ஒரு ஜாதகத்தில் 12 பாகங்கள் இருக்கின்றன. அந்த 12 பாகங்களில் 8-வது பாவகம் என்பது ஒரு மனிதன் எந்த வயது வரை உயிர் வாழப்போகிறார், எந்த மாதத்தில், எந்தத் திதியில், எந்த நட்சத்திரத்தில், என்ன மாதிரியான மரணத்தை மரணிப்பார் என்பதை சொல்லுவார்கள்.
ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பதை நம்முடைய பரிகாரங்களால் மாற்ற முடியுமா?
பரிகாரங்கள் என்பதை நாம் கொடுக்கவில்லை, நாம் சொல்லவில்லை. மகரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். பிரம்மன் நம்முடைய பூர்வ ஜென்மத்தினுடைய கர்ம வினையையும் சேர்த்துத்தான் படைத்திருக்கிறார். நம்முடைய கர்மாதான் நம்மை இயக்குகிறது என்பதை மகரிஷி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். முதலில் நாடி ஜோதிடம் என்பது எல்லாராலும் வந்து பார்த்துவிட முடியாது. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் நாடி ஜோதிடம் பார்க்கப் போகிறீர்கள், நமக்கு ஓலை கிடைக்காது. ஆனால் நம்மோடு வந்த நண்பருக்கு ஓலை கிடைத்து, அவர் அவருடைய எதிர்காலத்தைத் தெரிந்துகொண்டு வருவார்.
எனவே, மகரிஷிகளால் எழுதப்பட்ட இந்தச் சாஸ்திரத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற பாக்கியம் இருந்தால் மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர, எல்லாராலும் பார்க்க முடியாது.
ஒரு ஓலைச்சுவடி என்பது ஒரு தனி மனிதருக்கு மட்டும்தான் இருக்குமா அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு பொதுவாக இருக்குமா ? உலகத்தில் பல கோடி மக்களுக்கும் ஓலைச்சுவடி எழுதப்பட்டிருக்க முடியுமா ?
ஓலைச்சுவடியைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு மூலாதாரமாக இருப்பது பெருவிரல் ரேகையாகும். ஆணாக இருந்தால் வலது கைரேகை, பெண்ணாக இருந்தால் இடது கைரேகை. உங்களுடைய ரேகை வேறு யாருக்காவது பொருந்துமா? அப்படியிருக்கும் போது உங்களுடைய ஓலை இன்னொருவருக்குப் கண்டிப்பாகப் பொருந்தாது.
ஒரே பெயர் கொண்டவர்கள் பலர் இருக்கலாம். ஒரே மாதிரி அடையாளம் கொண்டவர்கள் கூட இருக்கலாம், கைரேகையைத் தவிர்த்து. நாம் பிறந்த வருடம், மாதம், தேதி போன்ற குறிப்புகள் பல பேருக்குப் பொருந்தலாம். ஆனால், நம்முடைய ஓலைச்சுவடி வேறு யாருக்குமே பொருந்தாது. உங்களுக்கான ஓலை உங்களுடையது மட்டும்தான். அதை ஒருமுறை படித்துவிட்டால், அந்த ஓலையை வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது.
எனக்குரிய ஓலைச்சுவடி இதுதான் என்று நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?
முதலில், நாடி ஜோதிடத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்கான பாக்கியத்தை, அருளை உங்களுக்கு அகஸ்தியர் கொடுத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வரும் அல்லது யாராவது அதற்கு ஒரு தூண்டுகோலாக இருப்பார்கள். அது சம்பந்தப்பட்ட தகவல்களும் அறிவும் உங்களுக்குக் கிடைக்கப் பெறும்.
நம்முடைய ஓலை எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்தை நாம் தேடிப் போவோம். அதுதான் நாடி ஜோதிடம். கண்டிப்பாக உங்களுடைய ஓலை இருக்கும் இடத்தை நோக்கி நீங்கள் பயணிப்பீர்கள். இன்னாருக்கு இன்னார்தான் இந்த பலனைச் சொல்ல வேண்டும் என்பதைக் கூட குருநாதர் அகஸ்திய முனிவர் எழுதி வைத்திருக்கிறார்.
முதலில் உங்களுடைய தனித்துவமான கைரேகையை வாங்குவோம். சிலருக்குத் தனவரி ரேகை, வட்ட ரேகை, சங்கு ரேகை, மணிமகுட ரேகை எனப் பல வகைகள் உண்டு. ஒரு ரேகையில் ஒரு புள்ளி, மூன்று புள்ளிகள், ஐந்து புள்ளிகள் அடையாளமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். கைரேகையில் பல நுணுக்கங்கள் உண்டு.
