சனி பகவானைப் பற்றி நேர்மறையான விஷயங்களை நீங்கள் சொல்கிறீர்கள். மக்கள் எதனால் எதிர்மறை மட்டும் புரிந்தற்கான காரணம் என்ன ?
பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனால், ஏன் பிரச்சினை வருகிறது என்பதை உணர்ந்து, பொறுமையாக, நிதானமாக செயல்படும் பொழுது, பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிடுவோம். தர்மத்தை செய்யுங்கள். எப்பொழுதும் தர்மம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சனி பகவான் ஒரு விஷயத்தை ரொம்ப வக்கிரமாக யோசிக்க வைப்பார், அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அவர் 'சோதனைக்காரன்'.
உதாரணத்திற்கு, ஒரு காதலை உருவாக்கினால், நமக்கு தேவையா, இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். கண்மூடித்தனமாக விழுந்துவிட்டால் நீ மாட்டிக்கொள்வாய்!. இதுதான் பக்குவப்படுத்துகிறார் என்பதுதான் பொருள். என்னை பொறுத்தவரைக்கும் "நாம் நாமாக இருக்க வேண்டும்".
சனி பகவான் நம் ராசியைக் கடந்த பின், என்ன மாற்றங்கள் ஏற்படும் ?
இனிமேல் வாழ்க்கையில் நான் எந்த ஒரு தவற்றையும் பண்ண மாட்டேன் என்ற பக்குவத்தை மனிதனுக்குக் கொடுத்து விடுகிறார். அது அவனுடைய வாழ்நாளின் இறுதி வரை நிலைத்திருக்கும்.
உதாரணமாக, கடன்பட்டு மீண்டு வந்துவிட்டால், அவன் திருப்பி வாழ்க்கையில் "கடனே வேண்டாம்" என்று ஓடிவிடுவான். பழக்க வழக்கங்களால் பிரச்சினையை சந்தித்துவிட்டால், அதன்பின் ஒரு நல்லவன் உதவி கேட்டால் கூட, "இல்லை, நான் ஏற்கனவே நிறைய பட்டுவிட்டேன், நீ நல்லவனாகவே இரு, என்னிடம் வராதே" என்று ஒதுங்கிவிடுவான் அல்லது "இந்தாப்பா, நீ 10 லட்சம் கேட்கிறாய், என்னால் முடிந்த 50,000 வைத்துக் கொள், திருப்பிக் கொடுக்க வேண்டாம், நீ இதோடு போய்விடு" என்று பக்குவத்திற்கு வந்துவிடுவான்.
2026 மார்ச் 6-ஆம் தேதி சனிப் பெயர்ச்சி வருகிறது. சனி பகவான் இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை மாறக்கூடிய கிரகம். நீண்ட காலம் ஒரு ராசியில் இருக்கக்கூடியவர்.
ஒரு குழந்தை, மீனத்திலோ, ஏழரை சனி ஆரம்பிக்கும் பொழுது பிறக்கிறது என்றால், தனது வாழ்க்கையில் இரண்டாவது சுற்றைச் சந்திப்பதற்குள் 30 வருடங்கள் ஆகிவிடும். ஒரு ஜாதக கட்டத்தை முழுமையாகச் சனி சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அர்த்தாஷ்டம சனி, கண்டகச் சனி, அஷ்டம சனி, கர்ம சனி என்று நிறைய இருக்கின்றன.
சனிப்பெயர்ச்சிக்கு 6 மாதங்கள் முன்பே தனது பலன்களை கொடுக்க ஆரம்பித்து விடுவார். 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மேஷ ராசிக்கு சனிப் பெயர்ச்சியின் வீரியம் ஆரம்பித்துவிட்டது.
மேஷ, கன்னி, தனுசு ராசிக்காரர்கள் எல்லாருக்குமே, கடந்த 6 மாத காலமாக அவர்களாக இல்லை. நிறைய மாற்றங்களை பார்க்கலாம். இதனை அனுபவிப்பவர்களுக்கு நன்றாக புரியும். அதனால் கவனம் அவசியம். தேவையில்லாத பிரச்சினை வேண்டாம். இறுதியில் பாதிக்கப்படுவது நாம் தான். எல்லை மீறி வரும் பொழுது தாங்க முடியாது.
வாழ்க்கை என்பது ஒருமுறை தான். இன்றைய காலகட்டத்தில் அது மீண்டும் சுலபமாக கிடைத்துவிடாது. வாழ்க்கையில் நல்ல துணை கிடைத்து, சந்தோஷமாக இருந்து, நல்லதொரு புரிதல் இருந்து, ஏதோ ஒரு சூழ்நிலையில் தற்காலிக பிரச்சினை வரும் பொழுது, பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களை நம்பி அவர் வந்திருக்கிறார், அவர்களை நம்பி நீங்கள் வந்திருக்கிறீர்கள். மற்றவர்களுடைய தூண்டுதல், பிரச்சினைகளை குடும்பத்தில் போட்டு உங்கள் வாழ்க்கையை நீங்கள் இழந்துவிடாதீர்கள்.
