பிரம்மா நம்மை படைக்கும் பொழுது, நம்முடைய கர்மவினையை வைத்துத்தான் படைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. "மனிதனே, நீ உன்னதமான மனிதப் பிறவி எடுத்திருக்கிறாய், நல்லபடியாக உன்னுடைய கர்ம வினைகள் எல்லாவற்றையும் கழித்துவிட்டுத் திரும்ப இறைவனிடமே வந்து சேர். அதற்கு நான் உனக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துவிடுகிறேன்" என்று பிரம்மா படைக்கிறார்.
எத்தனை சதவீத மக்கள் சுதந்திரத்தை நன்மைக்காக பயன்படுத்துகிறார்கள்? "நான் எந்த பாவமும் செய்யவில்லை" என்று சொல்கிறார்கள். எப்போது ஆசை உருவாகிறதோ, அப்பொழுதே பாவக் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது. அந்த ஆசை தீய தூண்டுகோலாகிறது.
உதாரணத்திற்கு, ஒரு நிறுவனம் வளர்வதற்கு, தவறான முறையில் சம்பாதிக்க, நீங்கள் கூட இருந்து வேலை பார்த்து சம்பளத்தை வாங்குகிறீர்கள். அவர்களுடைய தவறான வளர்ச்சிக்கு நீங்களும் ஓர் உடந்தைதானே? ஆனால், "நான் வேலை பார்த்து சம்பாதித்துதான் ஆக வேண்டும்" என்று சொல்கிறீர்கள். யாருக்காக சம்பாதிக்கிறீர்கள்? காமத்திற்கு பின் உருவாகக்கூடிய அடுத்த சந்ததிக்காக.
ஆசை, காமம், பசி இவை எல்லாமே கர்மா தான் என்கிறார். "இதை பேச ஆரம்பித்தால் யாரும் வாழ முடியாது, சந்ததியே இருக்காது" என்பார்கள். சந்ததி வேண்டும், ஆனால் நியாயப்படி, தர்மபடி வாழுங்கள்.
கணவனுக்கு தன்னுடைய தாய்க்கு நிகரான மனைவி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பு, ஆசை இருக்குமே ?
ஒவ்வொரு மாதமும் நான் நான்கு முறை அலுவலகத்தை விட்டுட்டு பூஜை விஷயமாக வெளியூர் போகிறேன். என் மனைவி, "நீங்களும் கிட்டத்தட்ட 27 வருஷமாக தொழிலில் இருக்கிறீர்கள். ஆரம்பக் காலத்தில் ஒரு வாடிக்கையாளருடன் போனீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்று ஒரு நிலை வந்துவிட்டது, இன்னமும் நீங்கள் ஏன் அலைந்து திரிகிறீர்கள்? வேறொருவரை அனுப்பி வைக்க வேண்டியதுதானே?" என்பார்கள்.
அதற்கு நான் சொன்னது, "அவர்கள் நம்பி வந்துவிட்டார்கள். இங்கு வந்தால் தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். நான் போனால் அங்கு வேலை ஒரு மாதிரி நடக்கும். வேறொருவரை அனுப்பினால் வேறு மாதிரி நடக்கும். இவ்வளவு ஆயிரம், லட்சம் கொடுத்து, நம்பிக்கையோடு வருகிறார்கள். அவர்களுக்கு சரியான முறையில் செய்தால் தான் பலனை அடைய முடியும்" என்பது என் கருத்து. இதை நான் என் மனைவியிடம் தெளிவாக புரிய வைத்துள்ளேன்.
ஏங்க, உங்களிடம் தொழில் கற்றுக்கொண்டவர்கள், உங்களோடு பின்னாடி இருந்தவர்கள் இன்று எல்லாருமே நல்ல நிலையில் இருக்கிறார்கள், நிறைய சம்பாதித்து வாழ்க்கையில் settle ஆகியிருக்கிறார்கள். நீங்கள் இன்னமும் ஏன் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? இன்னமும் நகையை கொண்டு சுழற்சி செய்கிறீர்கள்?" என்பார்கள். அதற்கு நான், இன்று கடவுள் நமக்கு நிறைவாக சாப்பிடுவதற்கான உணவும், படுப்பதற்கான இடமும், குழந்தைகளுக்கு தேவையான கல்வியும் கொடுத்திருக்கிறார். எனக்கு தவறான சம்பாத்தியம் தேவையில்லை. அது நம்ம சந்ததிக்கு பாவத்தை சேர்த்து வைத்துவிடும்.