ஒவ்வொரு தனி ரேகைக்கும் தனித்தனியாக ஓலையை எடுத்து நாம் கட்டுக்கட்டாக வைக்க முடியாது. ஆனால், அந்த ரேகைகளில் தனவரி ரேகை, தனமேறு ரேகை, தனசங்கு ரேகை என்று பிரித்து, அது சார்ந்த ஓலைக்கட்டுகளை நாம் தனியாக எடுத்து வைப்போம். அப்படிப் பார்க்கும் பொழுது, ஒரு ரேகை வகைக்கு ஒரு மூன்று ஓலைச்சுவடி கட்டுகள் வரும். ஒரு கட்டில் குறைந்தபட்சம் 40 முதல் 50 ஓலைகள் வரை இருக்கும். இதில் ஏதேனும் ஒரு ஓலைதான் உங்களுக்கானதாக இருக்கும்.
உங்களுக்கான ஓலையை எடுத்துப் பார்க்கும் பொழுது, அதில் முதல் கேள்வி: "நீங்கள் யார்?" என்பதுதான். உங்களுடைய அடையாளம், உங்களுடைய பெயர் அதில் இருக்கும். உங்களுக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றன, அதில் இன்றைக்கு நடைமுறையில் அதிகாரப்பூர்வமாகப் இருக்கும் பெயர் எது என்ற விவரம் இருக்கும். ஏனென்றால் சிலருக்கு ஜாதகப்படி ஒரு பெயர் இருக்கும், ஆவணங்களில் ஒரு பெயர் இருக்கும், வீட்டில் வேறொரு பெயர் சொல்லி அழைப்பார்கள். அடுத்து நீங்கள் எந்த வருடம், மாதம், தேதி, நட்சத்திரம், எந்த நேரத்தில், எந்த லக்னத்தில், என்ன மாதிரியான கிரக அமைப்புகள் இருக்கும் பொழுது பிறந்தீர்கள் என்கிற விவரம் இருக்கும்.
இரண்டாவது விஷயம், உங்களை அடையாளம் காண்பதற்கான உங்கள் தாய், தந்தையரின் பெயர்கள். அப்பா யார்? அவருக்கு எத்தனை திருமணங்கள் ஆகியிருக்கின்றன? அதில் எந்த மனைவியோடு வாழ்ந்திருக்கிறார்? அதில் எந்த மனைவிக்கு நீங்கள் பிறந்தீர்கள்? அதேபோல தாயாரைப் பற்றியும் வரும். இரண்டு, மூன்று திருமணங்கள் செய்த தாயார்களும் இருக்கிறார்கள், அதுபற்றிய முழு விவரங்களும் இருக்கும். நீங்கள் பிறக்கும் பொழுது உங்களுடன் பிறந்தவர்கள் யார்? எத்தனை அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்கள் வரும்.
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா? உங்கள் கணவன் யார்? கணவன் பெயர் என்ன? போன்ற விவரம் வரும். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அல்லது நீங்கள் ஓலைச்சுவடி பார்க்கும் சமயத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால், எத்தனை மாதக் கருவை நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது வரை மகரிஷி எழுதி வைத்திருப்பார். "பஞ்ச திங்கள் சூல்" (சூல் என்றால் கர்ப்பம்) அதாவது ஐந்து மாதக் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீங்கள் இந்த ஓலைச்சுவடியைப் பார்க்க வருவீர்கள் என்ற குறிப்பு இருக்கும். எத்தனை குழந்தைகள் இருக்கு என்பதையும் சொல்லியிருப்பார்கள்.
அடுத்ததாகத் தாய்மாமனைப் பற்றிப் பேசுவது. நீங்கள் என்ன படித்துவிட்டு, என்ன வேலையில் இருக்கிறீர்கள், என்ன பிரச்சினைக்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பது வரை இருக்கும். எனக்கே சில விஷயங்கள் வியப்பாக இருக்கும். "உங்களுடைய கேள்வி இதுதான், நீங்கள் வந்த நோக்கம் இதுதான், உங்களுடைய தேடல் இதுதான்" என்று மகரிஷி ஓலையின் வழியே சொல்லும் போது வியந்து போவார்கள். ஏனென்றால், அது அவர்கள் மனதிற்குள் வைத்திருந்த விஷயம். இவ்வளவு விஷயங்களும் யாருக்குச் சரியாகப் பொருந்துகிறதோ, அவங்களுக்குத்தான் அந்த ஓலை. அந்த ஓலை வேறு யாருக்கும் பொருந்தாது.
