொழுது மற்ற தெய்வங்களான விநாயகர், தட்சிணாமூர்த்தி, குரு பகவான் ஆகியோரை வணங்க வேண்டும். உள்பிரகாரத்தில் எப்போதும் வலதுபுறமாக சுற்ற வேண்டும்
அடுத்த கட்டமாக சுவாமி தரிசனம். மூலவரை பார்க்கும்போது முக்கியமாக எதிர்பார்ப்போடு போய் நிற்கக் கூடாது. என் மகன் தேர்ச்சி பெற வேண்டும், முதலிடம் பெற வேண்டும், என் வீட்டுக்காரர் சரியாகணும், நிறைய சம்பளம் வரணும், பதவி உயர்வு வரணும், ஆரோக்கியம் வேணும் என்று புலம்ப கூடாது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, "இறைவனே உன்னைச் சரணாகதி அடைகிறேன், உன்னுடைய அனுகிரகம் ஒரு கண் பார்வை எனக்குப் போதும்" மாதிரியான ஆத்மார்த்தமான வழிபாடு இருக்க வேண்டும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் சாமியை கும்பிட்ட பிறகு தியானம் செய்ய வேண்டும். ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து எதைப் பற்றியுமே யோசிக்காமல் சுவாமியை நினைத்து 10 நிமிடமாவது மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது உத்தமம்
பரபரப்பாக சாமியைக் கும்பிட்டுவிட்டு, "நான் பல கோவிலுக்கு வாரம்தோறும் போறேன், எனக்கு எதுவுமே நடக்கவில்லை" என்று புலம்பக் கூடாது. கோவிலுக்கு போய்விட்டு வந்த பின் புலம்பல் இருக்கக்கூடாது.
எத்தனை முறை பிரகாரத்தை சுற்றுகிறோமோ அத்தனை முறை நமஸ்காரம் செய்ய வேண்டும். அதை யாரும் செய்வதில்லை. சுற்றி வந்துவிட்டு ஒரு முறை மட்டும் தொட்டுக் கும்பிடுகிறார்கள். மூன்று முறை பிரகாரம் சுற்றினால் மூன்று முறை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது சூட்சுமம். விநாயகருக்கு ஒரு முறை, சூரியனுக்கு இரண்டு முறை சுற்றினால் போதும். மூலவரைத் தரிசிக்கக் குறைந்தது மூன்று முறை சுற்றி வர வேண்டும். 7, 9, 11 என நம்முடைய விருப்பத்திற்கேற்ப கொடிமரத்தோடு சேர்த்து சுற்றி வர வேண்டும். சுற்றிவிட்டு அனைத்து முறையும் கொடிமரத்துக்கு முன் நமஸ்காரம் செய்வது அவசியமானது. இதையெல்லாம் முடித்துவிட்டுத்தான் அம்பாளை தரிசிக்க வேண்டும்.
அடுத்ததாக விளக்கு ஏற்றும் முறை. இப்போது தகுதியற்ற தீபங்கள் வந்துவிட்டன. அகல் விளக்கில் நெய் ஊற்றி, பாலித்தீன் கவர் போட்டு மிட்டாய் பாக்கெட் மாதிரி வரிசையாக தொங்க விட்டிருக்கிறார்கள். உண்மையான நெய்யாக இருந்தால் திடமாக இருக்குமா? கோவிலுக்கு போவதே புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளவும், கர்மா குறையவும், நம் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவிலுக்கு போகும்போது, தரமற்ற பொருட்களை பயன்படுத்தி மேலும் பாவத்தை தான் சேர்க்கிறோம்.
கோவிலின் வெளிப் பிரகாரங்களில் விளக்கு ஏற்றுவது உத்தமம் கிடையாது, உள் பிரகாரத்தில் விளக்கேற்றுங்கள். 5, 9, 21 விளக்கு ஏற்ற சொல்வதெல்லாம் ஒரு வியாபாரம். ஆன்மிக அன்பர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்: விளக்கு ஏற்றவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் packed விளக்குகளை வாங்கி ஏற்றாதீர்கள். முடிந்த அளவு சுத்தமான நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய் வாங்கி மூலஸ்தானத்தில் எரியக்கூடிய தீபத்தில் ஊற்றுங்கள். அதுதான் சரியான வழிபாட்டு முறை, முழுப் பலனை தரும். இன்றைக்கு விற்கப்படும் தீப எண்ணெய்கள், விளக்கு ஏற்றுவதற்கு மிகவும் தரமற்றவையாக உள்ளன.
pocket-களில் இருப்பது நெய் கிடையாது. டால்டாவை விட தரம் குறைக்கப்பட்ட ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொருட்கள். அது தெய்வத்துக்கு மட்டுமல்ல, அங்கே பூஜை செய்யக்கூடிய அர்ச்சகர்களுக்கும் அந்த புகையை சுவாசிக்கும்போது இதயம் சார்ந்த பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நமக்கு அர்ச்சனை செய்து கொடுப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தீங்கு விளைவித்தால் நமக்குப் பாவம் வந்து சேரும்.

ॐ