"மூன்று தடவை தீட்சைக்கான பரிகாரம் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு பெரிய அளவில் பலன் தரவில்லை. பணம் தான் வீண் செலவாகியிருக்கிறது. எனவே, மக்களே யாரும் இதையெல்லாம் நம்பி ஏமாறாதீர்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
தீட்சைக் காண்டம் என்பது நாம் சொல்லக்கூடிய மந்திரம் கிடையாது. மகரிஷியால் நமக்கு கொடுக்ககூடிய மந்திரம். எல்லாருக்கும் எல்லா மந்திரம் பயன் தராது. அதேபோல, எல்லாரும் எல்லா கோவில்களுக்கும் போய் வழிபாடு செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை என்பதை பலமுறை சொல்லியிருக்கிறோம்.
என்ன வியாதிக்கு என்ன மருந்து என்பது போல, நம்முடைய கர்மாவிற்கு என்ன கோவில் வழிபாடு என்று இருக்கிறது. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதை முதலில் எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய கர்மவினைக்கு ஏற்ப சொல்லப்பட்ட மந்திரத்தை சரியான முறையில் உருவேற்றி, அதற்குரிய ஆகமமுறைப்படி பரிகார முறையை செய்துகொண்டால், நிச்சயம் பயன் தரும். உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். செய்யக்கூடிய பூஜை முறைகளிலோ ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் பலன் தராத நிலை உருவாக்கும்.
நாடி ஜோதிடம் பார்க்க குறிப்பிட்ட வயது இருக்க வேண்டுமா ? 50 வயதில் பார்க்கலாமா ?
ஒரு வயது நிறைவு பெற்றாலே, அவர்களுடைய ரேகையை எடுத்து நாடி ஜோதிடம் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, ஒரு குழந்தை மூன்று வயதில் உடல்நிலையால் பாதிக்கப்படுகிறது என்றால், அவர்களுக்கு ஓலைச்சுவடி பார்ப்பதற்கு பலர் யோசிப்பார்கள். "மூன்று வயது குழந்தைக்கு நாம் என்ன சொல்வது?" என்று சிலர் தவிர்ப்பார்கள். நான் இதுவரைக்கும் அந்த மாதிரியான விஷயத்தை தவிர்த்ததே கிடையாது. ஏனென்றால், பலனை நான் சொல்லவில்லை, மகரிஷி சொல்கிறார்கள். ஓலையில் என்ன இருக்கிறதோ, அதை படித்துத் தருகிறேன் என்று கூறி, குழந்தையுடைய ரேகையை எடுத்து பலன் சொல்லும்பொழுது, ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் தீர்வு கிடைக்கிறது. மூன்று வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனும் போது, அதுவும் திறந்த இதய அறுவை சிகிச்சையாக (open heart surgery) இருப்பது கொடுமையான விஷயம்.
பெற்றவர்களாலும் முடிவெடுக்க முடியாமல், கடவுளைத்தான் நம்புகிறார்கள். கடவுளுக்கு இணையாக அவர்கள் நம்பக்கூடிய சாஸ்திரம் நாடி ஜோதிடம். ஏனெனில், அது மகரிஷியே நமக்கு கொடுத்தது என்பதால், நமக்கு ஏதேனும் ஒரு தீர்வு தருவார் என்ற நம்பிக்கையோடு வந்தார்கள். அவர்களுக்கு நல்லபடியாக எடுத்து கொடுத்து, இன்று குழந்தை நலமாக இருக்கிறது. குழந்தைக்கு நம்மால் ஆயுள் காலம் வரைக்கும் பலனை எதிர்பார்க்க முடியாது.
83 வயது உள்ளவருக்கு சமீபத்தில் நாடி பார்த்தோம். அவர்களுடைய விஷயங்கள் எல்லாம் நமக்கு வியப்பாக இருந்தது. எனவே, நாளைக்கு மரணம் என்றாலும் கூட, முதல் நாள் கூட நாடி பார்க்கலாம். யாருக்கு பிராப்தம் இருக்கிறதோ, மகரிஷியுடைய அருளைப் பெற்று பார்த்துக்கொள்ளலாம் என்பது என்னுடைய அனுபவம்.
