Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

சனி நல்லவர்க்கு நல்லவன் கெட்டவர்க்கு கெட்டவன்

04 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
வருகின்ற சனிப் பெயர்ச்சியைப் பற்றி சொல்லுங்கள்
ஒன்பது கிரகங்களில் சனி பகவான் பயத்தைக் கொடுக்கக்கூடிய கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவான் சூரிய பகவானுடைய புத்திரன். சூரிய பகவானுக்கு இரண்டு மனைவிகள் உஷாதேவி, சாயாதேவி. சாயாதேவியின் புத்திரன்தான் சனி பகவான். சூரியன் ராஜ வம்சத்தைக் குறிக்கக்கூடியது, சனி பகவான் அசுர குணங்கள் சார்ந்த கிரகம்..

குரு பகவானுக்கு அடுத்தபடியாக மாபெரும் கிரகம் சனி பகவான் தான். ஆனால், ரொம்பத் தங்கமான, நல்ல கிரகம் என்பது சனி பகவான். நேர்மை, நீதி, தர்மம், நீண்ட ஆயுளைப் பெறுவது, "இதுதான் உலகம், இவங்கதான் மனிதர்கள், இது நல்லது, இது கெட்டது" என்ற படிப்பினை, பாடங்களை கொடுத்து ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தக் கூடியது. சனி பகவான் ஒரு மனிதனை அழகான, நிதானமான வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படையான செயல்களைக் கொடுக்கக்கூடியது.

ஏழரை சனி, அஷ்டம சனி, சில ராசிகளுக்கு மட்டும் நல்லது, கெட்டது நடக்குமா ?
சனி என்பவர் 'நீதிக்காரகன்'. ஒரு மனிதன் எந்தக் காலகட்டத்தில் பக்குவ நிலை அடைகிறான்? எந்த நேரத்தில் "இது நல்லது, இது கெட்டது" என்பதை உணரக்கூடிய நிலைக்கு வருகிறான் ? ஒரு மனிதனுடைய ஆணவமான செயல், "என்னால் முடியும், நான் பார்த்துக் கொள்வேன்" என்ற பேச்சு வரக்கூடிய காலகட்டம் உண்டு. "ஏழரை சனினாலே கெட்டதைத் தரும்" என்பது ஆழமாகப் பதிந்த விஷயம்.

ஏழரை சனி ஆரம்பிக்கும் பொழுது ஒரு மனிதனுக்குப் புதியதாக பிரச்சினை உருவாகுவது இல்லை. அதற்கு முன்னாடி நாம் பண்ணிய தவறுகள், ஆடிய ஆட்டத்திற்கு ஏழரை சனியில் தான் நீதி கிடைக்கிறது. ஏழரை சனி ஆரம்பிப்பதற்கு முன்னாடி கண்மூடித்தனமாக கடன் வாங்கிவிடுவோம். அப்போது யாரிடம், எங்கே கை நீட்டினாலும் பணம் கிடைத்துவிடும். வங்கி, நட்பு, உறவுகளிடம் கையேந்தினாலும், கேட்கிற இடத்திலெல்லாம் பணம் கிடைத்துவிடும்.

ஏழரை சனி ஆரம்பித்த பிறகுதான், அதனுடைய பிரதிபலன் தெரியவரும். நாம் வாங்கிய இடங்களிலிருந்து நிறைய அவமானப்படக்கூடிய நிலை உருவாகும். மனிதர்களுடைய சுயரூபத்தை காட்டிக் கொடுக்கும். அந்த நேரத்தில், "இனிமேல் வாழ்க்கையில் கடனே வேண்டாம்" என்கிற படிப்பினையை சனீஸ்வரன் தான் கொடுக்கிறார். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது உதாரணமாகச் சொல்லக்கூடிய விஷயம், இதைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.

ஏழரை சனிக்கு முன்னாடி காதல் வரும். ஒன்றரை வருடம் நல்லபடியாகப் போய்க்கொண்டே இருக்கும். அடுத்தது, அந்தக் காதலுடைய நல்லது கெட்டதை உணர ஏழரை சனியினுடைய காலமாக இருக்கும். இது ஏழரை சனிக்கு மட்டுமல்ல, அஷ்டம சனியாக, அர்த்தாஷ்டம சனியாக இருக்கலாம். காதலின் ஆழம் என்ன, உண்மைத் தன்மை என்ன என்பதை நமக்கு வெளியில் காட்டிக் கொடுக்கும்.

