Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

பெற்றோரின் ஆன்மா உங்களைத் தேடிக்கொண்டே இருக்கும்.

04 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
நிறைய பேர் தங்களுடைய பூர்வீகத்தை விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வேலை செய்வதால், அவர்களால் குலதெய்வத்தை பார்ப்பது கடுமையான விஷயமாக இருக்கிறது.
அதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டது யார்?
பெற்ற தாய், தந்தையாருக்கு செய்ய வேண்டிய கடைசி ஈமச் சடங்குகள், கர்ம காரியங்களை செய்ய வர முடியவில்லை, விடுப்பு கிடைக்கவில்லை என்று சொல்வதெல்லாம் மன்னிக்கவே முடியாது. தெய்வத்தை உதாசீனப்படுத்துவதும், பெற்றவர்களுக்கு செய்யும் காரியங்களை உதாசீனப்படுத்துவதும் ஒன்றுதானே. பிறகு வாழ்க்கை எப்படி விருத்தி அடையும்? பிற்காலங்களில் உண்மையை உணர்ந்து தேடிப் போகும்போது அவர்கள் விலகி நிற்பார்கள். ஒரு ஆன்மா உடலைப் பிரிந்திருக்குமே தவிர, அந்த ஆன்மா என் பையன், பொண்ணு வருவார்கள் என்று காத்துக்கொண்டிருக்கும். வர முடியாதபட்சத்தில் அந்த ஆன்மா எப்படி சாந்தி அடையும்? ஆனால் இவர்கள் எளிதாக சொல்கிறார்கள், 'போனால் என்னால் திரும்பி வர முடியாது' என்று. அதைவிட வேறென்ன நம் வாழ்க்கையில் இருக்கிறது? அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?. தெரியாமல் நடக்கும் தவறுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பில்லை என்று சாஸ்திரம் கூறுகிறது.

உங்களுடைய குலதெய்வம் பற்றி சொல்லுங்கள்
எனக்கு குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி. நான் வணங்குவதை நிறுத்தியதே கிடையாது. என்னுடைய தெய்வம் சுத்த சைவம், அங்கே பலி கொடுப்பது கிடையாது. அவளுடைய அனுக்கிரகம் இருப்பதால்தான், நான் வணங்கிய மற்ற தெய்வங்களும் எனக்கு அருள் செய்வதற்கு என் குலதெய்வம் அனுமதி கொடுத்தது. அவளை விட்டுவிட்டு நான் வேறு எந்த கோயிலுக்கு போய் என்ன செய்தாலும் அதில் பலன் கிடையாது. எனக்கு இஷ்டமான தெய்வங்கள் நிறைய இருக்கின்றன. பரம்பொருளாகிய பரமேஸ்வரனை ஒரு காலகட்டத்தில் ரொம்ப ஆத்மார்த்தமாக வணங்கினேன். அவரிடம் சண்டையெல்லாம் போட்டிருக்கிறேன். 'எனக்கு ஏன் இந்தப் பிறவி?' என்று நான் அவரிடம் புலம்பி அழுதது உண்டு.

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலுக்கு கடந்த வாரம் சென்று வந்தேன். நான் அமர்ந்திருக்கும்போது அவளுடைய வலது கையிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அங்கே இருக்கக்கூடிய சிவாச்சாரியார்கள் யாராவது மாலையை தொட்டிருக்கலாம் என்று பார்த்தால், எதுவுமே கிடையாது. அது அவளுடைய அனுக்கிரகம். நான் அவளிடம் எதுவுமே கேட்டதில்லை. எந்த வேண்டுதலும் இருக்காது. ஒரு நிமிடம் நான் கண்ணை மூடாமல் அவளை பார்ப்பேன். அவள் முகம், கை, திருப்பாதத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

எங்கெல்லாம் வள்ளுவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் முருகர் இருப்பார். கலியுகக் கடவுள். முருகனாலே அழகு. பலருடைய வாழ்க்கையில் தீர்வை தரக்கூடியவர். சிக்கலை தீர்க்கக்கூடிய கடவுள். கொடிமரத்தோடு இருக்கக்கூடிய முருகனுடைய ஆலயத்திற்குச் சென்று, கொடிமரத்திற்கு முன் அமர்ந்து எதையும் கேட்காதீர்கள் (எனக்குப் பிரச்சினையைச் சரி பண்ணு, இவ்வளவு காசு வேண்டும், கடன் தீர வேண்டும் என்று எதையும் கேட்க வேண்டாம்).சுத்தமாக கழுவிய 6 வெற்றிலைகளிலும் மஞ்சள், குங்குமம் அல்லது சந்தனம், குங்குமம் வைத்து ஒரு தட்டில் 6 திசைகளில் அடுக்கிவிட்டு, மண் அகல் விளக்கில் தாமரைத் திரியிட்டு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் வரும். பஞ்சபூதங்களோடு தொடர்புடைய மண் அகல் விளக்கைச் சுத்தமாகக் கழுவி, அதில் மஞ்சள் குங்குமம் வைத்து, ஒவ்வொரு வெற்றிலை மீதும் விளக்கை வைத்து, சுத்தமான பஞ்சு திரி போட்டு, நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றித் தீபத்தை ஏற்றி, ஒரு 10 நிமிடம் எதையும் யோசிக்காமல் அந்த நேரத்தை அவருக்காக அர்ப்பணியுங்கள். வேல்மாறல், கந்த சஷ்டி கவசம் அல்லது குமரகுருபரர் பதிகத்தை எடுத்து வாசியுங்கள்.

விளக்கை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு சுவாமியை பாருங்கள். வெறுங்கையோடு கோயிலுக்கு போகவே கூடாது. ஒரு பழமோ அல்லது ஒரு நெய்வேத்தியமோ சுவாமிக்கு வைத்து, உங்கள் நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து, 'ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்' என்ற வாசகத்தை மனதார சொல்லிக்கொண்டு, அவருடைய மூலமந்திரத்தை துதித்து 6 முறை கொடிமரத்தோடு சேர்த்து பிரகாரம் சுற்றி வாருங்கள். சுற்றி வரும் நேரத்தில் இரண்டு வெற்றிலையில் ஒரு பாக்கு, ஒரு மஞ்சள் கிழங்கு வைத்து ஒரு நூலில் கட்டி, ஆறு முறையும் கொடிமரத்திற்கு முன்னால் வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆறாவது முறை முடிந்ததும் கொடிமர நமஸ்காரம் செய்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்திருந்து, அதன்பின் வீட்டிற்கு வாருங்கள்.

இதை தவறாமல் செய்தால் அதன் பலனை அடுத்த 6 வாரங்களுக்கு பிறகு நீங்கள் பின்னூட்டத்தில் (Comments) சொல்லுங்கள்.

முருகர் நம்மை பாதுகாக்கக்கூடிய கடவுள் மட்டுமல்ல, அவர் ஞானத்தின் வடிவம். தந்தைக்கு உபதேசம் சொன்னவர், படைத்த பிரம்மாவை சிறையில் அடைத்தவர். நீதிக்காரகனாகவும், தைரிய வீரியத்திற்கும் காரணமாக இருக்கிறார்.

பட்டீஸ்வரத்தில் பிரமாதமான காலபைரவர் கோயில், ராஜராஜ சோழன் வழிபட்ட இடம். திருச்சேறையில் இருக்கக்கூடிய காலபைரவர் பற்றிப் பதிகங்களில் வந்திருக்கிறது. ஒரு சாந்தமான, வசீகரமான முகம். அவர் நம்முடைய பெரிய சிக்கல்களையும் நீக்கி அருளக்கூடியவர்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.