"மனதில் தைரியம் இல்லாதவர்கள், ஏதோ ஒரு பிரச்சினைக்கு உட்பட்டவர்கள், வாழத் தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள் தான் ஜோதிடத்தை பார்த்து, அவர்கள் சொல்வதை செய்து ஜோதிடர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். கிளி கூடச் சில விஷயங்களில் முட்டாள்தனமாக ஜோதிடம் சொல்லுமா?" என்று சொல்லியிருக்கிறார்.
நல்ல ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர்களை பற்றிய விஷயம் இது. நாம் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அதேபோல, இங்கு வருபவர்கள் எல்லாரும் ஏமாந்தவர்கள் இல்லை, அவர்களுக்கு அச்சத்தை கொடுக்க, இங்கு யாரும் ஜோதிடம் சொல்லவில்லை.
நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய சக்தி தான் நம்முடைய பிரச்சினை. எதிலுமே முடிவெடுக்க முடியாமல், நாமும் எல்லா வகையிலும் சரியாக இருந்து, முயற்சிகள் பலன் தராமல் போகும் போது, கண்டிப்பாக அந்த நேரத்தில் நம்முடைய கிரக நிலை எப்படி இருக்கிறது, நம்முடைய கர்மா என்ன சொல்கிறது என்பதை தேடி வரத்தான் செய்வார்கள். அவர்களை என்றைக்கும் நாங்கள் தவறான முறையில் பயன்படுத்தியதே கிடையாது. அப்படி பணம் சம்பாதிக்கக்கூடிய இடம் எங்களுடையது கிடையாது. வேறு எங்காவது அவர் பாதிக்கப்பட்டு இருக்கலாம், ஏமாந்திருக்கலாம். அதை நான் சொல்ல விரும்பவில்லை.
கிளி என்றைக்கும் சாஸ்திரம் சொன்னது கிடையாது. இன்றைக்கு கிளியை தாண்டி எலி சொல்ல ஆரம்பித்துவிட்டது. அது அவரவர்களுடைய கொள்கை முறை, அவர்கள் ஏதோ ஒன்றை பின்தொடர்ந்து (follow) செய்து கொண்டிருக்கிறார்கள். அதை நாடி ஜோதிடத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். இது வேறு, அது வேறு.
நிறைய நாடி ஜோதிடர்கள் கைரேகையை வாங்கிய பிறகும், அவர்களுடைய பிறந்த தேதி விவரங்கள், ஜாதகக் குறிப்புகள் பற்றி நிறைய கேட்கிறார்கள். ஒருவரின் கைரேகையை வைத்தே எல்லாம் சொல்ல முடியும் என்றால், ஏன் இந்த விவரங்களையெல்லாம் கேட்கிறார்கள் ?
இதுவும் நல்ல கேள்வி. இதைக் கேட்டவர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். மகரிஷி சொல்வது, ஒரே வருடம், மாதம், தேதியில் பிறந்தவர்கள், ஒரே பெயர்களைக் கொண்டவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், பொருந்தாத, வேறுபாடானது ரேகை மட்டும் தான்.
ஆண்கள் வலது கை ரேகையையும், பெண்கள் இடது கை ரேகையையும் மூலப்பொருளாக கொண்டு, பல நூறு ஆண்டுகளுக்கு முன் மகரிஷி எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது இந்த ஒரு ரேகைக்கான ஓலைச்சுவடியை எடுத்துவிட்டோம். அந்த ஓலைச்சுவடிக் கட்டில் குறைந்தபட்சம் 50 ஓலைகள் இருந்தால், அதில் எது உங்களுக்குரிய ஓலை என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் நாடி பார்க்க வருகிறீர்கள். நீங்கள் யார் என்ற விவரம் எனக்கு தெரியாது. உங்களுக்கான விவரங்கள் உங்களுக்கு மட்டுமே தெரியும். அப்பொழுது உங்களுடைய ஓலையை எடுத்து நான் படித்துக் காட்டும்பொழுது, நீங்கள்தான் அது சரியா, தவறா என்று சொல்லியாக வேண்டும். இதில் உங்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படுவது கிடையாது.