பொறுமையாகவும், நிதானமாகவும், குடும்பத்தை கொண்டு போங்கள். கோபத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாமே தவறாக முடியும்.
"என் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு நான் வாழ்வேன்" என்று வீரமாக பேசிவிடுவோம். ஆனால், 4 வருடங்கள் கழித்து, அதே வீரமோ, வைராக்கியமோ இருக்காது. நம்மை தவறான பாதைக்கு கொண்டு போய்விடும். யாரையாவது நம்பி ஏமாறக்கூடும், அது மேலும் பாதிப்பை உண்டாக்கும். ஒருமுறை கடவுள் நல்ல வாழ்க்கையில் இணைத்துவிட்டால், கடைசி வரைக்கும் நல்லபடியாக வாழப் பாருங்கள்.
பணத்தை செலவு செய்வது எளிது, சம்பாதிப்பது கஷ்டம். அதனால், "இந்த காலகட்டத்திற்கு புதிய முதலீடுகள் சரியானாதா ?" என்பதை ஆராய்ந்து செயல்படுங்கள்.
வாகனப் பயணத்தில் எச்சரிக்கை வேண்டும், கால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். ஏனென்றால், சனி பகவானை 'முடவன்' (நொண்டி) என்று அழைப்பார்கள். அதனால், கால்களில் தான் முதலில் குறி வைப்பார். கால்களில் கடுமையான வலி வரும், குதிகால், கணுக்கால், மூட்டுப் பகுதிகளில் பிரச்சினை வரும், நரம்பு சார்ந்த பிரச்சினைகள் வரும். உடற்பயிற்சி செய்யும் போது கூட கவனம் வேண்டும்.
சனிப் பெயர்ச்சி காலத்தில் திருமண உறவு முறிவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? புது திருமணம் சாதகமாக இருக்குமா அல்லது தள்ளி வைப்பது நல்லதா ?
இரண்டுமே நடக்கும். கல்யாணம் ஆனவர்கள் குடும்பத்தில் கவனமாக இருங்கள். ஏழரை சனி காலகட்டத்தில் நிறைய பேருக்கு திருமண வாழ்க்கை கொடுப்பார். சனியினுடைய காலகட்டத்தில் வளர்ச்சிகளை அடைந்தவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால், சனி பகவான் என்பவர் 'நிலைத்தன்மைக்கு' காரகர். சனியின் காலத்தில் நிரந்தரமான வேலை, பதவி உயர்வு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். திருமணமாகாமல் இருந்தவருக்கு, திருமணம் நடந்திருக்கிறது. வாழ்க்கைக்கு தேவையானதையும், நல்லதையும் கொடுப்பார். கூடவே சோதனைகளையும் கொடுப்பார். கல்யாண வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதையும் அவரே காட்டிக் கொடுப்பார். கவனமாக இருந்தால் குடும்ப பிரச்சினையை தவிர்க்கலாம்.
பெரிய முடிவுகள், புதிய தொழில், வெளிநாடு செல்வது போன்றவை சனிப் பெயர்ச்சி காலத்தில் எடுக்கலாமா ?
தாராளமாக செய்யலாம். சனிப் பெயர்ச்சி காலகட்டத்தில் வெளிநாட்டு, வெளிமாநில பயணங்கள் கட்டாயமாக அமையும். பலருக்கு புதிய இடமாற்றங்கள் உண்டாகும்.
அரசு தேர்வுகளுக்கு முயற்சி செய்பவார்களுக்கு எப்படி இருக்கும்?
அவர்களுடைய பிறப்பு ஜாதகத்தில் வேலைக்குரிய 10-ம் இடம் நல்ல வலுவாக இருந்து, 10-ம் அதிபதி அரசாங்க உத்தியோகத்திற்கான அமைப்பு பெற்றிருந்தால், அரசு வேலை கிடைக்கும்.
நிறைய கோயில்களுக்கு போங்கள். சிவாலயம், ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள். ஏனோதானோ என்று போகக் கூடாது. அங்கே அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி உட்கார வேண்டும்.
சனி பகவான் யாருக்கெல்லாம் நட்பு கிரகம், பகை கிரகம் என்பது பெரிய பாடம். சனீஸ்வரன், சிவபெருமானிடம் 'ஈஸ்வரன்' என்ற பட்டத்தை பெற்றவர். அவருடைய வீரியத்தை, தாக்கத்தை குறைக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்:
1. சிவன் வழிபாடு
2. காலபைரவர் வழிபாடு
3. ஆஞ்சநேயர் வழிபாடு
இவர்களை மனமுருகி, பக்தியோடு வணங்கும் பொழுது தாக்கம் கண்டிப்பாக குறையும். ஏதோ ஒரு நாள் கோயிலுக்கு போனால் உடனே பலனை எதிர்பார்க்கக் கூடாது. வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து போங்கள்.

ॐ