பூர்வ ஜென்மம் பற்றிச் சொல்லுங்கள்.
உங்களுடைய குலம், கோத்திரம் எதுவுமே தெரியாது. ஆனால் இன்றைக்கு ஆன்மீகம், ஜோதிடம் சார்ந்த கேள்விகளும் எண்ணங்களும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கின்றன. இது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள், ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். "நான் இந்த மாதிரி இருக்கப் போகிறேன்" என்று எப்போதாவது நினைத்துப் பார்த்தீர்களா?
இல்லை
அப்படியென்றால், இந்தத் தொழிலுக்கும் உங்களுடைய முன் ஜென்மத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்பதுதான் உண்மை. அது நமக்குத் தெரியாது, எல்லாமே தொன்றுதொட்டு வருகிறது. "எந்த ஜென்மத்தில் என்ன செய்தோமோ, இந்த ஜென்மத்தில் நான் உன்னை வந்து பார்த்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் உன்னால் நான் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன்" என்று சொல்பவர்கள் பார்த்திருக்கிறோம்.
இந்த ஆன்மாவிற்கு (Soul) அழிவே கிடையாது. உடலுக்குத்தான் அழிவு இருக்கிறது. உடம்பிற்குள் ஆன்மா இருக்கின்ற வரைக்கும் தான் உடலுக்கு மதிப்பு. அதற்குப்பிறகு இதன் பெயர் 'பிணம்' என்று சொல்கிறோம். அதற்குப்பிறகு அதை புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம். நம்விடம் இருந்து பிரியக்கூடிய ஆத்மா எங்கே போகிறது என்று எத்தனை பேர் ஆய்வு செய்கிறோம்? நாம் பொதுவாக இறந்துவிட்டார்கள் என்றால் 11-ஆம் நாள், 13-ஆம் நாள், 15 அல்லது 16-ஆம் நாள் அவர்களுக்குரிய மோட்ச தீபம், காரியங்களைச் செய்து முடித்துவிடுகிறோம். ஆனால் உண்மையிலேயே அந்த ஆத்மா மோட்சம் அடைந்ததா? உயிர் இருக்கிற வரைக்கும் தான் பேசுகிறோம், உயிர் பிரிந்துவிட்டால் அந்தப் பகுதி முடிந்துவிடுகிறது. நான் சொல்வது கேட்பதற்குச் சற்று குழப்பமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஆன்மாவிற்கும் போன ஜென்மத்திற்கும் கட்டாயம் தொடர்பு இருக்கிறது. அதுதான் நம்மை இயக்குகிறது, நாம் இயங்கவில்லை. நம்முடைய கர்மாதான் நம்மை இயக்குகிறது. அந்த விஷயத்தையும் மகரிஷி நமக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
திருமணம் செய்து மனைவியால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் மனைவி மூலம் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்? அல்லது ஏன் கணவன் மூலம் அவதிப்பட வேண்டும்? கட்டாயமாக அது அவர்களுடைய முந்தைய பிறவிக்கும் தொடர்பு இருக்கும். ஒரு குழந்தையால் நாம் நல்லதையோ கெட்டதையோ அனுபவித்தால், அதற்கும் கர்மாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது. நாம் ஒரு தொழில் லாபத்தையோ நஷ்டத்தையோ அனுபவித்தால் அதற்கும் கர்மாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது. எனவே, கர்மாதான் நம்மை இயக்குகிறது
இந்த 12 பாகங்கள் அல்லாமல் 'சாந்தி காண்டம்' என்னும் தனிக் காண்டம் என்பது, போன ஜென்மத்தில் இந்த ஆத்மா யார், இன்னும் எத்தனை ஜென்மங்கள் இருக்கிறது, இப்போது எத்தனையாவது ஜென்மம் என்பது வரை சொல்லுவார்கள். ஆணாகப் பிறந்தோமா, பெண்ணாகப் பிறந்தோமா, என்ன மாதிரியான பிறவி எடுத்தோம், அந்தப் பிறவியில் நாம் என்னென்ன நன்மைகள், பாவங்கள் செய்தோம், அந்தப் பாவங்களுக்கும் இந்த ஜென்மத்திற்கும் உள்ள தொடர்புகள் என்ன ? போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு முழுமையான தெளிவு கிடைக்கும்.
பரிகாரங்கள் தாங்களாகவே செய்து கொள்வார்களா அல்லது நீங்களே செய்து கொடுப்பீர்களா?
