Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

நீங்கள் வந்த நோக்கம் எனக்கு தெரியும்

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
ஒரு மனிதனுடைய கைரேகையை வைத்து, முன் நடந்ததை, நடப்பதை, நடக்கப் போவதை சொல்வீர்களா?
இது ஒரு பெரிய செயல்முறை. இதற்கு பொறுமை மிக அவசியம். ஒருவருடைய வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு இயற்கை வழிவிட வேண்டும், அந்த இயற்கையை யாராலும் வெல்ல முடியாது.

நீங்கள் ஜோதிடம் பார்க்கும்போது பரிகாரம் செய்ய சொல்வீர்களா அல்லது 'கவனமாக இரு' என்று எச்சரிக்கை மட்டும் செய்வீர்களா?
நான் மிகவும் தெளிவாக சொல்வேன். 'பரிகாரம் செய் அல்லது செய்யாமல் போ, ஆனால் மிகவும் கவனமாக இரு' என்று எச்சரிப்பேன். ஏதேனும் நடந்துவிட்டால் பரிகாரத்தால் மட்டும் தடுத்துவிட முடியாது. நீங்கள் செய்யும் பரிகாரம் பலிக்க வேண்டும் என்றால் உங்கள் கர்ம வினை நன்றாக இருக்க வேண்டும். கர்ம வினை மேலோங்கி நிற்கும் போது கடவுள் கூட விலகி நின்றுவிடுவார். இதை வெளிப்படையாக பேசினால் பலருக்கு என்னை பிடிக்காமல் போய்விடும்.

உண்மையை சொன்னால், 8-9 வருடங்களுக்கு முன்னால் நான் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். இதை விளம்பரத்திற்காக அல்லது மற்றவர்களை கவர சொல்லவில்லை, இது என் வாழ்வில் நடந்த உண்மை.

நாடிக்கும். ரேகைக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லுங்கள். முந்தைய பிறவி அல்லது இந்த பிறவியை பற்றி சொல்கிறீர்களா?
நாடி ஜோதிடம் என்பது சித்தர்களால் எழுதப்பட்டது. அகஸ்தியர், பிருகு, வசிஷ்டர் போன்ற மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது. 'சித்தர்களுக்கு வேறு வேலை இல்லையா, நம்மைப் பற்றி ஏன் எழுத வேண்டும்?' என்ற கேள்வி எழலாம். பிரம்மா நம்மை கர்ம வினை அடிப்படையில் தான் படைக்கிறார். 'தர்ம காரியங்களை செய்து உன் கர்மாவை குறைத்துக்கொள்' என்று சுதந்திரம் கொடுத்தார். ஆனால் நாம் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பாவங்களை சேர்த்துக் கொள்கிறோம். இதைப் பார்த்த மகரிஷிகள், மனிதர்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றி இறைவனிடம் சேர வேண்டும் என்ற கருணையால், அவர்களின் வாழ்க்கை முறையை, பனை ஓலைகளில் எழுதி வைத்தார்கள். இதுவே நாடி ஜோதிடம்.

ஆண் வலது கை, பெண் இடது கை பெருவிரல் ரேகையை வைத்து மனிதனின் வாழ்க்கையை சொல்ல முடியும் என்று மகரிஷிகள் முன்னரே கணித்துள்ளனர். ஆதார் வந்து 10 வருடங்கள் தான் ஆகிறது, ஆனால் நாடி ஜோதிடம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. ரேகைக்கும் நமது கர்மாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதையே 'மரபணு குறியீடு' (Genetic Code) என்கிறோம். இது மதம் சார்ந்த விஷயம் அல்ல. இந்து, முஸ்லிம், கிறித்துவம் என மனிதர்களுக்கும் பொதுவானது.

ரேகைதான் ஒரு மனிதனின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. உங்கள் பெயர், உங்கள் தந்தை, தாயின் பெயர், நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதைக்கூட ஓலை சொல்லும். நேற்று கூட ஒன்றரை வயது குழந்தையின் பெயரை ஓலையிலிருந்து துல்லியமாக சொன்னபோது தந்தை பிரமித்து போனார்.

நான் ஒரு முஸ்லிம் பெண். எனது ராசி தெரியாது, பிறந்த நேரம் சரியாக தெரியாது. என் தாயார் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் எனது அடையாள அட்டையில் உள்ள வயதுக்கும் நிஜமான வயதுக்கும் ஐந்து வருட வித்தியாசம் இருக்கிறது. எனக்கு திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது, 2 குழந்தைகளுக்கு பிறகு பிரிந்துவிட்டேன். என்னை போன்றவர்களுக்கு நாடி ஜோதிடம் உதவுமா?
நிச்சயமாக. ஜாதகம் இல்லாதவர்களுக்கு கைரேகை தான் ஆதாரம். ஒருவருக்கு விபத்து நடக்கப்போகிறது என்றால் முன்னரே எச்சரிக்கை கிடைப்பதே கடவுளின் அனுக்கிரகம் தான். 'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள், ஆனால் அந்த மதியைக் கொடுப்பதற்கும் நமக்கு நல்ல கர்ம வினை (புண்ணியம்) இருக்க வேண்டும்.

கடவுள் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை. கர்ம வினை சூழும்போது கடவுள் விலகி நிற்பார். என் வாழ்வில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தபோது, எனது நாடி ஓலையை படித்து என்னை திருத்திக் கொண்டேன். இன்று நான் தெய்வ வழிபாட்டிற்காக மட்டுமே மாதம் 70,000 ரூபாய் வரை செலவிடுகிறேன். நீங்கள் என் அலுவலகத்திற்குள் வரும்போது உணர்ந்த நல்ல அதிர்வு (Positive Vibe) இருப்பது அகத்தியரின் ஆசி.

உண்மைதான் ஐயா. நான் கோவிலுக்குச் செல்வதை, சிவபெருமான் அழைத்தால் மட்டுமே நடக்கும் விஷயமாக உணர்கிறேன். உங்கள் அலுவலகத்திலும் அமைதி இருக்கிறது.
இன்று நீங்கள் வந்திருப்பது கூட அகத்தியரின் விருப்பம் தான். உங்கள் குடும்பம், பொருளாதாரம் மற்றும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு ஓலைகள் பதில் சொல்லும். இந்த 2026-ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.