Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

திருமண பொருத்தம் - 1

03 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
தினப் பொருத்தம் உள்ள கணவன் மனைவி, நண்பர்களாக சந்தோஷமாக இருப்பார்கள். கைகோர்த்து போவார்கள். அன்யோனியமாக இருப்பார்கள். இதை தாண்டி பிரச்சினை வராதா? என்றால், பிரச்சினை வரும். அப்போது கோச்சாரங்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, தசாபுத்திகளும் இருக்கிறது. அதோடு நம்முடைய கர்மாவும் இருக்கிறது.

அதெல்லாம் நம்மை பெருசாக பாதிக்காத அளவுக்கு, "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று" என்று மாறிவிடும். கால் உடைய வேண்டிய இடத்தில், ஒரு விரல் உடையறதோடு போயிடும். சண்டை வரும், பிறகு சமாதானமாகும். விட்டுக்கொடுத்து போகலாம்.

சிம்ம லக்னத்திற்கு 7-வது இடம் கும்பம், சனியின் வீடு. 6-ஆம் வீடு மகரம், சனியின் வீடு. கும்ப, சிம்ம லக்னக்காரர்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்காது.

கும்ப, கடக லக்னக்காரர்களுக்கும் எளிதாக, சீக்கிரம் கல்யாணம் நடக்காது. இரண்டு பேருக்குமே ஏழாம் அதிபதி சப்தமாதிபதி சனி. சிம்ம லக்னத்திற்கு 6-7-க்குடைய கிரகமும் ஒரே வீடாகிறது. 6-ம் இடம் என்பது வம்பு, வழக்கு, நீதிமன்றம், வியாதி, விரயம். அதுவே சப்தமாதிபதியாக, களத்திர ஸ்தானாதிபதியாக இருப்பதனால் வரக்கூடிய மனைவி அல்லது கணவனே எதிரியாக மாற வேண்டும்.

பொதுவாக எல்லா லக்னக்காரர்களுக்கும், 6-ம் இடம், சப்தமாதிபதி என்ற 7-ம் இடம், கணவன், மனைவி ஸ்தானம். 7-ம் அதிபதி 6-ம் இடத்தில் உட்கார்ந்தால், கணவனாலோ, மனைவினாலோ நிறைய விரயம், வழக்குகளை, பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். இந்த மாதிரி அமைப்பு உள்ளவர்களை சேர்த்தால், மனைவி அல்லது கணவன் வந்த பிறகு பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது. கல்யாணத்திற்கு பிறகு தான் கஷ்டப்படுவது போல உணர்வீர்கள். ஆனால் குழந்தை பிறந்துவிட்டால், பிரிய முடியாது. பிரிந்தால் குழந்தை அனாதையாகி, இந்த ஜென்மத்தில் உங்களுக்கு பாவமாக வந்து சேரும். அதை சரி செய்வதற்கு வழிமுறைகள் கொடுத்திருக்கிறோம். சிலருடைய ஜாதகத்தில், கர்ம வினைப்படி இரண்டாவது வாழ்க்கை இருக்கிறது என்றால், கண்டிப்பாக இரண்டாவது வாழ்க்கை தான் பொருந்தும். நன்றாக இருக்கும் என்பதையும் மகரிஷி சொல்லியிருக்கிறார். ஒளிவு மறைவு கிடையாது.

தாலி கட்டினால் மட்டும் கணவன் மனைவி என்பது கிடையாது. கணவன் மனைவியோடுதான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இன்னொரு மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். என்னிடம் அதை மறைக்க முடியாது. சமூகத்தில் கணவன் மனைவியாக இருந்தாலும், ரகசியமாக இன்னொரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டாவது கல்யாணம் நடந்திருக்கிறது. இரண்டாவது வாழ்க்கையின் சுகத்தை அனுபவிக்கிறார்கள்.

யாருமே முழுமையாக ஜோதிடத்தை படித்தது கிடையாது. இன்று வரைக்கும் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டுதான் இருக்கிறோம்.