"நாடி ஜோதிடம் என்றால் நிறைய சம்பாதிக்கக்கூடிய துறை" என்பார்கள். ஆனால், எனக்கு 50 லட்சத்திற்கு மேல் கடன் இருக்கிறது. இன்று நான் இருக்கின்ற சிறிய வீடு கடனில் தான் வாங்கியிருக்கிறேன், மாதத் தவணை கட்டுகிறேன். நான் சம்பாதிக்க நினைத்தால், ஆறு மாதத்தில் கடனை அடைத்துவிடலாம். அந்த திறமையும் எனக்கு இருக்கிறது. ஆனால், மேலே ஒருத்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
23 வருஷமாக இந்த அலுவலகம் நடக்கும்போது, எனக்கு ஏதாவது ஒரு வழியில், என் குடும்பத்திற்குப் படி அளந்துவிடுகிறார் கடவுள். கர்மா பற்றி நான் எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டேனென்றால்... பலருடைய நாடியைப் படிக்க, "கர்மாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!" என்று தோன்றும்.
அருணகிரிநாதரின் 'நடராசர் பத்து' என்று ஒரு பதிகம் இருக்கிறது. அதில்
"வாயாரப் பொய் உரைத்து வீண்பொருள் பறித்தேனோ, வாஞ்சியரை ஏசினேனோ..."
என்ற ஒரு வரி வரும். நான் உங்களைத் தவறான முறையில் பயன்படுத்தி, அதிலிருந்து நான் ஓர் ஆதாயத்தை எடுத்துக்கொள்வது கர்மாதான். ஆனால், என் உழைப்புக்கு வாங்குகிறேன். நான் இப்பொழுது ஒரு காண்டத்திற்கு 2,500 வாங்குகிறேன். நான் உங்களுக்காக மூன்று மணி நேரம் உட்கார்ந்து, அந்த ஓலையை எடுத்து, நோட்டுப் புத்தகத்தில் எழுதி, படித்து, ஒவ்வொரு வரியாக உங்கள் வாழ்க்கையை பற்றி சொல்கிறேன். எனக்கு அது உழைப்புக்கான ஊதியம், வருமானம். இந்த இடத்தில், வாடகை, மின்கட்டணம், ஓலைச்சுவடி பராமரிப்பு மற்றும் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
என் மனைவி எல்லாவற்றிற்கும் துணையாக வருவார். வேறெவராலும் என் மனைவியின் இடத்தில் இருக்க முடியாது. மாதத்தில் 10 நாட்கள் நான் வீட்டில் சந்தோஷமாக தூங்கி எழுந்தாலே பெரிய விஷயம். அவர் அமைந்தது நான் பண்ணிய புண்ணியம். என்னுடைய கர்மா இப்பிறவியில் என் பிறவிப் பிணியை முடிக்கிறது. என் நாடியில், எனக்கு அடுத்த பிறவி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
என் மனைவியிடம், "இன்று இருக்கக்கூடிய அறிவு எனக்கு 20 வருடத்திற்கு முன் இருந்திருந்தால், நான் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்" என்று சொன்னேன். நான் கஷ்டப்பட்டு பிரச்சினையில் இருந்த பொழுது, என் மனைவி எனக்கு ஒரு தங்கமாக இருந்தார். நான் தாயினுடைய அன்பை பார்த்தது இல்லை, ஆனால் அந்தத் தாயாக எனக்குக் கிடைத்தது என் மனைவிதான். என் கண்ணே கலங்குகிறது.
எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என் மனைவி. தாய் மாதிரி பல கஷ்டமான சூழ்நிலையில் எனக்கு தோள் கொடுத்தவர்கள். சந்தோஷமான முறையில் சம்பாதிக்கும் பொழுதும் ஆதரவாக நிற்கிறார்கள். ஆனால் நான் சொல்வது "இதுதான் நம்ம வாழ்க்கை, இப்படித்தான் நாம் வாழ வேண்டும். கடவுள் சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழியை கொடுத்திருந்தாலும், அதைத் தவறாக பயன்படுத்தக் கூடாது."
நான் என்ன பாவம் பண்ணினேனோ, என் தாய் தந்தையை சின்ன வயதிலேயே இழந்தேன். ஆனால், பல கஷ்டத்தை கொடுத்த கடவுள், எல்லா சூழ்நிலையிலும் கூட நின்று ஆதரவு தந்தார். என் வாழ்க்கையே ஓர் உதாரணம்.
என் வாழ்க்கையில் எனக்கு வராத சூனியமா? நேருக்கு நேராக சவால் விட்டார்கள் "இன்னும் ஒரு வருஷத்தில் நீ இந்த இடத்திலிருந்து துண்டு துணி இல்லாமல், எல்லாத்தையும் விட்டுட்டு நீ ஓடுகிறாயா இல்லையா என்று பார்". "உன்னைக் காலி பண்ணுகிறேனா இல்லையா என்று பார்" என்றார்கள். சரியாக ஓராண்டில், நான் எல்லாத்தையும் இழந்து அந்த இடத்தை விட்டு வெளியில் வந்தேன். ஆனால் கடவுள் என்னை கைவிடவில்லை! நான் தர்மத்தைக் கைவிடவில்லை, கடவுளை நம்பினேன்.

ॐ