பரிகாரங்கள் என்பதை நாம் சொல்வதில்லை. என்னுடைய 25 வருட அனுபவத்தில், சென்னையில் அரும்பாக்கத்தில் இன்றைக்கு நம்முடைய நிறுவனம் நல்லபடியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சேவையை நான் செய்து வருகிறேன் என்றால் மகரிஷிகள் ஓலைச்சுவடியில் சொல்லியிதைத் தான் நாம் பின்பற்றுகிறோம்.
நம்முடைய கர்மாவிற்கும், இப்போது நாம் அனுபவித்து வரும் பிரச்சினைக்கும் விடை தரும் விதமாகத்தான் பரிகாரமே அமையும். அந்தப் பரிகாரங்கள் என்பது மகரிஷி கூறும் கோயிலுக்குப் போக வேண்டும். எந்தத் தெய்வத்தை, என்ன மாதிரியான முறைகளில் வழிபட வேண்டும் போன்ற விஷயங்கள் அதில் வந்திருக்கும். சிலருக்குக் கோயில் வழிபாடுகள், சிலருக்கு ஹோம முறைகள், சிலருக்கு எந்திர வழிபாடுகள், ரட்சை, தீட்சை என்று சொல்லியிருப்பார்கள். எந்தக் கடவுளுடைய மகா மந்திரம் நமக்கு உறுதுணையாக இருக்கும், நமக்கு ஒரு கவசமாக இருக்கும் என்ற விவரங்கள் சொல்லப்பட்டிருக்கும். அது முழுக்க மகரிஷி சொல்வதுதான். அவர் சொல்லிய வழியை நாம் பின்பற்றச் சொல்வோம். நம்மிடமே வேத பண்டிதர்கள் இருக்கிறார்கள். மகரிஷியினுடைய வாக்கில், "இதை நம் ஆசான்தான் செய்து கொடுக்க வேண்டும்" என்று இருந்தால், அதை நாங்கள் ஆத்மார்த்தமாகச் செய்து கொடுக்கிறோம்.
ஆலயங்களில் பூஜை செய்கின்ற பண்டிதர்கள், சிவாச்சாரியார்கள் உங்களுடன் இருக்கிறார்களா?
கட்டாயமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த பழமையானக் கோயிலுக்குச் சென்று விசாரித்தாலும் அவை 2000 - 3000 வருடங்கள் பழமையான தலங்களாக இருக்கும். சில கோயில்களுக்கு வருடங்களே தெரியாது, யுகங்கள் கடந்தவையாக இருக்கும். திருவாரூர் தியாகராஜர் கோயில், ஸ்ரீராமருடைய தந்தை தசரத மன்னன் வழிபட்ட தலம் என்கிறார்கள். அப்படியென்றால் தசரத மன்னனுடைய காலகட்டம் எப்போது என்று யாருக்குத் தெரியும்? அப்படிப்பட்ட ஆன்மீகத் திருத்தலங்களில் இருக்கக்கூடிய வேத பண்டிதர்கள் நமக்கு நல்லதொரு ஆத்மார்த்தமான முறையில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மூலமாக உதவிகள் செய்து கொடுப்போம்.
உங்களுடைய அனுபவங்களில் எது சிறந்தது? எந்த வாடிக்கையாளருக்கு ஒரு நல்ல தீர்வு கொடுத்திருந்தீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒருவருடைய தனிப்பட்ட விஷயங்களை நாம் வெளியில் சொல்வதற்கான அதிகாரம் நமக்குக் கிடையாது. அதனால் பெயரைச் சொல்ல முடியாது. நிறைய பேருக்கு பல நன்மைகள் நடந்திருக்கின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கணவன்-மனைவி வாழ்க்கையில் பிரச்சினைகள் பெரிதாகி, "நீ வேண்டாம், நான் வேண்டாம்" என்று நீதிமன்றம் சென்றவர்கள் இன்றைக்கு ஒன்று சேர்ந்து அன்யோனியமான வாழ்கிறார்கள். அது ஒரு அதிசயமான விஷயம்.
பல மருத்துவர்களைப் பார்த்தும், மருத்துவ முறைகளில் "உங்களுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை" என்று முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்று, விரக்தியான நிலையில் வந்தவர்களுக்கெல்லாம் குழந்தை கிடைத்து நல்லபடியாக வாழ்க்கிறார்கள். "இதோடு நம் வாழ்க்கை முடிந்துவிட்டது, இறந்துவிடுவோம்" என்று நினைத்து வந்தவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் 10, 15 வருடக் காலங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களது கடமைகளை முடித்தவர்களும் இருக்கிறார்கள். இதுபோல நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.

ॐ