மனப்பொருத்தம் தான் கல்யாணத்திற்கு முக்கியம். சிறு வயது நண்பர்களாக இருப்பார்கள், மனதிற்கு மனம் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஜாதக பொருத்தம் வரவில்லை என்ற ஒரே காரணத்தால் பெற்றோர்கள் வேண்டாம் என்பார்கள்.
எதுவுமே நாம் நடத்தவில்லை. நம்முடைய கர்ம வினையானது நம்மை வழி நடத்துகிறது. தர்மம் இருக்கும்போது, அதர்மம் இருக்கத்தான் செய்கிறது. சாத்தான் இருந்தால், தெய்வம் என்று ஒன்று இருக்கிறது. எனவே, எதிர்மறை என்பது எல்லா விஷயங்களிலுமே உண்டு. நாம் இதை புரிந்துகொண்டு வாழ்க்கையை நல்லபடியாக வாழ வேண்டும். நம்முடைய சந்ததி பாதிக்கப்படக் கூடாது. நம்முடைய கர்மவினைக்கு இந்த பிறவியில் இவ்வளவுதான் கொடுத்திருக்கிறார், இதுதான் இந்த ஜென்மம், இப்படித்தான் வாழ்ந்து ஆக வேண்டும் என்று விதி இருக்கிறது. தாக்கத்தை, கர்மாவை, வலியை குறைத்துக்கொண்டு, சந்தோஷமாக இருங்கள்

பெற்றோர்களுக்கு மருமகளோ அல்லது மருமகனோ கடமைகளை எல்லாமே செய்கிறார்கள். அவர்களுக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது, அதை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியது. நாம் ஏன் எல்லா விஷயங்களிலும் நுழைய வேண்டும்? மனைவிக்கு எதிர்பார்ப்பு, ஆசை, பாசம் இருக்கும், அதில் தலையிடக் கூடாது. நான் பையனை ஆரம்பத்தில் இருந்து வளர்த்தேன், என்னால் முழுமையாக விட்டுக்கொடுக்க முடியவில்லை என்றால், கல்யாணமே பண்ணியிருக்கக் கூடாது.

பெற்றோர்கள் எதிர்த்து கல்யாணம் பண்ணி, நாளடைவில் கஷ்டப்பட்டால், பெற்றோர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? இதற்கு பரிகாரம் இருக்கிறதா ?
கர்ம வினைப்படி காதல் திருமணம் தான் என்றால் சொல்லிவிடுவேன். நீங்கள் அதற்கு தயாராகி கொள்ளுங்கள். விருப்பப்படி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, பிரச்சினையை சந்தித்து, பிரிவு வரும்பொழுது, பெற்றோர்களாலும் முடிவெடுக்க முடியாது. நான் சொல்வது, நீங்களே பார்த்து வாழ்க்கை அமைத்திருந்தாலும் பிரிவு இருக்கும். அவர்கள் சொந்த பொறுப்பில் அனுபவித்துவிட்டார்கள். இப்பொழுது நீங்கள் குற்றவாளி, பலிகடா இல்லாத நிலைக்கு போய்விட்டீர்கள். அதனால் நீங்கள் தப்பித்துவிட்டீர்கள் என்று சொல்வேன்.

இப்பொழுது எங்கே உண்மையான காதல் இருக்கிறது? எல்லாம் மோகம். காதல் என்பது, இரண்டு பேர் எட்ட இருந்து ஒரு பார்வையிலேயே சுகம் இருக்கும். இன்றைக்கு கல்யாணத்திற்கு முன் எல்லாவற்றையும் வாழ்ந்து முடித்துவிடுகிறோம். அப்படியிருக்கும் போது எங்கே இருந்து ஜாதகம் பேசும்? எதற்கு சாந்தி முகூர்த்தம் என்று நேரம் காலம் குறிக்கிறோம்? அக்னி சாட்சியாக கல்யாணம் பண்ணிச் சாந்தி முகூர்த்தம் என்று ஒரு நேரத்தை கொடுத்து, இந்த நேரத்தில் தான் இணைதல், புணர்தல் இருக்க வேண்டும் என்று குறிக்கிறோம். அதில் பல விஷயங்கள் இருக்கின்றன. முதலில் வாழ்ந்துவிட்டு, பரஸ்பரமான பின் கல்யாணம் என்பது கல்யாணமே கிடையாது.

ஒரு குறிப்பிட்ட நிலைக்கு பின், ஒரு பெண்ணை முழுமையாக பார்ப்பதற்கான தகுதி கணவனுக்கு மட்டும் உண்டு, தாய்க்கே கிடையாது. அந்த இடத்திற்கு ஒருத்தரை கொண்டு வந்த பிறகு, வேறொருத்தரை கல்யாணம் பண்ணுகிறார்கள் என்றால், எப்படி அது முதல் தரம் ஆகும்? எந்த அடிப்படையை பலன் சொல்லுவீர்கள் ? நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

நாடி ஜோசியம் பார்க்கும்போது, இதுவும் தெரிந்து கொள்ளலாமா ?
எல்லாமே தெரிந்துவிடும், என்னிடம் ஒளிவுமறைவு எதுவுமே கிடையாது.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.