என்னுடைய அனுபவத்தில், "One of the best" சனீஸ்வரன் தான், நல்லவர்களுக்கு நல்லவன், கெட்டவர்களுக்குக் கெட்டவன். அவர் 'தர்ம கர்மாதிபதி'. ஒரு மனிதன் இந்தப் பிரபஞ்சத்தில் எந்த ஒரு தவறும் செய்யாமல், கெடுதல் நினைக்காமல், தவறுகள் செய்யக்கூடியவர்களைச் சுட்டிக்காட்டி, நேர்மையான முறையில் வாழ்ந்து பாருங்கள். அப்போ உங்களைச் சுற்றி எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை முடிவு பண்ணுங்கள். அந்த நிலையைப் புரிய வைக்கக்கூடியவர் சனீஸ்வரன் மட்டுமே.

இன்றைக்குப் முற்றிலும் நேர்மையாக, உண்மையாக யாரும் வாழ முடிவதில்லை. நேர்மையாக இருக்கிறவர்களுக்கு நட்பே இருக்காது. உண்மை, நேர்மை, சத்தியம், தர்மம் கடைப்பிடிக்கக் கூடியவர் சனி. நீங்கள் நல்லது செய்தால் நல்லது கொடுப்பார். கெட்டது செய்தால் கண்டிப்பாகக் கெட்டது கொடுப்பார். உடனே வெளிப்படுத்தவர் சனி.

சனி பகவான் கர்மாவினுடைய நீதிபதி என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்..
அவரை வந்து 'தர்ம கர்மாதிபதி' என்கிறோம், தர்மத்திலும் நேர்மையிலும் வாழும் பொழுது, நிறையப் பகைகளையும் சம்பாதிக்க வேண்டும், கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டும். கஷ்டம் என்பது ஒரு பாடம், படிப்பினை.

ஏழரை சனியில் 12-ஆம் இடம், ஜென்ம இடம், 2-ஆம் இடங்களில் தலா இரண்டரை ஆண்டுகள் சனீஸ்வரன் இருப்பார்.
உதாரணத்திற்கு, மேஷ ராசிக்கு, 2026-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி சனிப் பெயர்ச்சி வருகிறது. கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி வரப்போகிறார்.

• கும்ப ராசிக்கு பாதக சனியாகவும் (ஏழரையின் இறுதிப் பகுதி),
• மீன ராசிக்கு ஜென்ம சனியாகவும்,(ஏழரையின் மத்திய பகுதி),
• மேஷ ராசிக்கு விரய சனியாகவும் (ஏழரையின் தொடக்கம்) மாறுகிறது.

இந்த 3 ராசிகளும் ஏழரை சனியினுடைய தாக்கத்திற்கு உட்படுகிறார்கள். அதே நேரத்தில்

• மிதுன ராசிக்கு 10-ம் இடத்தில் சனி இருக்கிறார். 10-ம் இடம் என்பது ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானமாகச் சொல்லப்படுகிறது.
• கன்னி ராசிக்கு 7-ம் இடத்தில் சனி இருக்கிறார். கண்டகச் சனி.
• சிம்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சனி இருக்கிறார். அஷ்டம சனி.
• தனுசு ராசிக்கு 4-ம் இடத்தில் சனி இருக்கிறார். அர்த்தாஷ்டம சனி.

பொதுவாகப் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி மட்டுமே பயமுறுத்துகிறார்கள். ஆனால், சனி எங்கு இருந்தாலும் அவருடைய பலன்களை கொடுத்து ஒரு மனிதனை அவர் பக்குவப்படுத்துவார். ஒரு ஜாதகத்தில், ஜென்ம ராசிக்கு 12, 1, 2, 4, 5, 7, 8, 10 ஆகிய இடங்களில் சனி இருந்தால், "நட்டதனம் உயிர்சேதம் தனிச்சிறை மானபங்கம்..." தன் அறிவாலே மோசம், மனையை விட்டு, மாடி விட்டு மறுநகரம் செல்லுதல். இது ஒரு பெரிய பாடம்.

12-ல் சனி இருப்பது, விரய சயன ஸ்தானம். தேவையில்லாத செலவுகளை நிறைய உருவாக்கக்கூடிய நேரம். அப்போ நம்ம என்ன பண்ணுவோம் ? ஆடம்பர விஷயத்தில், வெட்டி பந்தாவிற்காகச் செலவு செய்வோம். "நீ ரொம்ப ஆட ஆரம்பிக்கிறாய்" என்று உன்னை தட்டி வைப்பார். "இது உனக்குக் கூடாது" என்ற அறிவை சனி பகவான் கொடுக்கிறார். இதையெல்லாம் தவிர்க்க ஆரம்பிக்க வேண்டும். அப்போதான் அதனுடைய பாதிப்பு நமக்குக் குறைய ஆரம்பிக்கும்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.