உங்களுடைய பெயர் ஓலையில் 'திருமகள் சொல்' என்று வந்திருந்தால், "ஆமாம், என் பெயர் லட்சுமி" என்று நீங்கள் சொல்லக் கூடாது. உங்க பெயர் லட்சுமியாக இருந்தாலும் சரி, பத்மாவதியாக இருந்தாலும், "ஆமாம், சரி தான்" என்று சொல்ல வேண்டுமே தவிர, உங்களுடைய பெயரை சொல்ல வேண்டாம். அதேபோல, நீங்கள் பிறந்தது உபய மாதம் என்றால், அந்த உபய மாதம் என்பது 4 மாதங்களை குறிக்கும் - ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி. இதில் ஒன்று உங்களுடைய மாதம் என்று சொல்லும் பொழுது, சரியாக இருந்தால் 'ஆமாம்' என்று சொல்ல வேண்டும், இல்லையென்றால் 'இல்லை' என்று சொல்ல வேண்டும். எல்லா விவரமும் எந்த ஓலையில் சரியாக இருக்கிறதோ, அதுதான் உங்களுக்கான ஓலை.
இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரே அம்மா, அப்பா பெயர், அதே பிறந்த தேதி கொண்டவர் தான். இரண்டு குழந்தைகளுடைய பெயர் தான் மாறுமே தவிர, மீதி எல்லா குடும்ப விவரங்கள் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இருவரின் பலன் வேறு மாதிரி இருக்கிறது. இருவரின் ரேகை வேறு. ரேகைக்கான ஓலையை எடுத்துப் படிக்கும் பொழுது, இவங்களுக்கு உள்ள விவரங்கள் எல்லாமே ஒன்றாக இருக்கும் பொழுது, எது அவர்களுடைய ஓலை என்பதை உறுதிப்படுத்த முடியும்.
சிலர் உங்களிடம் ரேகை வாங்கும் போது "உங்க பெயர் என்ன?" என்று கேட்பார்கள். நாங்கள் அதைக் கூடக் கேட்க மாட்டோம். உங்களுடைய கட்டைவிரல் ரேகை மட்டும்தான் எனக்கு வேண்டும். ஆண்களுக்கு வலது, பெண்களுக்கு இடது. அதை தவிர்த்து நாங்கள் வேறு எதுவும் கேட்க மாட்டோம். சம்பந்தப்பட்ட ஓலையை எடுத்து படிக்கும் பொழுது, அதில் சரியா, தவறா என்று அவர்கள் சொல்லிதான் ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. ஓலையை எடுத்து அப்படியே பலன் சொல்கின்ற அளவிற்கு நாடி ஜோதிடம் கிடையாது. இது காலங்காலமாக எங்களுடைய முன்னோர்கள் செய்து வந்த முறை தான். நீங்களாக எதுவும் சொல்ல வேண்டாம்.
உங்களிடம் நான் 4 வருடங்களுக்கு முன் நாடி பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் சொன்னது போலவே நடந்தது. பரிகாரங்கள் சரியாக செய்தேன். என்னுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. உங்களை நான் மறக்க மாட்டேன். நீங்கள் பரிபூரண ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.
நம்மிடம் நாடி படித்து, நம் மூலமாக அகஸ்தியர் வாக்கு கொடுத்து, நிறைய நன்மை அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இதுவரைக்கும் நாம் யாரிடமும் "உங்களுடைய கருத்துக்களை எனக்கு பதிவு செய்யுங்கள்" என்று கேட்டதே கிடையாது. அப்படி நான் கேட்டிருந்தால், ஆயிரம் பேர் எழுதுவதற்கு தயாராக இருக்கிறார்கள். என்னுடைய குருநாதர் என் மூலமாக அவர்களுக்கு வாக்கு கொடுத்து, அதன்படி நன்றாக இருக்கிறார்கள் என்றால், மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கூடவே இருந்து, அவர்களை நல்லபடியாக வழிநடத்த வேண்டும், அனுக்கிரகங்கள் செய்ய வேண்டும், குருநாதர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ॐ